Monday, August 22, 2016

தமிழ்த் திரைப்ப்ட இயக்குநர்கள் - 56 சாணக்யா

                             

1925ல் பிறந்தவர் சாணக்கியா

இவர் ஹிந்தி,தமிழ், தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் இயக்கிய தமிழ் படங்கள் கூறைவே.நிறைய தெலுங்கு படங்கள்தான் இவர் இயக்கத்தில் அதிகம்

ஆனாலும் தமிழில் இவர் இயக்கிய படங்கள் மாபெரும் வெற்றி படங்கள் ஆகும்

1956ல் ஜெமினி, அஞ்சலி தேவி நடித்த காலம்  மாறி போச்சு இவர் இயக்கத்தில் வந்தது.வகிதாரஹ்மான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்."ஏரு பூட்டிப் போவாயே அண்ணே"

ஜெமினி, சாவித்திரி நடிக்க புதிய பாதை என்ற படத்தை 1960ல் இயக்கினார்

1965ல் எங்க வீட்டுப் பெண் வெளியானது

1966ல் எம்ஜியார் நடிக்க நான் ஆணையிட்டால் , 1966ல் எம் ஜி ஆர், ஜெயலலிதா நடித்த ஒளிவிளக்கு (எம் ஜி ஆர் 100வது படம்)
1968ல் புதிய பூமி ஆகியவை இவர் இயக்கத்தில் வந்தப் படங்கள்..

என்ன.....

நீங்கள்   எதிர்ப்பார்த்த படத்தை சொல்லவில்லையா?

சொல்லிவிடுகிறேன்...

அது மாபெரும் வெற்றி படம்

புரட்சி நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த படம்...

அவர் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்ல்ல்ல்....

ஆம் அவர் நம்ம வீட்டுப் பிள்ளை...

எம் ஜி ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி படங்களில் முதல் வரிசைப் படம் "எங்க வீட்டுப் பிள்ளை" சாணக்கியா இயக்கியப் படமாகும்.

1965ல் வெளிவந்த இப்படம் ராமுடு பீமுடு என்ற பெயரில் தெலுங்கிலும், ராம் ஔர் ஷ்யாம் என ஹிந்தியிலும் வெளிவந்தது.

1973ல் இவர் அமரர் ஆனார்

No comments:

Post a Comment