Sunday, July 31, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 10 ஒய் வி ராவ்

ஒய்.வி.ராவ்





தயாரிப்பாளர்,டைரக்டர்,நடிகர்,பட விநியோகஸ்தர்,எடிட்டர் என பன்முகக் கலைஞராய் திகழ்ந்தவர் ஒய்.வி.ராவ் ஆவார்

1903 ஆம் ஆண்டு நெல்லூரில்  பிறந்தார்.மௌனப்படங்களைப் பார்த்து நாடக நடிப்பில் அக்கறை கொண்டு நடிப்பைக் கற்றுக் கொண்டார்.

அந்நாளில் மௌனப்படங்களைத் தயாரித்து வந்த ரகுபதி பிரகாஷ், ஏ.நாராயணன் ஆகியோர் இவரை மௌனப்படங்களில் நடிக்க வைத்தனர்.

கருட கர்வ பங்கம் என்ற மௌனப்படம் இவர் முதல் படமாகும்.அதில் நாயகன் இவராவார்.

பின் பாண்டவ நிர்வாணம்,பாண்டவ அஞ்ஞான வாசம் ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.ஹரிமாயா என்ற படத்தை, அன்றைய கன்னட நாடக உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த குப்பி வீரண்ணா தயாரிக்க இவர் இயக்கினார்.

இவரும், இவரது முதல் மனைவி ராஜமும் சேர்ந்து பல மௌனப் படங்களில் நடித்தனர்

1925ல் மீரா என்ற மௌனப் படத்திலும் நடித்தார்.பாவத்தின் கூலி என்ற மௌனப்படத்திற்கு திரைக்கதை அமைத்தார்.

இவர் அக்கால என்டியார் எனலாம்.ஆம்...பல படங்களில் பகவான் கிருஷ்ணனாக நடித்துள்ளார்

சதி சுலோச்சனா என்ற கன்னடப் படத்தில் நடித்து இயக்கினார்.நாகானந்த் என்ற படத்தை இயக்கினார்.

1937ல் மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த சிந்தாமணி படத்தை இயக்கினார்.இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடியது.எம்,கே.தியாகராஜ பாகவதர் நடித்த படம் இது.

பாமா பரிணயம்,பக்த மீரா, சுவர்ணலதா ஆகிய படங்கள் இவர் இயக்கினார்.
பல தெலுங்கு படங்களைத் தயாரித்தார்.லவங்கி என்ற தமிழ்ப் படத்தை தயாரித்தவர் அதை ஹிந்தியிலும் வெளியிட்டார்.

சாவித்திரி,மஞ்சரி,மானவதி,பாக்ய சக்கிரம்,போன்ற படங்கள் இவர் இயக்கிய முக்கிய படங்களாகும்

ஆரம்ப கால தமிழ் சினிமா வளர்ச்சியில் இவர் பங்கு குறுப்பிடத்தக்கது

ஏவிஎம் தயாரித்த ஸ்ரீவள்ளி படத்தில் நடித்த ருக்மணியை (நடிகை  லட்சுமியின்  தாயார்) இவர் இரண்டாவதாக மணந்தார்.இரு திருமணங்களும் இவருக்கு திருப்திகரமாக அமையவில்லை

1973ல் இவர் அமரர் ஆனார்.

Saturday, July 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 9 சுந்தர் ராவ் நட்கர்ணி

சுந்தர் ராவ் நட்கர்ணி

மங்களூரைச் சேர்ந்த கொங்கணி மொழியாளர் சுந்தர் ராவ் நட்கர்ணி.

1928 முதல் 1931 வரை பத்துக்கும் மேற்பட்ட மௌனப்படங்களில் பங்கு பெற்றவர்.

