Thursday, September 1, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 73 ராம.நாராயணன்


                     



1949ல் பிறந்தவர் ராம நாராயணன்

ராம் ரஹீம் படம் மூலம் காஜாவுடன் சேர்ந்து வசனம் எழுதினார்.பின், ஆசை அறுபது நாள் படத்திற்கு வசனம் எழுதினார்.

1981ல் சுமை என்ர படம் மூலம் இயக்குநர் ஆனார்.25 ஆண்டுகளில் 125 படங்கள்.அதில் 45சொந்த படங்கள்.1984ல் மட்டுமே12படங்கள் என சாதனை புரிந்த இயக்குநராவார்.

தமிழ், தெலுங்கு,கன்னடம்,மராட்டி,போஜ்பூரி,ஒரியா,மலே,பெங்காலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்

க்லைஞர் கருணாநிதி எழுதிய வேலுத்தம்பி இவர் இயக்கிய 50ஆவது படம்

                     


திருப்பதி எழுமலை வெங்கடேசா 100ஆவது படம்

இவர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராய் இருந்துள்ளார்.காரைக்குடி தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராயும் இருந்துள்ளார்.

இவர் படங்களில் பல மிருகங்களை பாத்திரமாக ஆக்கியுள்ளார்

ராமராஜன்,கோலப்பன், சோழராஜன் ஆகியோரை இயக்குநர் ஆக்கியுள்ளார்.

இயக்குநர் பேரரசு இவருடன் 30 படங்களுக்கு மேல் துணை இயக்குநராய் இருந்துள்ளார்

அர்ச்சுனை தனது "னன்றி' படம் மூலம் தமிழ்ப் படவுலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள் சில-

சிவப்பு மல்லி,தீராத விளையாட்டுப் பிள்ளை,சிவந்த கண்கள்,சூரக்கோட்டை சிங்கக் குட்டி,இது எங்க நாடு,மனைவி சொல்லே மந்திரம்,சபாஷ், கடமை,மன்மத ராஜாக்கள்,சட்டத்தைத் திருத்துங்கள்,வாய்ப்பந்தல்,வரன்,குற்றவாளிகள்,சிவப்பு நிலா,கருமேடு கருவாயன்,நெருப்பு நிலா,தங்கமான புருஷன்,டஹ்ங்கமணி ரங்கமனீ,ஆடி வெள்ளி,துர்கா.திருப்பதி எழுமலை வெங்கடேசா,கந்தா கடம்பா கதிர்வேலா,விஸ்வனாதன் ராமமூர்த்தி

2014ல் அமரர் ஆனார்

No comments:

Post a Comment