Friday, August 26, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 63 எம்.ஜி.ராமசந்திரன்


                         

1936ல் சதிலீலாவதி படம் மூலம் திரையுலகில் நுழைந்து மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 136 படங்களில் நடித்தவர் மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு, முதலமைச்சராக ஆனவர் எம்.ஜி.ஆர்.,

ஒரு கலைஞனிடம், அரசியல்தலைவரிடம். மக்கள் ,இவரிடம் கொண்ட அளவிற்கு வேறு எவரிடமும் பற்று கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட கலைஞன் திரையில் மூன்று படங்களை
 மட்டுமே இயக்கி, நடித்துள்ளார்.ஆனால், அவை மூன்றும் ஹிட் படங்கள்.

1958ஆம் ஆண்டு   தன்னுடன்  பானுமதி,,சரோஜாதேவி நடிக்க நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து இயக்கினார்.அந்நாளிலேயே இப்படம் 30 லட்சம் வசூலித்தது சாதனையாகும்

தன் சொத்துகளையெல்லாம் விற்று இப்படம் எடுத்தார்.அப்போது பத்திரிகை பேட்டி ஒன்றில், "படம் வெற்றி பெற்றால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி" என்றார்

1973ல்  "உலகம் சுற்றும் வாலிபன்". அவர்     இரட்டை வேடத்தில் நடிக்க மஞ்சுளா, சந்திரகலா ஆகியோருடன் மெட்டாருங்கிரேட் என்ற தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணும் கதாநாயகியாக நடித்தனர்.அப்போது ஆளும் கட்சியாய் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், சுவரொட்டிகளுக்கான வரியை உயர்த்தியதால் சுவரொட்டிகள் ஏதும் இல்லாமலேயே இப்படம் வெற்றிப் படமாய் அமைந்தது


பின், 1978ல் லதாவுடன் இணைந்து இவர் நடித்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் வந்தது.1977ல் இவர் முதல் அமைச்சராய் பொறுப்பேற்றதால், பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குப் பின் இப்படம் வெளிவந்தது

1967ல் வந்த அரசகட்டளை இவரது அண்ணன் எம் ஜி சக்கரபாணி இயக்கத்தில் வந்தது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

No comments:

Post a Comment