Monday, October 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 157 இ.ராமதாஸ்


 கதை   வசனகர்த்தா, நடிகர், இயக்குநர்

ராமதாஸ்...வசனத்தில் பல படங்கள் வந்ததுண்டு.ஆனாலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்  மூலம் இயக்குநர் ஆனார்.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்-

ஆயிரம் பூக்கம் மலரட்டும் 1986
ராஜா ராஜாதான்  (ராமராஜன்) 1989

நெஞ்சமுண்டு நேற்மையுண்டு (1991)
ராவணன் (1994)
வாழ்க ஜனநாயகம் (1995)

இவர் படங்களில் நடித்தும் வருகிறார்.
யுத்தம் செய்,காக்கி சட்டை,விசாரணை,தர்மதுரை, அட்டைகத்தி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் வசனத்தால், பல தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றி பெற்றன எனலாம்.

ஆனாலும், இவர் முழு திறமையை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது

Sunday, October 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 156 எம்.பாஸ்கர்



1935ஆம் ஆண்டு பிறந்தவர் பாஸ்கர்

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளராய் இருந்தார்.பின் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடமும்,சின்னப்ப தேவரிடமும் பணியாற்றினார்

ஹாலிவுட் கம்பெனியான 20யத் ஃபாக்ஸ் நிறுவனம் கோவா வில் படபிடிப்பை நடத்திய போது அவர்களிடமும் பணிபுரிந்தார்

1978ல் ரஜினி நடித்த பைரவி படம் மூலம் இயக்குநர் ஆனார்.ஆஸ்கார் மூவீஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரித்தார்

2013ல் அமரர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்..இன்னமும் ஒரு மீரா, மற்றும்..

1980ல் சூலம்
1982ல் பக்கத்து வீட்டு ரோஜா
1982ல் தீர்ப்புகள் திருத்தப்படலாம்
1983ல் தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
1985பௌர்ணமி அலைகள்
1986ல் பன்னீர் நதிகள்
1989ல் சட்டத்தின் திறப்பு விழா
1992ல் சக்ரவர்த்தி
1995ல் விஷ்ணு (விஜய்)
2004 ஒன்பது ரூபா நோட்டு ( நடுவில் படபிடிப்பு நின்று போனது.பின்னர்   தங்கர் பச்சான் இயக்கத்தில் படம் வந்தது)

2011ல் ஊதாரி

Saturday, October 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 155 செந்தில்நாதன்



1957ல் பிறந்தவர் செந்தில்நாதன்

திரைக்கதை ஆசிரியர்,தயாரிப்பாளர்,இயக்குநர்

இயக்குநர் ஜம்புலிங்கத்தின் மகன் இவர்.
இயக்குநர் பாஸ்கரிடம் உதவியாளராய் இ ருந்தார்.பின்னர் எஸ் ஏ சந்திரசேகரிடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநர்.வி.அழகப்பனிடம் 3 படங்களுக்கு இயக்குநர்.1988ல் விஜய்காந்த் நடித்த பூந்தோட்டக் காவல்காரன் படம் மூலம் இயக்குநர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1988ல் பூந்தோட்டக் காவல்காரன்
               பட்டிக்காட்டுத் தம்பி
1989 படிச்ச புள்ள
           முந்தானை சபதம்
          பெண் புத்தி பின் புத்தி
1990 பாட்டாளி மகன்
        பெரிய இடத்துப் பிள்ளை
         பாலைவனப் பறவைகள்(சரத்)
1991 நாட்டைத் திருடாதே
         இரவு சூரியன்
         தங்கமான தங்கச்சி (சரத்)
        காவல் நிலையம் (சரத்)
1992ல் இளவரசன் (சரத்)
             இதுதான்டா சட்டம்(சரத்)
              நட்சத்திர நாயகன் (சரத்)
              சின்ன பூவை கிள்ளாதே
               போக்கிரி தம்பி
           பாலைவன ராகங்கள் (எஸ் பி பி)
          தெய்வக்குழந்தை
1995 என் பொண்டாட்டி நல்லவ
1995
ஆவது பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
1997 தம்பிதுரை
1998 ஆசைதம்பி
2002 ஜெயா
2009 உன்னை நான்

(தவிர்த்து கல்கி,ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்)

இவரது தந்தை ஜம்புலிங்கத்தின் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1967 நாம் மூவர் (ஜெய்ஷங்கர்)
        உயிர் மேல் ஆசை (முத்துராமன்)
1967 சபாஷ் தம்பி
1968 பணக்காரப் பிள்ளை
1968 நாலும் தெரிந்தவன்
1972 திருநீலகண்டன்
1972 பதிலுக்கு பதில்    

Wednesday, October 19, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 154 சமுத்திரக்கனி



நடிகர், கதாசிரியர்,இயக்குநர்
சமுத்திரக்கனி

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

2003 உன்னை சரணடைந்தால்
2004 நெறஞ்ச மனசு
          நாலு
2009 நாடோடிகள்
2011 போராளி
2014 நிமிர்ந்து நில்

இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

விசாரணையில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது

(ஆடுகளத்தில் கிஷோருக்கும், 2012ல் வெளியான தோனி படத்தில் முரளி ஷர்மாவிற்கும் குரல் கொடுத்துள்ளார்)
--------------------------------------------------------------------------------------------------------------------------
                               
இத்துடன் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தொடர் முடிவிற்கு வருகிறது.

இத்தொடருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

இன்னமும் எழுத வேண்டிய இளம் இயக்குநர்கள் வரிசை நூறுக்கு மேல் உள்ளது.ஆனால்..அவர்கள் கொடுத்துள்ள படங்கள் சிலவே

(உதாரணத்திற்கு...மணிகண்டன்,சரவணன்,விஜய்மில்டன்,பாண்டிராஜ்,விக்னேஷ் சிவன்,கார்த்திக் சுப்பாரஜ்,பாலாஜி சக்திவேல்,பாலாஜிதரணிதரன், பாலாஜி மோகன், அட்லி . மிஷ்கின், வின்சென்ட் செல்வா. சிம்புதேவன்,ராஜேஷ்,வசந்தபாலன்,வெங்கட்பிரபு,.................நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்)

இவர்கள் திரையுலகில் பல ஆண்டுகள் வலம் வர வேண்டியவர்கள்.அவர்கள் பெரிய சாதனைகள் இனி வரக்கூடும்.ஆதலால் அவர்களைப் பற்றி சில ஆண்டுகள் கழித்து நானோ..அல்லது என்னைப் போன்ற ஒருவரோ எழுதுவர்

அனைவருக்கும் என் வாழ்த்துகளும்..நன்றிகளும்...

வாழ்க..வளர்க...

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 152 கதிர் 153 கே வி ஆனந்த்

கதிர்
--------------

தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, இயக்குநர் கதிர்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1991 இதயம் (முரளி)
1993 உழவன் (பிரபு)
1996 காதல் தேசம் (வினீத், அப்பாஸ்,தபு).
1999 காதலர் தினம்
2002 காதல் வைரஸ்


கே.வி,ஆனந்த்
----------------------------

ஒளிப்பதிவாளராக 15க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.(முதல்வன், சிவாஜி உட்பட)

2005ல் கனா கண்டேன் படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து..2009ல் அயன் (சூர்யா)
2011 கோ (ஜீவா)
2012 மாற்றான் (சூர்யா)
2015 அநேகன் (தனுஷ்0

விஜய் சேதுபதி நடிக்க  கவண் என்ற படம் தயாரிப்பில் உள்ளது

Tuesday, October 18, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 151 வெற்றிமாறன்



படத்தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர் வெற்றிமாறன்

2007ல் பொல்லாதவன் மூலம் இயக்குநர் ஆனார்

இவரது அடுத்த ஆடுகளம் தேசிய விருதுகளை அள்ளிச் சென்றது.
இவரது விசாரணை படம் ஆஸ்கார் விழாவில் திரையிடப்பட உள்ளது

பாலுமஹேந்திராவிடம், அவர் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் போது உதவியாளராக இருந்துள்ளார்

பாலுமஹேந்திராவின் ஜூலி கணபதி படங்களில் உதவி இயக்குநராய் இருந்திருக்கிறார்.காதல் வைரஸ் கதிருக்கும் உதவியாளராய் இருந்துள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

2007ல் பொல்லாதவன்
2011 ஆடுகளம்
2016 விசாரணை

இவர் இயக்கத்தில் வடசென்னை என்ற படம் இயக்கத்தில் உள்ளது.

ஆடுகளம் பெற்ற தேசிய விருதுகள்

தனுஷ் - சிறந்த நடிகர்
வெற்றிமாறன் - சிறந்த இயக்குநர் மற்றும் வசனகர்த்தா
நடன இயக்குனர்- தினேஷ் குமார்
தவிர்த்து ஸ்பெஷல் ஜூரி விருது திரு ஜெயபாலனுக்கு

இவரது விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிஷோருக்கும் கிடைத்துள்ளது
சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கு கிடைத்துள்ளது
(இப்படம் சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 150 பவித்ரன்



பவித்ரன். இயக்குநராக ஆவதற்கு முன் கே டி குஞ்சுமோனிடம் பணியாற்றியவர்

குஞ்சுமோன் தயாரிப்பில் வந்த வசந்தகாலப்பறவை மூலம் இயக்குநர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1991ல் வசந்தகாலப்பறவை
1992ல் ஐ லவ் இந்தியா (சரத்குமார்)
1992ல் சூரியன் (இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் இவருக்கு உதவியாளராக இருந்தார்)
1994ல் இந்து (பிரபுதேவா பெரிய பாத்திரத்தில் நடித்த முதல் படம்)
1995ல் திருமூர்த்தி (விஜய் காந்த்)
1996ல் கல்லூரி வாசல்(அஜீத்)
1997ல் காதல் பள்ளி
2012ல் மாட்டுத்தாவணி

தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் - 149 செல்வராகவன்



1976ல் பிறந்தவர் செல்வராகவன்

இயக்குனர் கஸ்தூரி ராஜா வின் மகன்.தனுஷ் அவர்களின் சகோதரர்

துள்ளுவதோ இளமை படத்தின் கதை வசனம் இவரே.படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார்.

செல்வராகவன் இயக்கத்தில் வந்த படங்கள்

2003ல் காதல் கொண்டேன் (தனுஷ்)
2004ல் 7 ஜி, ரெயின் போ காலனி (ரவிகிருஷ்ணா அறிமுகம்)
2006ல் புதுப்பேட்டை (தனுஷ்)
2010ல் ஆயிரத்தில் ஒருவன் (கார்த்தி, ரீமாசென்,ஆண்ட்ரியா, பார்த்திபன்)
2011ல் மயக்கம் என்ன (தனுஷ்)
2012ல் இரண்டாம் உலகம்

தவிர்த்து யாரடி நீ மோகினி கதை இவருடையது.ஆனால் இயக்கியவர் இவர் உதவியாளர் மித்ரன் ஜவஹர்

ஆனால் இதே படம் தெலுஙில் செல்வராகவன் இயக்கத்தில் வெற்றிப் படமாக அமைந்தது

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 148 பிரபு சாலமன்



1969ல் பிறந்தவர் பிரபு சாலமன்

1999ல் கண்ணோடு காண்பதெல்லாம் படம் மூலம் இயக்குநர் ஆனார்

முதலில் சி.சுந்தரிடம் உதவியாளராய் இருந்தவர்..பின்னர் அகத்தியனோடு காதல்கோட்டையில் பணியாற்றினார்

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்

2002ல் King
2006ல் கொக்கி
2007ல் லீ
2009ல் லாடம்
2010 மைனா..(விதார்த், அமலாபால் நடித்த இப்படத்தில் தம்பிராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது கிடைத்தது)
2012ல் கும்கி
2014 கயல்
2016 தொடறி

 தவிர்த்து சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத் தயாரிப்பாளர் இவரே!

