Monday, August 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 11 டி.ஆர்.சுந்தரம்

               



டி.ஆர்.சுந்தரம்

1907ல் திருச்செங்கோட்டில் பிறந்தவர் சுந்தரம்.நெசவுத் தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை அறிய இவரது தந்தை இவரை பிரிட்டன் அனுப்பினார்.அப்ப்து ஆங்கில பிரபு ஒருவர் இவருக்கு நண்பன் ஆனார்.அவரது மகள் கிளாடிஸ் மீது இவருக்கு காதல் உண்டாக அவரை மணந்தார்.

1934ல் சேலத்தில் ஏஞ்சல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒன்று சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.அதில் சுந்தரமும் பங்குதாரர் ஆனார்.

ஐந்து பேசும் படங்களை அந்நிறுவனம் தயாரித்தது.பின், சுந்தரம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பாதையில் 1936ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.1937ல் முதல் படமாக சதி அகல்யாவை எடுத்தார்.

பின், ஸ்டண்ட் படங்களை எடுக்க விரும்பிய சுந்தரம், ஜெர்மனியிலிருந்து, வாக்கர், பேய்ஸ் என்ற இரு ஒளிப்பதிவாளர்களை வரவழைத்து முதல் ஸ்டண்ட் படமான மாயா மாயவனை எடுத்தார்.

பி.யூ.சின்னப்பாவை வைத்து உத்த்ம புத்திரன் படத்தைத் தயாரித்து இயக்கினார்.சின்னப்பாவிற்கு இப்படத்தில் இரட்டை வேடங்கள்.'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்ற பாரதியார் பாடலை அவரை பாட வைத்தார்.பாரதியார் பாடல் இடம் பெற்ற முதல் பட இதுவே

பின் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணியம் கதையைத் திரைப்படமாக்கினார்.இதில் சின்னப்பாவுடன் டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார்.
ஆறு காமிராக்களை வைத்து போர்க் காட்சிகளை பிரம்மாண்டமாய் எடுத்தார்.

பின் பர்மா ரமணி என்ற படம் வந்தது.நாடு சுதந்திரம் பெற்ற பின், இது ஆங்கிலேயரை ஆதரிக்கும் படம் என இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.

கலிகால மைனர் (காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், சி.டி.ராஜகாந்தம் நடித்தது)
பள்ளிநாயகம்- என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடித்தது)
சூரப்புலி (காளி என்.ரத்தினம், ராஜகாந்தம் நடித்தது)

மேற்கண்ட மூன்று நகைச்சுவைக் கதைகளை சௌசௌ என்ற பெயரில் ஒரே திரைப்படமாக்கினார்.

1047ல்  ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி படத்தை எடுத்தார்.மாபெரும் வெற்றி/

சுலோச்சனா என்று இராமாயணக் கதையை தானே கதாநாயகனாக நடித்து இயக்கினார்.படம் தோல்வி படமாக அமைந்தது.

கண்ணதாசன் முத்ன் முதலாய் பாட்டு எழுதியது இவர்கள் படத்தில்தான்

அஞ்சலி தேவி, எம்.ஆர்.ராதா போன்றோரை அறிமுகப்படுத்தியவர் இவர்

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு,கன்னடம்,இந்தி,ஆங்கிலம் ,சிங்களம் ஆகிய மொழிகளில் படமெடுத்தார் சுந்தரம்.
அலிபாபாவும் 40 திருடர்களும், பொன்முடி(பாரதிதாசன்), மந்திரிகுமாரி,த்கம்பர சாமியார் என நீண்ட பட்டியல் இவருடையது.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "திகம்பர சாமியார்" நாவலை இயக்கி, தயாரித்த இவர், அப்படத்தில் எம்.என்.நம்பியாரை 10 வேடங்களில் நடிக்க வைத்தார்

தான் தயாரித்தாலும், பொன்முடி, மந்திரிகுமாரி படங்களை எல்லிஸ் டங்கனை வைத்து இயக்க வைத்தார்.

மந்திரிகுமாரி படத்திற்காக கலைஞர் கருணாநிதி மாத சம்பளமாக 500 பெற்றார்.இப்படத்தில்.ஜி.ஆரும் நடித்தார் தளபதி வேடத்தில்

கொஞ்சும் குமரி என்ற படத்தில் மனோரமாவை கதாநாயகி ஆக்கினார்

1937 முதல் 198 2 வரை இவர்கள் தயாரித்த படம் 136

இதில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தது 98 இயக்கியது 55 படங்கள்

1937ல் தொடங்கி சதிலீலாவதியிலிருந்து 1963ல் யாருக்கு சொந்தம் வரை 52 தமிழ்,7 சிங்களம், 8 மலையாளம் கன்னடம், தெலுங்கு,இந்தி, ஆங்கிலம்
என கொடிகட்டி பறந்தார் டி.ஆர்.சுந்தரம்.98 படங்கள் தயாரித்தார்

இவர் மறைவிற்கு பின் இவரது மகன் ராமசுந்தரம் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு அவர்கள் தயாரித்த பட எண்ணிக்கையை 136க்குக் கொண்டுச் சென்றார்

No comments:

Post a Comment