R Sundram Rsundram ivar padangal story pudumaiyagavum vasanam elimaiyagavum peridhagavum irukkum.
Jeya Murugesun அருமை
Mahalakshmi Ramaswamy வசனம் அருமையாக இருக்கும். எந்த அலங்காரங்களும் இல்லாத எளிய நடை இவரது சிறப்பு.
Naveen Kanna வாவ்... எத்தனை சூப்பா்ஹிட் படங்கள்... இயக்குனா் திலகம் என்ற பட்டத்திற்க்கு இவரால் பெருமை. வணங்குகிறேன்.
LikeReply122 hrs
Bhoopal Singh ' தெய்வப் பிறவி ' ....கட்டிட மேஸ்திரியை கண்முன் கொண்டுவருவார் நடிகர் திலகம். ' கமால் பிரதர்ஸ் ' தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம். இதில் குழந்தைகளின் எதிரில் எதையெல்லாம் பேசக்கூடாது என்பதை கலைவாணர் பாணியில் கற்றுக் கொடுப்பார் தங்கவேலு. அவர் நடத்தும் ' குசேலர் ' கதாகாலட்சேபம் அருமை. அதன் இறுதியில் , ' ஏழைகளுக்கு அள்ளித் தந்த ஒரே ஒரு கிருஷ்ணனும் மறைந்தார் ' என என்.எஸ்.கிருஷ்ணனை நினைவு கூர்ந்து கண் கலங்க வைப்பார்.
LikeReply10 hrs
Bhoopal Singh குமுதம்.....தன் தங்கையின் வாழ்வுக்காக தன் காதலை தியாகம் செய்யும் அண்ணனின்(எஸ்.எஸ்.ஆர்) கதை. சௌகார் குருடியாக வருவார். ' மியாவ் மியாவ் பூனைக்குட்டி ' அருமையான பாடல் ( ராஜேஸ்வரி )
LikeReply10 hrs
Bhoopal Singh படிக்காத மேதை.....அப்பப்பா ! கதை , பாடல் , வசனம் , நடிப்பு அத்தனையும் மிகச் சிறப்பு. நடிகர் திலகத்தின் அப்பாவி தனத்துடனி கூடிய நன்றி காட்டும் நடிப்பு ( ஒரே ஒரு ராஜா வளர்த்த நாய் ) '' இந்த வீட்டு வாசப்படியை மிதிக்காதே என்று சொன்னேனே !'' '' அதனால்தான் சு...See More
LikeReply10 hrs
Bhoopal Singh இப்போதுகூட (55 ஆண்டுகள் கடந்து ) திருமண வீடுகளில் ஒலிக்கும் ' மணமகளே மணமகளே வா ' பாடல் இடம் பெற்ற படம் சாரதா !
LikeReply10 hrs
Bhoopal Singh கற்பகம்....கே.ஆர்.விஜயாவை அடையாளம் காட்டிய படம். அதற்கு முன் ' முத்து மண்டபம் ' இன்னும் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்திருப்பார்.
' பக்கத்து வீட்டு பருவ மச்சான் , ஆயிரம் இரவுகள் வருவதுண்டு , அத்தை மெடி மெத்தையடி , மன்னவனே அழலாமா ' போன்ற இனிய ...See More

LikeReply10 hrs
Bhoopal Singh கை கொடுத்த தெய்வம்.....நடிகர் திலகத்திற்கு சொன்னதுதான் நடிகையர் திலகத்திற்கும்!
சொந்த அண்ணனே தப்பாக நினைக்கும் பெண்ணின் உண்மை நிலையை உணர்ந்து அவளை மணக்க சம்மதிக்கும் கேரக்டரில் நடிகர் திலகம் !
..பாரதியாரின் ' சிந்து நதியின் மிசை நிலவினிலே ' பாடலும் ' ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ ' பாடலும் சிறப்பு .

LikeReply10 hrs
Bhoopal Singh ஆயிரம் ரூபாய்.....இதில் பத்மினியின் தங்கை ராகினியும் நடித்திருப்பார்.
LikeReply10 hrs
Bhoopal Singh என்னதான் முடிவு.....மகரிஷியின் கதை . பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே ! என்பதை பிரதிபலிப்பது !
LikeReply10 hrs
Bhoopal Singh சின்னஞ்சிறு உலகம்......இதில் ஜெமினிக்கு புதுமுகமாக நடித்தவர் பெயர் ராதிகா ! இவர் பின்னாளில் மேஜிக் செய்ய போய்விட்டார்.
நாகேஷுக்கு ஜோடி கே. ஆர். விஜயா. எதைப் பார்த்தாலும் அதனால் ஏதாவது விபரீதம் நிகழுமென பயந்து அழும் கேரக்டர் நாகேஷுக்கு. மணமேடையில் ...See More

