Saturday, September 10, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 87 ராஜசேகர்

               

ரஜினி காந்த், கமல் ஹாசன் ஆகியோர் படங்களை இயக்கியவர்.

மலையூர் மம்பட்டியான் முளம் தியாகராஜனுக்கு வெள்ளிவிழா படத்தைக் கொடுத்தவர்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு பட இயக்குநர்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1981 கண்ணீர் பூக்கள்
82 அம்மா
83 மலையூர் மம்பட்டியான்
84 தம்பிக்கு எந்த ஊரு (ரஜினி)
85 ஈட்டி (விஜய்காந்த்)
85 படிக்காதவன் (சிவாஜி, ரஜினி)
85 காக்கிச் சட்டை (கமல், மாதவி)
86முரட்டுக் கரங்கள்
86 கண்மணியே பேசு
86 லட்சுமி வந்தாச்சு (சிவாஜி)
86 மாவீரன் (ரஜினி)
86 விக்ரம் (கமல்,சத்யராஜ்)
87 கூலிக்காரன் (விஜய்காந்த்)
88 கழுகுமலைக்கள்ளன்
88பாட்டி சொல்லத் தட்டாதே (மனோரமா)
89 மாப்பிள்ளை(ரஜினி)
89 கருங்குயில் குன்றம்
90 புது வாரிசு
91 தர்மதுரை (ரஜினி)

தர்மதுரை படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் ஒரு விபத்தில் மரணம் அடைந்தார்



Comments
Bhoopal Singh மலையூர் மம்பட்டியான்...அருமையான ராபின்வுட் படம். 25 ஆண்டுகள் கழித்து , தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்து ரீ மேக் செய்யப்பட்டது. ஆனால் இது வந்ததும் தெரியாது , போனதும் தெரியாது.
பெரிய பெரிய போலீஸ் ஜாம்பவான்களால் பிடிக்க முடியாத மம்புட்டியானை இறுதியில் கூடவே இருந்த காமடியன் செந்தில் காட்டிகி கொடுப்பார் !
' சுப்பிரமணியபுரத் 'திலும் இது அப்படியே கையாளப்பட்டுள்ளது. செந்திலுக்கு பதிலாக இங்கே ' கஞ்சா 'கருப்பு !
LikeReply220 hrs
Bhoopal Singh ' அம்மா ' ஒரு நான்கு வயது ஆண் குழந்தையை வைத்து கலக்கு கலக்கியிருப்பார். சில காட்சிகளில் அந்த குழந்தை தனியே மாடிபடியேறுவது , ரோட் க்ராஸ் செய்வது நமக்கே பயமளிக்கும் .
சிவகுமார் , சுஜாதா நடித்தது !
LikeReply120 hrs
Naveen Kanna பூபால்சிங்சாா்... அது பூந்தளிா். இது சரிதா, தியாகராஜன் நடித்தது.
LikeReply18 hrs
Bhoopal Singh சுஜாதா மாதிரியே அம்மா சிலை வருமே ! அது பூந்தளிரா ?அம்மா இல்லையா !நன்றி நவீன் கன்னா ஐயா !
LikeReply116 hrs
T V Radhakrishnan
Write a reply...
Bhoopal Singh ' படிக்காதவன் ' ...சிவாஜி , ரஜினி என்றாலும் அம்பிகாதான் கவனம் ஈர்ப்பார். நாகேஷ் நடிப்பு அருமையென்றாலும் ' உனக்காக நானை ' பிரதிபலிக்கும் !
LikeReply120 hrs
Bhoopal Singh ' தர்மதுரை '.....ரஜினியின் ' ஆறிலிருந்து அறுபது வரை ' ' அதிசய பிறவி ' இரண்டின் கலவையாக இருக்கும். செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் ( நீயென்ன நானென்ன ' பாடலே செண்டிமெண்ட் மழை ! )
LikeReply119 hrs
Bhoopal Singh ' தம்பிக்கு எந்த ஊரு ? '.....செம ஜாலியான படம் ' காதலின் தீபமொன்று ' எஸ்.பி.பி குரலில் இளங்காதலர்களை மட்டுமின்றி , பிள்ளை குட்டி பெற்றவர்களையும் சுண்டி இழுக்கும் !
