Thursday, October 13, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர் - 134 ஞான ராஜசேகரன்

         


இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஞான ராஜசேகரன்/

திரைப்படங்களின் மீது ஏற்பட்ட  ஆர்வத்தால் இயக்குநர் ஆனார்.

தி ஜானகிராமனின் மோகமுள் என்ற புதினத்தை அதெ பெயரில் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான இந்திரா காந்தி தேசிய விருது கிடைத்தது

அடுத்து, நாசரை கதாநாயகனாக்கி முகம் என்ற படத்தை இயக்கினார்

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்பட மாக்கினார்.பாரதி படத்தில் இளையராஜா இசையில், இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடிய "மயில் போல  பொண்ணு ஒன்னு' என்ற பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது

பாரதி படத்தில் மராத்தி நடிகர் ஷாயாஜி ஷிண்டே பாரதியாக நடித்தார்

அடுத்து பெரியார் படத்தை இயக்கினார்.இப்படத்தி சத்தியராஜ் பெரியாராகவும், குஷ்பூ மணியம்மையாகவும் நடித்தார்கள்

அடுத்து கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கையைப் ராமானுஜன் என்ற பெயரில் படமாய் எடுத்தார்.இப்படத்தில், ஜெமினி, சாவித்திரி தம்பதியரின் பேரன் அபினய் ராமானுஜனாக நடித்தார்.இப்படம் ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது.

வரலாற்று பிரபலங்களை படமாய் எடுக்கும் ஞான ராஜசேகரனுக்கு நம் தனிப்பட்ட பாராட்டு 

No comments:

Post a Comment