Monday, August 22, 2016

தமிழ்த் திரைப்ப்ட இயக்குநர்கள் - 56 சாணக்யா

                             

1925ல் பிறந்தவர் சாணக்கியா

இவர் ஹிந்தி,தமிழ், தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் இயக்கிய தமிழ் படங்கள் கூறைவே.நிறைய தெலுங்கு படங்கள்தான் இவர் இயக்கத்தில் அதிகம்

ஆனாலும் தமிழில் இவர் இயக்கிய படங்கள் மாபெரும் வெற்றி படங்கள் ஆகும்

1956ல் ஜெமினி, அஞ்சலி தேவி நடித்த காலம்  மாறி போச்சு இவர் இயக்கத்தில் வந்தது.வகிதாரஹ்மான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்."ஏரு பூட்டிப் போவாயே அண்ணே"

ஜெமினி, சாவித்திரி நடிக்க புதிய பாதை என்ற படத்தை 1960ல் இயக்கினார்

1965ல் எங்க வீட்டுப் பெண் வெளியானது

1966ல் எம்ஜியார் நடிக்க நான் ஆணையிட்டால் , 1966ல் எம் ஜி ஆர், ஜெயலலிதா நடித்த ஒளிவிளக்கு (எம் ஜி ஆர் 100வது படம்)
1968ல் புதிய பூமி ஆகியவை இவர் இயக்கத்தில் வந்தப் படங்கள்..

என்ன.....

நீங்கள்   எதிர்ப்பார்த்த படத்தை சொல்லவில்லையா?

சொல்லிவிடுகிறேன்...

அது மாபெரும் வெற்றி படம்

புரட்சி நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த படம்...

அவர் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்ல்ல்ல்....

ஆம் அவர் நம்ம வீட்டுப் பிள்ளை...

எம் ஜி ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி படங்களில் முதல் வரிசைப் படம் "எங்க வீட்டுப் பிள்ளை" சாணக்கியா இயக்கியப் படமாகும்.

1965ல் வெளிவந்த இப்படம் ராமுடு பீமுடு என்ற பெயரில் தெலுங்கிலும், ராம் ஔர் ஷ்யாம் என ஹிந்தியிலும் வெளிவந்தது.

1973ல் இவர் அமரர் ஆனார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -55 கே சோமு

                              பரதனாக சிவாஜியோடு சோமுவும், ஏபிஎன்னும்


1917ல் பழனியில் பிறந்தவர் கே சோமு

1935 முதல் 40 வரை நாடகங்களில் நடித்தும், இயக்கியும் வந்தார்.

1948 முதல் 53 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு உதவி இயக்குநராய் பணிபுரிந்தார்.23க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றினார்

1954லில் இருந்து 67 வரை 15 படங்களை இயக்கினார்.

1954ல்  ஏ.பி நாகராஜன், நடிக்க மாங்கல்யம் படத்தை இயக்கினார்.

                ஏபிஎன் கதைஎழுத பெண்ணரசி படத்தை 1955ல் இயக்கினார்.மற்றும் அ தே ஆண்டு டவுன் பஸ் படமும் வந்தது.

பின் 1956ல் சிவாஜி, ஜி.வரலட்சுமி நடிக்க நான் பெற்ற செல்வம் இவர் இயக்கம்.

சிவாஜி, பானுமதி நடிக்க ஏபிஎன் கதை மக்களைப் பெற்ற மகராசி இவர் இயக்கத்தில் 1957ல் வெளிவந்தது.இன்றளவும் மறக்கமுடியா படம்.முத்தான பாடல்கள்

1958ல் நீலாவுக்கு நெறஞ்ச மனசு, நல்ல இடத்து சம்பந்தம் (எம் ஆர் ராதா, சௌகார் ஜானகி) படங்கள் வந்தன

இதே ஆண்டு ஏபிஎன் கதை, வசனத்தில் என் டி ராமாராவ் ராமனாக நடிக்க சிவாஜி பரதனாக நடிக்க 'சம்பூர்ண ராமாயணம்" இவர் இயக்கத்தில் வந்த  வெற்றிப் படம்.சினிமாவே பார்க்காத ராஜாஜி இப்படத்தைப் பார்த்து சிவாஜி பரதனாகவே மாறிவிட்டதாய் பாராட்டியது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று

