Monday, October 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 157 இ.ராமதாஸ்


 கதை   வசனகர்த்தா, நடிகர், இயக்குநர்

ராமதாஸ்...வசனத்தில் பல படங்கள் வந்ததுண்டு.ஆனாலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்  மூலம் இயக்குநர் ஆனார்.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்-

ஆயிரம் பூக்கம் மலரட்டும் 1986
ராஜா ராஜாதான்  (ராமராஜன்) 1989

நெஞ்சமுண்டு நேற்மையுண்டு (1991)
ராவணன் (1994)
வாழ்க ஜனநாயகம் (1995)

இவர் படங்களில் நடித்தும் வருகிறார்.
யுத்தம் செய்,காக்கி சட்டை,விசாரணை,தர்மதுரை, அட்டைகத்தி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் வசனத்தால், பல தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றி பெற்றன எனலாம்.

ஆனாலும், இவர் முழு திறமையை திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது

Sunday, October 23, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 156 எம்.பாஸ்கர்



1935ஆம் ஆண்டு பிறந்தவர் பாஸ்கர்

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளராய் இருந்தார்.பின் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடமும்,சின்னப்ப தேவரிடமும் பணியாற்றினார்

ஹாலிவுட் கம்பெனியான 20யத் ஃபாக்ஸ் நிறுவனம் கோவா வில் படபிடிப்பை நடத்திய போது அவர்களிடமும் பணிபுரிந்தார்

1978ல் ரஜினி நடித்த பைரவி படம் மூலம் இயக்குநர் ஆனார்.ஆஸ்கார் மூவீஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரித்தார்

2013ல் அமரர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்..இன்னமும் ஒரு மீரா, மற்றும்..

1980ல் சூலம்
1982ல் பக்கத்து வீட்டு ரோஜா
1982ல் தீர்ப்புகள் திருத்தப்படலாம்
1983ல் தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
1985பௌர்ணமி அலைகள்
1986ல் பன்னீர் நதிகள்
1989ல் சட்டத்தின் திறப்பு விழா
1992ல் சக்ரவர்த்தி
1995ல் விஷ்ணு (விஜய்)
2004 ஒன்பது ரூபா நோட்டு ( நடுவில் படபிடிப்பு நின்று போனது.பின்னர்   தங்கர் பச்சான் இயக்கத்தில் படம் வந்தது)

2011ல் ஊதாரி

Saturday, October 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 155 செந்தில்நாதன்



1957ல் பிறந்தவர் செந்தில்நாதன்

திரைக்கதை ஆசிரியர்,தயாரிப்பாளர்,இயக்குநர்

இயக்குநர் ஜம்புலிங்கத்தின் மகன் இவர்.
இயக்குநர் பாஸ்கரிடம் உதவியாளராய் இ ருந்தார்.பின்னர் எஸ் ஏ சந்திரசேகரிடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநர்.வி.அழகப்பனிடம் 3 படங்களுக்கு இயக்குநர்.1988ல் விஜய்காந்த் நடித்த பூந்தோட்டக் காவல்காரன் படம் மூலம் இயக்குநர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1988ல் பூந்தோட்டக் காவல்காரன்
               பட்டிக்காட்டுத் தம்பி
1989 படிச்ச புள்ள
           முந்தானை சபதம்
          பெண் புத்தி பின் புத்தி
1990 பாட்டாளி மகன்
        பெரிய இடத்துப் பிள்ளை
         பாலைவனப் பறவைகள்(சரத்)
1991 நாட்டைத் திருடாதே
         இரவு சூரியன்
         தங்கமான தங்கச்சி (சரத்)
        காவல் நிலையம் (சரத்)
1992ல் இளவரசன் (சரத்)
             இதுதான்டா சட்டம்(சரத்)
              நட்சத்திர நாயகன் (சரத்)
              சின்ன பூவை கிள்ளாதே
               போக்கிரி தம்பி
           பாலைவன ராகங்கள் (எஸ் பி பி)
          தெய்வக்குழந்தை
1995 என் பொண்டாட்டி நல்லவ
1995
ஆவது பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
1997 தம்பிதுரை
1998 ஆசைதம்பி
2002 ஜெயா
2009 உன்னை நான்

(தவிர்த்து கல்கி,ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்)

இவரது தந்தை ஜம்புலிங்கத்தின் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1967 நாம் மூவர் (ஜெய்ஷங்கர்)
        உயிர் மேல் ஆசை (முத்துராமன்)
1967 சபாஷ் தம்பி
1968 பணக்காரப் பிள்ளை
1968 நாலும் தெரிந்தவன்
1972 திருநீலகண்டன்
1972 பதிலுக்கு பதில்    

Wednesday, October 19, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 154 சமுத்திரக்கனி



நடிகர், கதாசிரியர்,இயக்குநர்
சமுத்திரக்கனி

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

2003 உன்னை சரணடைந்தால்
2004 நெறஞ்ச மனசு
          நாலு
2009 நாடோடிகள்
2011 போராளி
2014 நிமிர்ந்து நில்

இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

விசாரணையில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது

(ஆடுகளத்தில் கிஷோருக்கும், 2012ல் வெளியான தோனி படத்தில் முரளி ஷர்மாவிற்கும் குரல் கொடுத்துள்ளார்)
--------------------------------------------------------------------------------------------------------------------------
                               
இத்துடன் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தொடர் முடிவிற்கு வருகிறது.