Monday, October 17, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 147 பாலா



1966ல் பிறந்தவர் பாலா.

பாலுமஹேந்திராவிடம் பணியாற்றியவர்.

இவரது "பிதாமகன்" படத்தில் நடித்ததற்காக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்

இவரது நான் கடவுள் படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது

பரதேசி படத்திற்கு சிறந்த உடைவடிவமைப்புக்கான தேசியவிருது பூர்ணிமாவிற்குக் கிடைத்தது

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1999 சேது (விக்ரம்)
2001 நந்தா (சூர்யா)
2003 பிதாமகன் (விக்ரம், சூர்யா)
2009 நான் கடவுள் (ஆர்யா)
2011 அவன் இவன்(ஆர்யா, விஷால்)
2012பரதேசி (அதர்வா)
2016 தாரை தப்பட்டை (இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தெசிய விருது இளையராஜாவிற்குக் கிடைத்தது)

நான் கடவுள் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாவது உலகம் என்ற புதினத்தைத் தழுவியது.திரப்படத்திற்கு உரையாடல்களை ஜெயமோகனே ஏற்றார்

ஜெயகாந்தனின் நந்தவனத்திலோர் ஆண்டி படத்தைத் தழுவியதே பிதாமகன்

பி எச்  டேனியலின் ரெட் டீ ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது பரதேசி.1930 ஆண்டு நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இப்ப்டம்.தேயிலைத் தோட்ட ஊழியர்கள் அவலத்தைத் தோலுரித்துச் சொன்னது

இதைத்தவிர பி ஸ்டூடியோ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி, மாயாவி, பிசாசு,சண்டிவீரன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்

அசாத்தியத் திறமைவாய்ந்த இயக்குநர் இவர் எனலாம்

Sunday, October 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 146 ஏ வெங்கடேஷ்




நடிகர் மற்றும் இயக்குநர் ஏ வெங்கடேஷ்

அங்காடித் தெரு,வசந்தகாலப் பறவை,சூரியன் ஆகிய படங்களில்  நடித்தவர் ஏ வெங்கடேஷ்.அங்காடித் தெருவில் இவரது நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1996 மகாபிரபு (சரத்குமார்)
         செல்வா (விஜய்)
1998 நிலவே வா
1999 பூப் பறிக்க வருகிறோம்
2001 சாக்லேட்
2002 தம்
        பகவதி (விஜய்)
2004 குத்து (சிம்பு)
         ஆதி (விஜய்)
2005 சாணக்கியா
2006 வாத்யார்
2008 சிங்கக்குட்டி
         துரை
2009 மலை மலை
2010 மாஞ்சா வேலு
          வாடா
          வல்லக்கோட்டை
2013 சும்மா நச்சுன்னு இருக்கு
கில்லாடி 

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 145 ஹரி



ஹரி இயக்கிய படங்கள் அனைத்தும் அதிரடி/மசாலாப் படங்களாகும்.

2002ல் பிரசாந்த் நடிக்க "தமிழ்" படம் மூலம் தமிழ்ப் பட இயக்குநர் ஆனார்.

தொடர்ந்து இவர் இயக்கத்தில் வந்த படங்கள்..

2003ல் சாமி(விக்ரம்)
            கோவில்
2004  அருள் (விக்ரம்0
2005 ஐயா (சரத்குமார் .)
        ஆறு (சூர்யா)
2007 தாமிரபரணி
         வேல் (சூர்யா)
2008 சேவல்
2010 சிங்கம் (சூர்யா)
2011 வேங்கை (தனுஷ்)
2013 சிங்கம் 2 (சூர்யா)
2014ல் பூஜை (விஷால்)
2016 சிங்கம் 3

இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் பிரீத்தி விஜய்குமாரை மணந்தவர்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 143 எழில் 144 விஷ்ணுவர்த்தன்



எழில்
--------------

இயக்குநர் எழில் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1999 துள்ளாத மனமும் துள்ளும் விஜய் , சிம்ரன் நடிக்க வெள்ளிவிழா படமாக அமைந்தது

அடுத்து

2000ல் பிரபுதேவா நடிக்க பெண்ணின் மனதைத் தொட்டு
2002 அஜீத் நடிக்க ராஜா
2005ல் அமுதா
2007ல் தீபாவளி
2012ல் மனம் கொத்திப் பறவை (சிவகார்த்திகேயன்)
2013ல் தேசிங்கு ராஜா
2016ல் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

விஷ்ணுவர்த்தன்
---------------------------
                     
சந்தோஷ் சிவனிடம் உதவியாளராய் இருந்தவர்.2003ல் குறும்பு படம் மூலம் இயக்குநர் ஆனவர்

இவர் என் எஸ் கே அவர்களின் பேத்தி அனுவை மணந்துள்ளார்.இவரும் சந்தோஷ் சிவனிடம் பணியாற்றியவர்.விஷ்ணுவர்த்தனின் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர் இவரே

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

2003 குறும்பு
2005 அறிந்தும் அறியாமலும்
2006 பட்டியல்
2007 பில்லா (அஜீத்)
2009 கர்வம்
2013 ஆரம்பம்
2015 யட்சன்

தவிர்த்து இவர் அஞ்சலி, இருவர் , க்ஷத்திரியன் ஆகிய படங்களில் குழ்ந்த நட்சத்திரமாக நடித்துள்ளார்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 142 என்.லிங்குசாமி



லிங்குசாமி இயக்குநர் விக்கிரமனிடம் உதவி இயக்குநராய்ப் பணிபுரிந்தவர்.2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனவர்

திருப்பதி புரடக்க்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

2001 ஆனந்தம் (மம்முட்டி)
2002 ரன் (மாதவன்)
2005 ஜி (அஜித்)
2005 சண்டைக் கோழி (விஷால்)
2008 பீமா (விக்ரம்)
2010 பையா (கார்த்தி)
2012 வேட்டை (ஆர்யா, மாதவன்)
20014 அஞ்சான் (சூர்யா)

இயரது தயாரிப்பில் வந்த சில படங்கள்
தீபாவளி, பட்டாளம், வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி,உத்தமவில்லன் ஆகியவை

Saturday, October 15, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 140 ராஜா 141- கே ராஜேஷ்வர்



ராஜா
-------------
                     

ராஜா...என்ற இயக்குநர் என்பதைவிட ஜெயம் ராஜா என்றால் அனைவரும் அறிவர்

ஆம்...ஜெயம் படத்தின் இயக்குநர்.ஜெயமான இயக்குநர்.

படத்தொகுப்பாளர் மோகன் அவர்களின் மகன் ராஜா. இவருடைய சகோதரர் ரவி...ஆம் ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் படங்களில் பெரும்பாலும் ரவியே நடிப்பார்.படமும் தெலுங்கு ரீமேக்காய் இருக்கும்.அதனால் ரீமேக் ராஜா எண்றும் அழைக்கப்படுபவர்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

2001 ஜெயம்
2004 எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
2006 சம்திங்க் சம்திங்க் எனக்கும் உனக்கும்
2008 சந்தோஷ் சுப்ரமணியம்
2010 தில்லாலங்கடி
2011 வேலாயுதம் (விஜய்)
தனி ஒருவன் 2015ல்.இப்படத்தில் அரவிந்தசாமி வில்லனாக வருவார்

கே ராஜேஷ்வர்
-----------------------..
                                   
அவள் அப்படித்தான்,பன்னீர் புஷ்பங்கள்,கடலோரக் கவிதைகள்,சொல்லத் துடிக்குது மனசு..மற்றும் சில படங்களுக்கு கதாசிரியர் கே ராஜேஷ்வர் ஆவார்

இவர் இயக்கத்தில் வந்த முதல் படம் நியாயத் தராசு
ஆண்டு 1989

தொடர்ந்து

இதயத் தாமரை 1990ல்
அமரன் (1992ல்)
1996ல் துறைமுகம்
2000ல் அதே மனிதன்
2003ல் கோவில்பட்டி வீரலட்சுமி (சிம்ரன்)
2009ல் இந்திரவிழா



தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 139 கஸ்தூரி ராஜா

           

1946ல் பிறந்தவர் கஸ்தூரிராஜா

கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் உதவியாளராய் இருந்தார்.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பான்மையில் கிராமத்துக் காட்சிகளும், கிராமத்து மணமும் இருக்கும்.

சில படங்கள் விதிவிலக்கு.செக்ஸ் அவற்றில் தூக்குதலாக இருக்கும்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1991ல் என் ராசாவின் மனசிலே (ராஜ்கிரண்)
             ஆத்தா உன் கோயிலிலே
               தூதூ போ செல்லக்கிளியே
1992 சோலையம்மா
           மௌனமொழி
1994 தாய்மனசு.
        நாட்டுப்புறப் பாட்டு
1997 வாசுகி
        எட்டுப்பட்டி ராசா
1998 வீர தாலாட்டு
         என் ஆசை ராசாவே
1999 கும்மிபாட்டு
2000 கரிசக்காட்டுப் பூவே
2002 துள்ளுவதோ இளமை (தனுஷ் அறிமுகம்.செல்வராகவன் கதை வசனம்)
2004 டிரீம்ஸ்
2006 இது காதல் வரும் பருவம் (இசையும் இவரே)

தனுஷ், இயக்குநர் செல்வராகவன் இவரது மகன்கள் ஆவர்  

Friday, October 14, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 137 சீனு ராமசாமி ராம் - 138


சீனு ராமசாமி, கூடல் நகர் படம் மூலம் இயக்குநர் ஆனார்

2010ல் இவர் இயக்கிய தென் மேற்கு பருவக் காற்று படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடத்தன

சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது.
சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவிற்கு
சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்து அவர்களுக்கு (கள்ளிக்காட்டில் என்ற பாடல்)
2012ல் நீர்ப்பறவை இயக்கினார்
பின்னர் 2016ல் தர்மதுரை படம் வெளிவந்தது

விஜய்சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் தயாரிப்பில் உள்ளது

ராம்
-----------

ஹிந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷிடம் உதவியாளராக இருந்தவர் ராம்.

பின்னர் பாலுமகேந்திரா, தங்கர் பச்சானுடன் பணிபுரிந்துள்ளார்

இவர் இயக்கத்தி வந்த படங்கள்
2007ல் கற்றது தமிழ்
2013ல் தங்க மீன்கள்

தங்க மீன்கள் படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது, மற்றும் அப்படத்தில் நடித்த பேபி சாதனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது, சிறந்த பாடலாசிரியருக்காக நா,முத்துகுமாருக்கு (ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடல்) தேசிய விருது ஆகியவை கிடைத்துள்லன

இப்படம் கோவாவில் 33ஆவது உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 136 டி பி கஜேந்திரன்



பிரபல நகைச்சுவை நடிகையாக   திகழ்ந்த டி பி முத்துலட்சுமியின் மகன் டி பி கஜேந்திரன்.

