Friday, September 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 108 சேரன்



மதுரை- மேலூர் அருகே பழையூர்பட்டி என்ற ஊரில் 1970ல் பிறந்தவர் சேரன்

நான் கு முறை இவரது படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராய் இருந்து,பின் துணை இயக்குநராகவும் இருந்தார்.கமல் ஹாசனின் மகாநதி படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றினார்

பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநர் ஆனார்

பின், பொற்காலம்,பாண்டவர் பூமி,வெற்றி கொடி கட்டு..மூன்று படங்களும் தொடர்ந்து  வெற்றி

இவரது ஆட்டோகிராஃப் படத்திற்கு நான் கு ஒளிப்பதிவாளர்கள் பணி புரிந்தனர்

ரவிவர்மா, செந்திலின் (சேரன்) இளமை காலத்தை 35 எம் எம் லென்ஸில்  எடுத்தார்

விஜய்மில்டன் , கேரள காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்

துவாரகநாத் சென்னைக் காட்சிகளை பட்மாக்கினார்

சங்கி மகேந்திரன் மீதக் காட்சிகளை எடுத்தார்

இப்படம் மான்ற்றியல் உலகப் படவிழாவில் நான் கு முறை திரையிடப்பட்டது

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்-

1997ல் பாரதி கண்ணம்மா
             பொற்காலம்
1998ல் தேசிய கீதம்
2000ல் வெற்றி கொடி கட்டு
.2001ல் பாண்டவர் பூமி
2004ஆட்டோகிராஃப்
2005ல் த்வமாய் தவமிருந்து
2007ல் மாயக்கண்ணாடி
2009ல் பொக்கிஷம்
2015ல் ஜெ கே என்னும் நண்பனின் வாழ்க்கை

இதைத்தவிர்த்து வெளியார் படங்களிலும் நடித்துள்லார்.சொல்ல மறந்த கதை படம் மூலம் தங்கர்பச்சான் இவரை நடிகராக ஆக்கினார்

பின் பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை,ஆடும் கூத்து,யுத்தம் செய்,முரண்,சென்னையில் ஒரு நாள்,மூன்று பேர் மூன்று கதை, கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்

வெற்றிகொடிகட்டு,ஆட்டோகிராஃப்,தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து ஆகிய படங்கள் தேசிய விருது பெற்றன.(ஆடும் கூத்து படம் இன்னமும் வெளியாகவில்லை.ஆனாலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்படம் திரையிடப்பட்டதாம்)

சி 2 எச் (cinema to House)  DVD on the day of release33

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை இப்படி வெளியானது.இதில் 150 வெளியிட்டார்களும், 3000 டீலர்ஸும் உள்ளனர் 

தமிழ்த் திரைப்பட இய்க்குநர்கள் 107ஃபாசில்



1953ல் கேரளாவில் பிறந்தவர் ஏ எம் ஃபாசில்

1980ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மோகன்லால் நடித்த மலையாளப்படம் மூலம் இயக்குநர் ஆனார்.1993 மணிசித்திரத்தாழு படம் தேசிய விருது பெற்றது (இதுவே சில மாற்றங்களுடன் சந்திரமுகியாக வாசு இயக்கத்தில் தமிழில் வந்தது)

31 படங்கள் வரை இயக்கியுள்ள ஃபாசில் பெரும்பாலும் மலையாளப்படங்களையே இயக்கிய்டுள்ளா.வருஷம் 16 மூலம் குஷ்பூவை தென்னிந்திய பட உலகில் பிரவேசிக்க வைத்தார்

இவரது மகன் ஃபாகத் ஃபாசில் இன்று மலையாளப் படவுலகில் முன்னணி நடிகர்.நடிகை நஸ்ரியாவை ஃபாகத் மணந்துள்ளார்

ஃபாசில் இயக்கத்தில் வெளீவந்துள்ள தமிழ்ப் படங்கல்

1985ல் பூவே பூச்சூடவா (பத்மினி, நதியா)
1987ல் பூ விழி வாசலிலே
1989ல் என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
1989ல் வருஷம் 16
1990 அரங்கேற்ற வேளை (பிரபு, ரேவதி)
1991ல் கற்பூரமுல்லை
1993ல் கிளிப் பேச்சு கேட்க வா (மம்மூட்டி)
1997ல் காதலுக்கு மரியாதை (விஜய், ஷாலினி, சிவகுமார்)
2000ல் கண்ணுக்குள் நிலவு (விஜய், ஷாலினி)
2005ல் ஒரு நாள் ஒரு கனவு

இவரது படங்கள் அனைத்தும் வெற்றி படங்களே எனலாம்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானப் படங்கள்.

Thursday, September 29, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 106 ஆர்.கே.செல்வமணி

                   


1965ஆம் ஆண்டு பிறந்தவர் செல்வமணி

மணிவண்ணனிடம் உதவியாளராய் இருந்தவர்

புலன்விசாரணை திரைப்படத்தின் கதையை ஓவியங்களாக வரைந்து, அவற்றை ஒரு ஆல்பமாக்கி, அப்படத்தை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார்.1990ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு புலன்விசாரணை

அடுத்து, சில நாட்கள், மக்கள் அனைவராலும் பேசப்பட்டார்.அப்பட வெற்ரிக்கு முக்கியக் காரணம் அக்காலகட்டத்தில் குற்றவாளியாய் இருந்த ஆட்டோ ஷங்கர் பற்றியும், அரசியல் நிலைபாடுகளையும் அப்படம் உணர்ர்த்தியது சிறப்பு

அப்பட வெற்றி செல்வமணிக்கு விஜ்ய்காந்தின் 100 வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கும் வாய்ப்பினையுல் அளித்தது.இப்படம் வந்த ஆண்டு 1991

படம் வெளிவந்த அடுத்த மாதம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட,அதைப்  பின்னணியாகக் கொண்டு குற்றப்பத்திரிகை படத்தை ஆரம்பித்து, இயக்கினார்.இதனிடையே, பிரசாந்த், ரோஜா நடிக்க செம்பருத்தி படம் வெளியாகி வெற்றிதொடர்ந்து மூன்று வெற்றிகள்.

செல்வமணியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகியது

இந்நிலையில்.குற்றப்பத்திரிகை படம் சென்சாரால் தடை செய்யப்பட்ட்து.படம் வெளியாகவில்லை.

அதற்காக அலைய ஆரம்பித்தார் செல்வமணி.அதன் காரணமாகவோ என்னவோ..அதன் பின்னர் வந்த அவரது எந்தப் படங்களும் சொல்லும் படி அமையவில்லை.

16ஆண்டுகளுக்குப் பின்னர் 2007ல் குற்றப்பத்திரிகை வெளியாகி தோல்வியைத் தழுவியது

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

1990 புலன்விசாரணை
1991 கேப்டன் பிரபாகரன்
1992 செம்பருத்தி
1994ல் அதிரடிப்படை
1994ல் கண்மணி
1995ல் ராஜமுத்திரை
1995ல் மக்களாட்சி
1997ல் அடிமைச்சங்கிலி
1997ல் அரசியல்
1999ல் ராஜஸ்தான்
2001ல் துர்கா
2007ல் குற்றப்பத்திரிகை
2015ல் புலன்விசாரணை 2

திரைப்பட  நடிகை ரோஜா இவரது மனைவி ஆவார்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 104 சுராஜ்



1998ஆம் ஆண்டு சரத்குமார்,தேவயானி நடித்த மூவேந்தர் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுராஜ்.அதிரடியுடன் கூடிய மசாலா படங்கள் இவரது சிறப்பு

இவர் இயக்கிய படங்கள்

1998 மூவேந்தர்
2001ல் குங்குமப்பொட்டு கவுண்டர் (சத்யராஜ்)
2003ல் மிலிட்டரி (சத்யராஜ்)
2996ல் தலைநகரம் (சுந்தர் சி)
2009ல் படிக்காதவன் (தனுஷ்)
2011ல் மாப்பிள்ளை (தனுஷ்)
2013ல் அலெக்ஸ் பாண்டியன்
2015ல் சகலகலாவல்லவன் (ஜெயம் ரவி)


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 105
--------------------------------------------------------

நடிகர்,இயக்குநர் சித்ரா லட்சுமணன்.இவரும் இவர் சகோதரர் சித்ரா ராமுவும் சேர்ந்துமண்வாசனை, வாழ்க்கை,சின்னப்பதாஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளனர்

1988ல் சூரசம்காரம் மூலம் (கமல் நடித்தது) இயக்குநர் ஆனார்.பின்னர் 1997ல் பிரபு நடிக்க பெரியதம்பி படத்தை இயக்கினார்.1999ல் கார்த்திக், ரோஜ நடிக்க சின்னராஜா இயக்கினார்

ஜப்பானில் கல்யாணராமன், புதுமைப்பெண், பாஸ் எங்கிற பாஸ்கரன், தீயா வேலை செய்யணும் குமாரு, உத்தமவில்லன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார்.

கமல் ஹாசனுக்கு பொதுமக்கள் தொடர்பு செயலராகவும் பணிபுரிந்துள்லது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 28, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 103 செல்வா

                       
               

1992ல்  தலைவாசல் என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார் செல்வா

முன்னதாக தில்லி தொலைக்காட்சி நிறுவனத்திற்காக பாரதியார் பற்றி டாகுமென்டரி ஒன்றை எடுத்தார்.

தொடர்ந்து தொலைக்காட்சிக்காக தியாகம், அகிலனின் சித்திரப்பாவை,நீலா மாலா ஆகிய தொடர்களை இயக்கினார்.

