Friday, August 26, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 64 திருமலை-மகாலிங்கம்

                           
                                              மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தின் காட்சி
இயக்குநர் பீம்சிங்கிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்கள் திருமலை மற்றும் மகாலிங்கம் ஆவார்கள்.

இருவரும் இணைந்து திருமலை- மகாலிங்கம் என்ற பெயரில் படங்களை இயக்கினார்கள்.1966ல் இவர்கள் இயக்கத்தில் வந்த படம் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி.   ரவிசந்திரன், நாகேஷ் மற்றும் கல்பனா நடித்தது.ஒரு பேருந்தில் நிகழும் காட்சிகளையே நகைச்சுவையுடன் எடுத்திருந்தனர்

1967ல் பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற கதை திரு டி.எஸ்.சேஷாத்ரியால் நாடகமாக நடத்தப்பட்டது அதை ஆலயம் என்ற பெயரில் மேஜர் சுந்தரராஜன் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க திரைபடத்தை இயக்கினர்.இப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது பெற்றது.இப்படத்தில் டைபிஸ்ட் வேடத்தைல் நடித்த கோபு என்ற நடிகர் டைபிஸ்ட் கோபு என்ற பெயரில் பின்னாளில் னகைச்சுவை நடிகராய் விளங்கினார்
அடுத்து 1968ல் நாகேஷ், கல்பனா நடிக்க சோப்பு சீப்பு கண்ணாடி என்ற நகைச்சுவை படம் வெளிவந்தது

1968ல் சோ, ஜெயஷங்கர் நடித்த நீலகிரி எக்ஸ்பிரஸ் இவர்கள் இயக்கமே

ரவிசந்திரன் நடிக்க 1970 காதல்ஜோதி படம்

1974ல் புதிய மனிதன் பின்னர் 1975ல் நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்கள் வந்தன.

ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் ஒரு பகுதி இவர்கள் இயக்கமே.படத்தின் டைடிலில் 2ஆவது யூனிட் இயக்கம் திருமலை மகாலிங்கம் என்று பெயர் காட்ட்ப்பட்டது 

No comments:

Post a Comment