Tuesday, September 15, 2015

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 6 - ப.நீலகண்டன்



பி.நீலகண்டன் 1916ல் பிறந்தவர்.மேடை நாடகங்களை எழுதி வந்த இவருக்கு ..இவரது நாடகமான நாம் இருவர் திரைப்படம் திரையுலகப் பிரவேசமாக்கியது.பின் வேதாள உலகம் படத்திற்கு 1948 ஆம் ஆண்டு வசனங்களை எழுதினார்.

1951ல் தான் இவரால் இயக்குநராக ஆக முடிந்தது.சி.என்.அண்ணாதுரை கதை வசனம் எழுத ஓரிரவு படம் இவரை இயக்குனராக்கியது.

பின் எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களை இயக்கினார்.

அவற்றில் முக்கியமானவை நீதிக்கு தலை வணங்கு,நேற்று இன்று நாளை,ராமன் தேடிய சீதை,சங்கே முழங்கு,குமரி கோட்டம்,நீரும் நெருப்பும்,ஒரு தாய் மக்கள்,என் அண்ணன்,மாட்டுக்கார வேலன்,கணவன்,காவல்காரன் ,கொடுத்து வைத்தவள்,திருடாதே,சக்கரவர்த்தி திருமகள் ஆகியவை.

இதைத் தவிர்த்து கலைஞர் கதை வசனத்தில் வெளியான பூமாலை,பூம்புகார் ஆகிய படங்களின் இயக்குனர் இவர்.

சிவாஜியை வைத்து முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்

Sunday, September 13, 2015

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்- 5 ஏ.வி.மெய்யப்பன்


பிறப்பு - 28-7-1907 (காரைக்குடி)
இறப்பு- 12-8-79



அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-7-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன்
என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.

சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.

காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.

பின் இன்று மந்தைவெளியில் ..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.

பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.

1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.

அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,

குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.

ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.

பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.

ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.

Saturday, September 12, 2015

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் - 4 எல்.வி.பிரசாத்


 எல்.வி.பிரசாத்
பிறப்பு- 17-1-2008
இறப்பு-22-6-1994
மங்கையர்திலகம் படத்திற்கு தெசியவிருது
தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவர்

திரைப்படங்கள் என்றால் கண்டிப்பாக எல்.வி.பிரசாத்தின் பங்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடியாது.17-1-1908ல் ஆந்திராவில் பிறந்த அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் தான் எல்.வி.பிரசாத் என்னும் நடிகர்,தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்..இவர் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

நடிக்கும் ஆசையோடு 1930ஆம் ஆண்டு பம்பாய் சென்றவர்க்கு ,,அந்த ஆசை எளிதில் நிறைவேறவில்லை.Star of the East என்னும் மௌனப் படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது.பின்னர் 1931ல் வெளியான ஆலம் ஆரா என்னும் முதல் பேசும் படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

பின்னர் காளிதாஸ், பக்த பிரகலாதா ஆகிய படங்களில் நடித்தவருக்கு அலிஷா என்னும் ஹிந்திப் பட இயக்குநரிடம் உதவி இயக்குநர் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது.எட்டு ஆண்டு காலம் உதவி இயக்குநர் ஆகியும் , ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1949ல் இயக்குநர் ஆகும் ஆசை நிறைவேறியது.'மனதேசம்' என்னும் தெலுங்கு படத்தை இயக்கிநார்.என்.டி.ராமராவ் இப்படத்தில் தான் அறிமுகமானார்.1950ல் விஜயா பிக்சர்ஸ் சார்பில் 'சாவுகாடு' படம் இயக்கினார்...

பின்னர் சம்சாரம், மனோகரா (தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),ராணி (ஹிந்தி) ஆகிய படங்கள் இவரை பிரபல இயக்குநராக ஆக்கின.

1956ல் பிரசாத் ஸ்டூடியோ உருவானது..பின்னர் சில காலம் நோய்வாய்ப் பட்டார்.

