Sunday, September 25, 2016

சாமிக்கண்ணு வின்சென்ட் (தமிழ்த் திரைப்பட இயக்குநர் வரிசை)

                           


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பற்றிய இத்தொடர், இவரைப் பற்றிச் சொல்லாவிட்டால் முடிவு பெறாது.

இவர் இயக்குநர் அல்ல..ஆனாலும் திரையுலகின் முன்னோடி.தென்னிந்திய தமிழ் சினிமாவின் தந்தை.

18-4-1883ஆம் ஆண்டு..த்மிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவரும், இருபதாம் நூ ற்றாண்டின்  ஆரம்பித்தில் தென்னிந்தியாவின் சலனப் படங்களை திரையிட்டவருமான சாமிக்கண்ணு வின்சென்ட், கோவையில் கோட்டைமேடு பகுதியில் பிறந்தார்.பின்னாளில் மூன்று திரையரங்குகளை கோயம்பத்தூரில் நடத்தினார்.பல தமிழ்ப்படங்களைத் தயாரித்தார்

தனது 22அவது வயதில் தென்னக ரயில்வேயில்பொன்மலை ரயில்வே நிலையத்தில் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.

1905ஆம் ஆண்டு டியூபாண்ட் என்ற பிரஞ்சுக்காரர், திரைப்படம் சம்பந்தப்படவரைச் ச்ந்தித்தார்.இந்நிலையில் ஒருநாள் அந்த பிரஞ்சுக்காரர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், தனது புரஜக்டர், படச்சுருள் மற்றும் பல சாதனங்களை விற்றுவிட்டு தன் நாடு செல்லத் திட்டமிட்டார்.இதை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் ,தன் கையிலிருந்த பணத்துடன்.   தன் சகோதரியின்         நகைகளையும் விற்று 2250 ரூபாய்க் கொடுத்து அவரிடமிருந்த உபகரணங்களை வாங்கினார்.

பின்னர் தன்னிடமிருந்த புரஜக்டர் உதவியால், ஏசுவின் வாழ்க்கை என்ற படததை, தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் காட்டினார்.மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.பின், புது முயற்சியாக டென்ட் கொட்டகையை உருவாக்கினார்.ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து, புரஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களைக் காட்டினார்.

சினிமாவைக் கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் தயாரித்த ரயிலின் வருகை(ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்தப்படமே)என்ற படத்தைக் காட்டினார் .அதைப் பார்த்த மக்கள், ரயில் தம் மீது மோதிவிடும் என அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.வெளிநாடுகளிலிருந்து  வரும் துண்டுப் படங்களையும்    தமிழகம்   முழுதும் சுற்றிக் காட்டினார்

பின், தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற தியேட்டரை உருவாக்கி படங்களைத் திரையிடத் தொடங்கினார்.(இக்காலகட்டத்தில், சென்னையில் கெயிட்டி,கிரௌன் திரையரங்குகள் கூடாரமாகவே இருந்தன).பின்னர், அதே சாலையில் எடிசன் எனும் திரையரங்கு பேலஸ், நாஸ் திரையரங்கு,ரெயின்போ திரையரங்கு என
திரையரங்குகள் விரிவடைந்தன

அமெரிக்க புரஜக்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் முகவராகவும் ஆனார் சாமிக்கண்ணு வின்சென்ட்.தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு இப்போது சலனப்படங்களை எடுத்துச் செல்ல முடிந்தது

இதனிடையே ஒரு அச்சகமும், மாவு ஆலையையையும் நிறுவினார்/மின்சாரம் மூலம் இயங்கும் அந்த  அச்சகத்தின் பெயரே எலக்ட்ரிகல் பிரிண்டிங்க் பிரஸ் .இங்கு படங்களுக்கான விளம்பர நோடீஸ்கள் அச்சிடப்பட்டன.ஆலைகளுக்கு மின்சாரம் போக, மீதத்தை மக்களுக்காக வழங்கினார்.கோவை நகரே இவரால் மின் நகரமாய் ஆனது

இவருக்கு உறுதுணையாக இவர் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட். அவரது மகன் பால் வின்சென்ட் இருந்தனர்.கோவை ரத்தினசபாபதி நகரில் லைட் ஹவுஸ் எனும் திரையரங்கை நிறுவினார்.இவர்களிடம் ஒரே நேரத்தில் 60 கூடார கொட்டகைகள் இருந்தன.இவர்கள் நிறுவனமே வின்சென்ட் சோடா நிறுவனமாகும்

கோவை-திருச்சி சாலையில் 1937ஆம் ஆண்டு உருவான சென்டிரல் ஸ்டூடியோவின் இயக்குநர்களில் இவரும் ஒருவரானார்.இன்றும் கோட்டைமேடு பகுதியில் இவர் பெயரில் வின் சென்ட் சாலை உள்ளது

அடுத்து கோவையைத் தவிர்த்து உதகமண்டலம்,மதுக்கூர்,ஈரோடு,அரக்கோணம்,கொல்லம் என பல கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார் ,

மௌனப்படங்களில் கிராமஃபோன் மூலம் பின்னணி இசையைக் கோர்த்து,தமிழ் சினிமாவில் முதல் தொழில் நுட்பத்தைப் புகுத்தினார்.வின்சென்டிந்தொழில் நாளுக்கு நாள் விரிவடைந்தது

நிரந்திர திரையரங்குகள் வந்த பின்னர், பம்பாயில் தயாரான ஹரிச்சந்திரா போன்ற படங்கள் சென்னையில் திரையிடப் பட்டன.இதனிடையே ஆர்.நடராஜ முதலியார் என்பவர் 1916ஆம் ஆண்டில் கீசகவதம் என்ற படத்தைத் தயாரித்தார்.அதை முதலில் தன் திரையரங்கில் திரையிட்டார் சாமிக்கன்ணு வின்சென்ட்

சினிமாவை தென்னிந்தியாவில் வெற்றிகரமான தொழிலாக முன்னெடுத்து வந்தார் அவர்

1933ல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளித்திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார்.இப்படம் சென்னை எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் தினமும் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது
1935ல் ஹரிசந்திரா படத்தைத் தயாரித்தார்  .அடுத்து சுபத்ரா பரிணயம்(1935)

1936ல் பேலஸ் திரையரங்கை வாங்கியவர் ஹிந்தி படங்கலையும் திரையிடலானார்.
1937ல் கோவையில் சென்டிரல் ஸ்டூடியோஸ் தொடங்கப்பட்டபோது அதில் ஹிந்தி மொழிப்படங்களையும் திரையிட்டார்

1939ல் ஓய்வு பெற்றவர்..1942ல் மரணமடைந்தார்

இவர் தமிழ்ப்பட இயக்குநர் அல்ல.ஆனாலும், தமிழ்ப் பட வளர்ச்சிக்கு ஆணிவேர்.ஆகவே தென்னிந்திய திரையுகின் தந்தை இவர்தான் என்றால் மிகையில்லை

No comments:

Post a Comment