நீலா மாலா தொடர் தயாரிப்பாளர்களான சோழா கிரியேஷன்ஸ் இவருக்கு தலைவாசல் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தனர்.இப்படத்தில், நடித்த விஜய் என்னும் நடிகர் பின்னர் தலைவாசல் விஜய் என அழைக்கப்பட்டார்

அடுத்து 1993ல் அமராவதி என்ற படத்தை இயக்கினார்.இப்படத்தில்தான்  அஜீத் அறிமுகமானார்

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்-

1992ல் தலைவாசல்
1993ல் அமராவதி
1995ல் கர்ணா
1997ல் புதையல்
             சிஷ்யா
1998ல் பூவேலி
1999ல் ஆசையில் ஓர் கடிதம்
             உன்னருகே நான் இருந்தால்
2000ல் ஜேம்ஸ் பாண்டு
 2003ல் ஸ்டூடென்ட் நம்பர் 1
2004ல் ஜோர்
2995ல் ஆணை
2006ல் நெஞ்சில் ஜில் ஜில்
2007 நான் அவனில்லை
2007ல் மணிகண்டா
2008ல் தோட்டா
2009ல் குரு என் ஆளு
2009ல் நான் அவனில்லை (2)
2012ல் நாங்க

கே பாலசந்தர் இயக்கத்தில் வந்த ஜெமினி கணேசன் தயாரித்து, நடித்த நான் அவனில்லை படத்தின் ரீமேக்கே  ஜீவா நடித்து இவர் இயக்கிய நான் அவனில்லை   

Tuesday, September 27, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 102 மனோபாலா





1953 ஆம் ஆண்டு பிறந்தவர் மனோபாலா

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கியுள்ளார்.9 டெலிஃபிலிம்களை இயக்கியுள்ளார்

பல படங்களில், குணசித்திர வேடம், நகைச்சுவை வேடம் என நடித்துள்ளார்.எந்த பாத்திரமானாலும், சின்ன நகைச்சுவை வேடமாயினும் தனித்து நிற்பார் இவர்.அதுவே இவரது திறமைக்குச் சான்றாகும்

1982ல் கார்த்திக், சுகாசினி நடித்த ஆகாயகங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்

பின்னர் இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1985ல் நான் உங்கள் ரசிகன் (மோகன்)
                பிள்ளைநிலா
1986ல் பாரு பாரு பட்டிணம் பாரு
1987ல் சிறைப்பறவை (விஜய்காந்த்)
           தூரத்துப் பச்சை
            ஊர்க்காவலன் (ரஜினி)
1989ல் என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்
             தென்றல் சுடும்
1990ல் மல்லு வேட்டி மைனர்
 1991ல் வெற்றிபடிகள்
1991ல் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்(விஜய்காந்த்)
1992ல் செண்பகத்தோட்டம்
1993ல் முற்றுகை
            கருப்பு வெள்ளை
             பாரம்பரியம் (சிவாஜி, சரோஜா தேவி)
1997 ந்ந்தினி
2000ல் அன்னை
2001ல் சிறகுகள்
2002ல் நைனா

2014ல் வந்த சதுரங்க வேட்டை படத்தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்
      
     
   



Monday, September 26, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 101 விக்ரமன்



1990ல் புதுவசந்தம் படம் மூலம் இயக்குநர் ஆனவர் விக்ரமன்

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தார்.

இவர் இயக்கத்தில் வந்த வானத்தைப்போல சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது

பல வெற்றி படங்களைக் கொடுத்த இவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது வேதனையே!

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990ல் புது வசந்தம், புதிய கதைக்களம்.மாபெரும் வெற்றி படம்

1991ல் பெரும்புள்ளி
1993ல் நான் பேச நினைப்பதெல்லாம்
           கோகுலம்

1994ல் புதிய மன்னர்கள்

1996ல் பூவே உனக்காக (விஜய் நடிக்க..படம் மாபெரும் வெற்றி.தெலுங்கு,கன்னடம், ஹிந்தியில் எடுக்கப்பட்டது

1997ல் சூரியவம்சம் (சரத், தேவயானி நடித்தது.தெலுங்கு,கன்னடம், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது)

1998ல் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (கார்த்திக்.தெலுங்கு, கன்னடத்தில் எடுக்கப்பட்ட்டது)

2000ல் வானத்தைப் போல (தெலுங்கு, கன்னடத்திலும் எடுக்கப்பட்ட்து)

2002ல் சூர்யா, சிநேகா நடிக்க உன்னை நினைத்து (தெலுங்கு, கன்னடம் வந்தது)

2003ல் பிரியமான தோழி

2006ல் சென்னைக்காதல்
2009 விஜய்காந்த் நடிக்க மரியாதை

2013ல் நினைத்தது யாரோ

சுயம்வரமும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களும்

                   

கிரிதாரிலால் நாக்பால் தயாரிப்பில்

ஜே.பன்னீர்,ஏ ஆர் ரமேஷ் ,கேயார், ஈ.ராமதாஸ்,அர்ஜுன்,குருதனபால்.லியாகத் அலி கான் ஆர்.சுந்தரராஜன்,செல்வா, கே.சுபாஷ்,சி.சுந்தர்,சிராஜ்,கே எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் இயக்கத்தில்

  விஜயகுமார் ,மஞ்சுளா,நெப்போலியன்,பார்த்திபன்,சத்யராஜ்,பிரபு,அப்பாஸ்,ரோஜா,கஸ்தூரி,மகேஸ்வரி,ப்ரீதா விஜயகுமார்,ரம்பா,சுவலட்சுமி,குஷ்பூ,ஐஸ்வர்யா,ஹீரா, பாண்டியராஜ்,வினீத்,லிவிங்க்ஸ்டன்,பிரபுதேவா,கார்த்த்க்,அர்ஜுன் நடிக்க

சிற்பி, தேவா,வித்யாசாகர்,ராஜ்குமார் இசையமைப்பில்

பாபு, ரகுநாத் ரெட்டி,ராவ்,சங்கர்,செல்வராஜ்,கார்த்திக் ராஜா,உதயசங்கர்,அஷோக் ராஜன்,பன்னீர்செல்வம், செந்தில்குமார்,இமயவரம்பன்,ராம் குணசேகரன்,ராஜரத்னம்,அஷோக்,அஹ்மத்,மோகன், விக்டர் எஸ் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய

155 நிமிடங்கள் ஓடக்கூடிய சுயம்வரம் என்ற படம் 23 மணி 58 நிமிடங்களில் ஒரே நாளில் எடுக்கப்பட்டு வெளியானது.கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது

ஏவிஎம் ஸ்டூடியோ,ஏவிஎம் கார்டன்,காமராஜ் மெமோரியல்,ஃபில்ம் சிடி,கிண்டி,அபு பேலஸ்,குஷால்தாச் ஹவுஸ்,விஜயா வாஹினி ஸ்டுடியோக்கள் ஆகியவற்ரில் படபிடிப்பு நடந்தது.

Sunday, September 25, 2016

சாமிக்கண்ணு வின்சென்ட் (தமிழ்த் திரைப்பட இயக்குநர் வரிசை)

                           


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பற்றிய இத்தொடர், இவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் முடிவு பெறாது.

இவர் இயக்குநர் அல்ல..ஆனாலும் திரையுலகின் முன்னோடி.தென்னிந்திய தமிழ் சினிமாவின் தந்தை.

18-4-1883ஆம் ஆண்டு..த்மிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவரும், இருபதாம் நூ ற்றாண்டின்  ஆரம்பித்தில் தென்னிந்தியாவின் சலனப் படங்களை திரையிட்டவருமான சாமிக்கண்ணு வின்சென்ட், கோவையில் கோட்டைமேடு பகுதியில் பிறந்தார்.பின்னாளில் மூன்று திரையரங்குகளை கோயம்பத்தூரில் நடத்தினார்.பல தமிழ்ப்படங்களைத் தயாரித்தார்

தனது 22அவது வயதில் தென்னக ரயில்வேயில்பொன்மலை ரயில்வே நிலையத்தில் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.

1905ஆம் ஆண்டு டியூபாண்ட் என்ற பிரஞ்சுக்காரர், திரைப்படம் சம்பந்தப்படவரைச் ச்ந்தித்தார்.இந்நிலையில் ஒருநாள் அந்த பிரஞ்சுக்காரர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், தனது புரஜக்டர், படச்சுருள் மற்றும் பல சாதனங்களை விற்றுவிட்டு தன் நாடு செல்லத் திட்டமிட்டார்.இதை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் ,தன் கையிலிருந்த பணத்துடன்.   தன் சகோதரியின்         நகைகளையும் விற்று 2250 ரூபாய்க் கொடுத்து அவரிடமிருந்த உபகரணங்களை வாங்கினார்.

பின்னர் தன்னிடமிருந்த புரஜக்டர் உதவியால், ஏசுவின் வாழ்க்கை என்ற படததை, தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் காட்டினார்.மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.பின், புது முயற்சியாக டென்ட் கொட்டகையை உருவாக்கினார்.ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து, புரஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களைக் காட்டினார்.

