Thursday, August 4, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 18 சிவகங்கை ஏ.நாராயணன்


                         

சென்னையில் உருவான முதல் தமிழ்ப் பேசும் படத்தின் தயாரிப்பாளர் சிவகங்கை நாராயணன்

ஜி.டபில்யூ.எம்.ரோனால்ட் எழுதிய ஒரு நாவலைத் தழுவி "மிங்கிரேலியத் தாரகை" அல்லது'லைலா" என்ற 20 ரீல்கள் கொண்ட மௌனத் திரப்படம்சென்னையில் தயாரிக்கப் பட்டது.இதற்கான செலவு 75000/- இதுவே மிகவும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மௌனப்படம்

1900 ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர் ஏ,நாராயணன்

பம்பாயில் ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்ட் பணியில் இருந்த இவர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் பாப்புலர் சினிமா (பின்னர் ஸ்டார் டாக்கீஸ் ஆனது) தொடங்கினார்.பின் 1937ல் தண்டையார்பேட்டையில் ஜெனெரல் பிக்சர்ஸ் கார்ப்பரேசன் என்ற ஸ்டூடியோவைத் துவக்கினார்.1927 முதல் 30 வரை மூன்றாண்டுகளில் 20க்கும் மேற்பட்ட மௌனத் திரைப்படங்களை எடுத்தார்.தென்னிந்திய ஃபிலிம் தொழிலின் தந்தை என போற்றப்பட்டார்

1934ல் தென்னகத்தில் முதல் பேசும்பட ஸ்டூடியோவை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துவக்கினார்.(ஸ்ரீனிவாசா சினிடோன்)

முதன் முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனார்கலி என்ற மௌனப்படத்தை,ஹாலிவுட்டில் திரையிடச் செய்தவர் இவர்.

1934ல் ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற முதல்  முழுதும் தமிழ் பேசும்படம் வெளியானது.இப்படத்தைத் தயாரித்தவர் இவர்.

இதைத் தொடர்ந்து..
தூக்குத் தூக்கி,தாராசசாங்கம்       ,ஞானசுந்தரி,,துளசிபிருந்தா,விக்கிரமாதித்தன்,ராஜாம்பால், விசுவாமித்ரா, சிப்பாய் மனைவி, விப்ரநாராயண,கிருஷ்ணதுலாபாரம்,ராமானுஜர்,                        ஆகிய படங்கள் வரத்தொடங்கின

மடச்சாம்பிராணி என்ற நகைச்சுவை துண்டுப் படம் எடுத்தார்

இவரது மனைவி மீனாம்பாள் இவரது படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர்.சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் பெண்மணி இவர் ஆவார்.

இவரிடம் பயிற்சி பெற்று பின் இயக்குநர் ஆனவர்கள்..ஆர்.பிரகாஷ்,ஜித்தன் பாலாஜி,புல்லையா ஆகியோர் ஆவர்

20 மௌனப்படங்கள் எடுத்த இவர்..இயக்கிய மௌனப்படங்கள்

தர்மபத்தினி,ஞானசௌந்தரி,கோவலன்,கருடகர்வபங்கம்  ஆகியவை ஆகும்

சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும்படத்தைத் தயாரித்த பெருமைக்குரியவர் ஏ,நாராயணன்.

1939 ஆம் ஆண்டு இளம் வயதிலேயே மறைந்தார்.

இவர் தயாரித்த மௌனப்படங்களில், லங்காதகனம்,கஜேந்திர மோட்சம்,காந்தாரிவதம்,ராஜஸ்தான் ரோஜ,நரநாராயணர்,பவழராணி
லைலா ஆகியவற்றை இயக்கினார்.

ஜிதன்பானர்ஜி என்பவர்  விசுவாமித்ரா, மாயாமதந்தன் ஆகியவற்றை இயக்கினார்

ஒய்.வி.ராவ், பாண்டவ நிர்வாகன்,சாரங்கதாரா,போஜராஜன்,பாண்டவ அஞ்ஞானவாசம் ஆகியவற்றை இயக்கினார்

Wednesday, August 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 17 பி.புல்லையா


பி.புல்லையா 1911 ல் பிறந்தவர்.

