Monday, September 7, 2015

தமிழ் திரைப்பட இயக்குநர்கள்-3 எஸ்.எஸ்.வாசன்



            எஸ் எஸ் வாசன்
  பிறப்பு- 4-1-1904 (திருத்துரைபூண்டி)
 மறைவு- 26-8-69


சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் மார்ச் 10 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.இவரே பின்னாளில் பெரும் புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

1928ல் ஆனந்தவிகடனை வாங்கி நடத்திவந்த இவர்..நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எழுத்தாளராய் திகழ்ந்தார்.இவரது நாவலான 'சதி லீலாவதி' யை மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.1941ல் அந்த நிறுவனம் தீக்கிறையானது.அதனால் நஷ்டப்பட்ட அந்நிறுவனத்தை வாங்கி மீண்டும் கட்டி அங்கு 'ஜெமினி ஸ்டூடியோ' வை நிறுவினார் வாசன்.பின் முழு நேர வெற்றி படத் தயாரிப்பாளர் ஆனார்.1969ல் இந்திய அரசு 'பத்மபூஷன்' தேசிய விருதை வழங்கி அவரை கவுரவித்தது.தவிர்த்து தமிழ்த் திரையுலகின் 'சிசில் பி டிமிலி' என மக்களால் போற்றப்பட்டார்.Film federation of india வின் தலைவராய் இருந்தார்.ராஜ்ய சபா எம்.பி, ஆகவும் இருந்தார்.ஜெமினி நிறுவனம் மூலம் அவரது காலத்தில் 30 படங்களுக்கு மேல் வந்துள்ளது.அவற்றைப் பற்றி சிறு குறிப்பு.

1948ல் சந்திரலேகா..ஹிந்தி,தமிழ் என இரு மொழிகளிலும் வாசன் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.அந்த காலத்திலேயே இப்படம் 600 பிரிண்ட்கள் போடப்பட்டது.முதல் முறையாக ஒரு
திரைப்படம் நாடு முழுதும் வெற்றி பெற்ற பெருமையை இப்படம் பெற்றது.இந்த படத்தில் டிரம் நடனம் இன்றும் பேசப்படுகிறது.

1951ல் சன்சார், சம்சாரம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கினார்.இவர் தயாரித்து இயக்கிய மற்ற படங்கள்..

மிஸ்டர் சம்பத் (1952) (ஹிந்தி)

பகுத் தின் ஹுயே (1954)

இன்ஸானியத் (1955) ஹிந்தி மற்றும் தமிழ்

வஞ்சிக் கோட்டை வாலிபன் (1958) ஜெமினி,பத்மினி,வைஜெயந்தி மாலா,வீரப்பா ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி படம்.நடனப் போட்டி இன்றும் மறக்க முடியாமல்'சபாஷ் சரியான போட்டி' என்று சொல்ல வைக்கிறது.

ராஜ் திலக் (1958) வஞ்சிக் கோட்டை..ஹிந்தியில்

பைகம் (1959)ல் ஹிந்தி.. 1960ல் சிவாஜி, வைஜெயந்தி நடித்து வந்த 'இரும்புத்திரை"

கரானா (1961)

தீன் பஹுருன்னியான் (ஹிந்தி)

ஸ்த்ரஞ் (1969)

தவிர்த்து வாசன் தன் தயாரிப்பில் மற்ற இயக்குநர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்துள்ளார்.

1935ல் முருகதாசா இயக்கத்தில் கே பி சுந்தராம்பாள் நடித்த நந்தனார் படத்தைத் தயாரித்தார்.இதற்காக கே பி எஸ் பெற்ற சன்மானம் ஒரு லட்சம் ரூபாய்.அந்நாளில் இது பெரிய தொகை.அவ்வளவு அதிகம் ஊதியம் பெற்ற முதல் நடிகை இவர்

1947ல் மிஸ் .மாலினி இப்படத்தில் தான் ஜெமினி கணேசன் அறிமுகம்.

1953ல்ஔவையார்  கே பி சுந்தராம்பாள் நடிக்க வெளிவந்தது. இரு படங்களையும் 'கொத்தமங்கலம்' சுப்பு இயக்கினார்..தவிர்த்து இரும்புத்திரையின் ஹிந்தி வடிவை ராமானந்த் சாகர் இயக்கினார்.


1968ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிக்க எம்.ஜி.ஆரின்.125 ஆவது படமான ஒளிவிளக்கு படத்தை சாணக்கியா வை இயக்கச் செய்தார் வாசன்.

வாசன் தயாரிப்பில் வந்த மற்ற வெற்றிபடங்கள், மங்கம்மா சபதம், கண்ணம்மா என் காதலி,வள்ளியின் செல்வன்,மூன்று பிள்ளைகள் அபூர்வ சகோதரர்கள் ஆகியவை.

வாசன் 1969 ஆம் ஆண்டு அமரரானார்.

No comments:

Post a Comment