சினிமாவைக் கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் தயாரித்த ரயிலின் வருகை(ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்தப்படமே)என்ற படத்தைக் காட்டினார் .அதைப் பார்த்த மக்கள், ரயில் தம் மீது மோதிவிடும் என அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.வெளிநாடுகளிலிருந்து  வரும் துண்டுப் படங்களையும்    தமிழகம்   முழுதும் சுற்றிக் காட்டினார்

பின், தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற தியேட்டரை உருவாக்கி படங்களைத் திரையிடத் தொடங்கினார்.(இக்காலகட்டத்தில், சென்னையில் கெயிட்டி,கிரௌன் திரையரங்குகள் கூடாரமாகவே இருந்தன).பின்னர், அதே சாலையில் எடிசன் எனும் திரையரங்கு பேலஸ், நாஸ் திரையரங்கு,ரெயின்போ திரையரங்கு என
திரையரங்குகள் விரிவடைந்தன

அமெரிக்க புரஜக்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் முகவராகவும் ஆனார் சாமிக்கண்ணு வின்சென்ட்.தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு இப்போது சலனப்படங்களை எடுத்துச் செல்ல முடிந்தது

இதனிடையே ஒரு அச்சகமும், மாவு ஆலையையையும் நிறுவினார்/மின்சாரம் மூலம் இயங்கும் அந்த  அச்சகத்தின் பெயரே எலக்ட்ரிகல் பிரிண்டிங்க் பிரஸ் .இங்கு படங்களுக்கான விளம்பர நோடீஸ்கள் அச்சிடப்பட்டன.ஆலைகளுக்கு மின்சாரம் போக, மீதத்தை மக்களுக்காக வழங்கினார்.கோவை நகரே இவரால் மின் நகரமாய் ஆனது

இவருக்கு உறுதுணையாக இவர் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட். அவரது மகன் பால் வின்சென்ட் இருந்தனர்.கோவை ரத்தினசபாபதி நகரில் லைட் ஹவுஸ் எனும் திரையரங்கை நிறுவினார்.இவர்களிடம் ஒரே நேரத்தில் 60 கூடார கொட்டகைகள் இருந்தன.இவர்கள் நிறுவனமே வின்சென்ட் சோடா நிறுவனமாகும்

கோவை-திருச்சி சாலையில் 1937ஆம் ஆண்டு உருவான சென்டிரல் ஸ்டூடியோவின் இயக்குநர்களில் இவரும் ஒருவரானார்.இன்றும் கோட்டைமேடு பகுதியில் இவர் பெயரில் வின் சென்ட் சாலை உள்ளது

அடுத்து கோவையைத் தவிர்த்து உதகமண்டலம்,மதுக்கூர்,ஈரோடு,அரக்கோணம்,கொல்லம் என பல கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார் ,

மௌனப்படங்களில் கிராமஃபோன் மூலம் பின்னணி இசையைக் கோர்த்து,தமிழ் சினிமாவில் முதல் தொழில் நுட்பத்தைப் புகுத்தினார்.வின்சென்டிந்தொழில் நாளுக்கு நாள் விரிவடைந்தது

நிரந்திர திரையரங்குகள் வந்த பின்னர், பம்பாயில் தயாரான ஹரிச்சந்திரா போன்ற படங்கள் சென்னையில் திரையிடப் பட்டன.இதனிடையே ஆர்.நடராஜ முதலியார் என்பவர் 1916ஆம் ஆண்டில் கீசகவதம் என்ற படத்தைத் தயாரித்தார்.அதை முதலில் தன் திரையரங்கில் திரையிட்டார் சாமிக்கன்ணு வின்சென்ட்

சினிமாவை தென்னிந்தியாவில் வெற்றிகரமான தொழிலாக முன்னெடுத்து வந்தார் அவர்

1933ல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளித்திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார்.இப்படம் சென்னை எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் தினமும் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது
1935ல் ஹரிசந்திரா படத்தைத் தயாரித்தார்  .அடுத்து சுபத்ரா பரிணயம்(1935)

1936ல் பேலஸ் திரையரங்கை வாங்கியவர் ஹிந்தி படங்கலையும் திரையிடலானார்.
1937ல் கோவையில் சென்டிரல் ஸ்டூடியோஸ் தொடங்கப்பட்டபோது அதில் ஹிந்தி மொழிப்படங்களையும் திரையிட்டார்

1939ல் ஓய்வு பெற்றவர்..1942ல் மரணமடைந்தார்

இவர் தமிழ்ப்பட இயக்குநர் அல்ல.ஆனாலும், தமிழ்ப் பட வளர்ச்சிக்கு ஆணிவேர்.ஆகவே தென்னிந்திய திரையுகின் தந்தை இவர்தான் என்றால் மிகையில்லை

Saturday, September 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 100 வசந்த்

         

வசந்த்  - திரைக்கதை ஆசிரியர், இயக்குநர்

இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.சிந்து பைரவி,புன்னகை மன்னன் உட்பட 18 படங்களுக்கு அவருடன் பணிபுரிந்துள்ளார்

கேளடி கண்மணி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.படம் 285 நாட்கள் ஓடி அவருக்கு மாபெரும் வெற்றியைத் த்ந்தது
அடுத்து நீ பாதி நான் பாதி இயக்கினார்.
மூன்றாவதாக அஜீத் நடிக்க ஆசை படம்  வெளிவந்து வெற்றி படமானது.சுவலட்சுமி இதில் அறிமுகம்

மணிரத்னம் தயாரிக்க இவர் இயக்கத்தில் வந்த படம் நேருக்கு நேர்.சூர்யா இப்படத்தில் அறிமுகம்

இவர் குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.சா,கந்தசாமியின் தக்கையின் மீது நான் கு   கண்கள் என்ற இவர் இயக்கிய குறும்படத்திற்கு, சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது

இனி, இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990 கேளடி கண்மணி (எஸ் பி பாலசுப்ரமணியம் )
1991 நீ பாதி நான் பாதி
1995 ஆசை
1997ல் நேருக்கு நேர்
1999ல் பூவெல்லாம் கேட்டுப்பார்
2000ல் அப்பு, ரிதம்
2003ல் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க
2007ல் சத்தம் போடாதே
2013ல் மூன்று பேர் மூன்று காதல்

-------------------------------------------------------------------------------------------

இத்தொடர் ஆரம்பிக்கும் போது 100 இயக்குநர்கள் பற்ரி எழுதுவதாகக் கூறியிருந்தேன்.நொறுக்ஸ் என இரு பதிவுகளில் மேலும் பல இயக்குநர் பற்றி சொல்லியிருந்தேன்.

அப்படியும் சீனியர் இயக்குநர்கள் சிலர் பற்றி  எழுத வேண்டியுள்ளதால், இத்தொடரை சற்று நீட்டிக்கிறேன்.அவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவதாக இருக்கிறேன்

இன்று இயக்கி வரும் பல இளம் இயக்குநர்கள் குறித்து இவ்வளவு விரைவில் எழுத விரும்பவில்லை.சிறிது காலம் கழித்து அவர்களைப் பற்றி எழுதுகிறேன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் சில நொறுக்ஸ் - 2


 

இயக்குநர் சிகரம் கே,பாலசந்தரின் நண்பரும், அவருடன் திரைப்பணியை இணைந்து புரிந்தவருமான அனந்து அவர்கள் இயக்கத்தில் வந்த படம் :சிகரம்:

குணசித்திர நடிகராய் இருந்த மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வந்த படங்கள், கல்தூண்,அந்த ஒரு நிமிடம்,இன்று நீ நாளை நான்,முத்துகள் மூன்று,அம்மா இருக்கா

நகைச்சுவையில் கொடிகட்டி பறந்த நாகேஷ், தன் மகன் ஆனந்த பாபு நடிக்க இயக்கிய படம் :பார்த்த ஞாபகம் இல்லையோ

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கிய படங்கள் உன்னைப்போல ஒருவன், யாருக்காக அழுதான்

பிரபல இலக்கியவாதி, நாடக ஆசிரியர் கோமல் சுவாமினாதன் இயக்கிய படங்கள் யுத்தகாண்டம்,அனல் காற்று,ஒரு இந்திய கனவு

வியட்னாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வந்த படங்கள், கௌரவம்,விஜயா,தேவிகருமாரியம்மன்,ஞானப்பறவை

நான், மூன்றெழுத்து ஆகிய படங்களுக்கு கதை, வசனகர்த்தாவான டி.என்.பாலு இயக்கத்தில் வந்த படங்கள் அஞ்சல்பெட்டி 520,மனசாட்சி,உயர்ந்தவர்கள்,மீண்டும் வாழ்வேன்,ஓடி விளையாடு தாத்தா,   சட்டம் என் கையில் (இப்படமே கமல் உதடுகளுக்கு முக்கியத்துவம் ஆரம்பித்த படம்) சங்கர்லால் (இப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் காலம் மறைந்தார்)

முரசொலி மாறன் இயக்கத்தில் வந்த படம் "மறக்க முடியுமா?"

நகைச்சுவை நடிகர், அரசியல் விமரிசகர்,பத்திரிகையாளர் சோ அவர்கள் இயக்கத்தில் வந்த படங்கள் முகமது பின் துக்ளக்,உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, மிஸ்டர் சம்பத், சம்போ சிவ சம்போ

அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாத்தான் ஆகிய  இரு படங்களை நடிகர் ராஜ்கிரண் இயக்கியுள்ளார்

ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வந்த படங்கள்..1968ல் கீழ்மணியில் நடந்த நிகழ்வுகளை வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் இயக்கினார்.இப்படம் இந்திராகாந்தி தேசிய விருதைப் பெற்றது.தவிர்த்து இவர் இயக்கத்தில் இரவுப்பூக்கள்,பூக்கள் விடும் தூது ஆகிய படங்கள் வந்தன

நடிகர் மோகன் இயக்கிய படம் அன்புள்ள காதலுக்கு


நடிகர் ரமேஷ் அரவிந்த் கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை இயக்கினார்.னடிகர் சத்தியராஜ் இயக்கியப் படம் வில்லாதி வில்லன்
நாசர் இயக்கத்தில் வந்த படம் அவதாரம்
என் எஸ் கே , இயக்கியப் படம் பணம்,
சந்திரபாபு இயக்கிய படம் தட்டுங்கள் திறக்கப்படும்
நடிகர் ரவிசந்திரன் இயக்கியப் படம் மானசீக காதல்

நடிகர் ராமராஜன் இயக்கியப் படங்கள் அதிகம்.அவை, அம்மன் கோயில் வாசலிலே,மருதாணி, மனசுக்கேத்த பொண்ணு,பொன்னான நேரம், நம்ம ஊரு ராசா,ஹலோ யார் பேசறது, சீறி வரும் காளை,கோபுர தீபம்,மறக்க மாட்டேன்,விவசாயி மகன், சோலை புஷ்பங்கள்

ஜெயபாரதி
-----------------------

இவரைப்   பற்றி இன்று பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.ஆனால், திரைப்பட இயக்குநர்கள் வரிசையில்....தமிழில் ஆர்ட் ஃபில்ம் எடுத்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் இவர்.சத்யஜித் ராய்,தபன் சின் ஹா, போன்றவர்களால் கவரப்பட்டு இயக்குனர் ஆனார்,

இவர் ஏழு திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.வணிக ரீதியாக அவை வெற்றி பெறாதிருக்கலாம்.ஆனால், பேசப்பட்ட படங்கள்.அவை தரமான படங்கள்

குடிசை, உச்சி வெயில்,நண்பா நண்பா,ரெண்டும் ரெண்டும் அஞ்சு,புத்ரன்,குருக்ஷேத்ரம்.விருது பெற்ற படங்கள்

வானத்தைப் பார்க்கிறார்கள்,24 சி,வேதபுரம் முதல் வீதி,தேநீர் ஆகிய படங்கள் முழுதும் எடுத்து முடிக்க வசதியில்லாததால் பாதியில் விடப்பட்டன.

