Monday, October 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 112 கே விஜயன்



(நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.எவ்வளவு சீனியர் இயக்குநர்.இவரை எப்படி மறந்தேன்.இவரைப் பற்றி இவ்வளவு தாமதமாக பதிவிட நேர்ந்தத்ற்காக வருந்துகிறேன்.எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தாலும், சில தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.அப்படிப்பட்ட தவறே இது)

இயக்குநர் விஜயன், பெரும்பாலும் சிவாஜி கணேசனை வைத்தே பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர்  தமிழைத் தவிர மலையாளம், ஹிந்தி,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த திரிசூலம் சிவாஜி கணேசனின் 200ஆவது படம்.மாபெரும் வெற்றி படம்.அந்த நாளிலேயே 5 கோடி வசூலான முதல் தமிழ்ப் படம்.மக்கள் தொகை கிட்டத்தட்ட 4 கோடிகளாக இருந்த போது 3 கோடி டிக்கட்டுகள் விற்பனையாகிய படம்.

ஜெயகாந்தன் எழுத்தில் உருவான காவல்தெய்வம் இவர் இயக்கத்தில் வந்த படம்/இதில் சிவாஜி நடித்துள்ளார்.இனி தொடர்ந்து அவர் இயக்கத்தில் வந்த படங்களைப் பார்ப்போம்

1979ல் தெய்வவம்சம்
1974ல் ஒரே சாட்சி
1975ல் எடுப்பார் கை பிள்ளை
1976ல் மதன மாளிகை
1976ல் ரோஜாவின் ராஜா (சிவாஜி)
1977ல் தீபம் (சிவாஜி)
1977ல் அண்ணன் ஒரு கோயில் (சிவாஜி)
1978ல் தியாகம் (சிவாஜி)
1978ல் ருத்ரதாண்டவம்
1978ல் புண்ணிய பூமி (சிவாஜி)
1979ல் திரிசூலம் (சிவாஜி)
1979ல் நல்லதொரு குடும்பம் (சிவாஜி)
1980ல் வண்டி சக்கரம் (சில்க் சுமிதா அறிமுகம்)
1980ல் ரத்த பாசம் (சிவாஜி)
1980ல் தூரத்து இடி முழக்கம் (விஜய்காந்த்)
1981ல் பெண்ணின் வாழ்க்கை
1981 ஆணி வேர்
1981 கோயில் புறா
1982ல் ஆட்டோ ராஜா
1983ல் நீறு பூத்த நெருப்பு
1983ல் சட்டம் (கமல்)
1984ல் நிரபராதி
1984ல் அழகு
1984ல் விதி
1984ல் ஓசை
1985ல் பிரேமபாசம்
1985ல் காவல்
1985ல் மங்கம்மா சபதம்
1985ல் பந்தம் (சிவாஜி)
1986ல் விடுதலை (சிவாஜி, ரஜினி)
1986ல் ஆனந்த கண்ணீர்(சிவாஜி)
1987ல் வைராக்கியம்
1987ல் வெளிச்சம்
1987ல் கிருஷ்ணன் வந்தான் (சிவாஜி)
1987ல் தாம்பத்தியம்
1987ல் என் ரத்தத்தின் ரத்தமே (பாக்கியராஜ்)
1995ல் அவள் போட்ட கோலம்

விஜயன், தான் இயக்கிய படங்கள் சிலவற்றில் சிறு வேடங்களில் நடித்தும் உள்ளார்

இவரது மகன் சுந்தர் கே விஜயன், பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்

No comments:

Post a Comment