1959ல் அல்லி பெற்ற பிள்ளை,பெண் குலத்துப் பொன் விளக்கு படங்கள் வந்தன

சிவாஜி நடிக்க அகிலன் கல்கியில் எழுதிய பாவை விளக்கு நாவல்   படமானது இவர் இயக்கத்தில் 1960ல்

ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும், டி.எம்.சௌந்தரராஜன் நடிக்க பட்டினத்தார் படமும் 1962ல் வெளிவந்தன

சிவாஜி நடிக்க நான் வணங்கும் தெய்வம் 1963ல் வந்தது

1967ல் டிஎம் சௌந்தரராஜன் நடித்த சுந்தரமூர்த்தி நாயனார் வந்தது

இவற்றைத் தவிர்த்து இவர் இயக்கத்தில் 20க்கும் மேறபட்ட சரித்திர, புராணப் படங்கள் எடுக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் கைவிடப்பட்டன.

1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல்நாள் ஆடிக்கிருத்திகை அன்று வடபழனி முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வந்தவர்..அன்று இரவே உறக்கத்தில் அமரர் ஆனார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 54 தாதாமிராசி

                   


தாதாமிராசி சிவாஜி நடித்த "முதல்தேதி' எம் ஜி ஆர் நடித்த கொடுத்துவைத்தவள் ஆகிய படங்களின் கதைக்குச் சொந்தமானவர்

1960ல் தமிழ்ப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

1960ல் பத்மினி நடித்த "கடவுளின் குழந்தை" மற்றும் ஏவிஎம் ராஜன் நடித்த ராஜாவீட்டுப் பிள்ளை ஆகிய படங்களை இயக்கினார்

1963ல் சிவாஜி .சாவித்திரி நடித்த ரத்ததிலகம் படத்தை இயக்கினார். 1964ல் சிவாஜி, சரோஜா தேவி நடிக்க "புதிய பறவை" படத்தை இயக்கினார்.ரவிச்சந்திரன் நடிப்பில் 1969ல் வந்தஓடும் நதி இவர் இயக்கமே
66ல் அண்ணாவின் ஆசை (ஜெமினி,பாலாஜி), 68ல் பூவும் பொட்டும் வெளிவந்தன

1970ல் ஜெமினி, கே ஆர் விஜயா நடித்த சங்கமம் வெளியானது

1971ல் சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் வெளியானது.

இவர் இயக்கிய படங்கள் குறைவானதாய் இருந்தாலும்..

புதிய பறவையும், சைனா யுத்தத்தை மையமாகக் கொண்ட ரத்ததிலகமும் இன்றும் மறக்கமுடியா படங்களே ஆகும்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 53 பி.மாதவன்



                                    "மன்னவன் வந்தானடி படப்பிடிப்பில் இயக்குநர் மாதவனுடன் ஒளிப்பதிவாளர் சுந்தரமும், சிவாஜியும்




1928ல் பிறந்தவர் மாதவன்.

தமிழ்த்திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

இவர் இயக்கியுள்ள 49 படங்களில் 39 படங்களின் தயாரிப்பாளரும் இவரே.அருண் பிரசாத் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தார்.

ஆரம்ப காலங்களில் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராகவும் பின்னர் ஸ்ரீதரிடம் துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இவர் இயக்கத்தில் வந்த சில முக்கியப்படங்கள்..தெய்வத்தாய்,வியட்நாம் வீடு,தங்கப்பதக்கம்,கண்ணே பாப்பா, குழ்ந்தைக்காக.

இவர் எம் ஜி ஆர் ஃபிலிம் சொசைட்டியின் தலைவராகவும், நிர்வாகியாகவும் அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேஷனல் ஃபிலிம் தயாரிப்பின் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்

இவை இயக்கிய ராமன் எத்தனை ராமன் 1970ல் தமிழில் சிறந்த படமாக    தேசிய விருதினைப் பெற்றது

1972ல் பட்டிக்காடா பட்டிணமா சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது பெற்றது

குழந்தைக்காக படத்தில் நடித்த பேபி ராணிக்கு சிறந்த குழ்ந்தை நட்சத்திற்கான தேசிய விருதும், கண்ணதாசனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது

இவர் இயக்கத்தில் வந்த வேறு சில படங்கள்

1963ல் மணி ஓசை முதல் இவர் இயக்கியப் படம்.