புத்ரன் படம் முடிந்தும், பணப்பிரச்னைக் காரணமாக திரையரங்கைப் பார்க்கவில்லை

கலைப்படங்கள் வரிசையில் வந்த படங்கள்

ஜூபிடெர் சின்னதுரை இயக்கத்தில் அரும்புகள்
ஜான் அப்ரகம் இயக்கத்தில் அக்ரஹாரத்தில் கழுதை (தேசிய விருது)
நிமல் கோஷ் - குற்றவாளி
ச்ந்திரன் ஹேமாவின் காதலர்கள்
அருள்மொழி - காணி நிலம்
பாபு நந்தன் கோடு - தாகம்
கே எஸ் சேதுமாதவன்- மறுபக்கம் (நான் கு தேசிய விருது  , சிறந்த தமிழ்ப்படத்த்ற்கான தங்கத்தாமரை விருது  ), தவிர்த்து கமல் நடிக்க நம்மவர்கள்

(விட்டுப்போய் விட்டதாக பின்னூட்டம் இடுபவர்கள்..இத்ன் முதல் பகுதியையும் படித்துவிடவும்)

Friday, September 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 99 ஆர்.சுந்தரராஜன்




ஆர்.சுந்தரராஜன், ஒரு நடிகர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார்

இளையராஜாவுடன் இணைந்து காலத்தால் அழிக்கமுடியா பல இனிமையான பாடல்களுடன் பல படங்களை இயக்கியுள்ளார்.

ஜெயஷங்கர் நடிக்க 1977ல் அன்று சிந்திய ரத்தம் படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து 1982ல் பயணங்கள் முடிவதில்லை என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார்.அதே ஆண்டு அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை என்ற படமும் வந்தது

நடிகர் மோகன் நடிக்க பல வெற்றிப்படங்கள் இவர் இயக்கமே!

1983ல் சரணாலயம், தூங்காத கண்ணின்று ஒன்று.

1984ல் நான் பாடும் பாடல்,விஜய்காந்த நடிப்பில் வைதேகி காத்திருந்தாள்

1985ல் குங்குமச்சிமிழ்,சுகமான ராகங்கள்

1986ல் விஜய்காந்த்  ராதா நடிப்பில் அம்மன் கோயில் கிழக்காலே ஆகிய படங்களும், அதே ஆண்டு, எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த மெல்லத் திறந்தது கதவு. மற்றும் தழுவாத கைகள் ஆகிய படங்களை இயக்கினார்

1988ல் என் நிலவு பாடுது, கேள்வியும் நீயே பதிலும் நீயே

1989ல் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க ராஜாதி ராஜா

1990ல் எங்கிட்ட மோதாதே, தாலாட்டுப்பாடவா

1991ல் ஒயிலாட்டம், சாமி போட்ட முடிச்சு

1992ல் திருமதி பழனிசாமி (சத்தியராஜ்)

1994ல் என் ஆசை மச்சான்

1995ல் காந்தி பிறந்த மண்,சீதனம்

1997ல் காலமெல்லாம் காத்திருப்பேன், கோபுர தீபம்

2006ல் உயிரெழுத்து

2013 சித்திரையில் நிலாச்சோறு

அகிய படங்களை இயக்கியுள்ளார்...

கவுண்டமணி, செந்தில் இருவரும் சேர்ந்து நகைச்சுவை விருந்து நமக்கு அநேக படங்களில் அளித்துள்ளனர்.அவர்களை முதன் முதலாய் இணைத்தவர் இவரே

தவிர, 90 படங்களுக்கு மேல் இவர் இதுவரை நடித்துள்ளது சிறப்பு.

Thursday, September 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் சில நொறுக்ஸ்


23 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள தயாரிப்பாளர் தாணு இயக்கிய ஒரே படம் "புதுபாடகன்"

பிரபல பத்தயாரிப்பாளராய் திகழ்ந்த ஜி என் வேலுமணி இயக்கத்தில் வந்தவை இரு படங்கள்.1970ல் நம்ம வீட்டு தெய்வம், 1972ல் அன்னை அபிராமி

வி.சி.சுப்பராமன் என்பவர் சதாரம், மேனகா ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார்

பிரபல எழுத்தாளர் இயக்கத்தி, பாக்கியராஜ் இசையில் வந்த படம் இது நம்ம ஆளு

80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராய் இருந்த அஷோக்குமார் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு உட்பட 7 படங்களை இயக்கியுள்லார்,அவர் இயக்கியுள்ள தமிழ்ப்படம் அன்று பெய்த மழையில்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படங்கள் மின்சாரகனவு,கண்டு கொண்டேன்

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இயக்கியுள்ள தமிழ்ப் படங்கள் நாம் பிறந்த மண்,இரு வீடுகள்,துலாபாரம்,எங்களுக்கும் காலம் வரும்

பிரபல நாடக ஆசிரியர் வெங்கட் இயக்கியுள்ள படங்கள், வீட்ல எலி வெளியில புலி,இவர்கள் வருங்காலத் தூண்கள்,நிச்சயம்,அந்த சில நாட்கள், சூரப்புலி

10 படங்களுக்கு மேலாக திரைக்கதை, வசனம் எழுதியுள்ள வேதம்புதிது கன்ணன் இயக்கியுள்ள படம் அமிர்தம்.இப்படத்தில் பவதாரிணியை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார்

கமல் ஹாசன் இயக்கியுள்ள படங்கள் சாக்க்ஷி 420,ஹேராம்,விருமாண்டி மற்றும் விஸ்வரூபம்

சக்தி நாடக சபையிலும், சிவாஜி நாடக மன்றத்திலும் இருந்த எஸ் ஏ கண்ணன் சிவாஜி நாடக மன்ற நாடகங்களான வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் நாடகங்களை இயக்கினார்.சிவாஜி நடிக்க சத்யம் திரைப்படத்தையும், தினிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

பிரதாப் போத்தன் 1985ல் மீண்டும் ஒரு காதல் கதை,88ல் ஜீவா, 89ல் கமல் நடிக்க "வெற்றி விழா",மை டியர் மார்த்தாண்டன்,மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

பிரபல கன்னடப்பட இயக்குநர் எஸ்.ஆர்.புட்டண்ணா தமிழில், டீச்சரம்மா,சுடரும் சூறாவளியும்,இருளும் ஒளியும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், அல்லி, மணிமண்டபம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கியுள்ளார் 

Wednesday, September 21, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 98 ஆர்.வி.உதயகுமார்



உதயகுமார்...

விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர்

ஆபாவாணனின் ஊமைவிழிகள் படத்திற்கு  துணை இயக்குநராய் இருந்தவர்,உரிமைகீதம் இவரை இயக்குநராக ஆக்கியது

பின், பிரபல அரசியல்வாதியும், படடத்தயாரிப்பாளரும் ஆன ஆர் எம் வீரப்பன் "புதிய வானம்" என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு அளித்தார்,இதில், சிவாஜி,சத்யராஜ் ஆகியோர் நடித்தனர்

கிழக்கு வாசல், சிங்கார வேலன்,எஜமான், சின்னகவுண்டர் என வெற்றிப்படங்கள் தொடர்ந்தன

ஆனால் பொன்னுமணி படத்திற்குப் பின் இவருக்கு இறங்கு முகமே.

இவர் தயாரித்த படங்களுக்கு பாடலாசிரியராகவும் இவர் இருந்துள்ளார் எனபது தனிச்சிறப்பாகும்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1988ல் உரிமை கீதம்
1988ல் புதிய வானம்
1990ல் உறுதிமொழி
1990 கிழக்குவாசல் (கார்த்திக், )
1992 ல் சின்னகவுண்டர் (விஜய்காந்த், சுகன்யா..)(தொப்புள்,பம்பரம் ஞாபகம் வருகிறதா)
1992ல் சிங்கார வேலன் (கமல்,குஷ்பூ)
1993ல் எஜமான் (ரஜினி)
1993ல் பொன்னுமணி
1994ல் ராஜகுமாரன்
1994ல் தலைவரின் அருள் உள்ளம்
1995 ல்சேரன் இரும்பொறையின் தமிழ் காதல் (சரத்குமார்)
1995ல்நந்தவனத் தெரு
1996ல் சுபாஷ்
2005ல் கற்க கசடற

திறமையான ஒரு இயக்குநர்.இவரிடமிருந்து தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்..ஏமாற்றமே

Tuesday, September 20, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 97 பார்த்திபன்

                   

1957ஆம் ஆண்டு பிறந்தவர் பார்த்திபன்

50 படங்கள் வரை இவர் பங்கு பெற்றுள்ளார்.நடிகராகவோ, இயக்குநராகவோ இவ்ரது பணி , பாராட்டும்படியாகவே இருந்துள்ளது.