பிரபல தெலுங்கு இயக்குனரான இவரைப் பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குனர் வரிசையில் எழுதக் காரணம்..இவர் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும்..அவை வெற்றி படங்கள் என்பதால் தான்.

திரையுலக சேர,சோழ,பாண்டியரான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மூவர் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

1937ல் சாரங்கதாரா வை இயக்கியவர்..1943ல் பாக்யலட்சுமியையும், 1945ல் மாயமச்சீந்திராவையும் இயக்கினார்.

1953ல் ஜெமினி, சாவித்திரி நடித்த மனம் போல மாங்கல்யம்..வெற்றி படம்..இதற்கு பிறகு இந்த ஜோடி பிரபலமானது.

1956ல் சிவாஜி,ஜெமினி,சாவித்திரி நடிக்க பெண்ணின் பெருமை படத்தை இயக்கினார்.இப்படத்தில் அப்பாவியாக ஜெமினியும், வில்லனாக சிவாஜியும் நடித்தார்கள்.

1957ல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது..சிவாஜி,சாவித்திரி நடிக்க இவர் இயக்கிய 'வணங்காமுடி' அருமையான பாடல்கள்..இப்படத்தின் வெற்றிக்கு துணையிருந்தன.

1958ல் ஜெமினி,அஞ்சலி நடித்த இல்லறமே நல்லறம் படம் வந்தது.இப்படத்தில் ..'மைனர் லைஃப்ஃபு ரொம்ப ஜாலி..மானம் மணிபர்ஸ் இரண்டும் காலி' என்ற பாடல்..இன்றும் பலர் உச்சரிக்கும் பாடல்களில் ஒன்றாகிவிட்டது.

1959ல் ஜெமினி நடித்த 'அதிசயத் திருடன்" படம் வந்தது.(முருகா என்றதும் உருகாதா..என்ற பாடல் பிரபலம்)

1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்க ஆசைமுகம் இயக்கினார்.

1966ல்..சிவாஜி கௌரவ வேடத்தில் நடிக்க..தாயே உனக்காக என்ற படத்தை இயக்கினார்..கருநீல மலை மீது தாய் இருக்க காஷ்மீரப் பனி மலையில் மகன் இருக்க' என்ற பாடல்..போருக்கு ராணுவத்தில் மகன் இருக்க தாய் வாடும் காட்சியாக எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் தமிழ்ப் படங்களை இயக்கியவர் இவர். 

1939ல் என்.டி.ராமாராவ் நடிக்க வெங்கடேஷ்வர மகாதிமியம் என்ற தெலுங்குப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பி.பானுமதியை ஸ்வர்கசீமா என்னும் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்.

1985ல் அமரர் ஆனார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 16 ராஜசாண்டோ




ராஜா சாண்டோ
-----------------------------

குஸ்திக் கலைஞரும், விளையாட்டு வீரரும் ஆவார் ராஜா சாண்டோ

சிறந்த டைரக்டர்,நடிகர், தயாரிப்பாளர் என தன் திறமையை வெளிப்படுத்திய முதல் தமிழர் இவர் எனலாம்

1895ஆம் ஆண்டு, பொள்ளாச்சியில் பிறந்த இவர் இயற்பெயர் நாகலிங்கம் ஆகும்/1915ல் சென்னை வந்த இவர் தன் தேகப்பயிற்சி காட்சிகளை நடத்தி பிரபலமானார்

பின்,நேஷனல் ஃபில்ம் கம்பெனியில் சேர்ந்தார்.அந்நிறுவனம் "பக்த போதனா" என்ற மௌனப் படத்தைத் தயாரித்தது.அதில் 101 ரூபாய் சம்பளத்தில் நடித்தார்.இதுவே இவரது முதல் படமாகும்.

பின் வீர பீம்சிங்க், தேவதாசி,பஞ்ச தாண்டா, மீரா ஆகிய படங்களில் நடித்தார்.

கோஹினூர் ஃபிலிம் கம்பெனி என்பவர்கள் எடுத்த ஞானசவுந்தரி,டைபிஸ்ட் பெண்,மனோரமா போன்ற படங்கள் இவருக்குப் புகழை ஈட்டித் தந்தன.பாறிஸ்டரின் மனைவி மிகவும் பேசப்பட்டது.