பின்னர் 1956ல் பிரசாத் புரடக்சன்ஸ் உருவாக்கினார்.அவர் தயாரிப்பில் மிலன்,கிலோனா,சசுரால்,ஏக் துஜே கேலியே ஆகிய மாபெரும் வெற்றி படங்கள் உருவாயின.

நடிகர்,உதவி இயக்குனர்,தயாரிப்பாளராய் இருந்ததுடன்..இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மும்மொழியிலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..மனோகரா,மிஸ்ஸியம்மா,கல்யாணம் பண்ணிப் பார்,பூங்கோதை,கடன் வாங்கிக் கல்யாணம்,மிஸ் மேரி,மங்கையர் திலகம்,தாயில்லாப் பிள்ளை(கலைஞர்..கதை,வசனம்),இருவர் உள்ளம் (கலைஞர்..கதை,வசனம்)ஆகியவை.

மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 35 படங்களை இயக்கியுள்ளார்.

எல்.வி.பிரசாத் நடிப்பை பார்க்காதவர்களுக்கு ஒரு நினைவூட்டல்..

ராஜ பார்வை படத்தில்..கமல்,மாதவியின் காதலுக்கு உதவும் தாத்தா ஞாபகம் இருக்கிறதா...அந்த பாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.

ஹைதராபாத்தில் கண் மருத்துவ மனைக்கு பல ஏக்கர்கள் இடத்தை அளித்தவர் இவர்.

இந்திய அரசின்'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றவர்.

இவர் 1994ல் அமரர் ஆனார்.

Monday, September 7, 2015

தமிழ் திரைப்பட இயக்குநர்கள்-3 எஸ்.எஸ்.வாசன்



            எஸ் எஸ் வாசன்
  பிறப்பு- 4-1-1904 (திருத்துரைபூண்டி)
 மறைவு- 26-8-69


சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் மார்ச் 10 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.இவரே பின்னாளில் பெரும் புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

1928ல் ஆனந்தவிகடனை வாங்கி நடத்திவந்த இவர்..நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எழுத்தாளராய் திகழ்ந்தார்.இவரது நாவலான 'சதி லீலாவதி' யை மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.1941ல் அந்த நிறுவனம் தீக்கிறையானது.அதனால் நஷ்டப்பட்ட அந்நிறுவனத்தை வாங்கி மீண்டும் கட்டி அங்கு 'ஜெமினி ஸ்டூடியோ' வை நிறுவினார் வாசன்.பின் முழு நேர வெற்றி படத் தயாரிப்பாளர் ஆனார்.1969ல் இந்திய அரசு 'பத்மபூஷன்' தேசிய விருதை வழங்கி அவரை கவுரவித்தது.தவிர்த்து தமிழ்த் திரையுலகின் 'சிசில் பி டிமிலி' என மக்களால் போற்றப்பட்டார்.Film federation of india வின் தலைவராய் இருந்தார்.ராஜ்ய சபா எம்.பி, ஆகவும் இருந்தார்.ஜெமினி நிறுவனம் மூலம் அவரது காலத்தில் 30 படங்களுக்கு மேல் வந்துள்ளது.அவற்றைப் பற்றி சிறு குறிப்பு.

1948ல் சந்திரலேகா..ஹிந்தி,தமிழ் என இரு மொழிகளிலும் வாசன் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.அந்த காலத்திலேயே இப்படம் 600 பிரிண்ட்கள் போடப்பட்டது.முதல் முறையாக ஒரு
திரைப்படம் நாடு முழுதும் வெற்றி பெற்ற பெருமையை இப்படம் பெற்றது.இந்த படத்தில் டிரம் நடனம் இன்றும் பேசப்படுகிறது.

1951ல் சன்சார், சம்சாரம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கினார்.இவர் தயாரித்து இயக்கிய மற்ற படங்கள்..

