Wednesday, August 3, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 16 ராஜசாண்டோ




ராஜா சாண்டோ
-----------------------------

குஸ்திக் கலைஞரும், விளையாட்டு வீரரும் ஆவார் ராஜா சாண்டோ

சிறந்த டைரக்டர்,நடிகர், தயாரிப்பாளர் என தன் திறமையை வெளிப்படுத்திய முதல் தமிழர் இவர் எனலாம்

1895ஆம் ஆண்டு, பொள்ளாச்சியில் பிறந்த இவர் இயற்பெயர் நாகலிங்கம் ஆகும்/1915ல் சென்னை வந்த இவர் தன் தேகப்பயிற்சி காட்சிகளை நடத்தி பிரபலமானார்

பின்,நேஷனல் ஃபில்ம் கம்பெனியில் சேர்ந்தார்.அந்நிறுவனம் "பக்த போதனா" என்ற மௌனப் படத்தைத் தயாரித்தது.அதில் 101 ரூபாய் சம்பளத்தில் நடித்தார்.இதுவே இவரது முதல் படமாகும்.

பின் வீர பீம்சிங்க், தேவதாசி,பஞ்ச தாண்டா, மீரா ஆகிய படங்களில் நடித்தார்.

கோஹினூர் ஃபிலிம் கம்பெனி என்பவர்கள் எடுத்த ஞானசவுந்தரி,டைபிஸ்ட் பெண்,மனோரமா போன்ற படங்கள் இவருக்குப் புகழை ஈட்டித் தந்தன.பாறிஸ்டரின் மனைவி மிகவும் பேசப்பட்டது.

பேயும் பெண்ணும், அனாதைப் பெண்,கருந்திருடன், ராஜேஸ்வரி ஆகிய படங்களை இவர் இயக்கி நடித்தார்.இவை அனைத்தும் மௌனப்படங்கள் ஆகும்.

பின் மேனகா, விஷ்ணு லீலா, சந்திரகாந்தா, திருநீலகண்டர் (எம் கே.தியாகராஜ பாகவதர் நடித்தது) ஆகிய பேசும் படங்களை இயக்கினார்.

இவர் காலத்தில்தான் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் வெற்றியில் பங்குண்டு என அவர்கள் பெயர்களையும் திரையில் தோன்ற வைத்தார்.

இவர் 25க்கும் மேற்பட்ட மௌனப்படங்களில் நடித்தார்.

தவிர்த்து, இந்திரா, காலேஜ் கேர்ள், பாரீஸ்டர் வைஃப் ,தேவகி, போன்ற ஹிந்தி பேசும் படங்களில் நடித்தார்

பாரிஜாத புஷ்பஹாரம், மேனகா, வசந்த சேனா, மைனர் ராஜாமணி, சந்திரகாந்தா, விஷ்ணு லீலா,நந்தகுமார், திரு நீலகண்டர், ஆராய்ச்சி மணி ஆகிய படங்கள் இயர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள் ஆகும்.சிவகவி படத்தை இயக்கி வந்தார்.ஆனால், பாதியில் ஏற்பட்ட சில மனவேற்றுமையால் விலகினார்.

இவர் இயக்கிய மேனகா படத்தில் என்.எஸ்.கே அறிமுகமானார்.கே ஆர் ராமசாமிக்கு சிறு வேடம், தவிர்த்து டி கே எஸ் சகோதரர்கள் நால்வரும் நடித்தனர்

1943ல் இவர் உடல்நலக் குறைவால் இறந்தார்

தன் திறமையால் இந்தியா முழுதும் கோலோச்சிய ராஜா சாண்டோவின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் ராஜாசாண்டோவிருதைகலைஞ்ர்களுக்கு அரசு வழங்கி வருகிறது

No comments:

Post a Comment