பேயும் பெண்ணும், அனாதைப் பெண்,கருந்திருடன், ராஜேஸ்வரி ஆகிய படங்களை இவர் இயக்கி நடித்தார்.இவை அனைத்தும் மௌனப்படங்கள் ஆகும்.

பின் மேனகா, விஷ்ணு லீலா, சந்திரகாந்தா, திருநீலகண்டர் (எம் கே.தியாகராஜ பாகவதர் நடித்தது) ஆகிய பேசும் படங்களை இயக்கினார்.

இவர் காலத்தில்தான் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் வெற்றியில் பங்குண்டு என அவர்கள் பெயர்களையும் திரையில் தோன்ற வைத்தார்.

இவர் 25க்கும் மேற்பட்ட மௌனப்படங்களில் நடித்தார்.

தவிர்த்து, இந்திரா, காலேஜ் கேர்ள், பாரீஸ்டர் வைஃப் ,தேவகி, போன்ற ஹிந்தி பேசும் படங்களில் நடித்தார்

பாரிஜாத புஷ்பஹாரம், மேனகா, வசந்த சேனா, மைனர் ராஜாமணி, சந்திரகாந்தா, விஷ்ணு லீலா,நந்தகுமார், திரு நீலகண்டர், ஆராய்ச்சி மணி ஆகிய படங்கள் இயர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள் ஆகும்.சிவகவி படத்தை இயக்கி வந்தார்.ஆனால், பாதியில் ஏற்பட்ட சில மனவேற்றுமையால் விலகினார்.

இவர் இயக்கிய மேனகா படத்தில் என்.எஸ்.கே அறிமுகமானார்.கே ஆர் ராமசாமிக்கு சிறு வேடம், தவிர்த்து டி கே எஸ் சகோதரர்கள் நால்வரும் நடித்தனர்

1943ல் இவர் உடல்நலக் குறைவால் இறந்தார்

தன் திறமையால் இந்தியா முழுதும் கோலோச்சிய ராஜா சாண்டோவின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் ராஜாசாண்டோவிருதைகலைஞ்ர்களுக்கு அரசு வழங்கி வருகிறது

Tuesday, August 2, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 15 டி.பி.ராஜலட்சுமி

                                 


டி.பி.ராஜலட்சுமி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1911ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி.சிறு வயது முதலே அபாரத் திறமையுடன் திகழ்ந்தார்.

7 வயதில் இவருக்குத் திருமணம் ஆனது.பால்ய வயதுத் திருமணம்.ஒரு வருடத்தில் முறிந்தது.இதே கால கட்டத்தில் இவரது தந்தையும் மறைய, குடும்பம் திருச்சிக்குக் குடி பெயர்ந்தது.

அங்கு சி.எஸ்.சாமண்ணா என்பவர் சொந்தமாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.அப்போதெல்லாம் நடிக்க பெண்கள் வருவதில்லை.ஆண்களே, பெண்கள் வேடத்தையும் போட்டு நடித்தனர்.சாமண்ணாவின் குழுவில் நடிக்க சந்தர்ப்பம் கேட்டுச் சென்ற ராஜலட்சுமியை, அங்கு வந்திருந்த சங்கரதாஸ் சுவாமிகள் பார்த்தார்.இப்பெண்ணை, உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.பின், ராஜலட்சுமி அங்கு நடிக்க ஆரம்பித்தார்.இவருக்குக் கிடைத்த முதல் வேடம்பவளக்கொடி என்ற நாடகத்தில் புலேந்திரன் வேடம்.50 ரூபாய் சம்பளம்.பின்னர், மொய்தீன் நாடகக் குழு,கன்னையா நாடகக் குழு என இவர் பயணம் தொடர்ந்தது.

கன்னையா நாடகக் குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா நடித்து வந்தார்.அவருக்கு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் ராஜலட்சுமி.பவளக்கொடி நாடகத்தில் எம்.கே தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாய் நடித்தார்.