வடிவேலுவும் இவரும் சேர்ந்தால் கண்டிப்பாக ரசிகனுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலிதான்

ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பு ஒவ்வொரு விதத்தில் பாராட்டும்படியே அமைந்துள்ளது சிறப்பு

புதியபாதை,அழகி,பாரதி கண்ணம்மா,குடைக்குள் மழை,ஆயிரத்தில் ஒருவன்,ஹவுஸ்ஃபுல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்

பாக்கியராஜிடம் உதவி இயக்குநராய் இருந்தவர்

இவரது முதல்படமான புதியபாதை 1989ல் வெளியாகி சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது பெற்றுள்ளது.

1999ல் இவரது ஹவுஸ்ஃபுல் தேசிய விருது பெற்றது

புதியபாதை படத்திற்கு முன் ராணுவ வீரன்,தாவணிக்கனவுகள்,அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்-

1989ல் புதியபாதை
1990ல் பொண்டாட்டி தேவை
1992ல் சுகுமான சுமைகள்
1993ல் உள்ளே வெளியே
1994ல் சரிகமபதநி
1995ல்புள்ளக்குட்டிக்காரன்
1999ல் ஹவுஸ்ஃபுல்
2002ல் இவன்
2004ல் குடைக்குள் மழை
2006ல் பச்சைக்குதிரை
2011ல் வித்தகன்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்



Monday, September 19, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 96 எஸ் ஏ.ச்ந்திரசேகர்

                                   


ராமநாதபுரம் அருகே தங்கச்சிமடம் என்ற ஊரில் 1945ல்பிறந்தவர் சந்திரசேகர்

இவர் மனைவி ஷோபா ஒரு கர்நாடக இசைக்கலைஞர்.சந்திரசேகரின் சில படங்களுக்கு கதை இவர் எழுதியதைத்   .தவிர்த்து நண்பர்கள் என்ற பெயரில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர்களின் மகன் விஜய்.

இவர் தமிழைத் தவிர ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உட்பட 70 படங்கள்வரை இயக்கியுள்ளார்.சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் உள்ளார்.

நாளையதீர்ப்பு என்ற படம் மூலம் விஜய் அறிமுகம்.இப்படத்தின் கதை ஷோபா.இப்படத்தில்    மணிமேகலை என்ற இசையமைப்பாளரையும் அறிமுகம் செய்தார்

1981ல் சட்டம் ஒரு இருட்டறை மூலம் இயக்குநர் ஆனார்.
எஸ்.ஷங்கர்,ராஜேஷ்,பொன்ராம் ஆகியோர் இவருக்கு உதவி இயக்குநராய் இருந்தவர்கள்

இவரது பெரும்பாலான படங்களில் விஜய்காந்த் நடித்துள்லார்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்-

1981ல் சட்டம் ஒரு இருட்டறை
நெஞ்சில் துணிவிருந்தால்
ஜாதிக்கொரு நீதி
நீதி பிழைத்தது
1982 பட்டணத்து ராஜாக்கள்
ஓம் சக்தி
இதயம் பேசுகிறது
1983 சம்சாரம் என்பது வீணை
சாட்சி
1984 வெற்றி
விட்டுக்கொரு கண்ணகி
குடும்பம்
1985ல் புதுயுகம்
நீதியின் மறுபக்கம்
நான் சிகப்பு மனிதன்
1986ல் சிவப்பு மலர்கள்
வசந்த ராகம்
என் சபதம்
எனக்கு நானே நீதிபதி
சட்டம் ஒரு விளையாட்டு
நிலவே மலரே
1987 நீதிக்கு தண்டனை
1988ல் அடிமைகள்
சுதந்திர நாடு
பூவும் புயலும்
இது எங்க நீதி
1989 ராஜநடை
1990 சீதா
1992 நாளைய தீர்ப்பு
இன்னிசை மழை
1993 ராஜதுரை
செந்தூரபாண்டி
1994 ரசிகன்
1995ல் தேவா
விஷ்ணு
1996 மாண்புமிகு மாணவன்
1997 ஒன்ஸ் மோர்
1999 நெஞ்சினிலே
பெரியண்ணா
2001 தோஸ்து
2002 த்மிழன்
2003 முத்தம்
2005 சுக்ரன்
2006 ஆதி
2007 நெஞ்சிருக்கும் வரை
2008 பந்தயம்
2010ல் வெளுத்துக்கட்டு
2011ல் சட்டப்படி குற்றம்
2015ல் டுரிங்க் டாக்கீஸ்

இவர் படங்கள் பெரும்பாலானவை சமூகப் பிரச்னைகளை அலசும் படங்களாகவே அமைந்தவை

நடிகர் மோகனுக்கு நிரந்தரமாக டப்பிங்க் வாய்ஸ் கொடுத்து சுரேந்தர் , ஷோபாவின் சகோதரர்.

Sunday, September 18, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 95 வி.சி.குகநாதன்

                             

1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் பிறந்தவர் குகநாதன்

இயக்குநர் சாணக்யாவிடம் உதவி இயக்குநராய் பணியாற்றியவர்

1968ல் அதாவது தனது 17ஆவது வயதில் புதியபூமி படத்திற்கு கதையில் உதவியவர்

இவர் இதுவரை ஒன்பது மொழிகளுக்கான  249 படங்களுக்கு திரைக்கதை, வசனம் என பணிபுரிந்தார்

49 தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார்.51 படங்களைத் த்யாரித்துள்லார்

இவர் கதை அமைப்பில் வந்துள்ள சில படங்கள்-

புதியபூமி,அன்னையும் பிதாவும்,எங்க மாமா,குமரிக்கோட்டம்,தங்கைக்காக்,காசியாத்திரை,மனிதன்.மின்சாரகுடும்பம்

இவர் தயாரிப்பில் வந்த சில படங்கள்

சுடரும் சூறாவளியும்,ராஜபார்ட் ரங்கதுரை,பெத்த மனம் பித்து

ராமாநாயுடுவின் மதுரகீதம் மூலம் இயக்குநர் ஆனார்.இப்படத்தை27 நாட்களில் ஸ்ரீவித்யா,ஸ்ரீபிரியா, விஜயகுமார் நடிக்க எடுத்து முடித்தார்

தன்னால், கனிமுத்துபாப்பா வில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜெயாவை மணந்தார்

இவர் இயக்கத்தில் வந்த வேறு சில படங்கள்

மஞ்சள் முகமே வருக

1978ல் மச்சானைப்பார்த்தீங்களா, மாங்குடி மைனர்
1979ல் முயலுக்கு மூணு கால்
82ல் தனிக்காட்டு ராஜா, வஞ்சம்
85ல் ஏமாற்றாதே ஏமாறாதெ
88ல் கைநாட்டு
90ல் முதலாளியம்மா
91ல் பாட்டுன்றுகேட்டேன்
92ல் முதல்குரல்
96ல் மைனர் மாப்பிள்ளை
97ல் அட்ரா சக்கை..அட்ரா சக்கை
99ல் மனைவிக்கு மரியாதை

தயாரிப்பாளர் ராமாநாயுடுவிற்கு மட்டும் 41 படங்களில் பணியாற்றியுள்ளார்.ஒரே தயாரிப்பாளரிடம் இவ்வளவு படங்கள் வேறு யாரும் செய்ததில்லை 

Saturday, September 17, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 94 கே எஸ் ரவிகுமார்

                     

நடிகர், தயாரிப்பாளர் இயக்குநர் கே எஸ் ரவிகுமார்

இயக்குநர் விக்ரமிடம் துணை இயக்குநராக இருந்தார்.பின்னர், புரியாத புதிர் மூலம் 1990ல் இயக்குநர் ஆனார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்

இன்னர்  சேரன் பாண்டியன்,நாட்டாமை என பயணம் தொடர்ந்தது.

1995ல் தென்மாவின் கொம்பத் என்ற பிரியதர்சனின் மலையாளப் படத்தைத் தழுவி, பலமாற்றங்களை திரைக்கதையில் புகுத்தி ,கே,பாலசந்தர் தயாரிக்க முத்து படத்தை..முத்து..முத்தான வசனங்கள், பாடல்கள் கொண்டு இயக்கினார்.படம் மாபெரும் வெற்றி.ரஜினி, மீனா விற்கு ஜப்பானில் ரசிகர்கள் தோன்றினர்

பின் 1996ல் மிசஸ் டவுட்ஃபைரைத் தழுவி கமல் நடிக்க அவ்வை ஷண்முகியை இயக்கினார்.

படையப்பா, தெனாலி ,பஞ்ச தந்திரம்,அஜீத் நடித்த வில்லன், கமல் நடிக்க தசாவதாரம் என வெற்றிகள் குவிந்தன.