மிஸ்டர் சம்பத் (1952) (ஹிந்தி)

பகுத் தின் ஹுயே (1954)

இன்ஸானியத் (1955) ஹிந்தி மற்றும் தமிழ்

வஞ்சிக் கோட்டை வாலிபன் (1958) ஜெமினி,பத்மினி,வைஜெயந்தி மாலா,வீரப்பா ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி படம்.நடனப் போட்டி இன்றும் மறக்க முடியாமல்'சபாஷ் சரியான போட்டி' என்று சொல்ல வைக்கிறது.

ராஜ் திலக் (1958) வஞ்சிக் கோட்டை..ஹிந்தியில்

பைகம் (1959)ல் ஹிந்தி.. 1960ல் சிவாஜி, வைஜெயந்தி நடித்து வந்த 'இரும்புத்திரை"

கரானா (1961)

தீன் பஹுருன்னியான் (ஹிந்தி)

ஸ்த்ரஞ் (1969)

தவிர்த்து வாசன் தன் தயாரிப்பில் மற்ற இயக்குநர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்துள்ளார்.

1935ல் முருகதாசா இயக்கத்தில் கே பி சுந்தராம்பாள் நடித்த நந்தனார் படத்தைத் தயாரித்தார்.இதற்காக கே பி எஸ் பெற்ற சன்மானம் ஒரு லட்சம் ரூபாய்.அந்நாளில் இது பெரிய தொகை.அவ்வளவு அதிகம் ஊதியம் பெற்ற முதல் நடிகை இவர்

1947ல் மிஸ் .மாலினி இப்படத்தில் தான் ஜெமினி கணேசன் அறிமுகம்.

1953ல்ஔவையார்  கே பி சுந்தராம்பாள் நடிக்க வெளிவந்தது. இரு படங்களையும் 'கொத்தமங்கலம்' சுப்பு இயக்கினார்..தவிர்த்து இரும்புத்திரையின் ஹிந்தி வடிவை ராமானந்த் சாகர் இயக்கினார்.


1968ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிக்க எம்.ஜி.ஆரின்.125 ஆவது படமான ஒளிவிளக்கு படத்தை சாணக்கியா வை இயக்கச் செய்தார் வாசன்.

வாசன் தயாரிப்பில் வந்த மற்ற வெற்றிபடங்கள், மங்கம்மா சபதம், கண்ணம்மா என் காதலி,வள்ளியின் செல்வன்,மூன்று பிள்ளைகள் அபூர்வ சகோதரர்கள் ஆகியவை.

வாசன் 1969 ஆம் ஆண்டு அமரரானார்.

Sunday, September 6, 2015

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 2 கே.சுப்பிரமணியம்



கே சுப்ரமணியம்
பிறந்த தேதி-20-4-1904 (பாபநாசம்)
மறைவு- 7-4-1971


திரைப்படங்கள் பேச ஆரம்பித்து 89 ஆண்டுகள் ஆகின்றன.இக்கால கட்டங்களில் பல இயக்குநர்கள்..வந்து சில படங்களைக் கொடுத்து சென்றுள்ளனர்.அவர்களில் நம்மால் மறக்கமுடியா பல இயக்குநர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர்.

1904 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பிரமணியம்.வக்கீலான இவர் திரைக்கதை,தயாரிப்பு, இயக்கம் என மூன்று நிலையில் கிட்டத்தட்ட 20 படங்களை இயக்கியுள்ளார்.

அந்த நாட்களிலேயே பல சமூக சீர்த்திருத்தங்களை தன் படங்களில் சொன்னவர்.

1934ல் எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து பவளக்கொடி என்ற படத்தை இயக்கினார்.1936ல் நவீன சாரங்கதாரா..பின் பக்த குசேலா ஆகிய படங்களை இயக்கினார்.

கச்சை ட்ஹேவயாணி என்ற படம் மூலம் டி ஆர் ராஜகுமாரியை அறிமுகப்படுத்தினார்.

