Tuesday, September 6, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 80 பாரதிராஜா

                         

1941ல் தேனிக்கு அருகில் உள்ள அல்லிநகரத்தில் பிறந்தவர் சின்னசுவாமி.

பாரதிராஜாவாய் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தவர்.

புட்டண்ணா,அவர்களுக்கு உதவியாளராய் இருந்தவர்.பின், புல்லையா, கிருஷ்ணன் நாயர்,அவினாசி மணி, ஏ.ஜகன்னாதன் ஆகியோருடன் பணியாற்றியவர்.

ஸ்டூடியோக்களில் இருந்து, படபிடிப்புகளை வெளியிலும், கிராமங்களிலும் என கொண்டு சென்றவர்

தமிழ், தெலுங்கு.ஹிந்தி படங்களை இயக்கியவர்

16 வயதினிலே மூலம் இயக்குநர் ஆனார்.கமல், ரஜினி, ஸ்ரீதேவி....மாபெரும் வெற்றி

தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிகள்.கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை.மண்வாசனை, முதல் மரியாதை..
இவரைப் பற்றி அறிய இவை போதாதா..

சொல்கிறேன் மேலும்..சத்யராஜ் நடிக்க..நாடக ஆசிரியர் கண்ணன் ஜாதிகள் இல்லையடி பாப்பா நாடகத்தை வேதம் புதிது என்ற பெயரில், கண்ணனே கதை, வசனம் எழுத இவர் இயக்க....பிரமாத வெற்றி..

தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா
நான் கரையேறிட்டேன்..நீங்க,,
அடடா..அந்தக் காட்சியில் இந்த பளீர் வசனங்கள்...

கதை வசனகர்த்தாவை பாராட்டுவதா'''இயக்குநரைப் பாராட்டுவதா...

(இப்படத்திற்குப் பின் கண்ணன் வேதம் புதிது கண்ணன் என்று அனைவராலும் அறியப்பட்டார் )



கிழக்கு சீமையிலே,கருத்தம்மா,அந்திமந்தாரை...வெற்றி தொடர்ந்தது

முதல்மரியாதையில் சிவாஜி, ராதாவை வைத்து இயக்கிய இவரால் அறிமுகமானவர்கள் ராதிகா,ரேவதி,ரேகா,ரஞ்சிதா, ராதா என சொல்லிக் கொண்டே போகலாம்

இவரிடம் துணை இயக்குநர்களாக இருந்தவர்கள், கே.பாக்கியராஜ்,மணிவண்ணன்,மனோபாலா,சித்ரா லட்சுமணன்,மனோஜ்குமார்,பொன் வண்ணன்,சீமான், லீனா மணிமேகலை,நிர்மல்குமார் ஆகியோர்

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்-

புதிய வார்ப்புகள்
நிறம் மாறாத பூக்கள்
நிழல்கள்
கல்லுக்குள் ஈரம்
டிக் டிக் டிக்
காதல் ஓவியம்
வாலிபமே வா வா
மண் வாசனை
புதுமைப் பெண்
ஒரு கைதியின் டயரி
கடலோரக் கவிதைகள்
புது நெல்லு புது நாத்து
நாடோடித் தென்றல்
கிழ்க்கு சீமையிலே
பசும்பொன்
தாஜ்மகால்
ஈர நிலம்
கண்களால் கைது செய்
பொம்மலாட்டம்
அன்னக்கொடி

பொம்மலாட்டம் வித்தியாசமான படம்.எனக்குப் பிடித்த படம்

இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து ஆகியோர் வழங்கிய இன்னிசை விருந்துகளை மறக்கமுடியா படங்கள்

தவிர்த்து கல்லுக்குள் ஈரம்,தாவணிக்கனவுகள்,இதயம்,தந்து விட்டேன் என்னை,ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி ஆகியவற்றில் நடித்துள்ளார்

டிவி சீரியல்கள் தெக்கத்திப் பொண்ணு,அப்பனும் ஆத்தாவும் போன்றவற்றையும் எழுதி இயக்கியுள்ளார் 

No comments:

Post a Comment