இவரது படங்களில் சிறிய வேடங்களில் இவர் தோன்றுவதையும் வழக்கமாக் கொண்டிருந்தார்,

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990 புரியாத புதிர்
1991 சேரன் பாண்டியன் (சரத்குமார்)
புத்தம் புது பயணம்
1992 ஊர் மரியாதை (சரத்)
பொண்டாட்டி ராஜ்ஜியம்
1993 சூரியன் சந்திரன்
Band Master (sarath)
புருஷலட்சணம்
94 சக்திவேல்,
நாட்டாமை(சரத்)
95ல் முத்து குளிக்க வாரீயளா
பெரிய குடும்பம்
முத்து (ரஜினி, மீனா)

96ல் பரம்பரை
அவ்வை ஷண்முகி
97ல் தர்மசக்கரம்,
பிஸ்தா
98ல் கொண்டாட்டம்
நட்புக்காக (சரத்)
படையப்பா (சிவாஜி, ரஜினி)
99ல் மின்சாரக் கண்ணா
பாட்டாளி (சரத்)
20000ல் தெனாலி (கமல்)
2001ல் சமுத்திரம் (சரத்)
2002ல் பஞ்சதந்திரம் (கமல்)
வில்லன் (அஜீத்)
2003 பாறை (சரத்)
2004ல் அதீதி
2006ல் சரவணா
வரலாறு (அஜீத்)
2008ல் தசாவதாரம் (கமல்)
2009ல் ஆதவன் (சூர்யா)
2010ல் ஜக்குபாய் (சரத்)
மன்மதன் அம்பு (கமல்)
2014ல் லிங்கா (ரஜினி)
2016ல் முடிஞ்சா என்னைப் பிடி

Friday, September 16, 2016

தமிழ்த் திரைப்பட பெண் இயக்குநர்கள் - 2


துரோகி, இறுதிச் சுற்று மூலம் இயக்குநரானார் சுதா கே பிரசாத்
வி.பிரியா என்பவர்,இயக்கியப் படங்கள் கண்டநாள் முதல் மற்றும் கண்ணாமூச்சி ஏனடா
ஐஸ்வர்யா தனுஷ் "3" படம் மூலம் இயக்குநர் ஆனார் (இவர் ரஜினியின் மகள்)
ரஜினியின் மற்றொரு மகள் சௌந்தர்யா "கோச்சடையான்" படத்தை இயக்கினார்
திருதிரு துறு துறு மூலம் கே.எஸ்.நந்தினி என்பவர் இயக்குநராக அறியப்பட்டார்
கிருத்திகா உதயநிதி, (உதயநிதி மனைவி) வணக்கம் சென்னை படத்தை இயக்கினார்
நடிகை அம்பிகா நிழல் என்ற படத்தை இயக்கினார்
கனவு மெய்ப்பட வேண்டும் படத்தை ஜானகி விஸ்வநாதன் இயக்கினார்,குட்டி படமும் இவர் இயக்கமே
விஸ்வதுளசி என்ற படத்தை சுமதி ராம் இயக்கினார்
மாலினி 22 பாளயம்கோட்டை படத்தை ஸ்ரீபிரியா இயக்கினார்.தவிர்த்து நானே வருவேன், சாந்திமுகூர்த்தம்ஆகிய படங்களையும் தெலுங்கில் திரிஷ்யம் படத்தையும் இயக்கியுள்ளார்
உயிரோடு உயிராக என்ற பட இயக்குநர் சுஷ்மா அகுஜா
ப்ராப்தம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர் சாவித்திரி
பூவரசம் பீப்பீ படத்தை இயக்கியவர் ஹலிதா ஹமீம்
அம்மாகணக்கு இயக்கியவர் அஸ்வினி ஐயர்
நர்த்தகி படத்தை இயக்கியவர் விஜய பத்மா
தமிழில் சில படங்களில் நடித்துள்ள விஜயநிர்மலா 44 தெலுங்கு மொழிப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்
பெண் இயக்குநர்கள் இன்னமும் அதிகமாக வரவேண்டும் என்பதே விருப்பம்





தமிழ்த் திரைப்பட பெண் இயக்குநர்கள்


பிரபல அஷ்டாவதானி பானுமதி "சண்டிராணி' என்ற படத்தை தெலுங்கு, தமிழ் இரண்டிலும் இயக்கியுள்ளார்.பின் பக்த மார்க்கண்டேயா இயக்கினார்1975ல் இப்படியும் ஒரு பெண் படத்தை இயக்கினார்
ஷோபா சந்திரசேகர் (னடிகர் விஜயின் தாயார்) இயக்கியுள்ள படம் "நண்பர்கள்'
நடிகை ஜெயசித்ரா, 'புதியராகம்' நானே என்னுள் இல்லை ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார்
திரைப்ப்டநடிகை லட்சுமி, கே பாலசந்தர் மேற்பார்வையில் மழலைப்பட்டாளங்கள் படத்தி இயக்கியுள்ளார்
மதுமிதா, வல்லமை தாராயோ,கொல கொலயாம் முந்திரிக்கா,மூணே மூணு வாரத்தை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்
கவிதாயிணி லீலா மணீமேகலை பல டாகுமென்டரி படங்களை இயக்கியுல்லார்.தவிர்த்து செங்கடல் ( The dead sea )ஆகிய படத்தை இயக்கி இருக்கிறார்
இந்திரா என்னும் படத்தை இயக்கியவர் சுகாசினி.இப்படம் பெல்கிரேட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
எஸ்பிபி ,நடிக்க பாட்டுப்பாடவா படத்திற்கு கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் பி.ஆர்.விஜயலக்ஷ்மி (பந்துலு மகள்)
நடிகை ரோகிணி Silent Hues (documentary)
தவிர்த்து அப்பாவின் மீசை என்றபடங்களை இயக்கியுள்ளார்.அப்பாவின் மீசை பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
ஆஷா குட்டி நாயர், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி ,தெலுங்கு என 125 படங்களில் நடித்திருந்தாலும் மித்ர மை ஃபிரண்ட் (ஆங்கிலம்),ஃபிர் மிலேங்கி (ஹிந்தி) கேரளா கேஃப் (மலையாளம்), மும்பை கட்டிங்க்(ஹிந்தி) ரெட் பில்டிங்க் வேர் சன் செட்ஸ் (ஆங்கிலம் ) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.மித்ர, ரெ பில்டிங்க் இரண்டும் தேசிய விருது பெற்றது.என்ன...இன்னுமா இவர் யாரென தெரியவில்லை...நடிகை ரேவதிதான் அது
உஷா கிருஷ்ணன் :ராஜா மந்திரி" படத்தை இயக்கியுள்ளார்.
மிஸ் கமலா என்ற பட த்தை இயக்கிய டி பி ராஜலட்சுமி முதல் பெண் இயக்குநர் என முன்னமேயே சொல்லியிருக்கிறோம்




  

Thursday, September 15, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 93 ஆர்.தியாகராஜன்

                                                                                  (தேவருடன் ஆர்.தியாகராஜன்)



தேவர் ஃபிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்., நடிக்க இயலாத நிலையில், அதன் கிளை நிறுவனம் போல தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் சார்பில், தேவர், தனது மருமகன் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வந்த படங்கள்

1974ல் வெள்ளிக்கிழமை விரதம் (சிவகுமார்)
75ல் தாயில்லா குழந்தை
75ல் திருவருள்
77 சொர்க்கம் நரகம் (சிவகுமார்)
77ல் முருகன் அடிமை
77ல் ஆட்டுக்கார அலமேலு
78ல் தாய் மீது சத்தியம் (ரஜினிகாந்த)
79ல் அன்னை ஒரு ஆலயம் (ரஜினி)
80ல் அன்புக்கு நான் அடிமை (ரஜினி)
81ல் ராம் லட்சுமண் (கமல்)
81 அஞ்சாத நெஞ்சங்கள்
82ல் அதிசய பிறவிகள்
82ல் ரங்கா
83ல் சஷ்டி விரதம்
83ல் அபூர்வ சகோதரர்கள்
84ல் நல்ல நாள்9விஜய்காந்த்)
85ல் அன்னை பூமி
85ல் அந்தஸ்து
86ல் தர்மம்

ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

(ஆர்.தியாகராஜன் என்ற பெயரிலேயே (மலையூர் மம்பட்டியான் புகழ்) நடிகர் தியாகராஜனும் 1990ல் சேலம் விஷ்ணு,95ல் ஆண் அழகன்,2004ல் ஷாக் 2011ல் பொன்னர் சங்கர்,2011 மம்பட்டியான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார்)

Wednesday, September 14, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 92 பாக்கியராஜ்

                             
                       

நடிகர்,திரைக்கதாசிரியர்,வசனககர்த்தா,தயாரிப்பாளர், இயக்குநர் 1953ல் பிற்ந்த பாக்யராஜ்

ஹிந்தி,தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது மனைவி பூர்ணிமா மகன் சாந்தனு, மகள் சரண்யா

இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் , பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணியாற்றியவர்.பாரதிராஜாவின் பதினாறு வயதினிலெ,கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களுக்கு கதை, வசனத்தில் பாரதிராஜாவிற்கு உதவியாய் இருந்ததுடன், சின்ன சின்ன வேடடங்களில் நடித்தவர்

புதியவாப்புகள் படம் மூலம் கதாநாயகன் ஆனவர்

1979ல் சுவரில்லா சித்திரங்கள் மூலம் இயக்குநர் ஆனவர்

தொடர்ந்து, ஒரு கை ஓசை (1980)
மௌனகீதங்கள்,இன்று போய் நாளை வா,வியும் வரை காத்திரு,அந்த ஏழு நாட்கள் (1981)
1982ல் தூறல் நின்னுப் போச்சு,பொய் சாட்சி,டார்லிங்க் டார்ர்லிங்க்  டார்லிங்க்

1983ல் முந்தானை முடிச்சு

1984ல் தாவணிக்கனவுகள்

1985ல் சின்ன வீடு

1987 எங்க சின்ன ராசா

1989ல் ஆராரோ ஆரிராரோ

1990 ல் அவசர போலீஸ் 100

1991ல் பவுனு பவுனுதான், ராசுகுட்டி

1992ல் சுந்தர காண்டம்

1993ல் வீட்ல விஷேசங்க,

1995ல்தாய்க்குலமே தாய்க்குலமே

1995ல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

1998ல் வேட்டியை மடிச்சுக் கட்டு

2003ல் சொக்கத்தங்கம், பாரிஜாதம் (கதாநாயகி இவரது மகள் சரண்யா)

2010ல் சித்து பிளஸ் 2

தவிர்த்து இது நம்ம ஆளு படத்திற்கு இவர் இசை அமைத்ததுடன் எழுத்தாளர் பாலகுமாரனை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தினார்

ஊர்வசி முந்தானைமுடிச்சு மூலம் அறிமுகம்.இப்படத்தில் முருங்கக்காய் வைத்து ஒரு செய்தி வரும்.அது பிரபலமானது

1988முதல் பாக்யா என்ற பெயரில் வார இதழுக்கு ஆசிரியராய் இருந்து நடத்தி வருவது சிறப்பு



Tuesday, September 13, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 91 ஷங்கர்

             

பிரம்மாண்டத்திற்கு வேறு பெயர் ஒன்று உண்டென்றால் அது ஷங்கர் என்ற பெயராய்த் தான் இருக்கக்கூடும்

இவர் இயக்கத்தில் வந்த படங்களில் ஓரிரெண்டைத் தவிர மற்ற அனைத்தும் பிரம்மாண்டப் படங்களே

1963ல் பிறந்தவர் ஷங்கர்.