1929ல் கோவலன் அல்லது   The Fatal anklet                 என்ற பெயரில் ஏ.நாராயணன் என்பவர் ஊமைப்படம் ஒன்று எடுத்தார்.இதில், கண்ணகியாக 18 வயது ராஜலட்சுமி நடித்தார்.இதுவே இவரது முதல் சினிமா பிரவேசமாகும்

பின்னர் ராஜா சாண்டோவின் கம்பெனியில் அவர் தயாரித்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய மௌனப்படங்களில் நடித்தார்

பேசும் படக்காலம் ஆரம்பித்தது.முதல் பேசும்படம் ஆலமாரா வை அரிதேசிர் இராணி எடுத்தார்.பின் முதல் தமிழ்ப் பேசும் படமான காளிதாஸில் ராஜலட்சுமி நடித்தார்.ஆடினார்.பாட்டுப் பாடி அசத்தினார்

1933ல் கல்கத்தாவில்  சி.எஸ்.துரை என்பவர் முருகனாக நடிக்க ராஜலட்சுமி வள்ளியாக நடிக்க வள்ளித்திருமணம் வந்தது.,அதில் வள்ளி தினைப்புனம் காக்கும் காட்சியில்...

"வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா
விரட்டி அடித்தாலும் வாரீகளா?"

என வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து நாசுக்காக எழுதிய தேசபக்திப் பாடலைப் பாட அது பிரபலமானது

கோவை சாமிக்கண்ணுவின் சென்ட் தயாரித்த இப்படம் அதிகம் வசூல் பெற்ற முதல் தமிழ்ப் படம் எனலாம்

அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து மணந்தார் ராஜலட்சுமி.

1933ல் தன் சொந்தப்படம் சத்தியவான் சாவித்திரியை வெளியிட்டார் .பின்னர் வரிசையாக குலேபகாவலி, லலிதாங்கி, அரிச்சந்திரா ஆகிய படங்கள் வந்தன..மக்களால் சினிமா ராணி என போற்றப்பட்டார்.

முதன்முதலாக தமிழ்நாட்டில் ஒரு சினிமா கலைஞருக்கு ரசிகர் மன்றம் தோன்றியது இவருக்குத்தான்.

மதுரை ராயல் டாக்கீஸின் கோவலன் படத்தில் கண்ணகியாய் நடித்தார்.மதுரை வீரன், இந்தியத்தாய் ஆகிய படங்களை தயாரித்தார்.பிரபலம் ஆனாலும் அவர் தனித் த்ன்மையை, சுயமரியாதையை விட்டுத் தரவில்லை.

எவிஎம் தயாரித்த நந்தகுமார் படத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதையாக நடித்தார்.அதில் புராணப்படி யசோதை கச்சைக் கட்டி நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்ன போது இவர் மறுத்தார்,கடைசியில் இதன் இந்தியில் நடித்த நடிகை கச்சையுடன் நடிக்க, தமிழிலோ யசோதை ரவிக்கையுடனேயே நடித்தார்.

1940க்குப் பின் படிபடியாக இவருக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

அந்தக்காலத்தில், பெண் சிசுக்கொலை நடந்து வந்தது.அதை எதிர்த்த இவர், அப்படிப்பட்ட குழ்னதை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு மல்லிகா எனப் பெயரிட்டு வளர்த்தார்.

1936ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அதற்கு கமலா எனப்  பெயரிட்டார்.

தமிழ்த் திரைபட இயக்குநர்கள் வரிசையில் இவரைப் பற்றி ஏன் இவ்வளவு செய்திகல் எங்கிறீர்களா?

விஷயத்திற்கு வருகிறேன்

எல்லாவற்றிலும் முதன் பெண்மணியாய் திகழ்ந்த இவர் இயக்குநர்கள் வரிசையிலும் முதல் பெண்மணி ஆவார்.

இவர் பெண் கமலாவின் பெயரில் ஒரு நாவல் எழுதி..அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதைப் படமாகத் தயாரித்து, படத்திற்கு மிஸ் கமலா எனப் பெயரிட்டு இயக்கவும் செய்தார்.முதல் பெண் இயக்குநர் ஆனார்.

தவிர்த்து 'இந்தியத்தாய்; படமும் இவர் தயாரித்து இயக்கியது.