' கெட்டும் பட்டணம் சேர் ' என்ற பழமொழிக்கேற்ப , நாயகர்கள் கிராமத்திலிருந்து பட்டணம் வந்...See More
LikeReply119 hrs
Jeeva Nanthan He wrote the 'red' dialogues for Sivappu Malli , directed by Rama Narayanan
LikeReply19 hrs
Bhoopal Singh ' நானும் ரௌடிதானு 'க்கு இன்ஸ்பிரேஷன் ' காக்கி சட்டை 'தானோ !?
LikeReply19 hrs
Bhoopal Singh ஏ.வி.எம்மின் ' பாட்டி சொல்லைத் தட்டாதே ' குழந்தைகளை குதுகலப்படுத்திய படம்.
' சீதாப்பாட்டி , அப்புசாமி ' கணக்கா மனோரமாவும் , எஸ்.எஸ்.சந்திரனும் அடிக்கும் லூட்டி என்ஜாயிபள். மனோரமாவுக்கு கம்பு சண்டையெல்லாம் உண்டு. பாண்டியராஜன்--ஊர்வசி ஜோடியென்பதே மறந...See More
LikeReply219 hrs
Bhoopal Singh சந்திரபோஸ் இசையில் ஆச்சி பாடியது !
LikeReply18 hrs
T V Radhakrishnan
Write a reply...
Bhoopal Singh ' மாப்பிள்ளை ' தெலுங்கில் சிரஞ்சீவி நடித்தது ! ரஜினியின் முதல் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த ஸ்ரிவித்யா இதில் அவருக்கு மாமியார் !
LikeReply19 hrs
Saravanan Savadamuthu மாரடைப்பால்தான் உயிரிழந்தார். செயின் ஸ்மோக்கர்.
LikeReply119 hrsEdited
Bhoopal Singh உண்மை .
LikeReply19 hrs
T V Radhakrishnan
Write a reply...
Bhoopal Singh ' விக்ரம் '....கமல் படம் , சுஜாதா கதை. இந்தி நடிகர் அம்ஜத்கான் , இன்னொரு இந்தி நடிகை ( பெயர் சட்டென்று வரவில்லை , பாபியில் நடித்தவர் ) எல்லோரும் நடித்தனர். அம்பிகா ஜோடி !
' என் ஜோடி மஞ்சக்குருவி 'யின் ஆரம்ப வரிகள் அம்ஜத்கானுக்கு !
சத்யராஜ் வில்ல...See More
LikeReply19 hrs
Bhoopal Singh மாவிரன்......இதுவும் ' விக்ரமு'ம் வெளிவந்த ஆண்டு 1986.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி படம் , ஏனெனில் இந்தியிலி ' மர்த் என்ற பெயரில் கலெக்ஷனை அள்ளியது .
சில தியேட்டர்களில் 70 எம்.எம்மில் வெளியானது !...See More
LikeReply19 hrs
Bhoopal Singh இப்படத்தில் வில்லனை வெற்றி கொள்ள கதாநாயகன் எடுத்த முயற்சியைவிட , கதாநாயகியின் இறுமாப்பையும் , திமிரையும் அடக்க செய்த காரியங்கள்தான் அதிகம் !
LikeReply13 hrs
T V Radhakrishnan
Write a reply...
Naveen Kanna ராஜசேகர்சாா்... இவா் படங்களில் பொழுதுபோக்கு ஹம்சங்களுடன், நல்ல கதை, அமுத்தமான காட்சியமைப்புகள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்... இவா் இயக்கத்தில் அதிகபச்ச வெள்ளிவிழா படங்கள் அமைந்தன... ரஜினிசாரை மிகஅருமையாக பயன்படுத்தி கொண்ட சிலரில் உச்சம் பெற்றவா் இவரே... ரசிகா்களின் எண்ணங்களை அழகாக தன்படங்களில் பிரதிபலிப்பாா். இவர் நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால் ரஜினிசாா் கணக்கில் மேலும் சில வெள்ளிவிழாக்கள் இணைந்திருக்கும்.