LikeReply10 hrs
Bhoopal Singh செல்வம்.....ஏ சர்டிபிகேட்டுக்குறிய கதை- வசனத்துடன் வந்து யூ சர்ட்டிபிகேட் வாங்கிய படம் !
இதில் ' வா வா....உனக்காக வா ' என்ற பாடலை தாராபுரம் சுந்தரராஜன் என்கிற புது பாடகர் பாடினார். பிறகு இவர் நாகேஷுக்கு பல பாடல்கள் பாடினார்.
இப்படத்தில் ரமா பிரபா அறிமுகமானார். டைட்டிலில் வேறு பெயர் போடுவார்கள். இவர் சரத்பாபுவை மணந்தார் !

LikeReply10 hrs
Bhoopal Singh சித்தி.....பத்மினி , எம்.ஆர்.ராதா , நாகேஷ் , குழந்தை ராணியின் அருமையான நடிப்பு.
இதில் குலதெய்வம் ராஜகோபால் மீண்டும் பிரவேசிப்பார்.
' குடும்பம் ஒரு கதம்பம் ' படத்தில் வயசுப் பெண்ணான நித்யா ரகசியமாக ஒரு இடத்திற்குச் சென்று வருவார். அது இப்படத்திலிருந்து உருவப்பட்டது !

LikeReply9 hrs
Bhoopal Singh ' கண் கண்ட தெய்வம் '......பண்ணையாரின் மூன்று விடலை பசங்களையும் அவர் வீட்டில் வேலை செய்யும் இளைஞனையும் ஒப்பீடு செய்யும் படம்.
பெரிய பண்ணையாக எஸ்.வி.ரங்காராவ் அவர் தம்பியாக எஸ்.வி.சுப்பையா!
இப்படம் மீண்டும் கே.எஸ்.ஜி இயக்கத்தில் , சிவாஜி நடிப்பில் ' படிக்காத பண்ணையார் ' என்ற பெயரில் வந்தது !

LikeReply9 hrs
Bhoopal Singh எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம் தயாரிப்பில் கமல் நடித்த ' பேர் சொல்லும் பிள்ளை ' ' படிக்காத மேதை 'யை தழுவியதுதான். அதனால் அப்படத்திற்கு கோபால கிருஷ்ணனையே வசனம் எழுத சொன்னார்கள்.
LikeReply9 hrs
Bhoopal Singh பேசும் தெய்வம்.....திருப்பதி வெங்கடாசலபதியின் மகிமை சொல்லும் சமூக படம்.
.இதில் சௌகார் ஜானகி பர்மாவாசியாகவும் அவர் கணவராக ' செம்மீன் ' சத்யனும் நடித்திருப்பார்கள். சத்யன் புற்று நோய் வந்து இறந்தார்.

LikeReply9 hrs
Bhoopal Singh பணமா பாசமா.....வெள்ளி விழா கண்ட படம். ' இலந்தபயம் , அலேக் ' ஆகியவை பேமஸ்.
மாறியது நெஞ்சம் , மாற்றியது யாரோ ? இனிமை.
சென்ற மாதம் துக்க சம்பவம் நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் படத்தில் அடிக்கடி வரும்....See More

LikeReply9 hrs
Bhoopal Singh ' செல்வம் ' படத்தில் ரமாப்பிரபா பெயரை ' மேகலா ' என போடுவார்கள் !
LikeReply9 hrs
Bhoopal Singh உயிரா மானமா...பணமா பாசமா தியேட்டரில் இருந்து தூக்கும் போது அதே தியேடரில் வெளியிட வேண்டுமென அவசர அவசரமா எடுக்கப்பட்டு, அதே அவசரத்துடன் ' எடுக்கப்பட்டு 'விட்டது.
இதில் சௌகார் ஜானகியின் தங்கை கிருஷ்ணகுமாரி ரஷ்யகாரியாக வருவார். நெய்வேலி சுரங்கத்தைக் கட்டுவார்கள். அந்த சுரங்கம் ரஷ்யா ஒத்துழைப்போடு கட்டப்பத்தது என பாடலில் சொல்வார்கள்.