குணசித்திர, நகைச்சுவை நடிகரான் இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

விசு விடம் உதவியாளராய் இருந்துள்ளார்

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

1988 வீடு மனைவி மக்கள்
          எங்க ஊரு காவல்காரன்
1989 பாண்டி நாடுத் த்ங்கம்
        எங்க ஊரு மாப்பிள்ளை
          தாயா தாரமா
         நிலாக் காலம் பொறந்தாச்சு
1990 பெண்கள் வீட்டின் கண்கள்
1993 கொஞ்சும் கிளி
1995 பாட்டு வாத்தியார்
1997 பாசமுள்ள பாண்டியரே
2000 பட்ஜெட் பத்மனாபன்
2001மிடி ல் கிளாஸ் மாதவன்
2003 பந்தா பரமசிவம்
2007 சீனா தானா
2010 மகளே என் மருமகளே

குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத பட்ஜெட் கஜேந்திரன் இவர்

Thursday, October 13, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 135 வி சேகர்

குடும்பப் பாங்கான படங்கள், குறைந்த பட்ஜெட் படங்கள் என வெற்றி பெற்றவர் இயக்குநர் வி சேகர் ஆவார்

இவர் படங்களில் பெரும்பாலும் கவுண்டமணி, வடிவேலு, விவேக், கோவை சரளா ஆகியோர் இடம் பெற்றிருப்பர்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990 நீங்களும் ஹீரோ தான்
1991 நான் பிடிச்ச மாப்பிள்ளை
       பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
1992 ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
1993 பொறந்த வீடா புகுந்த வீடா
         பார்வதி என்னை பாரடி
1994 வரவு எட்டணா செலவு பத்தணா
1995 நான் பெற்ற மகனே
1996 காலம் மாறிப் போச்சு
1997 பொங்கலோ பொங்கல்
1998 எல்லாமே என் பொண்டாட்டிதான்
1999 விரலுக்கேத்த வீக்கம்
2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
2001 வீட்டோட மாப்பிள்ளை
2002 நம்ம வீட்டுக் கல்யாணம்
2003 ஆளுக்கு ஒரு ஆசை
2014 சரவணப்பொய்கை (இவரது மகன் கார்ல் மார்க்ச் கதாநாயகன்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர் - 134 ஞான ராஜசேகரன்

         


இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஞான ராஜசேகரன்/

திரைப்படங்களின் மீது ஏற்பட்ட  ஆர்வத்தால் இயக்குநர் ஆனார்.

தி ஜானகிராமனின் மோகமுள் என்ற புதினத்தை அதெ பெயரில் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான இந்திரா காந்தி தேசிய விருது கிடைத்தது

அடுத்து, நாசரை கதாநாயகனாக்கி முகம் என்ற படத்தை இயக்கினார்

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்பட மாக்கினார்.பாரதி படத்தில் இளையராஜா இசையில், இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடிய "மயில் போல  பொண்ணு ஒன்னு' என்ற பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது

பாரதி படத்தில் மராத்தி நடிகர் ஷாயாஜி ஷிண்டே பாரதியாக நடித்தார்

அடுத்து பெரியார் படத்தை இயக்கினார்.இப்படத்தி சத்தியராஜ் பெரியாராகவும், குஷ்பூ மணியம்மையாகவும் நடித்தார்கள்

அடுத்து கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கையைப் ராமானுஜன் என்ற பெயரில் படமாய் எடுத்தார்.இப்படத்தில், ஜெமினி, சாவித்திரி தம்பதியரின் பேரன் அபினய் ராமானுஜனாக நடித்தார்.இப்படம் ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது.

வரலாற்று பிரபலங்களை படமாய் எடுக்கும் ஞான ராஜசேகரனுக்கு நம் தனிப்பட்ட பாராட்டு 

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 133 ராதாமோகன்



1965ல் பிறந்தவர் ராதாமோகன்

இவர் பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் படங்களையே பெரும்பாலும் இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வந்த மொழி படம் குறிப்பிட வேண்டிய படமாக அமைந்தது

இவர், என்னுயிர்த்  தோழன், பாபு கதை வசனத்தில் ஸ்மைல் பிளீஸ் என்ற படத்தை இயக்கினார்.நடுவில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் படம் முடியாமல் போனது

ஆர் வி உதயகுமாரிடம் இவர் உதவியாளராக பணியாற்றியவர் இவர்

இவர் இயக்கத்தில் இரு தெலுங்குப் படங்கள் வந்துள்லன.தவிர்த்து, தமிழில் வந்த படங்கள்..

2004ல் அழகிய தீயே
2005ல் பொன்னியின் செல்வன்
2007ல் மொழி
2008ல் அபியும் நானும்
2011 பயணம்
2013 கௌரவம்
2015 உப்பு கருவாடு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -132 சுந்தர் சி



1968ல் பிறந்தவர் சுந்தர்சி

இவர் இதுவரை 24 படங்கள் இயக்கியுள்ளார்.மணிவண்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்

 2006ல்தலைநகரம் என்ற படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்

இவரது  இயக்கித்தில் வந்த படங்கள்

1995ல் முறைமாப்பிள்ளை
            முறைமாமன்
1996 உள்ளத்தை அள்ளித் தா (கார்த்திக்...வெற்றிப்படம்)
1996 மேட்டுக்குடி
1997 ஜானகிராமன் (சரத்)
1997 அருணாச்சலம் (ரஜினி)
1998 நான் இருவர் நமக்கு இருவர் (பிரபுதேவா)
1999 உன்னைத்தேடி (அஜீத்)
1999 உனக்காக எல்லாம் உனக்காக
2000 அழகர்சாமி
         உன்னைக் கண் தேடுதே
2000 கண்ணன் வருவான்
2001 உள்ளம் கொள்ளைப் போகுதே
2001 ரிஷி (சரத்குமார்)
2002 அழகான நாட்கள்
2003 அன்பே சிவம் (கமல்)
2003 வின்னர்
2004 கிரி
2005 தக திம தா
2005 சின்னா
2005 கண்டன்
2006 ரெண்டு
2010 நகரம் மறு பக்கம்
2012 கலகலப்பு
2014 அரண்மனை

2008ல் சண்டை படத்தில் வாடி என் கப்பங்கிழங்கே வும், 2010ல்குருசிஷ்யனில் சுப்பையா சுப்பையா பாடலும் இவர் பாடகர் என்பதையும் சொன்னது

இன்றும் இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது சிலபடங்கள்

Wednesday, October 12, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 131 ஏ ஆர் முருகதாஸ்




1974ஆம் ஆண்டு பிறந்தவர் முருகதாஸ்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்

சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர முயற்சி செய்து இடம் கிடைக்காத்தால் மனம் மனம் த்ளராது..திரியலகில் நுழைந்து சாதனைகள் புரிந்து வருபவர்

திரைக்கதை ஆசிரியர் கலைமணி அவர்களிடம் பணிபுரிந்து விட்டு, இயக்குநர் ரட்சகனிடம் உதவி இயக்குநராய் இருந்தவர்

எஸ் ஜே சூர்யா, குஷி படம் எடுக்கையில் அவரிடம் உதவியாளராய் இருந்தவர்.

இவர் இயக்கத்தில் வந்த முதல் படம் அஜீத் நடித்த தீனா வாகும்

இவர் இயக்கத்தில் வந்த கஜினி படம்தான் முதன் முதலாய் 100 கோடி வசூலை எட்டிய முதல் இந்தியப் படமாகும்

அடுத்து, 2012ல் துப்பாக்கி 12 நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியது

2014ல் கத்தி 11 நாட்களில் 100 கோடி வசூலித்தது

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

2001ல் தீனா (அஜீத்)
2002ல் ரமணா (விஜய்காந்த்)
2005ல் கஜினி (சூர்யா)
2011ல் 7ஆம் அறிவு (சூர்யா)
2012ல்துப்பாக்கி (விஜய்)
2014ல் கத்தி (விஜய்)

ஹிந்தியில் கஜினி இவர் இயக்கிய முதல் படமாகும்

தவிர்த்து, எங்கேயும் எப்போதும்,வத்திக்குச்சி,ராஜா ராணி,மான் கராத்தே,10 எண்றதுக்குள்ளே ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்  

Tuesday, October 11, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -129 தரணி 130 சசி

ஐ சி ரமணி எனும் தரணி..திரைக்கதை ஆசிரியர், இயக்குநர்

இவர் இயக்கியப் படங்கள் பெரும்பாலும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களாகும்
 1999ல் எதிரும் புதிரும்
2001ல் தில் (விக்ரம்)
2003ல் தூள் (விக்ரம்)
2004ல் கில்லி (விஜய்)
2008ல் குருவி (விஜய்)
2011ல் ஒஸ்தி (சிம்பு) (இது டபாங்க் எனும் ஹிந்திப்படம்)


சசி
-------------

சசி எனும் சசிதரன் 1968ல் பிறந்தவர்

திரிக்கதை ஆசிரியர், இயக்குநர்

1998 சொல்லாமலே மூலம் இயக்குநர் ஆனார்
2002ல் ரோஜாக்கூட்டம்
2006ல் டிஷ்யூம்
2008ல் பூ
2013ல் 555

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -127-128 பிரியதர்சன்,சித்ராலயா கோபு

பிரியதர்ஷன்

திரைக்கதை எழ்த்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்

பெரும்பாலும் மலையாளப் படங்களையே இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்-

கோபுர வாசலிலே
(1991)
சிநேகிதியே (2000)
லேசா லேசா (2003)
காஞ்சீவரம் (2008)

பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சீவரம் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

பிரகாஷ்ராஜிற்கு சிறந்த நடிகருக்கான  தேசிய விருது


சித்ராலயா கோபு
----------------------------------

இயக்குநர் ஸ்ரீதரின் வலக்கரம் இவர் எனலாம்

காதலிக்க நேரமில்லை உட்பட ஸ்ரீதரின் படங்களில் இவர் பங்கும் கணிசமாய் உண்டு

திரைக்கதாசிரியர், இயக்குநரான இவருக்கு 60 படங்களுக்கு மேல் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது

மூன்று தெய்வங்கள்,சாந்தி நிலையம்,பாட்டி சொல்லைத் தட்டாதே,கலாட்டா கல்யாணம்,உத்தரவின்றி உள்ளே வா ஆகியவை அவற்றுள் சில படங்கள்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1972  காசேதான் கடவுளடா
1974 அத்தையா மாமியா
1974 பெண் ஒன்று கண்டேன்
1977 காலமடி காலம்
1977 ராசி நல்ல ராசி
1979 அலங்காரி
1979 ஆசைக்கு பயமில்லை
1979 தைரியலட்சுமி
1985 வெள்ளை மனசு
1988 வசந்தி
1989 டெல்லி பாபு

Sunday, October 9, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 124-125 -126காரைக்குடி நாராயணன். அவிநாசி மணி,மதுரை திருமாறன்


ஜாவர் சீதாரமனிடம் உதவி இயக்குநராய் இருந்தவர் காரைக்குடி நாராயணன்

திக்கற்ற பார்வதி படத்தின் திரைக்கதை இவர் அமைத்ததே

பிரபல நாடக ஆசிரியர்.இவர் எழுதிய நாடகங்களை மேஜர் சுந்தரராஜன், ஏ வி எம் ராஜன் ஆகியோர் மேடையேற்றியுள்ளனர்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1978ல் அச்சாணி
             மீனாட்சி கல்யாணம்
1979 என்னடி மீனாட்சி
          அன்பே சங்கீதா
           உன்னிடம் மயங்குகிறேன்
1981ல் நல்லது நடந்தே தீரும்
1990ல் மனைவி வந்த நேரம்
1985ல் ஆசை மச்சான்

அச்சாணி படத்தில்தான் நடிகை ஷோபா அறிமுகமானார்

அவிநாசி மணி
---------------------------

பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராய் இருந்தார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1975ல் ஆயிரத்தில் ஒருத்தி
1976ல் மிட்டாய் மம்மி
1976ல் ஜானகி சபதம்
1980ல் வேடனைத் தேடிய மான்

மதுரை திருமாறன்
------------------------------

மனோகருக்காக பல நாடகங்களை எழுதியவர் மதுரை திருமாறன்.இவர் இயக்கத்தில் வந்த திரைப்படங்கள்

1971ல் சூதாட்டம்
1973ல் வாயாடி
1974ல் திருடி 1976ல் மேயர் மீனாட்சி
(  மேலே சொன்ன அனைத்துப்படங்களிலும் ஜெயஷங்கர், கே ஆர்.விஜயா நடித்தனர்)
1974 ரோஷக்காரி (முத்துராமன்)
1974 அவளுக்கு நிகர் அவளே
1976 அக்கா
1978 இளையராணி ராஜலட்சுமி
1982 மானாமதுரை மல்லி

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -123 பாண்டியராஜன்




பாண்டியராஜன் நடிகர், இயக்குநர்.

பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராய் இருந்தவர்..

கன்னிராசி படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து ஆண்பாவம் படம் இவரை ஒரு நடிகரும் ஆக்கியது

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1985 கன்னிராசி
         ஆண்பாவம்
1987 மனைவி ரெடி
1988 நெத்தியடி
1994 சுப்ரமணியசாமி
1997 கோபாலா கோபாலா
2000 டபிள்ஸ்
2000 கபடி கபடி
2006 கை வந்த கலை (இப்படத்தில் இவரது மகன் பிரித்விராஜன் அறிமுகம்)

நெத்தியடி படத்தின் இசையமைப்பாளரும் இவரே

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 122 சரண்

                       

கோவையைச் சேர்ந்தவர் கே வி சரவணன் எனும் சரண்.

ஒரு தயாரிப்பாளர், இயக்குநர்.

இயக்குநர் சிகரம் கேபி யிடம் உதவியாளராக இருந்தவர்.அதற்கு முன்னதாக ஆனந்தவிகடனில் கார்ட்டூனிஸ்டாக இருந்தார்

 அஜீத் நடித்த :காதல் மன்னன் படம் மூலம் இயக்குநர் ஆனார்.இப்படத்திதான் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் நடிகராக அறிமுகம்.தவிர்த்து பரத்வாஜ் இசையமைப்பாளராக அறிமுகம்.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1998ல் காதல் மன்னன்
19999ல் அமர்க்களம்
2000ல் பார்த்தேன் ரசித்தேன்
2002 அல்லி அர்ஜுனா
2002ல் ஜெமினி
2003ல் ஜே ஜே
2004ல் வசூல் ராஜா எம் பி  பி எஸ்., (முன்னாபாய் ஹிந்திபடத்தின் மறு தயாரிப்பு.கமல் , சிநேகா)
2004ல் அட்டகாசம்
2006ல் இதயத் திருடன்
2996ல் வட்டாரம்
2009ல் மோதி விளையாடு
2010ல் அசல்

ஜெமினி புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி , ஆறு,வட்டாரம்,முனி ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

Friday, October 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -118/120 எஸ் ஜே சூர்யா,சசிகுமார்.அமீர்

எஸ் ஜஸ்டின் செல்வராஜ் என்ற எஸ் ஜே சூர்யா ஒரு திரைக்கதை ஆசிரியர்,நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குநர் ஆவார்.1968ல் வாசுதேவனல்லூரில் பிறந்தவர்..

வாலி படம் மூலம் இயக்குநர் ஆனவர்.முதல் படம் மாபெரும் வெற்றி.

அடுத்து குஷி...இவருக்கு வெற்றிக்கனியை அளித்து குஷியாக்கியது.
அதற்கு பின்...

இவர் இயக்கிய படங்கள்

1999ல் வாலி (அஜீத்)
2000 குஷி (விஜய்)
2004ல் நியூ
2005ல் அன்பே ஆருயிரே
2015ல் இசை (இப்படத்தின் இசையமைப்பாளர்,இயக்குநர், நடிகர்_

தவிர்த்து. நியூட்டனின் 3ஆவது விதி,மகானடிகன்  ஆகியவை இவர் நடித்த சில படங்கள்

சசிகுமார்
------------------

நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்/1975ல் பிறந்தவர்

சேது படத்திற்கு பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தார்
பின்னர், அமீர் இயக்கிய மௌனம் பேசியதே,ராம்,ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநர்

2008ல் இவர் தயாரிப்பில், நடிப்பில்,வந்த இவர் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம்

அடுத்து 2010ல் ஈசன் திரைப்படம்

அமீர்
--------------

அமீர் சுல்தான் எனும் அமீர் 1967ல் பிறந்தவர்.இயக்குநர்,தயாரிப்பாளர்,நடிகர்

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராய் இருந்தார்

பருத்திவீரன் படம் முதல் இயக்கம்.கார்த்தி அறிமுகம்.பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது.ராஜாமுகமதுவிற்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

மௌனம் பேசியதே
ராம்
பருத்தி வீரன் (2007)
ஆதி பகவன்  .

Thursday, October 6, 2016

தமிழ்த் தி ரைப்பட இயக்குநர்கள் - 117 டி.யோகானந்த்

     

1922ல் பிறந்தவர் யோகானந்த்

நியூட்டன் ஸ்டூடியோ நிதன் பானெர்ஜியிடம் பணி புரிந்த யோகானந்த், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்

பின்னர் எல் வி பிரசாத்திடம் துணை இயக்குநராய் பணியாற்றினார்

இவர் இயக்கத்தில் வந்த முதல் படம் தெலுங்கு.அம்மாலக்களு.பெரும்பாலும் தெலுங்கு படங்களையே அதிகம் இயக்கினார்

இவர் இயக்கத்தில் வந்த முதல் தமிழ்ப் படம் மருமகள் ஆகும்

என் டி ராமாராவை வைத்து 17 படங்களை இயகியுள்ளார்

தமிழில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி,எஸ் எஸ் ஆர்., பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா என அனைத்து நட்சத்திரங்கள் நடித்த படங்களையும் இயக்கியுள்ளார்

இவரது இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..

1953ல் மருமகள்(என் டி ராமாராவ்)
1955ல் காவேரி (சிவாஜி)
1956ல் மதுரை வீரன்(எம் ஜி ஆர்)
1958ல் அன்பு எங்கே? )எஸ் எஸ் ஆர்)
1958ல் பூலோக ரம்பை(ஜெமினி)
1959ல் கல்யாணப்பெண்
1960ல் எங்கள் செல்வி
1960ல் பார்த்திபன் கனவு (ஜெமினி, வைஜயந்திமாலா நடித்த இப்படத்திற்கு குடியரசுத் தலைவரின் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது)
1962 ராணி சம்யுக்தா(எம் ஜி ஆர்)
1962ல் வளர்பிறை (சிவாஜி)
1963ல் பரிசு (எம் ஜி ஆர்)
1964ல் பாசமும் நேசமும்(ஜெமினி)
1971ல் தங்கைக்காக (சிவாஜி)
1972ல் ராணி யார் குழந்தை
1974ல் தாய் (சிவாஜி)
1976ல் கிரகப்பிரவேசம்(சிவாஜி)
1978ல் ஜெனரல் சக்ரவர்த்தி(சிவாஜி)
1978ல் ஜஸ்டிஸ் கோபினாத் (சிவாஜி)
1979ல் நான் வாழவைப்பேன் (சிவாஜி)
1980ல் எமனுக்கு எமன் (சிவாஜி)
1982ல் ஊருக்கு ஒரு பிள்ளை
1982ல் வா கண்ணா வா
1983ல் சுமங்கலி
1984ல் சரித்திர நாயகன்

2006ல் இவர் அமரர் ஆனார்

Wednesday, October 5, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 115/116 பாலு ஆனந்த், கார்த்திக் ரகுநாத்



பாலு ஆனந்த்

1954ஆம் ஆண்டு பிறந்தவர் பாலுஆனந்த்

இவர் ஒரு நடிகர் மற்ரும் இயக்குநர்

இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்

1985ல் நானே ராஜா நானே மந்திரி (விஜய்காந்த்)
1988ல் அண்ணாநகர் முதல் தெரு (சத்யராஜ்)
1992ல் உனக்காகப் பிறந்தேன்
1993ல் ராஜாதி ராஜ ராஜ குலோதுங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
2012ல் சந்தித்ததும், சிந்தித்ததும்
2015ல் அதிரடி

கார்த்திக் ரகுநாத்
------------------------------

கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வந்த படங்கள்
1985ல் சாவி (சத்தியராஜ்)
1985ல் மருமகள் (சிவாஜி)
1985ல் அண்ணி
1987ல் வீரபாண்டியன் (சிவாஜி)
மக்கள் என் பக்கம் 1987
1987ல் ராஜமரியாதை (சிவாஜி)


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 114 ஐ.வி.சசி



ஐ வி சசி 150க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்லார்.

பெரும்பான்மை மலையாளப் படங்களெ ஆகும்.ஹிந்தி, தமிழ்ப் படங்கள்   சில வற்றையும்    இயக்கியுள்ளார்.

மலையாளப்பட நடிகை சீமா இவரது மனைவி ஆவார்.இருவரும் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர்

முதலில் கலை இயக்குநராகப் பணியாற்றினார்.பின் தனது 27 வயதில் படங்களை இயக்க ஆரம்பித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய "அவளோட ராவுகள்" இவர் இயக்கமே

கமல் ஹாசன், ரஜினி காந்த் இருவரும் இவர் இயக்கத்தில் நடித்துள்ளனர்

இனி இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்

1979ல் அலாவுதீனும் அற்புத விளக்கும்(கமல்)
1979ல் பகலில் ஓர் இரவு
1979ல் ஒரு வானம் ஒரு பூமி
1980ல் குரு (கமல்)
1980ல் எல்லாம் உன் கைராசி
1980ல் காளி (ரஜினி)
1987ல் இல்லம் (சிவகுமார்)
1995ல் கோலங்கள்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இயக்குநர்கள் - 113 அகத்தியன்



பேராவூரணியை சொந்த ஊராகக் கொண்ட கருணாநிதி, அகத்தியன் என்ற பெயரில் இயக்குநர் ஆனார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்கி யுள்ள   இவர் ஒரு பாடலாசிரியரும் கூட

காதல்கோட்டையில் இவர் எழுதிய "வெள்ளரிக்கா" பாடல் ஒரு உதாரணம்

சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகியவற்றிற்கான தேசிய விருதை இவரின் காதல் கோட்டை தட்ட்ச் சென்றது

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

மாங்கல்யம் த்ந்துனானே (1991)
மதுமதி
வான்மதி
காதல் கோட்டை (அஜீத், தேவயானி)
கோகுலத்தில் சீதை
விடுகதை
காதல் கவிதை
காதல் சாம்ராஜ்ஜியம்
ராமகிருஷ்ணன்
செல்வம்
நெஞ்சத்தைக் கிள்ளாதே

இவருக்கு இரண்டு மகள்கள்

விஜயலட்சுமி, சென்னை 28 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்

மற்றொரு பெண் கார்த்திகா, மக்கள் டி.வி., யில் இருக்கிறார்.இவர் இயக்குநர் திரு வை மணந்துள்ளார்.திரு  தீராத விளையாட்டுப் பிள்ளை,சமர் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்

Monday, October 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 112 கே விஜயன்



(நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.எவ்வளவு சீனியர் இயக்குநர்.இவரை எப்படி மறந்தேன்.இவரைப் பற்றி இவ்வளவு தாமதமாக பதிவிட நேர்ந்தத்ற்காக வருந்துகிறேன்.எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தாலும், சில தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.அப்படிப்பட்ட தவறே இது)

இயக்குநர் விஜயன், பெரும்பாலும் சிவாஜி கணேசனை வைத்தே பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர்  தமிழைத் தவிர மலையாளம், ஹிந்தி,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த திரிசூலம் சிவாஜி கணேசனின் 200ஆவது படம்.மாபெரும் வெற்றி படம்.அந்த நாளிலேயே 5 கோடி வசூலான முதல் தமிழ்ப் படம்.மக்கள் தொகை கிட்டத்தட்ட 4 கோடிகளாக இருந்த போது 3 கோடி டிக்கட்டுகள் விற்பனையாகிய படம்.