LikeReply17 hrs
Naveen Kanna AVM நிறுவனம் தயாரிப்பில்...வெளிவந்த படம் அம்மா... சிறந்த இணையாக கருதப்பட்ட சரிதா, தியாகராஜன் நடித்தது. பேஸ்டரில் கதாநாயகனுக்கு இருக்கும் முக்கியத்துவம் படத்திலில்லை, சில காட்சிகள் மட்டுமே தோன்றி மறைந்துவிடுவாா்... ஓவா் அழுகாச்சி படம்... சுமாா் ரகமே... பாடல்கள் அருமை.
LikeReply117 hrs
Naveen Kanna மலையூர் மம்பட்டியான்... உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டகதை, அருமையான, செதுக்கிய திரைக்கதை, அதே தியாகராஜன், சரிதா இணை, இளைராஜா இசை என சேர படம் சூப்பா் டூப்பா் ஹிட்... ( 2100 போ் அமா்ந்து படம் பாா்க்க கூடிய மதுரை தங்கத்தில் 75 நாட்களுக்கு மேல் ஓடிய படம்...See More
LikeReply116 hrs
Bhoopal Singh ஜெயமாலினியா , சில்க்கா ?
LikeReply16 hrs
Naveen Kanna இல்லை சாா்... ஜெயமாலினி தான். நன்றாக நினைவிருக்கிறது.
LikeReply16 hrs
T V Radhakrishnan
Write a reply...
Naveen Kanna தம்பிக்கு எந்த ஊரு... ரஜினிசாாின் மாஸ்டா் பீஸில் ஓன்று. நகைசுவையில் கலக்கியிருப்பாா்... இந்த படத்திற்க்கு பிறகு தான் ரஜினிசாருக்கு ரசிகைகள் (பெண்கள்)கூட்டமும் சேர ஆரம்பித்தது என்றால் மிகையாகாது. டான்ஸே வராத ரஜினிசாரை "என் வாழ்விலே வரும், அன்பேவா" பாடலு...See More
LikeReply16 hrs
Gnanaprakash Keerthi விறுவிறுப்பாக படமெடுப்பதில் வல்லவர்.
LikeReply16 hrs
Naveen Kanna படிக்காதவன்... அமிதாப் நடித்து தோல்வியடைந்த உத்தாா் ஹிந்தி படத்தின் ரீமேக்... தயாாிப்பாளர் வீராசாமி, ராஜசேகா் அவா்கள் யோசிக்க, ரஜினிசாா் "இல்லை,இந்த படம் எனக்கு செட்டாகும், கண்டிபாய் ஹிட்டாகும்" என கூறினாா்... பிறகு ரிஸ்க்குக்கு யோசித்து சிவாஜிசாரையும...See More
LikeReply16 hrs
Bhoopal Singh 6 வருடங்களுக்குப் பின் என்றால் ' நான் வாழ வைப்பேனை ' குறிப்பிடுகிறிர்களென நினைக்கிறேன்.
நடுவில் இருவரும் இணைந்து பாலாஜி தயாரித்த ' விடுதலை ' ( குர்பாணி ) படத்தில் நடித்திருக்கிறீர்களே !
LikeReply12 hrs
Naveen Kanna படிக்காதவன் 1985 தீபாவளி ரிலீஸ்... விடுதலை 1986 புத்தாண்டு ரிலீஸ்... 14 வருடங்களுக்கு பின் படையப்பா... சாா்
LikeReply12 hrs
T V Radhakrishnan
Write a reply...
Ramesh Rathinasamy இன்னும் கூடுதல் தகவல் தர முயற்சி செய்யலாம்.