1937ல் பாலயோகினி என்ற படத்தை இயக்கினார்.பிராமண குடும்பத்தினரால் துரத்தப்பட்ட மகளும்,அவளது அத்தையும்..அன்று சேரி என்றழைக்கப்பட்ட குடியிருப்பில்..அம்மக்களுடன் தஞ்சம் அடைந்து வசிக்கிறார்கள்.அந்தக் காலத்தில் மிகவும் தைரியமாக எடுக்கப்பட்ட படம்.

1938ல் சேவாசதனம்..வயதானவர்கள்..குழந்தை பருவத்தைக் கூட தாண்டாத பெண்களை மணமுடிப்பதை கண்டித்த படம்.நம் சம்பிரதாயங்கள் குறுக்கே நிற்குமேயாயின்...சாதியே வேண்டாம்..என நாயகன் தான் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்த படம்.இப்பட நாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார்

1939ல் வந்த படம் கல்கியின் தியாகபூமி.பிராமண சமூகத்தின் குறைபாட்டை சொன்ன படம்.இந்த படம் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டு பின் வெளியான படம்.

1940ல் வெளிவந்த 'பக்த சேதா' என்ற படம்..தீண்டாமையைச் சொன்ன படம்.

பழமையில் ஊறிய பிராமண சமுகம் இவரை தங்கள் ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர்.

தமிழ்த் திரைப் படங்களின் தந்தை என போற்றப்படும் இவரை பிராமண பெரியார் எனலாம்.

நடிகை எஸ் டி சுப்புலக்ஷ்மியை மணந்தார்.

எஸ்.வீ.ரமணன்,எஸ்.கிருஷ்ணசாமி,பத்மா சுப்ரமணியம்,அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் இவருக்கு பிறந்தவர்கள்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -1 எல்லிஸ் ஆர்.டங்கன்


            எல்லிஸ் ஆர் டங்கன்
              பிறந்த தேதி-  11-5-1909ஓஹாயோ (அமெரிக்கா)
           மறைவு-             1-12-2001 (மேற்கு வர்ஜீனியா)

பொன்முடி படத்தில் ஒரு காதல் காட்சியை இயக்குகிறார் (புகைப்படம்-நன்றி தி ஹிந்து)

11-5-1909ல் பிறந்த எல்லிஸ் ஆர்.டங்கன் ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த அமெரிக்கன் ஆவார்.1936 ஆண்டு முதல் 1950 வரை இந்தியாவில் பல தமிழ், ஹிந்தி படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா, பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை திரைக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு..

நந்தனார் என்னும் தமிழ் படத்தில்..இவர் பங்கு இருந்தாலும்..இவர் இயக்கிய முதல் படம்..எஸ்.எஸ்.வாசனின் கதையான சதி லீலாவதி ஆகும்.இது எம்.ஜி.ஆரின் முதல் படம்.1936ல் இப்படம் வெளிவந்தது.

பின், சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி ஆகிய படங்களை இயக்கினார்.

சகுந்தலா, மீரா ஆகிய படங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். .மீரா படத்தை ஹிந்தியிலும் இயக்கினார்

பொன்முடி என்ற படம்..புரட்சிக் கவிஞரின் கதை ஆகும்.

இவர் இயக்கிய கடைசி படம் கலைஞரின் மந்திரி குமாரி ஆகும்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில்..கண்டிப்பாக இவருக்கு ஒரு இடம் உண்டு.இந்தியாவில் இருந்த 15 ஆண்டுகளில் 17 படங்களை இயக்கியுள்ளார்.


1950க்குப் பின் அமெரிக்கா திரும்பியவர் 2001ல் அமரர் ஆனார்.

அந்நாளில் தமிழ்த் திரையில் அமெரிக்க கலாசாரத்தை பரப்பியதாகவும்..ஊடகங்கள் இவரை குறை சொன்னதுண்டு.

ஆனால்..திரைப் படங்களில் காபரே நடனத்தை அறிமுகப்படுத்தியது இவரே ஆவார்.