Thursday, September 8, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -84 ஏ சி திருலோகசந்தர்


                   

1930ல் பிறந்தவர் திருலோகசந்தர்

1962ல் தொடங்கி 1987 வரை இருபத்தைந்து ஆண்டுகள் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்

1952ல் குமாரி படம் மூலம் உதவி இயக்குநராக திரையுலக பிரவேசம்,இயக்குநர் பத்மநாபன்,டி.ஆர்.ரகுநாத் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் இருந்தார்.பின், ஜோசப் தளியத்திடம் உதவி இயக்குநராய் இருந்தபோது விஜயபுரி வீரன் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.பின், அதில் நடித்த அசோகன் மூலம் ஏவி எம் அறிமுகம் கிடைத்தது

பார்த்தால் பசி தீரும் இவரது கதைதான்

இவர் இயக்கத்தில் வந்த தெய்வமகன் (1969) ஆஸ்காருக்கு பிராந்தியமொழிப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.சிவாஜி ,தந்தை, மகன் கள் என மூன்று வேடத்தில் கலக்கியப் படம் இது

1962ல் ஏவி எம் தாயரித்த வீரத்திருமகன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.பின் நானும் ஒரு பெண் (1963) ஹிந்தி,தமிழ் இரண்டையும்  ஒரே சமயத்தில் இவர் இயக்கினார்.இப்படத்திற்கு தமிழில் தேசிய விருது கிடைத்தது

ஏவி எம் தயாரித்த 50 ஆவது படம் அன்பே வா //அதை இயக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது

சிவாஜி, ஜெமினி ஆகியோரையும் வைத்து இவர் படங்களை இயக்கியுள்ளார்.
1969ல்   சி வாஜி நடித்து இவர் இயக்கிய இருமலர்களும்,ஸ்ரீதர் இயக்கி சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவும் ஒரேநாளில்  வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றன

அதேபோல 1970ல் சிவாஜி நடித்து இவர் இயக்கிய எங்கிருந்தோ வந்தாளும், டி.ஆர்.ராமண்ணா சிவாஜி வைத்து இயக்கிய சொர்க்கமும் ஒன்றாக வெளியாகி மாபெரும் வெற்றிப்படங்களாயின

1975ல் டாக்டர் சிவாவும், ஸ்ரீதர் இயக்கத்தில் வைரநெஞ்சமும் வந்து வெற்றி பெற்றன

இவர் இயக்கிய ஒரு கதாநாயகன் படம் வேறு ஒருவர் இயக்கிய அதே கதாநாயகன் படத்துடன்  மூன்று முறை மோதி வெற்றி   கண்டவர்இவர்

இலங்கை நாயகி மாலினி பொசேகாவை  சிவாஜிக்கு கதாநாயகியாக்கி எடுத்த படம் பைலட் பிரேம்நாத்

1967ல்

காக்கும் கரங்களில் சிவகுமார் இவரது அறிமுகம்

சிவாஜி, ஜெயலலிதா நடிக்க, தெய்வமகன்,தர்மம் எங்கே,எங்கிருந்தோ வந்தாள்,எங்க மாமா,அவந்தான் மனிதன் என ஐந்து படங்களை இயக்கியுள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1962 வீரத் திருமகன்,
1963 நானும்  ஒ ரு பெண்

காக்கும் கரங்கள் (1965)ராமு (66)அன்பே வா (66) தங்கை (67) அதே கண்கள்(67)என் தம்பி (68)இரு மலர்கள் (69)திருடன் (69)தெய்வமகன் (69)எங்கிருந்தோ வந்தாள்(70)பாபு (71)தர்மம் எங்கே (72)அவள் (72)பாரதவிலாஸ்(73)தீர்க்க சுமங்கலி(74)அவந்தான் மனிதன் (75)அன்பே ஆருயிரே(75)டாக்டர் சிவா(75)பத்ரகாளி(76)என்னை போல ஒருவன் (78)வணக்கத்துக்குரிய காதலியே(78)பைலட் பிரேம்நாத்(78)விஸ்வரூபம் (80)லாரிடிரைவர் ராஜாக்கண்ணு (810வசந்தத்தில் ஒருநாள்(82)அன்புள்ள அப்பா(87)

2016ல் இவர் அமரர் ஆனார்

.

No comments:

Post a Comment