பின், நீலவானம்,அன்னை இல்லம், பெண்ணே நீ வாழ்க,எங்க ஊர் ராஜா,வியட்நாம் வீடு,சபதம், தேனும் பாலும்,ஞான ஒளி,ராஜபார்ட் ரங்கதுரை.

1992ல் அமரர் ஆனார்.

Sunday, August 21, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 52 கே.ஷங்கர்



1929ல் பிறந்தவர் கே.ஷங்கர்.

படத்தொகுப்பாளர், இயக்குநர்.80 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இயக்கியுள்ளார்.

இவ்ர் இயக்கிய முதல் படம்..சிங்களப்படம் "டாக்டர்"

சிவாஜி, எம்ஜியார், ஜெமினி, ஜெயலலிதா என அனவர் நடித்துள்ள படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய முதல் தமிழ்ப் படம் 1956ல் நாகதேவதை

பின் தொடர்ந்து இவர் இயக்கியுள்ள சிலப் படங்கள்

சிவகங்கை சீமை (1959)
கைராசி (60)
ஆலயமணி (62)
ஆடிப்பெருக்கு (62)
பாதகாணிக்கை (62)
ஏழைப்பங்காளன் (63)
பணத்தோட்டம் (63)
இது சத்தியம் (63)
ஆண்டவன் கட்டளை (64)
பஞ்சவர்ணக்கிளி (65)
கலங்கரைவிளக்கம் (65)
அன்புக்கரங்கள் (65)
ச்ந்திரோதயம் (66)
குடியிருந்த கோயில் (68)
அடிமைப்பெண் (69)
பல்லாண்டுவாழ்க (75)
உழைக்கும்கரங்கள் (76)
இன்று போல் என்றும் வாழ்க(77)
மிருத்ங்கசக்கரவர்த்தி(83)


2006ல் அமரர் ஆனார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 51 மகேந்திரன்


                           



அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன் 1939ல் பிறந்தார்.ஆழமான கதை, மென்மையான உணர்வுகள்,அழகியக் காட்சிகள்  இவையெல்லாம் இணைந்தது மகேந்திரனின் படங்கள் எனலாம்

 மகேந்திரனின்   இயக்குநர் சாதனைகளுக்கு முன் வேறு சாதனைகள்..

இன முழக்கம், துக்ளக் பத்திரிகைகளில் பணி புரிந்தவர்.
சினிமாவும் நானும் என்ற  நூலை எழுதியுள்ளார்
நடிகர் செந்தாமரைக்காக 'இரண்டில் ஒன்று" என்ற நாடகத்தை எழுதினார்.பின், சிவாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவரும் சம்மதிக்க, அதே நாடகம் ' சிவாஜிக்காக; தங்கப்பதக்கமாக மேடையேறியது

தங்கப்பதக்கம், நிறைகுடம்,ஆடு புலி ஆட்டம்.காளி, ரிஷிமூலம்,  போன்று    26 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆர்., கேட்டுக் கொண்டதற்கிணங்க கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு" கதை வசனம் எழுத அது ஏனோ எடுக்க முடியாதுப் போனது

இனி இவர் இயக்கியப் படங்கள்

1978ல் உமாசந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவலை ரஜினி, சரத் பாபு. ஷோபா, ஃபடா ஃபட் ஜெயலட்சுமி நடிக்க அதே பெயரில் படமாக்கினார்.ரஜினி படங்களுக்கு முன்னோடியான பஞ்ச் இப்படத்தில் ஆரம்பம் எனலாம் "இந்த காளி ரொம்ப பொல்லாதவன்".இப்படம் அந்த நாளிலேயே 'மணிரத்னம்" படமாக அமைந்தது எனலாம்.ஆம்...இப்படத்தில்  வசனங்கள் குறைவு.அதனாலேயே..இப்படத்தயாரிப்பாளர்கள், 'செந்தாழம் பூவில் என்ற பாடலை படமெடுக்க பணம் கொடுக்க மறுத்த்னராம்.கடைசியில் கமல் ஹாசன் தன் பணத்தைக் கொடுக்க அப்பாடல் படமாக்கப்பட்டது.இப்படல், பட வெற்றிக்கும் ஓர் துணையாய் அமைந்தது எனலாம்.

