Friday, August 12, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 34 எம்.ஏ.திருமுகம்

                                 

த்

தேவருடன் எம் ஜி ஆர்


எம்.எம்.ஏ., சின்னப்பத் தேவருடன் பிறந்தவர்கள் மூவர்.அவர்களில் ஒருவர் ஆறுமுகம் என்ற எம்.ஏ.திருமுகம்.

தேவர் 1940ல் திலோத்தமை என்ற படத்தில் முதலில் சிறு வேடத்தில் நடித்தார்.பின்னர்,1947ல் ராஜகுமாரி என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் சிறு வேடத்தில் நடித்தார்.தொடர்ந்து மோகினி.திரைப்படம்.இடைப்பட்டக் காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் சிறந்த நட்பு ஏற்பட்டது.

1956ல் தாய்க்குப் பின் தாரம் படம் தயாரானதி அப்படத்தை திருமுகம் இயக்கினார்.

பின்னர் நீலமலைத் திருடன்,பிள்ளைக்கனியமுது,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.உத்தமி பெற்ற ரத்தினம்,வாழ வைத்த தெய்வம்,யானைப்பாகன், தங்க ரத்தினம் என படங்கள் தொடர்ந்தன.தேவர் ஃபிலிmஸைத் தவிர்த்து வேறு சில கம்பெனி படங்களையும் இயக்கினார் திருமுகம்.

எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் 16 படங்கள் தேவர் ஃபிலிம்ஸிற்காக திருமுகம் இயக்கினார்.

தாய் சொல்லைத் தட்டாதெ,தாயை க் காத்த தனயன்,குடும்பத் தலைவன்,தர்மம் தலை காக்கும்,நீதிக்குப் பின் பாசம்,வேட்டைக்காரன்,தொழிலாளி,தாயும் மகளும்,கன்னித்தாய்,முகராசி, தனிப்பிறவி,தாய்க்கு தலை மகன்,விவசாயி,தேர்த்திருவிழா,காதல் வாகனம், நல்ல நேரம்  ஆகியவை எம்.ஜி.ஆர்.நடிக்க திருமுகம் இயக்கியவை.

மேலும் இவர் இயக்கத்தில் வந்தவை-

கொங்கு நாட்டுத் த்ங்கம், காட்டு ராணி,மகராசி, துணைவன்,அக்காத்ங்கை,
பெண்தெய்வம், தெய்வம்,கோ மாதா எங்கள் குலமாதா,தர்மராஜா,எல்லாமே
 உன் கைராசி

2004ல் திருமுகம் அமரர் ஆனார்


தேவருக்குப் பின் த்ண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பெயரில்சில படங்கள் வந்தன.

அவற்ரை வேறு பதிவில் காணலாம்

No comments:

Post a Comment