ஜெயகாந்தன் எழுத்தில் உருவான காவல்தெய்வம் இவர் இயக்கத்தில் வந்த படம்/இதில் சிவாஜி நடித்துள்ளார்.இனி தொடர்ந்து அவர் இயக்கத்தில் வந்த படங்களைப் பார்ப்போம்

1979ல் தெய்வவம்சம்
1974ல் ஒரே சாட்சி
1975ல் எடுப்பார் கை பிள்ளை
1976ல் மதன மாளிகை
1976ல் ரோஜாவின் ராஜா (சிவாஜி)
1977ல் தீபம் (சிவாஜி)
1977ல் அண்ணன் ஒரு கோயில் (சிவாஜி)
1978ல் தியாகம் (சிவாஜி)
1978ல் ருத்ரதாண்டவம்
1978ல் புண்ணிய பூமி (சிவாஜி)
1979ல் திரிசூலம் (சிவாஜி)
1979ல் நல்லதொரு குடும்பம் (சிவாஜி)
1980ல் வண்டி சக்கரம் (சில்க் சுமிதா அறிமுகம்)
1980ல் ரத்த பாசம் (சிவாஜி)
1980ல் தூரத்து இடி முழக்கம் (விஜய்காந்த்)
1981ல் பெண்ணின் வாழ்க்கை
1981 ஆணி வேர்
1981 கோயில் புறா
1982ல் ஆட்டோ ராஜா
1983ல் நீறு பூத்த நெருப்பு
1983ல் சட்டம் (கமல்)
1984ல் நிரபராதி
1984ல் அழகு
1984ல் விதி
1984ல் ஓசை
1985ல் பிரேமபாசம்
1985ல் காவல்
1985ல் மங்கம்மா சபதம்
1985ல் பந்தம் (சிவாஜி)
1986ல் விடுதலை (சிவாஜி, ரஜினி)
1986ல் ஆனந்த கண்ணீர்(சிவாஜி)
1987ல் வைராக்கியம்
1987ல் வெளிச்சம்
1987ல் கிருஷ்ணன் வந்தான் (சிவாஜி)
1987ல் தாம்பத்தியம்
1987ல் என் ரத்தத்தின் ரத்தமே (பாக்கியராஜ்)
1995ல் அவள் போட்ட கோலம்

விஜயன், தான் இயக்கிய படங்கள் சிலவற்றில் சிறு வேடங்களில் நடித்தும் உள்ளார்

இவரது மகன் சுந்தர் கே விஜயன், பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 111 கே எஸ் அதியமான்

தமிழ், ஹிந்தி, மலையாளப் படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் அதியமான் அவர்கள்



இயக்குநர் கே விஜயனுடன் பணிபுரிந்துள்ளார்

1992ல் தூரத்து சொந்தம் என்ற படம் மூலம் இயக்குநர்  ஆனார்

பின்னர், சுரேஷ் மேனனின், புதிய முகம், பாசமலர்கள் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் இவரே

பின்னர் ரகுவரன்,கார்த்திக்,  ரேவதி, தேவயானி   நடிக்க தொட்டாற்சிணுங்கி படத்தை இயக்கினார்.வெற்றி படமாய் அமைந்தது.சினிமா ஆர்வலர் அனைவருக்கும் த்மிழில் மற்றொரு அருமையான , சொல்வதை இலக்கியத்தரத்துடன் சொல்லும் இயக்குநர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

அதை சிறிது சுவர்ணமுகியும் உறுதிப்படுத்தியது.

ஒவ்வொரு படங்கள் வெளிடுவதில் தாமதம் இவர் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆனது..

ஆம்..ஒரு நல்ல இயக்குநர்....சரியானபடி உபயோகித்துக் கொள்ள முடியாத தமிழ்ப்பட உலகிற்கு இழப்பு என்றே தோன்றுகிறது

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1992ல் தூரத்து சொந்தம்
1995ல் தொட்டாற்சிணுங்கி(பார்த்திபன்)
1998ல் சுவர்ணமுகி
2005ல் பிரியசகி (மாதவன்)
2008ல் தூண்டில் (ஷாம்)

மீண்டும் ஒரு சுற்று இவர் வர வேண்டும் எனவே ஆசைப்படுகிறான் உங்கள் ரசிகன்

Sunday, October 2, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 110 பி.லெனின்



பிரபல இயக்குநர் ஏ.பீம்சிங்கின் மகன் லெனின் ஆவார்

இவர், தமிழ், ஹிந்தி,மலையாளம் திரைப்படங்களில் பணி  புரிந்துள்ளார்

அடிப்படையில் படத்தொகுப்பாளர் (எடிட்டர்) இவர்.உதிரிப் பூக்கள் படத்திற்கு எடிட்டர் இவரே

வி.டி.விஜயனுக்கு உதவியாளராய் இருந்த இவர், அவருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராய் பணியாற்றியுள்ளார்.அவற்றுள் சில
காதலன்.குற்றவாளி படங்கள்      உட்பட ஐந்து படங்களுக்கு தேசிய விருது
பெற்றுள்ளார்

இவரது இயக்கத்தில் வந்துள்ள தமிழ்ப் படங்கள்

1980 நதியைத் தேடி வந்த கடல்
1982ல் பண்ணைபுரத்து பாண்டவர்கள்
1983ல் எத்தனை கோணம் எத்தனை பார்வை
1988ல் சொல்லத் துடிக்குது மனசு
1992ல் நாக் அவுட் (குறும்படம்..இயக்கத்திற்கான தெசிய விருது)
2001ல் ஊருக்கு 100 பேர் (சிறந்த இயக்கம், சிறந்த தமிழ்ப்படம் விருது)
2015 கண்டதைச் சொல்கிறேன் 

Saturday, October 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 109 தங்கர்பச்சான்


                 

1962ல் பிறந்தவர் தங்கர்பச்சான்

எழுத்தாளர், இயக்குநர்,ஒளிப்பதிவாளர்

இவர் ஒளிப்பதிவாளராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.அவற்றுள் சில

காதல் கோட்டை,பாரதி, குட்டி,சிட்டிசன்,பாண்டவர் பூமி,வில்லன்.மோகமுள், கருவேலம்பூக்கள்

ஒன்பது ரூபாய் நோட்டு,அம்மாவின் கைபேசி ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார்.அவையே அவர் இயக்கத்தில் படமாகவும் வந்தன

தவிர்த்து, வெள்ளைமாடு,கொடிமுந்திரி,இசைக்காத இசைத்தட்டு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் தரமானவை என பேசப்பட்டன

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

2002 அழகி (பார்த்திபன்)
சொல்ல மறந்த கதை (சேரன்.இவர் தங்கர்பச்சான் முளம் இப்படத்தில்தான் நடிகராக அறிமுகம்)
2004ல் தென்றல்
2005ல் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
2007ல் பள்ளிக்கூடம்
             ஒன்பது ரூபாய் நோட்டு
2012ல் அம்மாவின் கைபேசி

Friday, September 30, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 108 சேரன்



மதுரை- மேலூர் அருகே பழையூர்பட்டி என்ற ஊரில் 1970ல் பிறந்தவர் சேரன்

நான் கு முறை இவரது படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராய் இருந்து,பின் துணை இயக்குநராகவும் இருந்தார்.கமல் ஹாசனின் மகாநதி படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றினார்

பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநர் ஆனார்

பின், பொற்காலம்,பாண்டவர் பூமி,வெற்றி கொடி கட்டு..மூன்று படங்களும் தொடர்ந்து  வெற்றி

இவரது ஆட்டோகிராஃப் படத்திற்கு நான் கு ஒளிப்பதிவாளர்கள் பணி புரிந்தனர்

ரவிவர்மா, செந்திலின் (சேரன்) இளமை காலத்தை 35 எம் எம் லென்ஸில்  எடுத்தார்

விஜய்மில்டன் , கேரள காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்

துவாரகநாத் சென்னைக் காட்சிகளை பட்மாக்கினார்

சங்கி மகேந்திரன் மீதக் காட்சிகளை எடுத்தார்

இப்படம் மான்ற்றியல் உலகப் படவிழாவில் நான் கு முறை திரையிடப்பட்டது

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்-

1997ல் பாரதி கண்ணம்மா
             பொற்காலம்
1998ல் தேசிய கீதம்
2000ல் வெற்றி கொடி கட்டு
.2001ல் பாண்டவர் பூமி
2004ஆட்டோகிராஃப்
2005ல் த்வமாய் தவமிருந்து
2007ல் மாயக்கண்ணாடி
2009ல் பொக்கிஷம்
2015ல் ஜெ கே என்னும் நண்பனின் வாழ்க்கை

இதைத்தவிர்த்து வெளியார் படங்களிலும் நடித்துள்லார்.சொல்ல மறந்த கதை படம் மூலம் தங்கர்பச்சான் இவரை நடிகராக ஆக்கினார்

பின் பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை,ஆடும் கூத்து,யுத்தம் செய்,முரண்,சென்னையில் ஒரு நாள்,மூன்று பேர் மூன்று கதை, கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்

வெற்றிகொடிகட்டு,ஆட்டோகிராஃப்,தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து ஆகிய படங்கள் தேசிய விருது பெற்றன.(ஆடும் கூத்து படம் இன்னமும் வெளியாகவில்லை.ஆனாலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்படம் திரையிடப்பட்டதாம்)

சி 2 எச் (cinema to House)  DVD on the day of release33

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை இப்படி வெளியானது.இதில் 150 வெளியிட்டார்களும், 3000 டீலர்ஸும் உள்ளனர் 

தமிழ்த் திரைப்பட இய்க்குநர்கள் 107ஃபாசில்



1953ல் கேரளாவில் பிறந்தவர் ஏ எம் ஃபாசில்

1980ல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற மோகன்லால் நடித்த மலையாளப்படம் மூலம் இயக்குநர் ஆனார்.1993 மணிசித்திரத்தாழு படம் தேசிய விருது பெற்றது (இதுவே சில மாற்றங்களுடன் சந்திரமுகியாக வாசு இயக்கத்தில் தமிழில் வந்தது)

31 படங்கள் வரை இயக்கியுள்ள ஃபாசில் பெரும்பாலும் மலையாளப்படங்களையே இயக்கிய்டுள்ளா.வருஷம் 16 மூலம் குஷ்பூவை தென்னிந்திய பட உலகில் பிரவேசிக்க வைத்தார்

இவரது மகன் ஃபாகத் ஃபாசில் இன்று மலையாளப் படவுலகில் முன்னணி நடிகர்.நடிகை நஸ்ரியாவை ஃபாகத் மணந்துள்ளார்

ஃபாசில் இயக்கத்தில் வெளீவந்துள்ள தமிழ்ப் படங்கல்

1985ல் பூவே பூச்சூடவா (பத்மினி, நதியா)
1987ல் பூ விழி வாசலிலே
1989ல் என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
1989ல் வருஷம் 16
1990 அரங்கேற்ற வேளை (பிரபு, ரேவதி)
1991ல் கற்பூரமுல்லை
1993ல் கிளிப் பேச்சு கேட்க வா (மம்மூட்டி)
1997ல் காதலுக்கு மரியாதை (விஜய், ஷாலினி, சிவகுமார்)
2000ல் கண்ணுக்குள் நிலவு (விஜய், ஷாலினி)
2005ல் ஒரு நாள் ஒரு கனவு

இவரது படங்கள் அனைத்தும் வெற்றி படங்களே எனலாம்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானப் படங்கள்.

