Saturday, September 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 77 கொத்தமங்கலம் சுப்பு

                                 

1910ல் பிறந்தவர் கொத்தமங்கலம் சுப்பு என்று பிரபலமான சுப்பிரமணியன்

பாடலாசிரியர்,எழுத்தாளர்,நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்

காலத்தால் அழிக்கமுடியா நவீனம் "தில்லானா மோகனாம்பாள்' .கலைமணி என்ற பெயரில் வடித்தவர்.தவிர்த்து, மிஸ் ராதா, பந்தனல்லூர் பாமா பொன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.ஜெமினி வாசன் அவர்களின் நெருங்கிய நண்பர். சுருங்கச் சொன்னால், ஜெமினியில் இரண்டாமிடம் இவருக்குத்தான் எனலாம்

திரைக்கதை ஆசிரியராக, சந்திர லேகா,அபூர்வ சகோதரர்கள்,வஞ்சிக்கோட்டை வாலிபன்,இரும்புத்திரை,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ஆகியவற்றில் பங்குப் பெற்றார்

1947 ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் நாவலைத் தழுவி மிஸ்மாலினி என்ற படத்தை இயக்கினார்.

கண்ணம்மா என் காதலி என்ற படமும் இவர் இயக்கத்தில் வந்தது.

1953ல் கே பி சுந்தராம்பாள் நடிக்க ஔவையார் படத்தை இயக்கியவர் இவரே

தவிர்த்து பல படங்களிலும் நடித்துள்ளார்.அவற்றுள் சில மிஸ் மாலினி, ஔவையார், கண்ணம்மா என் காதலி, பாவமன்னிப்பு

நடிகை சுந்தரிபாயை மணந்து அவருடன் இணைந்து நடித்துள்ளார்

மகாத்மா காந்தியின் வரலாறை காந்தியின் கதை என்ற பெயரில், நாட்டுப்புற பாடல்கள் வடிவில் எழுதி..சொல்லி வந்தார்

1974ல் அமரர் ஆனார் 

No comments:

Post a Comment