Sunday, August 28, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 66 சி.வி.ராஜேந்திரன்

           
             
                                     

அனுபவம் புது மை என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமனார் சி.வி.ராஜேந்திரன்.

பின், தொடர்ந்து, சிவாஜி, ரஜினி, கமல்  என ஐம்பத்தெட்டு படங்கள் இயக்கியுள்ளார்

மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர்தான் இவரது சொந்த ஊர் ஆகும்


இயக்குநர் ஸ்ரீதர் இவரது அக்காள் மகன்.1960 ஆம் ஆண்டு ஸ்ரீதர் மீண்ட சொர்க்கம் படத்தை தொடங்கிய போது அவருடன் இணைந்தார்

1967ல் காதலிக்க நேரமில்லை படத்திற்கு இணை இயக்குநராகப் புரிந்தார்.தொடர்ந்து ஸ்ரீதருடன், கலைக்கோயில்,வெண்ணிற ஆடை,கொடிமலர்,நெஞ்சிருக்கும் வரை ஆகிய படங்களுக்கு துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்

ஏ கே வேலன் மூலம் சித்ராலயா கோபுவின் அனுபவம் புதுமை கதை மூலம் 1967ல் இயக்குநர் ஆனார்

இந்நிலையில், இந்திய-சீனா போர் மூளவே, அதற்கு நிதி திரட்ட நடிக, நடிகைகள் ஸ்ரீதர் எழுதிய கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை எழுதினார்.அது திரைப்படமான போது சிவாஜி சிபாரிசு செய்ய கலாட்டாகல்யாணம் படத்தை 1968ல் இயக்கினார்

இப்படத்தில்தான் முதன்முறையாக ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.அதை வரவேற்கும் விதமாக கண்ணதாசன் "நல்ல இடம் நீ வந்த இடம்" என்ற பாடலை எழுதினார்..

தொடர்ந்து இவரது இயக்கத்தில் வந்த படங்கள்

1970ல் வீட்டுக்கு வீடு
1971 புதியவாழ்க்கை
71ல் சுமதி என் சுந்தரி
72 கோமல் எழுதிய "நவாப் நாற்காலி'
72ல் தேவானந்த் ஹிந்தியில் நடித்த ஜானி மேரா நாம் படம் தமிழில் ராஜா வாக வர அதை இயக்கினார்.வசூலில் சாதனை புரிந்த படமாக அமைந்தது
தொடர்ந்து சிவாஜி நடிக்க, நீதி, பொன்னூஞ்சல்,என் மகன், சிவகாமியின் செல்வன்,வாணி ராணி ஆகிய படங்களை இயக்கினார்.

பின் 1980 கமல் நடித்த உல்லாச பறவைகள் இவர் இயக்கம்.தொடர்ந்து, ரஜினி நடித்த கர்ஜனை
வெளிவந்தது


1982ல் தியாகி,1984ல் வாழ்க்கை..தொடர்ந்து
பிரபு அறிமுக்மாக சங்கிலி 1982ல் வந்தது

1989ல் சின்னப்பதாஸ் இவர் இயக்கத்தில் வந்த கடைசிப்படமாகும்

ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை ஹிந்தியில் பூர்ணசந்திரா என்ற பெயரில் இவர் இயக்கத்தி வந்தது குறிப்பிடத்தக்கது/

No comments:

Post a Comment