LikeReply15 hrs
Naveen Kanna கமல்சாாின் ரசிகர்கள் மொத்தமாக ஒன்று திரண்டு மாலை மரியாதை, பட்டாசு, பால்,கற்பூரமென கொண்டாடுவது இரண்டே படங்களுக்கு தான். ஒன்று சகலகலா வல்லவன், மற்றொன்று காக்கிசட்டை....
LikeReply14 hrs
Naveen Kanna காக்கிசட்டை... கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மன்மதன் என ஒருவார பாத்திரிக்கை விமா்சனத்தில் குறிப்பிட்டது. உண்மையிலே எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த அற்புமான காக்டெயில் தான் காக்கிசட்டை.... நடிப்பு, டான்ஸ், பைட் மட்டுமா... உடற்பயிற்சி காட்சியிலும் கமல்சாா் கலக...See More
LikeReply13 hrs
Bhoopal Singh நாற்காலியை கையில் ஏந்தியபடி ஒரு சண்டை! இதில்தானே !
LikeReply12 hrs
Naveen Kanna அது தூங்கதே தம்பி தூங்காதே... சாா்.
LikeReply12 hrs
T V Radhakrishnan
Write a reply...
Naveen Kanna 1986 தீபாவளி ரிலீஸ்... இயக்குனாின் இரண்டு படங்கள் வெளிவந்தன. பரபரப்புடன் எதிா்பாா்த்த சூப்பா்ஸ்டாாின் மாவீரன், எந்த விதசலனமும் இன்றி வெளியான நடிகா் திலகத்தின் லட்சுமி வந்தாச்சு. சொல்லிவைத்தாா் போல் இரண்டும் தோல்வியை தமுவின. மாவீரன் பத்மாலயா பிக்சா்ஸ்...See More
LikeReply113 hrs
Bhoopal Singh அப்பப்பா....மாவீரன் ஒரு படத்தைக் குறித்து எத்தனை செய்திகள் ! அப்படியே குவித்தது விட்டீர்கள்.....ஐயோடா!
LikeReply13 hrs
Bhoopal Singh ரேவதியின் இரு படங்கள் வந்ததாகவும் சொல்லலாம் !
லட்சுமி வந்தாச்சு , புன்னகை மன்னன் .
LikeReply13 hrs
T V Radhakrishnan
Write a reply...
Naveen Kanna AVM தயாாிப்பு... பாட்டா
LikeReply113 hrs
Naveen Kanna AVM ... தயாரிப்பு, பாட்டி சொல்லை தட்டாதே... மாபெரும் வெற்றி... வெள்ளிவிழா...
LikeReply13 hrs
Bhoopal Singh ' தம்பிக்கு எந்த ஊரு '....ரஜினி கிராமத்துக்குப் போய் பாசுமாடிடம் ராமராஜன் கணக்கா பால் எல்லாந் கறப்பார். இந்த காட்கியை நினைக்கும்போது எனக்கொரு சந்தேகம் !
தெலுங்கில் , சித்தார்த் நடிக்க ' நூவு ஒஸ்ஸாவுண்டே நேனு ஒத்துண்டானா ? '' என்பதாக ஒரு படம்.
...See More
LikeReply13 hrs
Naveen Kanna மைனே பியாா்கியா... சாா்.
LikeReply12 hrs
Bhoopal Singh அந்த தெலுகு படத்திற்கு முன்னோடி ' மைநே பியார் கியா !'வா ?
இப்படத்தில்தான் அடிக்கடி புறாக்கள் பறக்கும். அதைப் பிடிக்க , எழுந்து எம்பிய ஒரு பால்கனி ரசிகர் , மேலேயிருந்து கீழி விழுந்து பலத்த அடிப்பட்டார் என படித்திருக்கிறேன்...இது உண்மையா ? இல்லை படத்தை பிரமோட் பண்ண அவிழ்த்து விட்ட கதையா ?
LikeReply12 hrs
T V Radhakrishnan
Write a reply...
