Friday, September 2, 2016

தமித் திரைப்பட இயக்குநர்கள் - 76 மௌலி





நாடக எழுத்தாளர்,நடிகர், நாடக இயக்குனராய்த் திகழ்ந்தவர் மௌலி.

பள்ளி நாட்களிலேயே டி கே ஷண்முகம், எஸ் வி சஹஸ்ரநாமம் ஆகியோரால் கவரப்பட்டு நாடகங்கள், எழுத ஆரம்பித்தார், நடிக்க ஆரம்பித்தார்.

சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீவிருது கிடைத்தபோது அவரது நண்பர்க ளுடன் சேர்ந்து (விசு,நான் உட்பட) அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி, அதில் 45 நிமிடம் வரக்கூடிய ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

பின்னர் அதே நாடகத்தை முழுநீள நாடகமாக்கி வாணிமகாலில் அரங்கேற்றும் போது அதைப்பார்த்த திரு ஏ ஆர் ஸ்ரீனிவாசன் மூலம் ஒய் ஜி பார்த்தசாரதியின் நாடகக்குழுவில் இணைந்தார்.அவர்களுக்கு பத்மவியூகம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஃபிளைட் 172 நாடகங்களை எழுதினார்.எல்லா நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்தாலும், இன்றும் ஃபிளைட் 172 என்ற நகைச்சுவை நாடகம் போற்றப்படுகிறது

1973ல் சூரியகாந்தி படம் மூலம் முக்தா ஸ்ரீனிவாசனால் நடிகராக அறிமுகப்படுத்தினார்தொடர்ந்து நிழல் நிஜமாகிறது ஆகிய சில படங்களில் நடித்தார்

1980ல் மற்றவை நேரில் மூலம் இயக்குநர் ஆனார்.பின் "இவர்கள் வித்தியாசமானவர்கள்"படம் வந்ததுபின் வா இந்த பக்கம்.

தொடர்ந்து,82ல் நன்றி மீண்டும் வருக, ஒரு வாரிசு உருவாகிறது படங்களும் வந்தன

83ல் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,அண்ணே அண்ணே ஆகிய படங்கள் வந்தன

பின் தெலுங்கில் 1986 முதல் 2002 வரை 25 படங்களுக்கு மேல் இயக்கினார்.பிரபல தடகள வீராங்கணை அஸ்வினி நாச்சப்பா நடிக்க அவர் கதை படமானது.இப்படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருது அளித்து கௌரவித்தது.

2002ல் கமல் நடிக்க  பம்மல் கே சம்பந்தம் படம் வந்து வெற்றி பெற்றது

2003ல் நளதமயந்தி   (மாதவன்) வந்தது.

தவிர்த்து இவர் தமிழில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அவற்றுள் சில-

அபூர்வ சகோதரர்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,காதலா காதலா,திருவிளையாடல் ஆரம்பம், பிரிவோம் சந்திப்போம்

தவிர்த்து டிவி சீரியல்களீல் நடித்து வருகிறார்.( நாதஸ்வரம்.   குலதெய்வம், கலசம்)



இவரது தம்பி எஸ்.பி.காந்தன்.இவர் பல நாடகங்களை இயக்கியுள்ளார், விளம்பரப் படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள் ஆகியவற்றையும் இயக்கியுள்ளார்.டி சீரியல்கள் தொலைக்காட்சிக்கு இயக்கியுள்ளார்

கிரேசி மோகன் குழுவின் ஆஸ்தான இயக்குநர் இவர் ஆவார்,

ஜெர்ரி என்ற தமிழ்ப் பட இயக்குநர் இவரே

No comments:

Post a Comment