Monday, September 5, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 79 எஸ்பி.முத்துராமன்


                   

75படங்களுக்கு மேல் இயக்கியுள்ள வெற்றி இயக்குநர் முத்துராமன்,

ரஜினிகாந்தும், இவரும் இணைந்து 25 படங்களுக்கு மேல் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளனர்

ஏவிஎம் ஸ்டூடியோவில் கிருஷ்ணன் பஞ்சு விற்கு உதவியாக இருந்தவர் இவர்.இயக்குநர்கள் யோகானந்த்,ஏ.பிம்சி ங்க்,யோகானந்த்,புட்டண்ணா,ஏ சி திருலோகசந்தர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்

1972ல் கனிமுத்துப் பாப்பா படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமானார்

மோகம் முப்பது வருஷம் மூலம் சுமித்ராவை அறிமுகப் படுத்தினார்.

குடும்பம் ஒரு சிலம்பம் மூலம் விசுவை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார்

ரஜினியின் 100 ஆவது படம் ஸ்ரீராகவேந்திரர் இவர் இயக்கம்

இவர் இயக்கத்தில் வந்துள்ள ரஜினிகாந்த் படங்கள்-

ஆடு புலி ஆட்டம்
பிரியா
ஆறிலிருந்து அறுபதுவரை
முரட்டுக்காளை
நெற்றிக்கண்
கழுகு
ராணுவ வீரன்
போக்கிரி ராஜா
புதுக்கவிதை
பாயும் புலி
அடுத்த வாரிசு
நல்லவனுக்கு நலல்வன்
ஸ்ரீ ராக வேந்திரா
மனிதன்
மிஸ்டர் பாரத்
வேலைக்காரன்
குருசிஷ்யன்
தர்மத்தின் தலைவன்
ராஜா சின்ன ரோஜா
அதிசயபிறவி
பாண்டியன்

கமல் ஹாசன் இவர் இயக்கத்தில் நடித்த படங்கள் சில

ஆடு புலி ஆட்டம்
சகல கலா வல்லவன்
தூங்காதே தம்பி தூங்காதே
எனக்குள் ஒருவன்
உயர்ந்த உள்ளம்
பேர் சொல்லும் பிள்ளை

சிவாஜி நடித்த கவரிமான் இவர் இயக்கமே

இவ்வளவு சாதனைகள் புரிந்தாலும்...'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பதற்கேற்ப..சற்றும் கர்வம் இல்லாமல் அனைவரிடமும் சாதாரணமாக பழகக் கூடியவர்.

நிறைகுடங்கள் தளும்புவதில்லை

Sunday, September 4, 2016

த்மிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 78 விசு

         



1945ல் பிறந்தவர் விசு..

இவரின் அண்ணன் ராஜாமணி, தம்பி கிஷ்மூ

நண்பர்கள் நான், மௌலி, பிரியதரிஷினி கணேஷ்

அனைவரும் அம்பத்தூரில் நாடகங்கள் போட்டு வந்தோம்

எங்கள் குழுவிற்கு வழக்கமாக மௌலிதான் நாடகங்கள் எழுதுவார்.ஒருசமயம் அவர் சற்று பிசியாக இருந்ததால் விசுவை அந்த முறை எழுதச் சொன்னார்.

விசுவின் எழுத்துத் திறமை வெளிப்பட்டது

 நாடக எழுத்தாளர் பின் திரைக்கதை வசனகர்த்தா..தொடர்ந்து இயக்குனர்

இவரது குடும்பம் ஒரு சிலம்பம் நாடகம் படமானபோது அதை எஸ் பி முத்துராமன் இயக்க, விசுவும் நடித்தார்

பின் தொடர்ந்து, தில்லுமுல்லு,நெற்றிக்கண், என படங்கள் தொடர்ந்தன

 கண்மணி   பூங்கா மூலம் இயக்குனர் ஆனார்.ஆண்டு 1982.படம் தோல்வி.

ஆனால் அவர் தோல்வியடையவில்லை.

மணல்கயிறு, டௌரிகல்யாணம் ஆகிய படங்கள் தொடர அவை வெற்றி படங்களாக அமைந்தன

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்..