1979ல், பிரபல எழுத்தாளர் எழுதிய 'சிற்றன்னை:" என்னும் கதையை அடிப்படையாக வைத்து "உதிரிப்பூக்களை'த் தொடுத்து இயக்கினார்.இன்றும் அப்படம் பேசப்படும் படமாக இருப்பது சிறப்பு

1980ல் பூட்டாத பூட்டுகள்
1981 நண்டு ( சிவசங்கரியின்,நாவல்)
1982ல் மெட்டி
1982ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே (சுகாசினி அறிமுகம்)
1982ல் அழகிய கண்ணே..
1984ல் கை கொடுக்கும் கை
1986ல் கண்ணுக்கு மை எழுது
1992ல் ஊர் பஞ்சாயத்து
2006ல் அரவிந்தசாமி நடிக்க "சாசனம்"

தவிர்த்து சென்னைத் தொலைக்காட்சிக்காக அர்த்தம், காட்டுப் பூக்கள் என்று இரு நாடகங்கள்

இவ்வளவு திறமைகளை வெளிக் காட்டியவர், ஒரு திறமையை ஒளித்து வைத்திருந்தார்..

அது நடிப்புத் திறமை

அதையும் விஜய் நடித்த தெறி படத்தில் (வில்லனாக) நடித்து வெளிப்படுத்தினார்.
,

Tuesday, August 16, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 50 ருத்ரையா

                           


ஒரே படத்தில் மூலம் திரையுலகில் அழியாப் புகழ் பெற முடியுமா?

முடியும் என நிரூபித்தார் ஒரு இயக்குநர்...

அவர்.....

ஆம்...ருத்ரையா தான்

அந்தப் படம் "அவள் அப்படித்தான்"(கமல் ரஜினி, ஸ்ரீபிரியா நடித்தது)

1947ல் பிறந்தவர் இவர்

தமிழ்நாடு ஃபில்ம் இன்ஸ்டிடூட்டில் படித்தவர் இவர்.

அவள் அப்படித்தான் 1978ல் வந்த படம்.வித்தியாசமான கதைக்களன்.படம் முழுதும்,  குளோசப்      ஷாட்ஸ், நிழல்..என வித்தியாசக் கோணங்களில் எடுக்கப் பட்டிருந்தது இப்படம்.

தமிழ் மொழிப் படங்களில்    இது ஒரு மைல்க ல்  என்றார் மிரிணாள்சன்

இவரது அடுத்த படம் கிராமத்து அத்தியாயம் ,   சந்திர ஹாசன் நடித்தது.

இதற்குப் பின் தன் திரையுலகப் பயணத்தை அவரால் தொடரமுடியவில்லை..

கமல், நடிக்க "ராஜா என்னை மன்னித்து  விடு" என்னும் படத்தை ஆரம்பித்தார்.னாற்பது விழுக்காடு முடிந்த நிலையில் ஸ்டார் வேல்யு இல்லை என கமல் விலகிக் கொள்ள படம் தொடர இயலவில்லை.

உண்மையைத் தேடி என்ற படத்தை ஆரம்பித்து அதுவும் பாதியில் நின்று போனது.

டிஎக்ஸ்டி 7 என்ற சுஜாதாவின் கதையை ரகுவரனை வைத்து ஆரம்பித்தார்.அதுவும் பாதியில் நின்றது

பின் வீடு அர்ச்சனாவை வை வைத்து கடல்புரத்தில் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.ஆனால், பாதியில், அதன் தயாரிப்பாளர்கள் அதை தொலைக்காட்சிக்கு ஏற்ப மாற்றி சென்னை தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பினர்.

எல்லா விஷயங்களிலும் தோல்வி....

2014ல் அவர் அமரர் ஆனார்

ஒரு திறமையான இயக்குநரை திரையுலகு சரியாய் பயன்படுத்திக் கொள்ளாதது துரதிருஷ்டமே!