LikeReply9 hrs
Bhoopal Singh குல விளக்கு.....சரோஜாதேவின் ஸோலோ பர்பார்ம்ஸ். சரியான அழுகை படம்.
சுப தினம்(விடுபட்டுள்ளது) 'ஏ ' வாங்கிய படம். ' நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு ஆயிரம் இருக்குது சுபதினம் ' என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் டைட்டில் சாங் பாடுவார். அதில் ' நிறைகுடம் ...See More

LikeReply9 hrs
Bhoopal Singh குலமா குணமா.....சிவாஜி , பத்மினி , ஜெய்சங்கர் , வாணிஸ்ரீ நடித்தது. வாணிஸ்ரீ நடிப்பு அமர்க்களம்.
LikeReply9 hrs
Bhoopal Singh ஆதி பராசக்தி...ரிலே ரேஸ் மாதிரி ஏ.பி.நாகராஜன் பக்தி படத்தை இறக்கி வைக்கும்போது கோபாலகிருஷ்ணன் அதை தாங்கிக் கொண்டார்.
அப்பிராமி பட்டராக சுப்பையா. டி.எம்.எஸ்ஸின் சொல்லடி அபிராமி பாடலுக்கு ஆக்ரோஷத்தோடு அவர் வாயைச்பது அழகு.
மீனவ தம்பதிகளாக சுருளி ராஜன் , மேஜிக் ராதிகா. அவருக்காக சீர்காழி பாடிய ' ஆத்தாடி மாரியம்மா ' பாடல் போன ஆடி மாதம்கூட எல்லா அம்மன் கோவில்களிலும் ஒலித்தது !

LikeReply8 hrs
Bhoopal Singh குறத்தி மகன.....குறவர் தம்பதிகளாக ஜெமினி , கே.ஆர்.விஜயா. முதலில் பத்மினி நடிப்பதாகத்தான் இருந்தது. ' குறத்தி வாடியம்மா குப்பி---ஒரு
ஜாடையில பாத்தா நீ பப்பி ( பத்மினியின் செல்லப்பெயர்) என்ற பாடல்கூட ஒலிப்பதிவாகிவிட்டது. ஆனால் நடித்தது விஜயா. பாடலை மாற்றவில்லை !
இப்படத்தில் குறத்தி மகனாக மாஸ்டர் ஸ்ரீதர். ஜோடி ஜெயசித்ரா. கு.மகனை ஆதரிப்பவரின் தறுதலை மகனாக கமல் ஓர் ஓரத்தில் நிற்பார் !

LikeReply8 hrs
Bhoopal Singh வாழயடி வாழை.....பயந்தாங்கொள்ளி , வீர மங்கை என ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடம். ஜோடி ஜெய்சங்கர் மற்றும் சோ !
LikeReply18 hrs
Mahalakshmi Ramaswamy ஸாரி , இது ஜெயல்லிதா நடித்தது இல்லை. முத்துராமன் பிரமீளா நடித்தது. பிரமீளா அறிமுகம். ரங்காராவ், எஸ். வரலட்சுமி முத்துராமனின் பெற்றோராக நடித்தது.
LikeReply8 hrs
Mahalakshmi Ramaswamy ஜெயல்லிதா இரட்டை வேடத்தில் நடித்தது வந்தாளே மகராசி.
LikeReply8 hrs
T V Radhakrishnan
Write a reply...
Bhoopal Singh வாழையடி வாழை......பிரமிளா அறிமுகம். தன் அழகின்.மீது அலாதி நம்பிக்கை அதனால் திமிர்தனம். கடைசியில் அம்மை நோய் வந்து வெளி அழுகு மறைய உள்ளத்தின் அழகே அழகு என உணரும்படம்.
இதில் , தான் குரூபியானதும் , கணவர் அப்போதுதான் பெரிய மனுசியான தன் தங்கையை கட்டிக்...See More

