Friday, September 9, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 85 மணிவண்ணன்


                     

1953ல் பிறந்தவர் மணிவண்ணன்

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார்.கிட்டத்தட்ட 50 படங்கள்வரை இயக்கியுள்ளார்

பாரதிராஜாவின் நிழல்கள்,டிக் டிக் டிக்.அலைகள் ஓய்வதில்லை,காதல் ஓவியம் ஆகியவற்றிற்கு கதை,வசனம் இவரே

1982ல் கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் ஆனார்.

தமிழ், மலையாளம்.ஹிந்தி,தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்

இவரது 50ஆவது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., இயக்கினார்

சத்தியராஜ் நடிக்க 25 படங்களை இயக்கியுள்ளார்.அதில் 12க்கும் மேற்பட்டப் படங்கள் வெற்றி படங்கள்

அரசியலில், திமு.க., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றில் இருந்துள்ளார்

பின்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்தார்.இலங்கையில் பிறந்திருந்தால் எல் டி டி ஈ யில் இருந்திருப்பேன் என்பார்

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

1982ல் கோபுரங்கள் சாய்வதில்லை
83ல் ஜோதி,வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன்,இளமைக்காலங்கள்
84ல் குவா குவா வாத்துகள்,ஜனவரி 1, இங்கேயும் ஒரு கவிதை, அம்பிகை நேரில் வந்தாள்,24 மணி நேரம்,நூறாவது நாள்
85ல் அன்பின் முகவரி,கூனி,விடிஞ்சா கல்யாணம்,பலைவனரோஜாக்கள்,முதல் வசந்தம்
87ல் இனி ஒரு சுதந்திரம்,தீர்த்தக் கரையினிலே,புயல் பாடும் பாட்டு, ஜல்லிக்கட்டு,சின்ன தம்பி பெரிய தம்பி
88ல் கனம் கோர்ட்டார் அவர்களே,உள்ளத்தில் நல்ல உள்ளம்
89ல் மனிதன் மாறிவிட்டான்
90ல் வாழ்க்கை சக்கிரம்,சந்தனக்காற்று
91ல் புது மனிதன்
92ல் தெற்குத் தெரு மச்சான்,கவர்ன்மென்ட் மாப்பிள்ளை,அக்ரிமென்ட்
93ல் மூன்றாவது கண்
94ல் அமைதிப்படை,வீரப்பதக்கம்,ராசாமகன்,தோழர் பாண்டியன்
95ல் கங்கைக்கரைப் பாட்டு
2001ல் ஆண்டாள் அடிமை
2013ல் நாகராக சோழன் எம் ஏ., எம்.எல்.ஏ.,

தவிர்த்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அவற்றில் சில..

அவ்வை ஷண்முகி,கொடி பறக்குது,சங்கமம்,, சிவாஜி

2013ல் அமரர் ஆனார்

No comments:

Post a Comment