Friday, October 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -118/120 எஸ் ஜே சூர்யா,சசிகுமார்.அமீர்

எஸ் ஜஸ்டின் செல்வராஜ் என்ற எஸ் ஜே சூர்யா ஒரு திரைக்கதை ஆசிரியர்,நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குநர் ஆவார்.1968ல் வாசுதேவனல்லூரில் பிறந்தவர்..

வாலி படம் மூலம் இயக்குநர் ஆனவர்.முதல் படம் மாபெரும் வெற்றி.

அடுத்து குஷி...இவருக்கு வெற்றிக்கனியை அளித்து குஷியாக்கியது.
அதற்கு பின்...

இவர் இயக்கிய படங்கள்

1999ல் வாலி (அஜீத்)
2000 குஷி (விஜய்)
2004ல் நியூ
2005ல் அன்பே ஆருயிரே
2015ல் இசை (இப்படத்தின் இசையமைப்பாளர்,இயக்குநர், நடிகர்_

தவிர்த்து. நியூட்டனின் 3ஆவது விதி,மகானடிகன்  ஆகியவை இவர் நடித்த சில படங்கள்

சசிகுமார்
------------------

நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்/1975ல் பிறந்தவர்

சேது படத்திற்கு பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தார்
பின்னர், அமீர் இயக்கிய மௌனம் பேசியதே,ராம்,ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநர்

2008ல் இவர் தயாரிப்பில், நடிப்பில்,வந்த இவர் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம்

அடுத்து 2010ல் ஈசன் திரைப்படம்

அமீர்
--------------

அமீர் சுல்தான் எனும் அமீர் 1967ல் பிறந்தவர்.இயக்குநர்,தயாரிப்பாளர்,நடிகர்

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராய் இருந்தார்

பருத்திவீரன் படம் முதல் இயக்கம்.கார்த்தி அறிமுகம்.பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது.ராஜாமுகமதுவிற்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

மௌனம் பேசியதே
ராம்
பருத்தி வீரன் (2007)
ஆதி பகவன்  .

No comments:

Post a Comment