Sunday, August 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 23 பி.எஸ்.ரங்கா

                               
                             

1917ஆம் ஆண்டு மைசூர் ராஜதானியில் மகடி என்ற கிராமத்தில் பிறந்தவர் பி.எஸ்.ரங்கா

தன் 17ஆவது வயதிலேயே சிறந்த புகைப்பட நிபுணராகத் திகழ்ந்தார்.தன் 23ஆம் வயதில் பர்தேசி படம் மூலம் இயக்குநர் ஆனார்

இவர் ஒரு ஒளிப்பதிவாளர்,ஸ்டூடியோ முதலாளி, தயாரிப்பாளர். இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.

கணவனே கண் கண்ட தெய்வம் பத்தின் ஒளிப்பதிவாளர் இவர்

இவர் விக்ரம் புரடக்க்ஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்கள், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் மொழிகளில் வந்தன.

இவர் இயக்கிய தெனாலி ராமகிருஷ்ணா என் டி.ராமாராவ், நாகேஷ்வரராவ் நடித்தது),அமர்சில்பி ஜக்கன்னா(நாகேஷ்வர ராவ் ) ஆகிய படங்கள் குடியரசுத் தலைவர் விருது பெற்ற படங்கள் ஆகும்.

தெலுங்கு தேவதாஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளர் இவராகும்.

கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் 75க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பங்களிப்பு இருந்தது.

பாலநாகம்மா என்ற தெலுங்கு படம் மக்களால் கொண்டாடப்பட்டப் படமாகும்.

தமிழில், தாசி அபரஞ்சி,,நிச்சய தாம்பூலம்,குடும்ப கௌரவம்.தெனாலிராமன், ராஜா மலயசிம்மன், பட்டிக்காட்டு பொன்னையா ஆகிய படங்கள் வெற்றி படங்களாகும்

சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி ஆகிய மூவர் படங்களையும் , தெலுங்கில் என் டி ஆர்., நாகேஷ்வர ராவ் ஆகியோர் படங்களையும் இயக்கியப் பெருமை இவருடையது.

2010 ஆம் ஆண்டு தன் 93ஆவது வயதில் அமரர் ஆனார்

No comments:

Post a Comment