நாடக நடிகராய் இருந்து பின் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
இயக்குநர்

(இவர் எனது நாடகம் ஒன்றில் நடித்துள்ளார் என்ற பெருமை எனக்கு உண்டு)

எஸ் ஏ சந்திர சேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் இருந்தவர்

எ ஆர் ரஹ்மான் தொடர்ந்து இவரது ஆறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்

கே டி குஞ்சுமோன் தயாரித்த ஜெண்டில்மேன் இவர் இயக்கத்தில் வந்த முதல் படம் ஆண்டு 1993

பின்னர்

1994ல் காதலன் (பிரபு தேவா)
96ல் இந்தியன் (கமல்)
98ல் ஜீன்ஸ் (பிரசாந்த், ஐஸ்வர்யா ராய்)
99ல் முதல்வன் (அர்ஜுன்)
2003ல் பாய்ஸ்
2005ல் அந்நியன் (விகரம்)
2007ல் சிவாஜி (ரஜினிகாந்த்)
2010 எந்திரன் (ரஜினி, ஐஸ்வர்யா ராய்)
2012ல் நண்பன் (விஜய்)
2015ல் ஐ  (விக்ரம்)

இவர் படபிடிப்பு பல வெளிநாடுகளில்,.கண்களை குளிர வைக்கும் இடங்களில்.

எல்லமே செலவிலும் கோடிகளில், வசூலிலும் கோடிகளில்.

அருமையான தொழில் நுட்பங்களை இவர் படத்தில் காணலாம்

சமுதாய பிரச்னைகளைச் சொல்வதிலும் வல்லவர்.

ஆகவேதான் அதிகம் ஊதியம் பெறும் இயக்குநராக இவர் திகழ்கிறார்.

அதிகம் எதிர்பார்ப்புடன் 2-0 படம் ரஜினி நடிக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில், குறைந்த பட்ஜெட், வலுவான கதையமைப்புக் கொண்ட படங்களையும் "எஸ்" பிக்க்ஷர்ஸ் என நிறுவனம் ஒன்றை த் துவக்கி பல இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து தயாரித்து வருகிறார்.அவை

காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி,வெயில் (சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது) கல்லூரி,அறை எண் 305ல் கடவுள்,ஈரம்,ரெட்டை சுழி,அநந்தபுரத்து வீடு, கப்பல்

கண்டிப்பாக த்மிழ்த் திரையுலக இயக்குநர்களில் முதல் சில இடங்களிலேயே இவர் பெயரும் நிலைத்திருக்கும் எனலாம்

Monday, September 12, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -90 மணிரத்னம்




கோபாலரத்னம் சுப்ரமணியம் என்ற மணிரத்னம் 1955ல் பிறந்தார்

திரைக்கதைவசனகர்த்தா,தயாரிப்பாளர் இயக்குநர்

1983ல் பல்லவி அனுபல்லவி என்ற கன்னடப் படம் மூலம் இயக்குனர் ஆனார்.
பின்னர் உணரு என்ற மலையாளைப்படம்

தமிழில் 1985ல்  பகல்நிலவு  (5-6-85)மூலம் இயக்குநராக அறிமுகமானார்

தொடர்ந்து அவர் இயக்கத்தில் வந்த படங்கள்-

1985ல் இதயக்கோயில்(14-9-85)
1986ல் மௌனராகம்
1987ல் நாயகன்
88ல் அக்னி நட்சத்திரம்
89 கிதாஞ்சலி (தெலுங்கு தமிழில் டப் செய்யப்பட்டது)
90 அஞ்சலி
91ல் தளபதி
92ல் ரோஜா
93ல் திருடா திருடா
95ல் பம்பாய்
97ல் இருவர்
98 தில் சே (ஹிந்தி) தமிழில் உயிரே என மொழிமாற்றம் செய்யப்பட்டது
2000ல் அலைபாயுதே
2002ல் கன்னத்தில் முத்தமிட்டால்
2004ல் ஆயுத எழுத்து (ஹிந்தியில் யுவா எனற பெயரில் தயாரானது0
2007ல் குரு (ஹிந்தி)தமிழில் அதெ பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது
2010ல் ராவணன் (ஹிந்தியில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது)
2013ல் கடல்
2015ல் ஓ காதல் கண்மணி

தவிர்த்து க்ஷத்திரியன் படக் கதையும், அதன் தயாரிப்பும் இவரே

இவரது மனைவி சுகாசினி ஆவார்.அவர் இயக்கத்தில் இந்திரா என்ற படம் வந்தது

இனி இவருக்குக் கிடைத்த தேசிய விருதுகளும்..இவர் படத்தைத் திரையிட்ட பட விழாக்களும்

1986 மௌனராகம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது
1989 கீதாஞ்சலி (தெலுங்கு) சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தெசிய விருது
1990 அஞ்சலி சிறந்த தமிழ்ப்படத்திற்கான ட்ஹேசிய விருது
1992 தேசிய ஒருமைப்பாட்டுக்கான தெசிய விருது
         மாஸ்கோ திரைப்பிடவிழாவிற்கு பருந்துரைக்கப்பட்டது
1995 பம்பாய் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது
பொலிடிகல் ஃபில்ம் சொசைட்டியின் சிறப்பு விருது
ஜெருசலம்
எடின்பர் உலகப்பட விழாவில் திரையிடப்பட்டது
1997ல் இருவர் பெல்கிரேட் உலகப்படவிழாவில் திரையிடப்பட்டது
1998ல் தில்சே பெர்லின் விழாவில் NETPAL விருது
2000 அலைபாயுதே  பெர்லின் விழாவி  NETPAL  விருது
2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் சிறந்தத் தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது,ஜெருசலம் விழாவில் சிறந்தபடம்,விருது ,ITPA best director Award,,Audience Award...LOS ANGELES
. Audience Award - Riverrun international film Award,Best film-international film festival ZIMBABWE,,Audience/jury special award New haven film festival, Best International film westsister film festival

தவிர்த்து இவரது கதை, வசனம் ,தயாரிப்பில் சுகாசினி இயக்கிய இந்திரா படத்திற்கு பெல்கிரேட் உலகப் படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது

இவர் தயாரிப்பு கதை, வசனத்தில் க்ஷத்திரியன் படமும், அழகம்பெருமாளுக்காக டும் டும் டும் படக்கதை,வசனம் தயாரிப்பும் இவருடையது

பாலசந்தர் தயாரித்த இவரது ரோஜா படத்தில்தான் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகம்