புயல் கடந்த பூமி,ராஜ தந்திரம்,நாணயம் இல்லாத நாணயம்,அவள் சுமங்கலிதான்,கெட்டு மேளம்,சிதம்பர ரகசியம்,சம்சாரம் அது மின்சாரம்,திருமதி ஒரு வெகுமதி,காவலன் அவன் கோவலன்,பெண்மணி அவள் கண்மணி,வீடு மனைவி மக்கள்,சகல கலா சம்பந்தி,வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை,உரிமை ஊஞ்சலாடுகிறது,நீங்க நல்லாயிருக்கணும்,பட்டுக்கோட்டை பெரியப்பா,மீண்டும் சாவித்திரி, சிகாமணி ரமாமணி ஆகியவை

இவர் நாடகங்களைப் பார்த்துவிட்டு, தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து வந்த இவரை, அவருக்கான மூன்று வருட சம்பளத்தைக் கொடுக்கிறேன்...தைரியமாக வேலையை விட்டு திரையுலகிற்கு வா என பாலசந்தர் அழைத்து வந்தார்.

இவர் தன் படங்களைத் தவிர மற்றவர் படங்களிலும் நடித்தார்.கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துள்ளார்

சம்சாரம் அது மின்சாரம் தேசிய விருது பெற்றது
நிங்க நல்லாயிருக்கணும் சமூக நலனுக்கான தேசிய விருதைப் பெற்றது

பின்னர், சன் டிவியில் இவர் அரட்டை அரங்கமும், ஜெயாடிவியில் மக்கள் மன்றமும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

Saturday, September 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 77 கொத்தமங்கலம் சுப்பு

                                 

1910ல் பிறந்தவர் கொத்தமங்கலம் சுப்பு என்று பிரபலமான சுப்பிரமணியன்

பாடலாசிரியர்,எழுத்தாளர்,நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்

காலத்தால் அழிக்கமுடியா நவீனம் "தில்லானா மோகனாம்பாள்' .கலைமணி என்ற பெயரில் வடித்தவர்.தவிர்த்து, மிஸ் ராதா, பந்தனல்லூர் பாமா பொன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.ஜெமினி வாசன் அவர்களின் நெருங்கிய நண்பர். சுருங்கச் சொன்னால், ஜெமினியில் இரண்டாமிடம் இவருக்குத்தான் எனலாம்

திரைக்கதை ஆசிரியராக, சந்திர லேகா,அபூர்வ சகோதரர்கள்,வஞ்சிக்கோட்டை வாலிபன்,இரும்புத்திரை,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ஆகியவற்றில் பங்குப் பெற்றார்

1947 ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் நாவலைத் தழுவி மிஸ்மாலினி என்ற படத்தை இயக்கினார்.

கண்ணம்மா என் காதலி என்ற படமும் இவர் இயக்கத்தில் வந்தது.

1953ல் கே பி சுந்தராம்பாள் நடிக்க ஔவையார் படத்தை இயக்கியவர் இவரே

தவிர்த்து பல படங்களிலும் நடித்துள்ளார்.அவற்றுள் சில மிஸ் மாலினி, ஔவையார், கண்ணம்மா என் காதலி, பாவமன்னிப்பு

நடிகை சுந்தரிபாயை மணந்து அவருடன் இணைந்து நடித்துள்ளார்

மகாத்மா காந்தியின் வரலாறை காந்தியின் கதை என்ற பெயரில், நாட்டுப்புற பாடல்கள் வடிவில் எழுதி..சொல்லி வந்தார்

1974ல் அமரர் ஆனார் 

Friday, September 2, 2016

தமித் திரைப்பட இயக்குநர்கள் - 76 மௌலி





நாடக எழுத்தாளர்,நடிகர், நாடக இயக்குனராய்த் திகழ்ந்தவர் மௌலி.

பள்ளி நாட்களிலேயே டி கே ஷண்முகம், எஸ் வி சஹஸ்ரநாமம் ஆகியோரால் கவரப்பட்டு நாடகங்கள், எழுத ஆரம்பித்தார், நடிக்க ஆரம்பித்தார்.

சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீவிருது கிடைத்தபோது அவரது நண்பர்க ளுடன் சேர்ந்து (விசு,நான் உட்பட) அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி, அதில் 45 நிமிடம் வரக்கூடிய ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

பின்னர் அதே நாடகத்தை முழுநீள நாடகமாக்கி வாணிமகாலில் அரங்கேற்றும் போது அதைப்பார்த்த திரு ஏ ஆர் ஸ்ரீனிவாசன் மூலம் ஒய் ஜி பார்த்தசாரதியின் நாடகக்குழுவில் இணைந்தார்.அவர்களுக்கு பத்மவியூகம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஃபிளைட் 172 நாடகங்களை எழுதினார்.எல்லா நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்தாலும், இன்றும் ஃபிளைட் 172 என்ற நகைச்சுவை நாடகம் போற்றப்படுகிறது

1973ல் சூரியகாந்தி படம் மூலம் முக்தா ஸ்ரீனிவாசனால் நடிகராக அறிமுகப்படுத்தினார்தொடர்ந்து நிழல் நிஜமாகிறது ஆகிய சில படங்களில் நடித்தார்

1980ல் மற்றவை நேரில் மூலம் இயக்குநர் ஆனார்.பின் "இவர்கள் வித்தியாசமானவர்கள்"படம் வந்ததுபின் வா இந்த பக்கம்.

தொடர்ந்து,82ல் நன்றி மீண்டும் வருக, ஒரு வாரிசு உருவாகிறது படங்களும் வந்தன

83ல் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,அண்ணே அண்ணே ஆகிய படங்கள் வந்தன

பின் தெலுங்கில் 1986 முதல் 2002 வரை 25 படங்களுக்கு மேல் இயக்கினார்.பிரபல தடகள வீராங்கணை அஸ்வினி நாச்சப்பா நடிக்க அவர் கதை படமானது.இப்படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருது அளித்து கௌரவித்தது.

2002ல் கமல் நடிக்க  பம்மல் கே சம்பந்தம் படம் வந்து வெற்றி பெற்றது

2003ல் நளதமயந்தி   (மாதவன்) வந்தது.

தவிர்த்து இவர் தமிழில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அவற்றுள் சில-

அபூர்வ சகோதரர்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,காதலா காதலா,திருவிளையாடல் ஆரம்பம், பிரிவோம் சந்திப்போம்

தவிர்த்து டிவி சீரியல்களீல் நடித்து வருகிறார்.( நாதஸ்வரம்.   குலதெய்வம், கலசம்)



இவரது தம்பி எஸ்.பி.காந்தன்.இவர் பல நாடகங்களை இயக்கியுள்ளார், விளம்பரப் படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள் ஆகியவற்றையும் இயக்கியுள்ளார்.டி சீரியல்கள் தொலைக்காட்சிக்கு இயக்கியுள்ளார்

கிரேசி மோகன் குழுவின் ஆஸ்தான இயக்குநர் இவர் ஆவார்,

ஜெர்ரி என்ற தமிழ்ப் பட இயக்குநர் இவரே

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 74 எம்.ஏ.காஜா



1979 ல் இனிக்கும் இளமை   படம் மூலம் அறிமுகமானார் எம்.ஏ.காஜா

தொடர்ந்து வள்ளி மயில்,   தெரு விளக்கு, பௌர்ணமி நிலவில், பணம் பெண் பாசம் (முத்துராமன்), காதல் காதல் காதல்,வசந்தகாலம்,மீண்டும் சந்திப்போம்.கண்ணாடி,எங்கம்மா மகராணி,செல்வாக்கு,மாந்தோப்பு கிளியே,ஒரு விடுகதை ஒரு தொடர்கதை,வேலி தாண்டிய வெள்ளாடு ஆகிய படங்களை இயக்கினார்.


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -75  எம்.கர்ணன்

                         

1935ல் பிறந்தவர் கர்ணன்

அடிப்படையில் ஒ ளி ப்பதிவரான இவர் ஒளிப்பதிவில் வந்த படங்கள் தெய்வத்தின் தெய்வம்,கை கொடுத்த தெய்வம்,ஆனந்தி,நிறைகுடம்,வீட்டுக்கு வீடு ஆகியவை

1970ல் ஜெயஷங்கர் நடிக்க காலம் வெல்லும் படம் மூலம் இயக்குனர் ஆனார்.