Thursday, September 29, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 106 ஆர்.கே.செல்வமணி

                   


1965ஆம் ஆண்டு பிறந்தவர் செல்வமணி

மணிவண்ணனிடம் உதவியாளராய் இருந்தவர்

புலன்விசாரணை திரைப்படத்தின் கதையை ஓவியங்களாக வரைந்து, அவற்றை ஒரு ஆல்பமாக்கி, அப்படத்தை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார்.1990ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு புலன்விசாரணை

அடுத்து, சில நாட்கள், மக்கள் அனைவராலும் பேசப்பட்டார்.அப்பட வெற்ரிக்கு முக்கியக் காரணம் அக்காலகட்டத்தில் குற்றவாளியாய் இருந்த ஆட்டோ ஷங்கர் பற்றியும், அரசியல் நிலைபாடுகளையும் அப்படம் உணர்ர்த்தியது சிறப்பு

அப்பட வெற்றி செல்வமணிக்கு விஜ்ய்காந்தின் 100 வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கும் வாய்ப்பினையுல் அளித்தது.இப்படம் வந்த ஆண்டு 1991

படம் வெளிவந்த அடுத்த மாதம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட,அதைப்  பின்னணியாகக் கொண்டு குற்றப்பத்திரிகை படத்தை ஆரம்பித்து, இயக்கினார்.இதனிடையே, பிரசாந்த், ரோஜா நடிக்க செம்பருத்தி படம் வெளியாகி வெற்றிதொடர்ந்து மூன்று வெற்றிகள்.

செல்வமணியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகியது

இந்நிலையில்.குற்றப்பத்திரிகை படம் சென்சாரால் தடை செய்யப்பட்ட்து.படம் வெளியாகவில்லை.

அதற்காக அலைய ஆரம்பித்தார் செல்வமணி.அதன் காரணமாகவோ என்னவோ..அதன் பின்னர் வந்த அவரது எந்தப் படங்களும் சொல்லும் படி அமையவில்லை.

16ஆண்டுகளுக்குப் பின்னர் 2007ல் குற்றப்பத்திரிகை வெளியாகி தோல்வியைத் தழுவியது

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

1990 புலன்விசாரணை
1991 கேப்டன் பிரபாகரன்
1992 செம்பருத்தி
1994ல் அதிரடிப்படை
1994ல் கண்மணி
1995ல் ராஜமுத்திரை
1995ல் மக்களாட்சி
1997ல் அடிமைச்சங்கிலி
1997ல் அரசியல்
1999ல் ராஜஸ்தான்
2001ல் துர்கா
2007ல் குற்றப்பத்திரிகை
2015ல் புலன்விசாரணை 2

திரைப்பட  நடிகை ரோஜா இவரது மனைவி ஆவார்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 104 சுராஜ்



1998ஆம் ஆண்டு சரத்குமார்,தேவயானி நடித்த மூவேந்தர் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுராஜ்.அதிரடியுடன் கூடிய மசாலா படங்கள் இவரது சிறப்பு

இவர் இயக்கிய படங்கள்

1998 மூவேந்தர்
2001ல் குங்குமப்பொட்டு கவுண்டர் (சத்யராஜ்)
2003ல் மிலிட்டரி (சத்யராஜ்)
2996ல் தலைநகரம் (சுந்தர் சி)
2009ல் படிக்காதவன் (தனுஷ்)
2011ல் மாப்பிள்ளை (தனுஷ்)
2013ல் அலெக்ஸ் பாண்டியன்
2015ல் சகலகலாவல்லவன் (ஜெயம் ரவி)


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 105
--------------------------------------------------------

நடிகர்,இயக்குநர் சித்ரா லட்சுமணன்.இவரும் இவர் சகோதரர் சித்ரா ராமுவும் சேர்ந்துமண்வாசனை, வாழ்க்கை,சின்னப்பதாஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளனர்

1988ல் சூரசம்காரம் மூலம் (கமல் நடித்தது) இயக்குநர் ஆனார்.பின்னர் 1997ல் பிரபு நடிக்க பெரியதம்பி படத்தை இயக்கினார்.1999ல் கார்த்திக், ரோஜ நடிக்க சின்னராஜா இயக்கினார்

ஜப்பானில் கல்யாணராமன், புதுமைப்பெண், பாஸ் எங்கிற பாஸ்கரன், தீயா வேலை செய்யணும் குமாரு, உத்தமவில்லன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார்.

கமல் ஹாசனுக்கு பொதுமக்கள் தொடர்பு செயலராகவும் பணிபுரிந்துள்லது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 28, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 103 செல்வா

                       
               

1992ல்  தலைவாசல் என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார் செல்வா

முன்னதாக தில்லி தொலைக்காட்சி நிறுவனத்திற்காக பாரதியார் பற்றி டாகுமென்டரி ஒன்றை எடுத்தார்.

தொடர்ந்து தொலைக்காட்சிக்காக தியாகம், அகிலனின் சித்திரப்பாவை,நீலா மாலா ஆகிய தொடர்களை இயக்கினார்.

நீலா மாலா தொடர் தயாரிப்பாளர்களான சோழா கிரியேஷன்ஸ் இவருக்கு தலைவாசல் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தனர்.இப்படத்தில், நடித்த விஜய் என்னும் நடிகர் பின்னர் தலைவாசல் விஜய் என அழைக்கப்பட்டார்

அடுத்து 1993ல் அமராவதி என்ற படத்தை இயக்கினார்.இப்படத்தில்தான்  அஜீத் அறிமுகமானார்

இவரது இயக்கத்தில் வந்த படங்கள்-

1992ல் தலைவாசல்
1993ல் அமராவதி
1995ல் கர்ணா
1997ல் புதையல்
             சிஷ்யா
1998ல் பூவேலி
1999ல் ஆசையில் ஓர் கடிதம்
             உன்னருகே நான் இருந்தால்
2000ல் ஜேம்ஸ் பாண்டு
 2003ல் ஸ்டூடென்ட் நம்பர் 1
2004ல் ஜோர்
2995ல் ஆணை
2006ல் நெஞ்சில் ஜில் ஜில்
2007 நான் அவனில்லை
2007ல் மணிகண்டா
2008ல் தோட்டா
2009ல் குரு என் ஆளு
2009ல் நான் அவனில்லை (2)
2012ல் நாங்க

கே பாலசந்தர் இயக்கத்தில் வந்த ஜெமினி கணேசன் தயாரித்து, நடித்த நான் அவனில்லை படத்தின் ரீமேக்கே  ஜீவா நடித்து இவர் இயக்கிய நான் அவனில்லை   

Tuesday, September 27, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 102 மனோபாலா





1953 ஆம் ஆண்டு பிறந்தவர் மனோபாலா

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கியுள்ளார்.9 டெலிஃபிலிம்களை இயக்கியுள்ளார்

பல படங்களில், குணசித்திர வேடம், நகைச்சுவை வேடம் என நடித்துள்ளார்.எந்த பாத்திரமானாலும், சின்ன நகைச்சுவை வேடமாயினும் தனித்து நிற்பார் இவர்.அதுவே இவரது திறமைக்குச் சான்றாகும்

1982ல் கார்த்திக், சுகாசினி நடித்த ஆகாயகங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்

பின்னர் இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1985ல் நான் உங்கள் ரசிகன் (மோகன்)
                பிள்ளைநிலா
1986ல் பாரு பாரு பட்டிணம் பாரு
1987ல் சிறைப்பறவை (விஜய்காந்த்)
           தூரத்துப் பச்சை
            ஊர்க்காவலன் (ரஜினி)
1989ல் என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்
             தென்றல் சுடும்
1990ல் மல்லு வேட்டி மைனர்
 1991ல் வெற்றிபடிகள்
1991ல் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்(விஜய்காந்த்)
1992ல் செண்பகத்தோட்டம்
1993ல் முற்றுகை
            கருப்பு வெள்ளை
             பாரம்பரியம் (சிவாஜி, சரோஜா தேவி)
1997 ந்ந்தினி
2000ல் அன்னை
2001ல் சிறகுகள்
2002ல் நைனா

2014ல் வந்த சதுரங்க வேட்டை படத்தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்
      
     
   



Monday, September 26, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 101 விக்ரமன்



1990ல் புதுவசந்தம் படம் மூலம் இயக்குநர் ஆனவர் விக்ரமன்

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தார்.

இவர் இயக்கத்தில் வந்த வானத்தைப்போல சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது

பல வெற்றி படங்களைக் கொடுத்த இவருக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது வேதனையே!

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990ல் புது வசந்தம், புதிய கதைக்களம்.மாபெரும் வெற்றி படம்

1991ல் பெரும்புள்ளி
1993ல் நான் பேச நினைப்பதெல்லாம்
           கோகுலம்

1994ல் புதிய மன்னர்கள்

1996ல் பூவே உனக்காக (விஜய் நடிக்க..படம் மாபெரும் வெற்றி.தெலுங்கு,கன்னடம், ஹிந்தியில் எடுக்கப்பட்டது

1997ல் சூரியவம்சம் (சரத், தேவயானி நடித்தது.தெலுங்கு,கன்னடம், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது)

1998ல் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (கார்த்திக்.தெலுங்கு, கன்னடத்தில் எடுக்கப்பட்ட்டது)

2000ல் வானத்தைப் போல (தெலுங்கு, கன்னடத்திலும் எடுக்கப்பட்ட்து)

2002ல் சூர்யா, சிநேகா நடிக்க உன்னை நினைத்து (தெலுங்கு, கன்னடம் வந்தது)

2003ல் பிரியமான தோழி

2006ல் சென்னைக்காதல்
2009 விஜய்காந்த் நடிக்க மரியாதை

2013ல் நினைத்தது யாரோ

சுயம்வரமும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களும்

                   

கிரிதாரிலால் நாக்பால் தயாரிப்பில்

ஜே.பன்னீர்,ஏ ஆர் ரமேஷ் ,கேயார், ஈ.ராமதாஸ்,அர்ஜுன்,குருதனபால்.லியாகத் அலி கான் ஆர்.சுந்தரராஜன்,செல்வா, கே.சுபாஷ்,சி.சுந்தர்,சிராஜ்,கே எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் இயக்கத்தில்

  விஜயகுமார் ,மஞ்சுளா,நெப்போலியன்,பார்த்திபன்,சத்யராஜ்,பிரபு,அப்பாஸ்,ரோஜா,கஸ்தூரி,மகேஸ்வரி,ப்ரீதா விஜயகுமார்,ரம்பா,சுவலட்சுமி,குஷ்பூ,ஐஸ்வர்யா,ஹீரா, பாண்டியராஜ்,வினீத்,லிவிங்க்ஸ்டன்,பிரபுதேவா,கார்த்த்க்,அர்ஜுன் நடிக்க

சிற்பி, தேவா,வித்யாசாகர்,ராஜ்குமார் இசையமைப்பில்

பாபு, ரகுநாத் ரெட்டி,ராவ்,சங்கர்,செல்வராஜ்,கார்த்திக் ராஜா,உதயசங்கர்,அஷோக் ராஜன்,பன்னீர்செல்வம், செந்தில்குமார்,இமயவரம்பன்,ராம் குணசேகரன்,ராஜரத்னம்,அஷோக்,அஹ்மத்,மோகன், விக்டர் எஸ் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய

155 நிமிடங்கள் ஓடக்கூடிய சுயம்வரம் என்ற படம் 23 மணி 58 நிமிடங்களில் ஒரே நாளில் எடுக்கப்பட்டு வெளியானது.கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது

ஏவிஎம் ஸ்டூடியோ,ஏவிஎம் கார்டன்,காமராஜ் மெமோரியல்,ஃபில்ம் சிடி,கிண்டி,அபு பேலஸ்,குஷால்தாச் ஹவுஸ்,விஜயா வாஹினி ஸ்டுடியோக்கள் ஆகியவற்ரில் படபிடிப்பு நடந்தது.

Sunday, September 25, 2016

சாமிக்கண்ணு வின்சென்ட் (தமிழ்த் திரைப்பட இயக்குநர் வரிசை)

                           


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பற்றிய இத்தொடர், இவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் முடிவு பெறாது.

இவர் இயக்குநர் அல்ல..ஆனாலும் திரையுலகின் முன்னோடி.தென்னிந்திய தமிழ் சினிமாவின் தந்தை.