Vedham Puthithu Kannan தனி பாணியை உருவாக்கினார் பல இன்றய சினிமா ஆவல் உள்ள இளைஞர்களுக்கு ஆதர்ச குரு
LikeReply523 hrs
Priyakarthick Great director.
LikeReply23 hrs
Bhoopal Singh ' ஆயுத எழுத்து ' படத்தில் பாரதிராஜா வில்லனாகவும் , ஹேமாமாலினியின் பெண் நாயகிகளில் ஒருவராகவும் நடித்தார்கள்.
நடிகர் சித்தார்த் இவரிடம் உதவி இயக்குனராக இருந்தார்.
LikeReply222 hrs
Bhoopal Singh படங்களில் வசனங்களை மிகவும் குறைவாக பயன்படுத்துவார். ' நீ அழகா இருக்கானே நினைக்கலே.........என்று ' அலைபாயுதே ' படத்தில் மாதவன் பேசியதுதான் இவர் படத்தில் நீண்ட டயலாக் என்று நக்கலடிப்பர் உண்டு. மாதவன் இப்படத்தில்தான் தமிழில் அறிமுகம் !
LikeReply222 hrs
Bhoopal Singh இவரது தயாரிப்பு நிறுவனங்கள் ' ஆலயம் ' மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ! ' நாயகன் ' படத்துக்கு கமலுக்கு தேசிய விருது கிடைத்தது !
LikeReply122 hrs
Bhoopal Singh இவருக்கு ' தேச பக்தி வியாபாரி ' என்றும் ஒரு பட்டம் உண்டு. இருட்டிலே படம் பிடிப்பவர் என்றும் பெயர் ' ஸ்கிரினில டார்ச் அடிச்சுதான் இவர் படத்தைப் பார்க்கணும் 'னு சுஜாதா எழுதியிருந்தார். ' திருடா , திருடா , படம் இந்த கூற்றை பொய்யாக்கியது. இப்படத்திற்கு சுஜாதா வசனம் எழுதினார்.
LikeReply22 hrs
Bhoopal Singh நாகார்ஜுனா நடித்த ' கீதாஞ்சலி ' தமிழில் ' இதயத்தைத் திருடாதே ! ' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது , அதில் நாயகி பேசிய ' ஓடிப்போலாமா '' வசனம் பாப்புலரானது !
LikeReply222 hrs
Bhoopal Singh அரசியல் தலைவர்களை படங்களில் புகுத்துவதை தனது முதல் தமிழ் படத்திலேயே ஆரம்பித்து விட்டார் என்று சொல்லலாம். ' பகல் நிலவு ' படத்தில் சத்தியராஜின் தோற்றம் காமராஜர் போலிருக்கும். அது வில்லன் கேரக்டர் என்பதாலும் , இவரது முதல் படமாதலாலும் அதனை உரக்கச் சொல்லவில்லை !
LikeReply22 hrs
Bhoopal Singh தயாரிப்பாளர் ஜீ.வி.யின் தம்பி. ஜீ.வி.பிலிம்ஸ் என்கிற பொதுமக்கள் பங்கு நிறுவனத்தில் டைரக்டர். ஆனால் ஒருமுறை கூட ' ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றதில்லை ! பங்குதாரர்கல் இதனை ஒவ்வொரு ஆண்டும் கேட்டு , கேட்டு ஓய்ந்துவிட்டார்கள் !
LikeReply122 hrs
Bhoopal Singh ' இருவர் ' கருணாநிதி , எம்.ஜி.ஆர் நட்பைச் சொல்லும் படம் !
LikeReply22 hrs
Bhoopal Singh ' பம்பாய் '.....உண்மையிலேயே இவர் பம்பாய்க்கு போய் படமெடுத்தாரா என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். கிண்டியில் ஸ்பிக் கட்டதத்திற்கு எதிரி கேம்ப கோலா நிறுவனத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. அங்கே செட் போட்டே படத்தை முடித்தார்.
இருதரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகூட நாடகத்தில் வருவது போல் , இடதுபுறத்திலிருந்து பத்து பேரும் , வலதிலிருந்து ஒரு பத்து பேரும் வருவார்கள் , ஆயுதத்தை ஓங்குவார்கள் , அவ்வளவுதான் !
LikeReply222 hrs
Bhoopal Singh ' கடல் ' படத்தில் கார்த்திக் மகன் கௌதமை அறிமுகப்படுத்தினார். அரவிந்த்சாமியை மீண்டும் கொண்டுவந்தார் !
LikeReply122 hrs
Bhoopal Singh ' ஓ காதல் கண்மணி ' படத்தில் மம்முட்டி மகன் துல்ஹர் சல்மானை நடிக்க வைத்தார். இது இவருக்கு இரண்டாம் படம். முதல் படம் ' வாயை மூடிப் பேசவும் ! '
LikeReply322 hrs
Bhoopal Singh ' குரு ' ...அபிஷேக் பச்சன் ! திருபாய் அம்பானியின் வாழ்க்கை
LikeReply122 hrs
Bhoopal Singh 'தில் சே ' தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டதுபோல் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட 'இரத்தத் திலகம் ! '
LikeReply22 hrs
Bhoopal Singh ' கன்னத்தில் முத்தமிட்டால் ' இலங்கை பிரச்சினை !
LikeReply122 hrs
Bhoopal Singh எல்லாவித பிரச்சினைகளையும் கையிலெடுப்பார் , ஆனால் எதற்கும் தீர்வு சொல்லமாட்டார்,
' பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதுதான் படைப்பாளியின் வேலை. அதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் , ஆட்சியாளர்களும்தான் ! ' என இவரது அபிமானிகள் கூறுகிறீர்கள் !
...See More
LikeReply521 hrs
Ram Doss இன்று வரை இவரை தாண்டி எவரும் வந்தது இல்லை. இவரது அமைதியான புன்னகை ஆயிரம் சொல்லும்.பல்லவி அனுபல்லவி கன்னடபடம் பார்த்துவிட்டு கோவைத்தம்பி அவர்களிடம் அண்ணே மணிரத்னம் அவர்களுக்கு மதர்லேண்ட் பிக்சர்ஸ்ல படம்பண்ணனும் சொன்னேன். அது இதயக்கோவில்.வானுயர்ந்த பாடல் முழுவதும் சூர்யஅஸ்தமனத்தில் மட்டும் படமாக்கப்பட்டது.இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த புன்னகை, அன்புள்ளசிநேகிதி தொடர்களின் வசனகர்த்தா. நான்.
LikeReply921 hrs
Erode T Soundararajan ஒரு முறை என் வீட்டருகே. நடிகர் ஒருவரை. சந்திரமௌலி... சந்திரமௌலி. ..என அழைக்க அவர் பதில் சொல்லவில்லை. அப்புறம் அவர் இயற பெயர் சங்கரன் என நினைவு வந்தது. ப
LikeReply121 hrs
Kulashekar T Currently
Kaatru veliyidai
LikeReply21 hrs
Poovai Mani அக்னி நட்சத்திரம் இரண்டு பொண்டாட்டி காரரின் கதை.இதில் நடித்த விஜயகுமாரும்,ஜி.உமாபதியும் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள். அப்படத்தில் நடிக்கவேண்டி ஜி.உமாபதியிடம் முதலில் கேட்டபோது மறுத்துவிட்டார்.
மணிரத்னம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்த , மே...See More
LikeReply319 hrs
Ezhichur Aravindan ஒன்று நிஜ மனிதர்கள் அல்லது புராணக் கதாப்பாத்திரங்கள் இவற்றை மையப்படுத்திய படங்கள் மணிரதனத்தின் பாணி. கர்ணன்-தளபதி சாவித்திரி சத்யவான்- ரோஜா ராவணன்-ராவணன். வரதராஜ முதலியார்-நாயகன்.எம்.ஜி.ஆர்.கலைஞர்-இருவர்.அம்பானி-குரு.
LikeReply10 hrs
Ezhichur Aravindan கடல்-பைபிள் கடவுள். சாத்தான் போராட்டம்
LikeReply10 hrs
Ezhichur Aravindan மதக்கலவரத்தை மையப்படுத்தி பம்பாய். இலங்கை கலவரத்தை கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால்.
LikeReply10 hrs
Ezhichur Aravindan நெஞ்சத்தைக் கிள்ளாதே இன்ஸ்பிரேஷனில் மெளனராகம்.
LikeReply10 hrs
Ezhichur Aravindan இவை எல்லாமே தன் முத்திரைக்குள் கொண்டு வந்த புத்திசாலி மணிரத்னம்
LikeReply10 hrs
Ezhichur Aravindan தளபதி படப்பிடிப்பு ஜெய்சங்கர் ரஜினியை பார்த்து உறசாகமாய் ஹாய் ஹாய் என வர ரஜினி அவரை வரவேற்று ஜெய் சார் இந்த மணி இருக்காரே ரொம்ப மோசமானவர் என சொல்ல ஜெய் பதறி என்னப்பா சொல்றே என கேட்க நடிக்க சொல்றாரு என ரஜினி சொல்ல ஜெய் வாய்விட்டு சிரித்து நடிச்சுட்டா போச்சு என்றார். மறுநாள் ரஜினியை அடையாளம் காட்டும் காட்சி 15 டேக் ஆன பின்பு ஓ.கே. ஆனது. ஜெய் வியர்த்து ரஜினியிடம் நீ சொன்னது உண்மைதான் என்றார்.
LikeReply210 hrs
T V Radhakrishnan அரவிந்தன், நீங்க வந்தாத்தான் பதிவே களை்கட்டுது
LikeReply210 hrs
Ezhichur Aravindan நன்றி சார்
LikeReply10 hrs
Ezhichur Aravindan ரஜினியை வைத்து ஒரு ரொமான்டிக் ஸ்கிரிப்ட் ரெடி செய்தார் மணிரத்னம். யாரடா நீ மன்மதா என்று டைட்டிலும் வைத்தாகி விட்டது. திருப்தியாக அமையாததால் படம் டிராப். பிறகுதான் தளபதி.
LikeReply10 hrs
Ezhichur Aravindan ஜுலை 19 2001 மாலை.அப்பல்லோ மருத்துவமனையில் சுஹாசினியும் அவர் மகன் நந்தாவும் அந்த அறைக்குள் நுழைகின்றனர். படுத்து கிடந்த சிங்கம் எழுந்து அமர்ந்தது. நநதாவை தலையில் கைவத்து ஆசிர்வதித்தது. ஏன்டா பேராண்டி தாத்தா நல்லா நடிப்பேன்டா உன் அப்பன் கிட்ட சொல்லி தாத...See More
UnlikeReply610 hrs
Poovai Mani சிவாஜி சார் பற்றிய பதிவு நெகிழ்ச்சியானது அரவிந்தன் சார்.
தூக்கத்தை மறக்கடித்து விட்டது சிவாஜி சாரின் நெகிழ்ச்சியான பேச்சு..
LikeReply29 hrs
Ezhichur Aravindan சாகும் வரை நடிப்பைப் பற்றியே அவரின் சிந்தனை இருந்தது சார். மகா கலைஞனின் காலத்தில் வாழ்ந்ததே என் பாக்கியம்.
UnlikeReply39 hrs
Poovai Mani உங்களோடு என்னையும் இணைத்துக் கொண்டால் பெருமை சார்...
UnlikeReply29 hrs
Ezhichur Aravindan நிச்சயம். சினிமா என்ற மூன்றெழுத்தில் சிவாஜியின் சுவாசம் இருந்துக் கொண்டே இருக்கிறது.
LikeReply9 hrs
Ezhichur Aravindan வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரரான வீனஸ் கோவிந்தராஜன் மகன்தானே இவர்?
LikeReply9 hrs
Ezhichur Aravindan பின்னணியில் வெறும் கோரஸ் மட்டும் வைத்துக் கொண்டு. வாத்தியங்கள் இல்லாமல் ராசாத்தி என் உசுரு என்னுதுல்லை பாட்டு திருடாதிருடா வில் வரும். பாடிய சாகுல் ஹமீது சிலநாட்களில் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணத்தை அவர் குரல் வழியாகவே அசரீரியாக்கியது விதி.
LikeReply19 hrs
T V Radhakrishnan வீனஸ் பிக்சர்ஸ் படங்களை வெளியிட்டவர் இவர் தந்தை கோபால் ரத்தினம்.வீனஸ் கோவிந்தராஜன் இவரது மாமா
LikeReply38 hrs
Ezhichur Aravindan நன்றி சந்தேகம் தீர்ந்தது.
UnlikeReply18 hrs
Kolathur Srirama Mukundan SO VENUS COLONY IN ALWARPET..........
LikeReply6 hrs
Vijaya Satyanarayan எல்லாமே ஹிட் box office movies இல்லையா ?
LikeReply2 hrs
Tamil Novel Readers வெற்றி இயக்குநர்
LikeReply32 mins
Jeeva Nanthan Sathyajothi Thyagarajan was the son of Venus Govindarajan. Maniratnam's first Tamil film was produced by Satyajothi.... ! Both from Venus groups!!
LikeReply4 mins