தொடர்ந்துஜக்கம்மா,   கங்கா (1972) எங்க பாட்டன் சொத்து (1975) எதற்கும் துணிந்தவன் (1976) ஜம்பு (1980) புதிய தோரணங்கள்(1980)  அவனுக்கு நிகர் அவனே (1982)  இது எங்க பூமி !984) ரெட்டை குழல் துப்பாக்கி ஆகிய படங்கள் வந்தன
கௌபாய் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இவரே

2012ல் அமரர் ஆனார்

Thursday, September 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 73 ராம.நாராயணன்


                     



1949ல் பிறந்தவர் ராம நாராயணன்

ராம் ரஹீம் படம் மூலம் காஜாவுடன் சேர்ந்து வசனம் எழுதினார்.பின், ஆசை அறுபது நாள் படத்திற்கு வசனம் எழுதினார்.

1981ல் சுமை என்ர படம் மூலம் இயக்குநர் ஆனார்.25 ஆண்டுகளில் 125 படங்கள்.அதில் 45சொந்த படங்கள்.1984ல் மட்டுமே12படங்கள் என சாதனை புரிந்த இயக்குநராவார்.

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மராட்டி,போஜ்பூரி,ஒரியா,மலே,பெங்காலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்

க்லைஞர் கருணாநிதி எழுதிய வேலுத்தம்பி இவர் இயக்கிய 50ஆவது படம்

                     


திருப்பதி எழுமலை வெங்கடேசா 100ஆவது படம்

இவர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராய் இருந்துள்ளார்.காரைக்குடி தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராயும் இருந்துள்ளார்.

இவர் படங்களில் பல மிருகங்களை பாத்திரமாக ஆக்கியுள்ளார்

ராமராஜன்,கோலப்பன், சோழராஜன் ஆகியோரை இயக்குநர் ஆக்கியுள்ளார்.

இயக்குநர் பேரரசு இவருடன் 30 படங்களுக்கு மேல் துணை இயக்குநராய் இருந்துள்ளார்

அர்ச்சுனை தனது "னன்றி' படம் மூலம் தமிழ்ப் படவுலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள் சில-

சிவப்பு மல்லி,தீராத விளையாட்டுப் பிள்ளை,சிவந்த கண்கள்,சூரக்கோட்டை சிங்கக் குட்டி,இது எங்க நாடு,மனைவி சொல்லே மந்திரம்,சபாஷ், கடமை,மன்மத ராஜாக்கள்,சட்டத்தைத் திருத்துங்கள்,வாய்ப்பந்தல்,வரன்,குற்றவாளிகள்,சிவப்பு நிலா,கருமேடு கருவாயன்,நெருப்பு நிலா,தங்கமான புருஷன்,டஹ்ங்கமணி ரங்கமனீ,ஆடி வெள்ளி,துர்கா.திருப்பதி எழுமலை வெங்கடேசா,கந்தா கடம்பா கதிர்வேலா,விஸ்வனாதன் ராமமூர்த்தி

2014ல் அமரர் ஆனார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 72 ஜோசப் தளியத்

                                 


திருவனந்தப்புரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் ஜோசப் தளியத்.இயக்குநர் எஸ்.சௌந்தரராஜனிடம் உதவி இயக்குநராய் இருந்தார்

பின், சென்னை கீழ்பாக்கத்தில் சிட்டாடல் என்ற பெயரில் படப்பிடிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்.

1948ல் எஃப்.நாகூர் இயக்கத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடிக்க ஞானசௌந்தரி படத்தைத் தயாரித்தார்

பின், 1950ல் மகாலிங்கம் நடிக்க இதயகீதம் என்ற படத்தை முதலில் இயக்கினார்.

பின், ஜெமினி, பத்மினி நடிக்க 1957ல் மல்லிகா என்ற படத்தை இயக்கினார்."வருவேன் நான் உன் மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடல் பிரபலம்.அப்பாடல் காட்சியில்தான் முதன் முதலாக (விஜயபுரி) ஆனந்தனை அறிமுகப்படுத்தினார்

பின் 1960ல் ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க விஜயபுரி வீரன் படத்தை இயக்கினார்

1965ல் விளக்கேற்றியவள் என்ற படமும், இரவும் பகலும் என்ற படமும் வந்தன.இரவும் பகலும் படத்தில் ஜெயஷங்கர் அறிமுகம்

1966ல் இயக்கிய படம் காதல் படுத்தும் பாடு.