18-4-1883ஆம் ஆண்டு..த்மிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவரும், இருபதாம் நூ ற்றாண்டின்  ஆரம்பித்தில் தென்னிந்தியாவின் சலனப் படங்களை திரையிட்டவருமான சாமிக்கண்ணு வின்சென்ட், கோவையில் கோட்டைமேடு பகுதியில் பிறந்தார்.பின்னாளில் மூன்று திரையரங்குகளை கோயம்பத்தூரில் நடத்தினார்.பல தமிழ்ப்படங்களைத் தயாரித்தார்

தனது 22அவது வயதில் தென்னக ரயில்வேயில்பொன்மலை ரயில்வே நிலையத்தில் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.

1905ஆம் ஆண்டு டியூபாண்ட் என்ற பிரஞ்சுக்காரர், திரைப்படம் சம்பந்தப்படவரைச் ச்ந்தித்தார்.இந்நிலையில் ஒருநாள் அந்த பிரஞ்சுக்காரர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், தனது புரஜக்டர், படச்சுருள் மற்றும் பல சாதனங்களை விற்றுவிட்டு தன் நாடு செல்லத் திட்டமிட்டார்.இதை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் ,தன் கையிலிருந்த பணத்துடன்.   தன் சகோதரியின்         நகைகளையும் விற்று 2250 ரூபாய்க் கொடுத்து அவரிடமிருந்த உபகரணங்களை வாங்கினார்.

பின்னர் தன்னிடமிருந்த புரஜக்டர் உதவியால், ஏசுவின் வாழ்க்கை என்ற படததை, தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் காட்டினார்.மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.பின், புது முயற்சியாக டென்ட் கொட்டகையை உருவாக்கினார்.ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து, புரஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களைக் காட்டினார்.

சினிமாவைக் கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் தயாரித்த ரயிலின் வருகை(ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்தப்படமே)என்ற படத்தைக் காட்டினார் .அதைப் பார்த்த மக்கள், ரயில் தம் மீது மோதிவிடும் என அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.வெளிநாடுகளிலிருந்து  வரும் துண்டுப் படங்களையும்    தமிழகம்   முழுதும் சுற்றிக் காட்டினார்

பின், தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற தியேட்டரை உருவாக்கி படங்களைத் திரையிடத் தொடங்கினார்.(இக்காலகட்டத்தில், சென்னையில் கெயிட்டி,கிரௌன் திரையரங்குகள் கூடாரமாகவே இருந்தன).பின்னர், அதே சாலையில் எடிசன் எனும் திரையரங்கு பேலஸ், நாஸ் திரையரங்கு,ரெயின்போ திரையரங்கு என
திரையரங்குகள் விரிவடைந்தன

அமெரிக்க புரஜக்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் முகவராகவும் ஆனார் சாமிக்கண்ணு வின்சென்ட்.தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு இப்போது சலனப்படங்களை எடுத்துச் செல்ல முடிந்தது

இதனிடையே ஒரு அச்சகமும், மாவு ஆலையையையும் நிறுவினார்/மின்சாரம் மூலம் இயங்கும் அந்த  அச்சகத்தின் பெயரே எலக்ட்ரிகல் பிரிண்டிங்க் பிரஸ் .இங்கு படங்களுக்கான விளம்பர நோடீஸ்கள் அச்சிடப்பட்டன.ஆலைகளுக்கு மின்சாரம் போக, மீதத்தை மக்களுக்காக வழங்கினார்.கோவை நகரே இவரால் மின் நகரமாய் ஆனது

இவருக்கு உறுதுணையாக இவர் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட். அவரது மகன் பால் வின்சென்ட் இருந்தனர்.கோவை ரத்தினசபாபதி நகரில் லைட் ஹவுஸ் எனும் திரையரங்கை நிறுவினார்.இவர்களிடம் ஒரே நேரத்தில் 60 கூடார கொட்டகைகள் இருந்தன.இவர்கள் நிறுவனமே வின்சென்ட் சோடா நிறுவனமாகும்

கோவை-திருச்சி சாலையில் 1937ஆம் ஆண்டு உருவான சென்டிரல் ஸ்டூடியோவின் இயக்குநர்களில் இவரும் ஒருவரானார்.இன்றும் கோட்டைமேடு பகுதியில் இவர் பெயரில் வின் சென்ட் சாலை உள்ளது

அடுத்து கோவையைத் தவிர்த்து உதகமண்டலம்,மதுக்கூர்,ஈரோடு,அரக்கோணம்,கொல்லம் என பல கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார் ,

மௌனப்படங்களில் கிராமஃபோன் மூலம் பின்னணி இசையைக் கோர்த்து,தமிழ் சினிமாவில் முதல் தொழில் நுட்பத்தைப் புகுத்தினார்.வின்சென்டிந்தொழில் நாளுக்கு நாள் விரிவடைந்தது

நிரந்திர திரையரங்குகள் வந்த பின்னர், பம்பாயில் தயாரான ஹரிச்சந்திரா போன்ற படங்கள் சென்னையில் திரையிடப் பட்டன.இதனிடையே ஆர்.நடராஜ முதலியார் என்பவர் 1916ஆம் ஆண்டில் கீசகவதம் என்ற படத்தைத் தயாரித்தார்.அதை முதலில் தன் திரையரங்கில் திரையிட்டார் சாமிக்கன்ணு வின்சென்ட்

சினிமாவை தென்னிந்தியாவில் வெற்றிகரமான தொழிலாக முன்னெடுத்து வந்தார் அவர்

1933ல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளித்திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார்.இப்படம் சென்னை எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் தினமும் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது
1935ல் ஹரிசந்திரா படத்தைத் தயாரித்தார்  .அடுத்து சுபத்ரா பரிணயம்(1935)

1936ல் பேலஸ் திரையரங்கை வாங்கியவர் ஹிந்தி படங்கலையும் திரையிடலானார்.
1937ல் கோவையில் சென்டிரல் ஸ்டூடியோஸ் தொடங்கப்பட்டபோது அதில் ஹிந்தி மொழிப்படங்களையும் திரையிட்டார்

1939ல் ஓய்வு பெற்றவர்..1942ல் மரணமடைந்தார்

இவர் தமிழ்ப்பட இயக்குநர் அல்ல.ஆனாலும், தமிழ்ப் பட வளர்ச்சிக்கு ஆணிவேர்.ஆகவே தென்னிந்திய திரையுகின் தந்தை இவர்தான் என்றால் மிகையில்லை

Saturday, September 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 100 வசந்த்

         

வசந்த்  - திரைக்கதை ஆசிரியர், இயக்குநர்

இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.சிந்து பைரவி,புன்னகை மன்னன் உட்பட 18 படங்களுக்கு அவருடன் பணிபுரிந்துள்ளார்

கேளடி கண்மணி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.படம் 285 நாட்கள் ஓடி அவருக்கு மாபெரும் வெற்றியைத் த்ந்தது
அடுத்து நீ பாதி நான் பாதி இயக்கினார்.
மூன்றாவதாக அஜீத் நடிக்க ஆசை படம்  வெளிவந்து வெற்றி படமானது.சுவலட்சுமி இதில் அறிமுகம்

மணிரத்னம் தயாரிக்க இவர் இயக்கத்தில் வந்த படம் நேருக்கு நேர்.சூர்யா இப்படத்தில் அறிமுகம்

இவர் குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.சா,கந்தசாமியின் தக்கையின் மீது நான் கு   கண்கள் என்ற இவர் இயக்கிய குறும்படத்திற்கு, சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது

இனி, இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1990 கேளடி கண்மணி (எஸ் பி பாலசுப்ரமணியம் )
1991 நீ பாதி நான் பாதி
1995 ஆசை
1997ல் நேருக்கு நேர்
1999ல் பூவெல்லாம் கேட்டுப்பார்
2000ல் அப்பு, ரிதம்
2003ல் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க
2007ல் சத்தம் போடாதே
2013ல் மூன்று பேர் மூன்று காதல்

-------------------------------------------------------------------------------------------

இத்தொடர் ஆரம்பிக்கும் போது 100 இயக்குநர்கள் பற்ரி எழுதுவதாகக் கூறியிருந்தேன்.நொறுக்ஸ் என இரு பதிவுகளில் மேலும் பல இயக்குநர் பற்றி சொல்லியிருந்தேன்.

அப்படியும் சீனியர் இயக்குநர்கள் சிலர் பற்றி  எழுத வேண்டியுள்ளதால், இத்தொடரை சற்று நீட்டிக்கிறேன்.அவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவதாக இருக்கிறேன்

இன்று இயக்கி வரும் பல இளம் இயக்குநர்கள் குறித்து இவ்வளவு விரைவில் எழுத விரும்பவில்லை.சிறிது காலம் கழித்து அவர்களைப் பற்றி எழுதுகிறேன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் சில நொறுக்ஸ் - 2


 

இயக்குநர் சிகரம் கே,பாலசந்தரின் நண்பரும், அவருடன் திரைப்பணியை இணைந்து புரிந்தவருமான அனந்து அவர்கள் இயக்கத்தில் வந்த படம் :சிகரம்:

குணசித்திர நடிகராய் இருந்த மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வந்த படங்கள், கல்தூண்,அந்த ஒரு நிமிடம்,இன்று நீ நாளை நான்,முத்துகள் மூன்று,அம்மா இருக்கா

நகைச்சுவையில் கொடிகட்டி பறந்த நாகேஷ், தன் மகன் ஆனந்த பாபு நடிக்க இயக்கிய படம் :பார்த்த ஞாபகம் இல்லையோ

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கிய படங்கள் உன்னைப்போல ஒருவன், யாருக்காக அழுதான்

பிரபல இலக்கியவாதி, நாடக ஆசிரியர் கோமல் சுவாமினாதன் இயக்கிய படங்கள் யுத்தகாண்டம்,அனல் காற்று,ஒரு இந்திய கனவு

வியட்னாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வந்த படங்கள், கௌரவம்,விஜயா,தேவிகருமாரியம்மன்,ஞானப்பறவை

நான், மூன்றெழுத்து ஆகிய படங்களுக்கு கதை, வசனகர்த்தாவான டி.என்.பாலு இயக்கத்தில் வந்த படங்கள் அஞ்சல்பெட்டி 520,மனசாட்சி,உயர்ந்தவர்கள்,மீண்டும் வாழ்வேன்,ஓடி விளையாடு தாத்தா,   சட்டம் என் கையில் (இப்படமே கமல் உதடுகளுக்கு முக்கியத்துவம் ஆரம்பித்த படம்) சங்கர்லால் (இப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் காலம் மறைந்தார்)

முரசொலி மாறன் இயக்கத்தில் வந்த படம் "மறக்க முடியுமா?"