1964ல் மரணம் அடைந்த இவர் நடித்த படங்கள் 27 ஆகும்.அந்நாளில் அது அதிகமாகும்

கட்டுப்பெட்டியாய் பெண்களை வைத்திருந்த காலத்தில் அந்தத் தடைகளை மீறி சாதனைப் பெண்ணாய்த் திகழ்ந்த ராஜலட்சுமியை தமிழ்ப் பட உலகம் என்றும் மறவாது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 13 மாணிக்லால் டேண்டன்

மாணிக்லால் டேண்டன்
-------------------------------------

1935ல் பக்த நந்தனார் இவர் இயக்கத்தில் வந்தது.இதில் கே பி சுந்தராம்பாள் நடித்தார்.அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்.(இந்நாள் கணக்கில் 6 கோடி எனலாம்)இப்படத்தில் மகாராஜபுரம் விசுவநாதன் நிலக்கிழாராக நடித்தார்.

எல்லிஸ் டங்கண் இயக்கத்தில் உதவி புரிந்தார்

இப்படத்தில் மொத்தம் 48 பாடல்கள்.அதில் கே பி சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடினார்.

படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.கேபிஎஸ் ஆண் வேடத்தில் நடித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏ.முத்துசாமி ஐயர்  - இயக்குநர் 14
-------------------------------------------------------------

முருகதாசா என்னும் ஏ.முத்துசாமி ஐயர் 1942ல் ஜெமினி வாசன் தயாரிக்க ந்ந்தனாரை இயக்கினார்.இதில் தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா, கொத்தமங்களம் சுப்பு, சுந்தரி பாய் ஆகியோர் நடித்தனர்.கோபாலகிருஷ்ண பாரதி பாடல்களும், பாபனாசம் சிவன் பாடல்களும் இடம் பெற்றன.படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது

Monday, August 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 12 எச் எம் ரெட்டி

                       


எச்.எம்.ரெட்டி

ஆலம் ஆரா முதல் பேசும் படம்.இதை இயக்கியவர் அர்த்ஷிர் எம்.இரானி.அவரிடம் எச்.எம்.ரெட்டி உதவி இயக்குநராய் இப்படத்தில் பணியாற்றினார்.

பிரின்ஸ் ராஜகுமார் என்ற மௌனப்படத்தை எடுத்தவர் எச்.எம்.ரெட்டி

1892ல் பிறந்த இவர், 1931 லேயே முதல் தமிழ் பேசும்படத்தை எடுத்தார்.இதில், பி.ஜி.வெங்கடேசன் கதாநாயகனாகவும், டி.பி.ராஜலட்சுமி கதாநாயகியாகவும் நடித்தனர்
எல்.வி.பிரசாத்திற்கு நடிக்க சந்தர்ப்பம் அளித்தவர் இவராவார்.காளிதாஸ் படத்தில் பிரசாத்தும் நடித்தார்.

இப்படத்தில் கதாநாயகன் தெலுங்கிலும், கதாநாயகி தமிழிலும், துணைநடிகர்கள் இந்தியிலும் பேசுவர்.கிட்டத்தட்ட 50 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.இப்ப்டம் 31-10-1931ல் வெளியானது.

28 படங்கள் வரை இவர் இயக்கியிருந்தாலும் அவற்றுள் பெரும்பான்மை தெலுங்கு படங்களே.

முதல் தெலுங்கு பேசும் படம் பக்த பிரகலாதாவும் இவர் இயக்கமே.

இவர் இயக்கிய தமிழ் படங்களில் நிரபராதி குறிப்பிடத்தக்கப் படம்.

முதல் தமிழ்ப்படத்தை இயக்கிய இவரை இயக்குநர்களின் முன்னோடி என்றால் மிகையில்லை

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 11 டி.ஆர்.சுந்தரம்

               



டி.ஆர்.சுந்தரம்

1907ல் திருச்செங்கோட்டில் பிறந்தவர் சுந்தரம்.நெசவுத் தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை அறிய இவரது தந்தை இவரை பிரிட்டன் அனுப்பினார்.அப்ப்து ஆங்கில பிரபு ஒருவர் இவருக்கு நண்பன் ஆனார்.அவரது மகள் கிளாடிஸ் மீது இவருக்கு காதல் உண்டாக அவரை மணந்தார்.

1934ல் சேலத்தில் ஏஞ்சல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒன்று சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.அதில் சுந்தரமும் பங்குதாரர் ஆனார்.

ஐந்து பேசும் படங்களை அந்நிறுவனம் தயாரித்தது.பின், சுந்தரம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பாதையில் 1936ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.1937ல் முதல் படமாக சதி அகல்யாவை எடுத்தார்.

