Thursday, September 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 72 ஜோசப் தளியத்

                                 


திருவனந்தப்புரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் ஜோசப் தளியத்.இயக்குநர் எஸ்.சௌந்தரராஜனிடம் உதவி இயக்குநராய் இருந்தார்

பின், சென்னை கீழ்பாக்கத்தில் சிட்டாடல் என்ற பெயரில் படப்பிடிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்.

1948ல் எஃப்.நாகூர் இயக்கத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடிக்க ஞானசௌந்தரி படத்தைத் தயாரித்தார்

பின், 1950ல் மகாலிங்கம் நடிக்க இதயகீதம் என்ற படத்தை முதலில் இயக்கினார்.

பின், ஜெமினி, பத்மினி நடிக்க 1957ல் மல்லிகா என்ற படத்தை இயக்கினார்."வருவேன் நான் உன் மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடல் பிரபலம்.அப்பாடல் காட்சியில்தான் முதன் முதலாக (விஜயபுரி) ஆனந்தனை அறிமுகப்படுத்தினார்

பின் 1960ல் ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க விஜயபுரி வீரன் படத்தை இயக்கினார்

1965ல் விளக்கேற்றியவள் என்ற படமும், இரவும் பகலும் என்ற படமும் வந்தன.இரவும் பகலும் படத்தில் ஜெயஷங்கர் அறிமுகம்

1966ல் இயக்கிய படம் காதல் படுத்தும் பாடு. 

No comments:

Post a Comment