1944ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் ,வசந்தகோகிலம், என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர் நடித்த ஹரிதாஸ் என்றபடத்தை இயக்கினார். 100 சிறந்த படங்களில் ஹரிதாஸும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

110 வாரங்கள் சென்னைத் திரையரங்கில் ஓடிய இப்ப்டம் மூன்று தீபாவளியக் கண்டது என்பர்.

பின்னர், பூகைலாஷ்,என் மனைவி,வால்மீகி,கிருஷ்ண விஜயம், கோடீஸ்வரன் (சிவாஜி, எஸ்.பாலசந்தர் நடித்தது)ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வந்தன.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., சாவித்ரி நடிக்க வந்த மகாதேவி இவர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி படமாகும் 

Friday, July 29, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 8 கே எஸ்.பிரகாஷ் ராவ்




கே.எஸ்.பிரகாஷ் ராவ்

1914ல் பிறந்தவர் கே எஸ் பிரகாஷ் ராவ்

பிரபல தயாரிப்பாள்ர், ஒளிப்பதிவாளர்,நடிகர், இயக்குநர் என அஷ்டாவதானி அவர்.

48க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் தெலுங்கு படங்கள்.

இவர் இயக்கிய தமிழ்ப் படங்கள்..

பெற்ற தாய், அவன்  ஒரு சரித்திரம்,ஹரிசந்திரா ( நடிகர் திலகம் நடித்தது), கருடா சௌக்கியமா,மறுமலர்ச்சி,.

அண்ணி என்ற படம் இவர் இயக்கிய முதல் தமிழ்ப் படமாகும்

பிரகாஷ் ஸ்டூடியோவை நிறுவியவர் இவர்.திரையுலகிற்கு ஜி,வரலட்சுமி என்ற நடிகையை அறிமுகப்படுத்தியவர்.பின், அவரை மணந்தார்.
சில வருடங்கள் கழித்து இத்தம்பதிகள் பிரிந்தனர்.

1996ல் இவர் மறைந்தார்.

இவ்வளவு சொல்லிவிட்டு ஒன்றை மட்டும் சொல்லாவிட்டால் எப்படி....

நடிகர்திலகம் நடித்த மாபெரும் வெற்றிபடமான "வசந்த மாளிகை" இவர் இயக்கத்தில் வந்த படம்.

தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் சக்கைப் போடு போட்டது. 

Thursday, July 28, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்-7 ஏ எஸ் ஏ, சாமி

                       

ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ. சாமி என அழைக்கப்பட்ட ஏ.சூசை அந்தோணி சாமி, தமிழ்நாடு குருவிக்குளம் என்ற கிராமத்தைச் சேற்ந்தவர்.இவர் பெற்றோர் இலங்கைச்  சென்று கொழும்பு நகருக்குக் குடி பெயர்ந்தனர்.இவர் இளம் வயதில் பி.ஏ.(ஹானர்ஸ்) ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக் கழகம், லண்டனில் படித்தார்,பின் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த போது இவரது குடும்பம் திருநெல்வேலி பாளயம்கோட்டைக்கு வந்தது.

பில் ஹணன் என்ற நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.ஜூபிடர் சோமு இந்நாடகத்தை படமாக்கினார்.


பின் வால்மீகி, ஸ்ரீமுருகன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.ஸ்ரீமுருகன் படத்தை இயக்கினார்.

ராஜகுமாரி எனும் படத்தில் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக அறிமுகமானார்.

அபிமன்யூ, மருமகள், நீதிபதி போன்ற படங்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.

கற்புக்கரசி என்ற படம் தயாரிப்பில் இருந்த போது அதன் இயக்குநர் மறைந்துவிடவே..அப்படத்தை இயக்கும் வாய்ப்பை சாமி பெற்றார்.

தங்கப்பதுமை,அரசிளங்குமரி,ஆனந்தஜோதி ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள் எனலாம்.

தவிர்த்து, கடவுளைக்கண்டேன்,ஆசை அலைகள், துளிவிஷம் ஆகிய படங்களையும் இவர் இயக்கினார்.