LikeReply8 hrs
Bhoopal Singh நத்தையில் முத்து.....கே.ஆர்.விஜயாவின் நூறாவது படம். தலீத் பிரச்சினையை அப்போதே கையிலெடுத்திருப்பார் !
LikeReply8 hrs
Bhoopal Singh உறவுக்கு கை கொடுப்போம்.....கமா , சோமாவென்று எந்த இலக்கணமும் இல்லாமல் சும்மா ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுவையான படம் , 1986ல் விசுவின் கை வண்ணத்தில் , 'சம்சாரம் அது மின்சாரம் ' என்ற பெயரில் சீரியல் செட்டாக பளீச்சிட்டது !
LikeReply8 hrs
Bhoopal Singh முதல் வாழையடி வாழையை ' வந்தாளே மகராசி ' என திருத்திப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
LikeReply18 hrs
Ezhichur Aravindan கே.எஸ்.ஜி யை பற்றி ஒரு நாள் முழுக்க பேசலாம், பேசும் தெயவம் படம் ஷூட்டிங் ரங்காராவ் சிவாஜி பத்மினி மூவரும் நடிக்கும் காட்சி. ரங்காராவ் வசனம்.பேசியதும்.பிரமாதம் ணே பிச்சிட்டீங்க என்று சொன்னார் கே.எஸ்.ஜி. பத்மினி வசனம் பேசி முடித்ததும் பப்பிம்மா பிரமாதம...See More
LikeReply17 hrs
Durai Kirubakaran arv shivaji immmmm tamil cine filedila oru black mark antha nathari avan 100
LikeReply51 mins
T V Radhakrishnan
Write a reply...
Jai Shree Vg சாரதா படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, ஒரு நாள் KSG அவர்களும், கவியரசு கண்ணதாசன் அவர்களும் பேசிக் கொண்டிருந்த போது, சாரதா பட வெற்றிக்கு தன் பாடல்கள் தான்
முக்கியக் காரணம் என்று கவியரசு கூற, KSG அப்படியானால், நான் உங்கள் பாடல்கள் இல்லாமல் ஒரு வெற்றி...See More

LikeReply26 hrs
Jai Shree Vg கற்பகம் பட வெற்றி விழாவில், கவியரசு கண்ணதாசன் தலைமை தாங்க, விழாவில் பேசிய சின்ன அண்ணாமலை, "பல சமயங்களில் ரேஸில் சோப்ளாங்கி மாடுகள் வெற்றி பெறும் அப்படித்தான், கவியரசர் எழுதாத இப்பட பாடல்களின் வெற்றி" என பேச, பதறி எழுந்த கண்ணதாசன், "பக்கத்து வீட்டு பருவ...See More
LikeReply15 hrs
Ezhichur Aravindan கே.எஸ்.ஜி. தன் மகன் வெங்கடேஷை கதாநாயகனாக்கி மலரே குறிஞ்சி மலரே என்று ஒரு படம் எடுத்தார்
LikeReply59 mins
Ezhichur Aravindan பட்டாபிஷேகம் அல்ல பாலாபிஷேகம். மனோகரா கதையை சோஷியல் சப்ஜெக்ட்டாய் பண்ணி இருப்பார்.
LikeReply59 mins
Ezhichur Aravindan சாரதா படத்திலேயே மணமகளே மருமகளே வா வா பாட்டு பஞ்சு அருணாச்சலம் எழுதினார்.
LikeReply58 mins
Ezhichur Aravindan உத்தமபுத்திரனில் வரும் உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே பாடலை இவர்தான் எழுதினார்
LikeReply58 mins
Ezhichur Aravindan அமரதீபத்தில் நாணயம் மனுஷனுக்கு அவசியம்.பாட்டும் எழுதினார்.
LikeReply58 mins
Ezhichur Aravindan என்னதான் முடிவு படம் தன்னை ஹேராம் எடுக்க தூண்டியதாக கமல் சொன்னார்
LikeReply47 mins
Jai Shree Vg நாகேஷ் முதன் முதலாக நடனம் ஆட வேண்டிய நேரம் ஒரு படத்தில் நடிக்கும் போது வந்தது. நடனம் தெரியாத நாகேஷால் டைரக்டர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி நடனமாட முடியவில்லை. அப்போது அங்கே வந்த தயாரிப்பாளரிடம் டைரக்டர் "இவனை இந்தப் படத்துல போட்டதால், நான் தினமும் செத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியது நாகேஷ் காதில் விழ துடித்துப் போய் வீடு திரும்பி, தனி அறையில் மேற்கத்திய இசைத்தட்டை ஒலிக்க விட்டு, இரவு முழுவதும், தானாகவே முயற்சி செய்து நடனம் ஆடி, மறு நாள் ஷூட்டிங் போனார். அங்கே டைரக்டர் "இன்னிக்காவது ஒத்துழைப்பு கொடுப்பா" என கூற ஒவ்வொரு வரிக்கும் புது பது மூவ்மெண்ட்டை ஆடிக் காண்பிக்க, டைரக்டருடன் யூனிட்டே மூக்கில் விரல் வைத்தது. அன்று புதிதாக பிறந்தார் தனக்கென புதிய பாணியை உருவாக்கிக் கொண்ட டான்ஸர் நாகேஷ். அந்த இயக்குநர் K.S. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
LikeReply22 mins
T V Radhakrishnan
Write a comment...
Su