இத்தொடருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

இன்னமும் எழுத வேண்டிய இளம் இயக்குநர்கள் வரிசை நூறுக்கு மேல் உள்ளது.ஆனால்..அவர்கள் கொடுத்துள்ள படங்கள் சிலவே

(உதாரணத்திற்கு...மணிகண்டன்,சரவணன்,விஜய்மில்டன்,பாண்டிராஜ்,விக்னேஷ் சிவன்,கார்த்திக் சுப்பாரஜ்,பாலாஜி சக்திவேல்,பாலாஜிதரணிதரன், பாலாஜி மோகன், அட்லி . மிஷ்கின், வின்சென்ட் செல்வா. சிம்புதேவன்,ராஜேஷ்,வசந்தபாலன்,வெங்கட்பிரபு,.................நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்)

இவர்கள் திரையுலகில் பல ஆண்டுகள் வலம் வர வேண்டியவர்கள்.அவர்கள் பெரிய சாதனைகள் இனி வரக்கூடும்.ஆதலால் அவர்களைப் பற்றி சில ஆண்டுகள் கழித்து நானோ..அல்லது என்னைப் போன்ற ஒருவரோ எழுதுவர்

அனைவருக்கும் என் வாழ்த்துகளும்..நன்றிகளும்...

வாழ்க..வளர்க...

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 152 கதிர் 153 கே வி ஆனந்த்

கதிர்
--------------

தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, இயக்குநர் கதிர்

இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்

1991 இதயம் (முரளி)
1993 உழவன் (பிரபு)
1996 காதல் தேசம் (வினீத், அப்பாஸ்,தபு).
1999 காதலர் தினம்
2002 காதல் வைரஸ்


கே.வி,ஆனந்த்
----------------------------

ஒளிப்பதிவாளராக 15க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.(முதல்வன், சிவாஜி உட்பட)

2005ல் கனா கண்டேன் படம் மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து..2009ல் அயன் (சூர்யா)
2011 கோ (ஜீவா)
2012 மாற்றான் (சூர்யா)
2015 அநேகன் (தனுஷ்0

விஜய் சேதுபதி நடிக்க  கவண் என்ற படம் தயாரிப்பில் உள்ளது

Tuesday, October 18, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 151 வெற்றிமாறன்



படத்தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர் வெற்றிமாறன்

2007ல் பொல்லாதவன் மூலம் இயக்குநர் ஆனார்

இவரது அடுத்த ஆடுகளம் தேசிய விருதுகளை அள்ளிச் சென்றது.
இவரது விசாரணை படம் ஆஸ்கார் விழாவில் திரையிடப்பட உள்ளது

பாலுமஹேந்திராவிடம், அவர் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் போது உதவியாளராக இருந்துள்ளார்

பாலுமஹேந்திராவின் ஜூலி கணபதி படங்களில் உதவி இயக்குநராய் இருந்திருக்கிறார்.காதல் வைரஸ் கதிருக்கும் உதவியாளராய் இருந்துள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

2007ல் பொல்லாதவன்
2011 ஆடுகளம்
2016 விசாரணை

இவர் இயக்கத்தில் வடசென்னை என்ற படம் இயக்கத்தில் உள்ளது.

ஆடுகளம் பெற்ற தேசிய விருதுகள்

தனுஷ் - சிறந்த நடிகர்
வெற்றிமாறன் - சிறந்த இயக்குநர் மற்றும் வசனகர்த்தா
நடன இயக்குனர்- தினேஷ் குமார்
தவிர்த்து ஸ்பெஷல் ஜூரி விருது திரு ஜெயபாலனுக்கு

இவரது விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிஷோருக்கும் கிடைத்துள்ளது
சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கு கிடைத்துள்ளது
(இப்படம் சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 150 பவித்ரன்



பவித்ரன். இயக்குநராக ஆவதற்கு முன் கே டி குஞ்சுமோனிடம் பணியாற்றியவர்

குஞ்சுமோன் தயாரிப்பில் வந்த வசந்தகாலப்பறவை மூலம் இயக்குநர் ஆனார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1991ல் வசந்தகாலப்பறவை
1992ல் ஐ லவ் இந்தியா (சரத்குமார்)
1992ல் சூரியன் (இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் இவருக்கு உதவியாளராக இருந்தார்)
1994ல் இந்து (பிரபுதேவா பெரிய பாத்திரத்தில் நடித்த முதல் படம்)
1995ல் திருமூர்த்தி (விஜய் காந்த்)
1996ல் கல்லூரி வாசல்(அஜீத்)
1997ல் காதல் பள்ளி
2012ல் மாட்டுத்தாவணி