Bhoopal Singh ஒஸ்தாவுண்டே
LikeReply13 hrs
Naveen Kanna பாட்டி சொல்லை தட்டாதே... படத்தின் இசையமைப்பாளா் சந்திரபோஸ். படம் ஹிட்டான பின் பாடல்கள் ஹிட்டானது. குறைந்த செலவில் அதிகலாபம். படம் சற்று தோய்ந்து நின்றபோது, கிளைமாக்ஸ் கார தமிழ திரையறங்குகளில் கொண்டுவந்து, மீண்டும் படத்தை பரபரப்பாக்கினா்கள். காரை பாா்க்க சென்ற கூட்டம் படத்தையும் பாா்த்துவிட்டு வந்தனா்... வியாபார உத்தியில் AVM நிறுவனத்தை அடிக்கொள்ள முடியாது.
LikeReply8 hrs
Naveen Kanna மாப்பிள்ளை... 1989ம் வருட தீபாவளி ரிலீஸ். போட்டியிட்ட அத்தனை படங்களையும் பின்னுக்கு தள்ளி வசூல் அள்ளிஎடுத்த படம்... ரஜினிரசிகா் கொண்டாட வேண்டுமாயின், பைட், டான்ஸ் அழகாய் அமையவேண்டுமே அறிந்தவா். ஸ்லோ டான்ஸ் "என்னேட ராசி நல்லராசி"... ஸ்பீடு டான்ஸ் "உன்னை...See More
LikeReply7 hrs
Naveen Kanna தா்மதுரை... 1990 தீபாவளிக்கு என அறிவித்து கடைசியில், 1991 பொங்கலுக்கு ரிலீஸ் செய்தனர்... ( ரஜினி படம் வெளியாகததால் துக்க தீபாவளி என போஸ்டா் அடித்தனா்... 28.12.1990 மதுரை வந்த ரஜினிசாா், ரசிகா்களிடம் இனி ஒவ்வொரு தீபாவளிக்கும் என் படம் கண்டிப்பாய் வெளியா...See More
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan ராஜசேகர் ஒரு கமர்ஷியல் இயக்குனர்.தம்பிக்கு எந்த ஊரு ரஜினியை சரியான திசைக்கு திருப்பிய படம்.அவரிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து ரஜினிக்கும் தெரிய வைத்த படம்.
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan கொள்ளைக்கார கும்பலில் ஊடுருவும் போலீஸ் ஆபிசர் சிவாஜி நடித்த ராஜா அதுதான் கதை.சத்யராஜ் க்கு பெரிய பேர் கொடுத்த படம்.இதில் ஏற்பட்ட அனுபவத்தில் தான் தன் தயாரிப்பில் சத்யராஜை கதாநாயகனாக்கினார் கமல்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan காக்கி சட்டை
LikeReply7 hrs
Ezhichur Aravindan காக்கி சட்டையில் சத்யராஜ் ப்ளஸ் என்றால் விக்ரமில் அவர் மைனஸ்
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan தம்பிக்கு எந்த ஊரிலும் சத்யராஜ் உண்டு.மாதவி உண்டு. காக்கி சட்டையிலும்..
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan கூப் சூரத் என்ற ராகேஷ் ரோஷன் ரேகா நடித்த ஹிந்தி படத்தை லட்சுமி வந்தாச்சு என்று எடுத்தார் ராஜசேகர். கொலைவெறி
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan காலங்களில் அவள் வசந்தம் முத்துராமன் srividya. நடித்த படம். அதை மீண்டும் கண்மணியே பேசு என்ற பெயரில் எடுத்தார். யாரும் அந்த் படத்தை பற்றி பேசவே இல்லை.
UnlikeReply17 hrs
Ezhichur Aravindan இன்னொரு களத்தூர் கண்ணம்மா என்ற் நினைப்பில் ஏ.வி.எம். எடுத்த படம் அம்மா. அதில் மாஸ்டர் கமல் இதில் மாஸ்டர்விமல். ராஜசேகர் பலிகடாவானார்.
UnlikeReply17 hrs
Saravanan Savadamuthu இன்றைய பிரம்மாண்டமான இயக்குநர் ஷங்கரின் முன்னோடி ராஜசேகர்தான்.

No comments:

Post a Comment