Friday, September 9, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 86 சந்தான பாரதி - பி.வாசு

                 
             



எம்.ஆர்.சந்தானம் என்றொரு நடிகர் இருந்தார்.அவரது மகன் சந்தான பாரதி.

பீதாம்பரம் என்ற பிரபல ஒப்பனைக் கலைஞர் இருந்தார்.அவர் மகன் வாசு

இருவரும் சேர்ந்து பாரதி-வாசு என்று இரட்டையர்களாக சில படங்களை இயக்கினார்கள்

அவை, 1981ல் பன்னீர் புஷ்பங்கள், 82ல் மதுமலர்83ல் மெல்லப் பேசுங்கள் 85ல் நீதியின் நிழல் (சிவாஜி, பிரபு நடித்தது)87ல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு

பின் இருவரும் சேர்ந்து இயக்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட, தனித்தனியாக பணியாற்றத் தொடங்கினார்கள்

சந்தானபாரதி 1988ல் சிவாஜி நடிக்க என் தமிழ் என் மக்கள்,பின் பூ விழி ராஜா, 90ல் காவலுக்குக் கெட்டிக்காரன் 91ல் கமில் நடிக்க குணா 93ல் சின்ன மாப்பிள்ளை 94ல் மகாநதி அடுத்து வியட்னாம் காலனி 95ல் எங்கிருந்தோ வந்தான் (சத்தியராஜ்) ஆகிய படங்களை இயக்கினார்

பின், 1976 முதல் படங்களில் நடித்தும் வருகிறார்.அவற்றுள் சில

கரகாட்டக்காரன், மைக்கேல் மதன காமராஜன்,அன்பே சிவம்,பஞ்ச தந்திரம்,நள தமயந்தி, வசூல் ராஜா< குசேலர்,உன்னைப் போல ஒருவன், தூங்காவனம்

                 

குணா படத்திற்கு தேசிய விருது கிடைத்தது

இனி வாசு பற்றி.....

1954ல் பிறந்தவர் வாசு.ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் இருந்தார்.தனித்து வந்ததும் 1988ல் என் தங்கச்சி படிச்சவ மூலம் இயக்குநர் ஆனார்

தொடர்ந்து 1989ல் வாத்தியார் வீட்டுப் பிள்ளை,பொன்மனச் செம்மல் (விஜய்காந்த்),90ல் பிள்ளைக்காக,பணக்காரன் (ரஜினி)
வேலைகிடைச்சாச்சு,நடிகன் 91ல் சின்னதம்பி,கிழக்குக்கரை, அதிகாரி 1992ல் ரிக்க்ஷாமாமா,செந்தமிழ்ப்பாட்டு,இது நம்ம பூமி,அம்மா வந்தாச்சு,மன்னன்
1993ல் வால்டர் வெற்றிவேல்,உழைப்பாளி (ரஜினி) 94ல் உடன் பிறப்பு,சேதுபதி ஐ பி எஸ்.,., சாது 95ல் காட்டுமரக்காரன்,கூலி, மிஸ்டர் மெட்ராஸ் 96ல் லவ் பேர்ட்ஸ் 97ல் வாய்மையே வெல்லும்,பத்தினி 99ல் சுயம்வரம்,மலபார் போலீஸ்,பொண்ணு வீட்டுக்காரன்2000ல் சீனு,வண்ணத்தமிழ்ப் பாட்டு,காக்கை சிறகினிலே 2001ல் அசத்தல்,2003ல் காதல் கிசு கிசு 2005ல் சந்திரமுகி,2006ல் பரமசிவம்,2007ல் தொட்டால் மலரும் 2008ல் குசேலன் 2011ல் புலிவேஷம்

இதைத்தவிர பலபடங்களுக்கு கதை எழுதியுள்ளார்

இவர் நடிப்பில் வந்த சில படங்கள்-

குசேலன், தசாவதாரம்,சந்திரமுகி,அரசாட்சி,காதல் கிசு கிசு,பந்தா பரமசிவம்,சீனு, வல்லரசு 

No comments:

Post a Comment