Wednesday, September 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்- 83 கங்கை அமரன்

                 
                 

பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,பாடகர்,திரைக்கதை வசனகர்த்தா,தயாரிப்பளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசைவிழாக்கள் நடத்துநர்,இயக்குநர்....

ஆம்..அஷ்டாவதானி கங்கை அமரன்

இளையராவின் இளவல்
இயக்குநர் வெங்கட் பிரபு, நகைச்சுவை நடிகர் பிரேம்ஜியின் தந்தை

1982ல் கோழிகூவுது படம் மூலம் இயக்குநர் ஆனார்.படம் வெற்றி

தொடர்ந்து..

1983ல் கொக்கரக்கோ
84ல் பொழுது விடிஞ்சாச்சு,தேவி ஸ்ரீ தேவி, வெள்ளைப் புறா ஒன்று,
87ல் எங்க ஊரு பாட்டுக்காரன்
88ல் சக்கரைப் பந்தல், செண்பகமே செண்பகமே,கோயில் மணியோசை
89ல் கரகாட்டக்காரன்,அண்ணனுக்கு ஜே
90ல் ஊரு விட்டு ஊரு வந்து
91ல் கும்பக்கரை தங்கையா
92ல் வில்லி பாட்டுக்காரன்,சின்னவர்,பொண்ணுக் கேத்த புருஷன்
93ல்கோயில் காளை
94ல் அத்தை மகள் ரத்தினமே
97ல் தெம்மாங்கு பாட்டுக்காரன்

1989 ஜூன் 16ல் வெளிவந்த கரகாட்டக்காரன் மதுரையில் 425 நாட்கள்  ஓடி சாதனை புரிந்தது

இவர் இசையில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன.இது இயக்குநர்கள் பக்கம் என்பதால்..அவற்றை முழுமையாகக் கூறாவிடினும்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரே ஒரு படத்தைக் குறிப்பிடுகிறேன்..அது..

வாழ்வே மாயம்...(கமல்,நடித்தது)

கங்கை அமரன் உங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாதது திரையுலகின் ஒரு தவறென்றே தோன்றுகிறது



பாடலாசிரியராக இவர் பல படங்களில்  பிரகாசித்துள்ளார்     அவற்றுள் சில..

பதினாறு வயதினிலே,அவள் அப்படித்தான்.முள்ளும் மலரும்,பயணங்கள் முடிவதில்லை...பட்டியல் நீள்கிறது

கரகாட்டக்காரனில், "இந்த மான் உந்தன்", மாங்குயிலே பூங்குயிலே, ஊரு விட்டு ஊரு வந்து...அட போங்க சார்.....

2015ல் மாசு படம்வரை இவர் பயணம் தொடர்கிறது

வாழ்த்துகள். சார்..

இன்னமும் உங்கள் முழு திறமையையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது

இதற்குக் காரணம் ஈகோ என்று சொல்லிவிடாதீர்கள்

No comments:

Post a Comment