Thursday, October 6, 2016

தமிழ்த் தி ரைப்பட இயக்குநர்கள் - 117 டி.யோகானந்த்

     

1922ல் பிறந்தவர் யோகானந்த்

நியூட்டன் ஸ்டூடியோ நிதன் பானெர்ஜியிடம் பணி புரிந்த யோகானந்த், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்

பின்னர் எல் வி பிரசாத்திடம் துணை இயக்குநராய் பணியாற்றினார்

இவர் இயக்கத்தில் வந்த முதல் படம் தெலுங்கு.அம்மாலக்களு.பெரும்பாலும் தெலுங்கு படங்களையே அதிகம் இயக்கினார்

இவர் இயக்கத்தில் வந்த முதல் தமிழ்ப் படம் மருமகள் ஆகும்

என் டி ராமாராவை வைத்து 17 படங்களை இயகியுள்ளார்

தமிழில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி,எஸ் எஸ் ஆர்., பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா என அனைத்து நட்சத்திரங்கள் நடித்த படங்களையும் இயக்கியுள்ளார்

இவரது இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..

1953ல் மருமகள்(என் டி ராமாராவ்)
1955ல் காவேரி (சிவாஜி)
1956ல் மதுரை வீரன்(எம் ஜி ஆர்)
1958ல் அன்பு எங்கே? )எஸ் எஸ் ஆர்)
1958ல் பூலோக ரம்பை(ஜெமினி)
1959ல் கல்யாணப்பெண்
1960ல் எங்கள் செல்வி
1960ல் பார்த்திபன் கனவு (ஜெமினி, வைஜயந்திமாலா நடித்த இப்படத்திற்கு குடியரசுத் தலைவரின் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது)
1962 ராணி சம்யுக்தா(எம் ஜி ஆர்)
1962ல் வளர்பிறை (சிவாஜி)
1963ல் பரிசு (எம் ஜி ஆர்)
1964ல் பாசமும் நேசமும்(ஜெமினி)
1971ல் தங்கைக்காக (சிவாஜி)
1972ல் ராணி யார் குழந்தை
1974ல் தாய் (சிவாஜி)
1976ல் கிரகப்பிரவேசம்(சிவாஜி)
1978ல் ஜெனரல் சக்ரவர்த்தி(சிவாஜி)
1978ல் ஜஸ்டிஸ் கோபினாத் (சிவாஜி)
1979ல் நான் வாழவைப்பேன் (சிவாஜி)
1980ல் எமனுக்கு எமன் (சிவாஜி)
1982ல் ஊருக்கு ஒரு பிள்ளை
1982ல் வா கண்ணா வா
1983ல் சுமங்கலி
1984ல் சரித்திர நாயகன்

2006ல் இவர் அமரர் ஆனார்

No comments:

Post a Comment