நகைச்சுவை நடிகர், அரசியல் விமரிசகர்,பத்திரிகையாளர் சோ அவர்கள் இயக்கத்தில் வந்த படங்கள் முகமது பின் துக்ளக்,உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, மிஸ்டர் சம்பத், சம்போ சிவ சம்போ

அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாத்தான் ஆகிய  இரு படங்களை நடிகர் ராஜ்கிரண் இயக்கியுள்ளார்

ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வந்த படங்கள்..1968ல் கீழ்மணியில் நடந்த நிகழ்வுகளை வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் இயக்கினார்.இப்படம் இந்திராகாந்தி தேசிய விருதைப் பெற்றது.தவிர்த்து இவர் இயக்கத்தில் இரவுப்பூக்கள்,பூக்கள் விடும் தூது ஆகிய படங்கள் வந்தன

நடிகர் மோகன் இயக்கிய படம் அன்புள்ள காதலுக்கு


நடிகர் ரமேஷ் அரவிந்த் கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை இயக்கினார்.னடிகர் சத்தியராஜ் இயக்கியப் படம் வில்லாதி வில்லன்
நாசர் இயக்கத்தில் வந்த படம் அவதாரம்
என் எஸ் கே , இயக்கியப் படம் பணம்,
சந்திரபாபு இயக்கிய படம் தட்டுங்கள் திறக்கப்படும்
நடிகர் ரவிசந்திரன் இயக்கியப் படம் மானசீக காதல்

நடிகர் ராமராஜன் இயக்கியப் படங்கள் அதிகம்.அவை, அம்மன் கோயில் வாசலிலே,மருதாணி, மனசுக்கேத்த பொண்ணு,பொன்னான நேரம், நம்ம ஊரு ராசா,ஹலோ யார் பேசறது, சீறி வரும் காளை,கோபுர தீபம்,மறக்க மாட்டேன்,விவசாயி மகன், சோலை புஷ்பங்கள்

ஜெயபாரதி
-----------------------

இவரைப்   பற்றி இன்று பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.ஆனால், திரைப்பட இயக்குநர்கள் வரிசையில்....தமிழில் ஆர்ட் ஃபில்ம் எடுத்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் இவர்.சத்யஜித் ராய்,தபன் சின் ஹா, போன்றவர்களால் கவரப்பட்டு இயக்குனர் ஆனார்,

இவர் ஏழு திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.வணிக ரீதியாக அவை வெற்றி பெறாதிருக்கலாம்.ஆனால், பேசப்பட்ட படங்கள்.அவை தரமான படங்கள்

குடிசை, உச்சி வெயில்,நண்பா நண்பா,ரெண்டும் ரெண்டும் அஞ்சு,புத்ரன்,குருக்ஷேத்ரம்.விருது பெற்ற படங்கள்

வானத்தைப் பார்க்கிறார்கள்,24 சி,வேதபுரம் முதல் வீதி,தேநீர் ஆகிய படங்கள் முழுதும் எடுத்து முடிக்க வசதியில்லாததால் பாதியில் விடப்பட்டன.

புத்ரன் படம் முடிந்தும், பணப்பிரச்னைக் காரணமாக திரையரங்கைப் பார்க்கவில்லை

கலைப்படங்கள் வரிசையில் வந்த படங்கள்

ஜூபிடெர் சின்னதுரை இயக்கத்தில் அரும்புகள்
ஜான் அப்ரகம் இயக்கத்தில் அக்ரஹாரத்தில் கழுதை (தேசிய விருது)
நிமல் கோஷ் - குற்றவாளி
ச்ந்திரன் ஹேமாவின் காதலர்கள்
அருள்மொழி - காணி நிலம்
பாபு நந்தன் கோடு - தாகம்
கே எஸ் சேதுமாதவன்- மறுபக்கம் (நான் கு தேசிய விருது  , சிறந்த தமிழ்ப்படத்த்ற்கான தங்கத்தாமரை விருது  ), தவிர்த்து கமல் நடிக்க நம்மவர்கள்

(விட்டுப்போய் விட்டதாக பின்னூட்டம் இடுபவர்கள்..இத்ன் முதல் பகுதியையும் படித்துவிடவும்)

Friday, September 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 99 ஆர்.சுந்தரராஜன்




ஆர்.சுந்தரராஜன், ஒரு நடிகர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார்

இளையராஜாவுடன் இணைந்து காலத்தால் அழிக்கமுடியா பல இனிமையான பாடல்களுடன் பல படங்களை இயக்கியுள்ளார்.

ஜெயஷங்கர் நடிக்க 1977ல் அன்று சிந்திய ரத்தம் படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து 1982ல் பயணங்கள் முடிவதில்லை என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார்.அதே ஆண்டு அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை என்ற படமும் வந்தது

நடிகர் மோகன் நடிக்க பல வெற்றிப்படங்கள் இவர் இயக்கமே!

1983ல் சரணாலயம், தூங்காத கண்ணின்று ஒன்று.

1984ல் நான் பாடும் பாடல்,விஜய்காந்த நடிப்பில் வைதேகி காத்திருந்தாள்

1985ல் குங்குமச்சிமிழ்,சுகமான ராகங்கள்

1986ல் விஜய்காந்த்  ராதா நடிப்பில் அம்மன் கோயில் கிழக்காலே ஆகிய படங்களும், அதே ஆண்டு, எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த மெல்லத் திறந்தது கதவு. மற்றும் தழுவாத கைகள் ஆகிய படங்களை இயக்கினார்

1988ல் என் நிலவு பாடுது, கேள்வியும் நீயே பதிலும் நீயே

1989ல் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க ராஜாதி ராஜா

1990ல் எங்கிட்ட மோதாதே, தாலாட்டுப்பாடவா

1991ல் ஒயிலாட்டம், சாமி போட்ட முடிச்சு

1992ல் திருமதி பழனிசாமி (சத்தியராஜ்)

1994ல் என் ஆசை மச்சான்

1995ல் காந்தி பிறந்த மண்,சீதனம்

1997ல் காலமெல்லாம் காத்திருப்பேன், கோபுர தீபம்

2006ல் உயிரெழுத்து

2013 சித்திரையில் நிலாச்சோறு

அகிய படங்களை இயக்கியுள்ளார்...

கவுண்டமணி, செந்தில் இருவரும் சேர்ந்து நகைச்சுவை விருந்து நமக்கு அநேக படங்களில் அளித்துள்ளனர்.அவர்களை முதன் முதலாய் இணைத்தவர் இவரே

தவிர, 90 படங்களுக்கு மேல் இவர் இதுவரை நடித்துள்ளது சிறப்பு.

Thursday, September 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் சில நொறுக்ஸ்


23 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள தயாரிப்பாளர் தாணு இயக்கிய ஒரே படம் "புதுபாடகன்"

பிரபல பத்தயாரிப்பாளராய் திகழ்ந்த ஜி என் வேலுமணி இயக்கத்தில் வந்தவை இரு படங்கள்.1970ல் நம்ம வீட்டு தெய்வம், 1972ல் அன்னை அபிராமி

வி.சி.சுப்பராமன் என்பவர் சதாரம், மேனகா ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார்

பிரபல எழுத்தாளர் இயக்கத்தி, பாக்கியராஜ் இசையில் வந்த படம் இது நம்ம ஆளு

80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராய் இருந்த அஷோக்குமார் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு உட்பட 7 படங்களை இயக்கியுள்லார்,அவர் இயக்கியுள்ள தமிழ்ப்படம் அன்று பெய்த மழையில்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படங்கள் மின்சாரகனவு,கண்டு கொண்டேன்

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் இயக்கியுள்ள தமிழ்ப் படங்கள் நாம் பிறந்த மண்,இரு வீடுகள்,துலாபாரம்,எங்களுக்கும் காலம் வரும்

பிரபல நாடக ஆசிரியர் வெங்கட் இயக்கியுள்ள படங்கள், வீட்ல எலி வெளியில புலி,இவர்கள் வருங்காலத் தூண்கள்,நிச்சயம்,அந்த சில நாட்கள், சூரப்புலி

10 படங்களுக்கு மேலாக திரைக்கதை, வசனம் எழுதியுள்ள வேதம்புதிது கன்ணன் இயக்கியுள்ள படம் அமிர்தம்.இப்படத்தில் பவதாரிணியை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார்

கமல் ஹாசன் இயக்கியுள்ள படங்கள் சாக்க்ஷி 420,ஹேராம்,விருமாண்டி மற்றும் விஸ்வரூபம்

சக்தி நாடக சபையிலும், சிவாஜி நாடக மன்றத்திலும் இருந்த எஸ் ஏ கண்ணன் சிவாஜி நாடக மன்ற நாடகங்களான வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் நாடகங்களை இயக்கினார்.சிவாஜி நடிக்க சத்யம் திரைப்படத்தையும், தினிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

பிரதாப் போத்தன் 1985ல் மீண்டும் ஒரு காதல் கதை,88ல் ஜீவா, 89ல் கமல் நடிக்க "வெற்றி விழா",மை டியர் மார்த்தாண்டன்,மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

பிரபல கன்னடப்பட இயக்குநர் எஸ்.ஆர்.புட்டண்ணா தமிழில், டீச்சரம்மா,சுடரும் சூறாவளியும்,இருளும் ஒளியும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், அல்லி, மணிமண்டபம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கியுள்ளார் 

Wednesday, September 21, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 98 ஆர்.வி.உதயகுமார்



உதயகுமார்...

விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தவர்

ஆபாவாணனின் ஊமைவிழிகள் படத்திற்கு  துணை இயக்குநராய் இருந்தவர்,உரிமைகீதம் இவரை இயக்குநராக ஆக்கியது

பின், பிரபல அரசியல்வாதியும், படடத்தயாரிப்பாளரும் ஆன ஆர் எம் வீரப்பன் "புதிய வானம்" என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு அளித்தார்,இதில், சிவாஜி,சத்யராஜ் ஆகியோர் நடித்தனர்

கிழக்கு வாசல், சிங்கார வேலன்,எஜமான், சின்னகவுண்டர் என வெற்றிப்படங்கள் தொடர்ந்தன

ஆனால் பொன்னுமணி படத்திற்குப் பின் இவருக்கு இறங்கு முகமே.

இவர் தயாரித்த படங்களுக்கு பாடலாசிரியராகவும் இவர் இருந்துள்ளார் எனபது தனிச்சிறப்பாகும்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1988ல் உரிமை கீதம்
1988ல் புதிய வானம்
1990ல் உறுதிமொழி
1990 கிழக்குவாசல் (கார்த்திக், )
1992 ல் சின்னகவுண்டர் (விஜய்காந்த், சுகன்யா..)(தொப்புள்,பம்பரம் ஞாபகம் வருகிறதா)
1992ல் சிங்கார வேலன் (கமல்,குஷ்பூ)
1993ல் எஜமான் (ரஜினி)
1993ல் பொன்னுமணி
1994ல் ராஜகுமாரன்
1994ல் தலைவரின் அருள் உள்ளம்
1995 ல்சேரன் இரும்பொறையின் தமிழ் காதல் (சரத்குமார்)
1995ல்நந்தவனத் தெரு
1996ல் சுபாஷ்
2005ல் கற்க கசடற

திறமையான ஒரு இயக்குநர்.இவரிடமிருந்து தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்..ஏமாற்றமே

Tuesday, September 20, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 97 பார்த்திபன்

                   

1957ஆம் ஆண்டு பிறந்தவர் பார்த்திபன்

50 படங்கள் வரை இவர் பங்கு பெற்றுள்ளார்.நடிகராகவோ, இயக்குநராகவோ இவ்ரது பணி , பாராட்டும்படியாகவே இருந்துள்ளது.

வடிவேலுவும் இவரும் சேர்ந்தால் கண்டிப்பாக ரசிகனுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலிதான்

ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பு ஒவ்வொரு விதத்தில் பாராட்டும்படியே அமைந்துள்ளது சிறப்பு

புதியபாதை,அழகி,பாரதி கண்ணம்மா,குடைக்குள் மழை,ஆயிரத்தில் ஒருவன்,ஹவுஸ்ஃபுல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்

பாக்கியராஜிடம் உதவி இயக்குநராய் இருந்தவர்

இவரது முதல்படமான புதியபாதை 1989ல் வெளியாகி சிறந்தத் தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது பெற்றுள்ளது.

1999ல் இவரது ஹவுஸ்ஃபுல் தேசிய விருது பெற்றது

புதியபாதை படத்திற்கு முன் ராணுவ வீரன்,தாவணிக்கனவுகள்,அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்-

1989ல் புதியபாதை
1990ல் பொண்டாட்டி தேவை
1992ல் சுகுமான சுமைகள்
1993ல் உள்ளே வெளியே
1994ல் சரிகமபதநி
1995ல்புள்ளக்குட்டிக்காரன்
1999ல் ஹவுஸ்ஃபுல்
2002ல் இவன்
2004ல் குடைக்குள் மழை
2006ல் பச்சைக்குதிரை
2011ல் வித்தகன்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்