பின், ஸ்டண்ட் படங்களை எடுக்க விரும்பிய சுந்தரம், ஜெர்மனியிலிருந்து, வாக்கர், பேய்ஸ் என்ற இரு ஒளிப்பதிவாளர்களை வரவழைத்து முதல் ஸ்டண்ட் படமான மாயா மாயவனை எடுத்தார்.

பி.யூ.சின்னப்பாவை வைத்து உத்த்ம புத்திரன் படத்தைத் தயாரித்து இயக்கினார்.சின்னப்பாவிற்கு இப்படத்தில் இரட்டை வேடங்கள்.'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்ற பாரதியார் பாடலை அவரை பாட வைத்தார்.பாரதியார் பாடல் இடம் பெற்ற முதல் பட இதுவே

பின் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணியம் கதையைத் திரைப்படமாக்கினார்.இதில் சின்னப்பாவுடன் டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார்.
ஆறு காமிராக்களை வைத்து போர்க் காட்சிகளை பிரம்மாண்டமாய் எடுத்தார்.

பின் பர்மா ரமணி என்ற படம் வந்தது.நாடு சுதந்திரம் பெற்ற பின், இது ஆங்கிலேயரை ஆதரிக்கும் படம் என இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.

கலிகால மைனர் (காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், சி.டி.ராஜகாந்தம் நடித்தது)
பள்ளிநாயகம்- என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடித்தது)
சூரப்புலி (காளி என்.ரத்தினம், ராஜகாந்தம் நடித்தது)

மேற்கண்ட மூன்று நகைச்சுவைக் கதைகளை சௌசௌ என்ற பெயரில் ஒரே திரைப்படமாக்கினார்.

1047ல்  ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி படத்தை எடுத்தார்.மாபெரும் வெற்றி/

சுலோச்சனா என்று இராமாயணக் கதையை தானே கதாநாயகனாக நடித்து இயக்கினார்.படம் தோல்வி படமாக அமைந்தது.

கண்ணதாசன் முத்ன் முதலாய் பாட்டு எழுதியது இவர்கள் படத்தில்தான்

அஞ்சலி தேவி, எம்.ஆர்.ராதா போன்றோரை அறிமுகப்படுத்தியவர் இவர்

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு,கன்னடம்,இந்தி,ஆங்கிலம் ,சிங்களம் ஆகிய மொழிகளில் படமெடுத்தார் சுந்தரம்.
அலிபாபாவும் 40 திருடர்களும், பொன்முடி(பாரதிதாசன்), மந்திரிகுமாரி,த்கம்பர சாமியார் என நீண்ட பட்டியல் இவருடையது.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "திகம்பர சாமியார்" நாவலை இயக்கி, தயாரித்த இவர், அப்படத்தில் எம்.என்.நம்பியாரை 10 வேடங்களில் நடிக்க வைத்தார்

தான் தயாரித்தாலும், பொன்முடி, மந்திரிகுமாரி படங்களை எல்லிஸ் டங்கனை வைத்து இயக்க வைத்தார்.

மந்திரிகுமாரி படத்திற்காக கலைஞர் கருணாநிதி மாத சம்பளமாக 500 பெற்றார்.இப்படத்தில்.ஜி.ஆரும் நடித்தார் தளபதி வேடத்தில்

கொஞ்சும் குமரி என்ற படத்தில் மனோரமாவை கதாநாயகி ஆக்கினார்

1937 முதல் 198 2 வரை இவர்கள் தயாரித்த படம் 136

இதில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தது 98 இயக்கியது 55 படங்கள்

1937ல் தொடங்கி சதிலீலாவதியிலிருந்து 1963ல் யாருக்கு சொந்தம் வரை 52 தமிழ்,7 சிங்களம், 8 மலையாளம் கன்னடம், தெலுங்கு,இந்தி, ஆங்கிலம்
என கொடிகட்டி பறந்தார் டி.ஆர்.சுந்தரம்.98 படங்கள் தயாரித்தார்

இவர் மறைவிற்கு பின் இவரது மகன் ராமசுந்தரம் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு அவர்கள் தயாரித்த பட எண்ணிக்கையை 136க்குக் கொண்டுச் சென்றார்