Sunday, September 11, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 89 தேவராஜ் மோகன்




தேவராஜ்- மோகன் ஆகிய இருவரும் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் பல  வெற்றிப் படங்களை இயக்கியவர்கள்

இயக்குநர் மாதவன் இவர்களின் திறமையைக் கண்டு பொண்ணுக்கு த்ங்க மனசு என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை 1973ல் வழங்கினர்.இப்படத்தில் விஜயகுமார் அறிமுகம்

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ்.இசை உதவி ராசைய்யா என டைடிலில் காட்டப்பட்டது.அது இளையராஜாவாகும்

பின் தொடர்ந்து 1974ல் சிவகுமார் நடிக்க கண்மணி ராஜா வெளியானது

1975ல் அன்புரோஜா வெளியாகியது
1976ல் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமாக, சிவகுமார், சுஜாதா நடிக்க மாபெரும் வெற்றிபடம் அன்னக்கிளி யை இயக்கினர்

மேலும் இவர்கள் இயக்கத்தில் வந்த படங்கள்-

1976ல் பாலூட்டி வளர்த்த கிளி
1976ல் உறவாடும் நெஞ்சம்
1977ல் ரஜினி, சிவகுமார் நடிக்க கவிக்குயில்
1977ல் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
1978ல் சிட்டுக்குருவி
1979ல் சிவகுமாரின் 100ஆவது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1979ல் பூந்தளிர்
1979ல் அம்பிகா அறிமுகமாக "சக்களத்தி"
1980ல் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
1980ல் கண்ணில் தெரியும் கதைகள் ..சரத்பாபு நடித்த இப்படத்தில், ஜி கே வெங்கடேஷ், இளையராஜா, வி.குமார், ஷங்கர், கணேஷ் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இசை அமைத்தனர்
1980ல் இசை பாடும் தென்றல்

பெரும்பாலான படங்களில் சிவகுமாரே கதாநாயகனாக நடித்தார்

கலைஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கப் பட வேண்டும்.அந்த அங்கீகாரம் இவர்களுக்குக் கிடைக்காததால்..தேவராஜ் ஒரு காலகட்டத்தில் அம்பத்தூர் பகுதியில் சைக்கிள் கடை வைத்து சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டியும், காற்றடித்தும் வாழ்நாளை கடத்தினார்

மோகனும் சரியான அங்கீகாரம் இல்லாமல் 2012ல் அமரர் ஆனார்

No comments:

Post a Comment