Sunday, July 31, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 10 ஒய் வி ராவ்

ஒய்.வி.ராவ்





தயாரிப்பாளர்,டைரக்டர்,நடிகர்,பட விநியோகஸ்தர்,எடிட்டர் என பன்முகக் கலைஞராய் திகழ்ந்தவர் ஒய்.வி.ராவ் ஆவார்

1903 ஆம் ஆண்டு நெல்லூரில்  பிறந்தார்.மௌனப்படங்களைப் பார்த்து நாடக நடிப்பில் அக்கறை கொண்டு நடிப்பைக் கற்றுக் கொண்டார்.

அந்நாளில் மௌனப்படங்களைத் தயாரித்து வந்த ரகுபதி பிரகாஷ், ஏ.நாராயணன் ஆகியோர் இவரை மௌனப்படங்களில் நடிக்க வைத்தனர்.

கருட கர்வ பங்கம் என்ற மௌனப்படம் இவர் முதல் படமாகும்.அதில் நாயகன் இவராவார்.

பின் பாண்டவ நிர்வாணம்,பாண்டவ அஞ்ஞான வாசம் ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.ஹரிமாயா என்ற படத்தை, அன்றைய கன்னட நாடக உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த குப்பி வீரண்ணா தயாரிக்க இவர் இயக்கினார்.

இவரும், இவரது முதல் மனைவி ராஜமும் சேர்ந்து பல மௌனப் படங்களில் நடித்தனர்

1925ல் மீரா என்ற மௌனப் படத்திலும் நடித்தார்.பாவத்தின் கூலி என்ற மௌனப்படத்திற்கு திரைக்கதை அமைத்தார்.

இவர் அக்கால என்டியார் எனலாம்.ஆம்...பல படங்களில் பகவான் கிருஷ்ணனாக நடித்துள்ளார்

சதி சுலோச்சனா என்ற கன்னடப் படத்தில் நடித்து இயக்கினார்.நாகானந்த் என்ற படத்தை இயக்கினார்.

1937ல் மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த சிந்தாமணி படத்தை இயக்கினார்.இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடியது.எம்,கே.தியாகராஜ பாகவதர் நடித்த படம் இது.

பாமா பரிணயம்,பக்த மீரா, சுவர்ணலதா ஆகிய படங்கள் இவர் இயக்கினார்.
பல தெலுங்கு படங்களைத் தயாரித்தார்.லவங்கி என்ற தமிழ்ப் படத்தை தயாரித்தவர் அதை ஹிந்தியிலும் வெளியிட்டார்.

சாவித்திரி,மஞ்சரி,மானவதி,பாக்ய சக்கிரம்,போன்ற படங்கள் இவர் இயக்கிய முக்கிய படங்களாகும்

ஆரம்ப கால தமிழ் சினிமா வளர்ச்சியில் இவர் பங்கு குறுப்பிடத்தக்கது

ஏவிஎம் தயாரித்த ஸ்ரீவள்ளி படத்தில் நடித்த ருக்மணியை (நடிகை  லட்சுமியின்  தாயார்) இவர் இரண்டாவதாக மணந்தார்.இரு திருமணங்களும் இவருக்கு திருப்திகரமாக அமையவில்லை

1973ல் இவர் அமரர் ஆனார்.

No comments:

Post a Comment