Sunday, September 4, 2016

த்மிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 78 விசு

         



1945ல் பிறந்தவர் விசு..

இவரின் அண்ணன் ராஜாமணி, தம்பி கிஷ்மூ

நண்பர்கள் நான், மௌலி, பிரியதரிஷினி கணேஷ்

அனைவரும் அம்பத்தூரில் நாடகங்கள் போட்டு வந்தோம்

எங்கள் குழுவிற்கு வழக்கமாக மௌலிதான் நாடகங்கள் எழுதுவார்.ஒருசமயம் அவர் சற்று பிசியாக இருந்ததால் விசுவை அந்த முறை எழுதச் சொன்னார்.

விசுவின் எழுத்துத் திறமை வெளிப்பட்டது

 நாடக எழுத்தாளர் பின் திரைக்கதை வசனகர்த்தா..தொடர்ந்து இயக்குனர்

இவரது குடும்பம் ஒரு சிலம்பம் நாடகம் படமானபோது அதை எஸ் பி முத்துராமன் இயக்க, விசுவும் நடித்தார்

பின் தொடர்ந்து, தில்லுமுல்லு,நெற்றிக்கண், என படங்கள் தொடர்ந்தன

 கண்மணி   பூங்கா மூலம் இயக்குனர் ஆனார்.ஆண்டு 1982.படம் தோல்வி.

ஆனால் அவர் தோல்வியடையவில்லை.

மணல்கயிறு, டௌரிகல்யாணம் ஆகிய படங்கள் தொடர அவை வெற்றி படங்களாக அமைந்தன

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்..

புயல் கடந்த பூமி,ராஜ தந்திரம்,நாணயம் இல்லாத நாணயம்,அவள் சுமங்கலிதான்,கெட்டு மேளம்,சிதம்பர ரகசியம்,சம்சாரம் அது மின்சாரம்,திருமதி ஒரு வெகுமதி,காவலன் அவன் கோவலன்,பெண்மணி அவள் கண்மணி,வீடு மனைவி மக்கள்,சகல கலா சம்பந்தி,வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை,உரிமை ஊஞ்சலாடுகிறது,நீங்க நல்லாயிருக்கணும்,பட்டுக்கோட்டை பெரியப்பா,மீண்டும் சாவித்திரி, சிகாமணி ரமாமணி ஆகியவை

இவர் நாடகங்களைப் பார்த்துவிட்டு, தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து வந்த இவரை, அவருக்கான மூன்று வருட சம்பளத்தைக் கொடுக்கிறேன்...தைரியமாக வேலையை விட்டு திரையுலகிற்கு வா என பாலசந்தர் அழைத்து வந்தார்.

இவர் தன் படங்களைத் தவிர மற்றவர் படங்களிலும் நடித்தார்.கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துள்ளார்

சம்சாரம் அது மின்சாரம் தேசிய விருது பெற்றது
நிங்க நல்லாயிருக்கணும் சமூக நலனுக்கான தேசிய விருதைப் பெற்றது

பின்னர், சன் டிவியில் இவர் அரட்டை அரங்கமும், ஜெயாடிவியில் மக்கள் மன்றமும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

No comments:

Post a Comment