Monday, August 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 53 பி.மாதவன்



                                    "மன்னவன் வந்தானடி படப்பிடிப்பில் இயக்குநர் மாதவனுடன் ஒளிப்பதிவாளர் சுந்தரமும், சிவாஜியும்




1928ல் பிறந்தவர் மாதவன்.

தமிழ்த்திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

இவர் இயக்கியுள்ள 49 படங்களில் 39 படங்களின் தயாரிப்பாளரும் இவரே.அருண் பிரசாத் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தார்.

ஆரம்ப காலங்களில் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்திடம் உதவி இயக்குநராகவும் பின்னர் ஸ்ரீதரிடம் துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இவர் இயக்கத்தில் வந்த சில முக்கியப்படங்கள்..தெய்வத்தாய்,வியட்நாம் வீடு,தங்கப்பதக்கம்,கண்ணே பாப்பா, குழ்ந்தைக்காக.

இவர் எம் ஜி ஆர் ஃபிலிம் சொசைட்டியின் தலைவராகவும், நிர்வாகியாகவும் அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேஷனல் ஃபிலிம் தயாரிப்பின் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்

இவை இயக்கிய ராமன் எத்தனை ராமன் 1970ல் தமிழில் சிறந்த படமாக    தேசிய விருதினைப் பெற்றது

1972ல் பட்டிக்காடா பட்டிணமா சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது பெற்றது

குழந்தைக்காக படத்தில் நடித்த பேபி ராணிக்கு சிறந்த குழ்ந்தை நட்சத்திற்கான தேசிய விருதும், கண்ணதாசனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது

இவர் இயக்கத்தில் வந்த வேறு சில படங்கள்

1963ல் மணி ஓசை முதல் இவர் இயக்கியப் படம்.

பின், நீலவானம்,அன்னை இல்லம், பெண்ணே நீ வாழ்க,எங்க ஊர் ராஜா,வியட்நாம் வீடு,சபதம், தேனும் பாலும்,ஞான ஒளி,ராஜபார்ட் ரங்கதுரை.

1992ல் அமரர் ஆனார்.

No comments:

Post a Comment