Thursday, August 4, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 18 சிவகங்கை ஏ.நாராயணன்


                         

சென்னையில் உருவான முதல் தமிழ்ப் பேசும் படத்தின் தயாரிப்பாளர் சிவகங்கை நாராயணன்

ஜி.டபில்யூ.எம்.ரோனால்ட் எழுதிய ஒரு நாவலைத் தழுவி "மிங்கிரேலியத் தாரகை" அல்லது'லைலா" என்ற 20 ரீல்கள் கொண்ட மௌனத் திரப்படம்சென்னையில் தயாரிக்கப் பட்டது.இதற்கான செலவு 75000/- இதுவே மிகவும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மௌனப்படம்

1900 ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர் ஏ,நாராயணன்

பம்பாயில் ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்ட் பணியில் இருந்த இவர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் பாப்புலர் சினிமா (பின்னர் ஸ்டார் டாக்கீஸ் ஆனது) தொடங்கினார்.பின் 1937ல் தண்டையார்பேட்டையில் ஜெனெரல் பிக்சர்ஸ் கார்ப்பரேசன் என்ற ஸ்டூடியோவைத் துவக்கினார்.1927 முதல் 30 வரை மூன்றாண்டுகளில் 20க்கும் மேற்பட்ட மௌனத் திரைப்படங்களை எடுத்தார்.தென்னிந்திய ஃபிலிம் தொழிலின் தந்தை என போற்றப்பட்டார்

1934ல் தென்னகத்தில் முதல் பேசும்பட ஸ்டூடியோவை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துவக்கினார்.(ஸ்ரீனிவாசா சினிடோன்)

முதன் முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனார்கலி என்ற மௌனப்படத்தை,ஹாலிவுட்டில் திரையிடச் செய்தவர் இவர்.

1934ல் ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற முதல்  முழுதும் தமிழ் பேசும்படம் வெளியானது.இப்படத்தைத் தயாரித்தவர் இவர்.

இதைத் தொடர்ந்து..
தூக்குத் தூக்கி,தாராசசாங்கம்       ,ஞானசுந்தரி,,துளசிபிருந்தா,விக்கிரமாதித்தன்,ராஜாம்பால், விசுவாமித்ரா, சிப்பாய் மனைவி, விப்ரநாராயண,கிருஷ்ணதுலாபாரம்,ராமானுஜர்,                        ஆகிய படங்கள் வரத்தொடங்கின

மடச்சாம்பிராணி என்ற நகைச்சுவை துண்டுப் படம் எடுத்தார்

இவரது மனைவி மீனாம்பாள் இவரது படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர்.சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் பெண்மணி இவர் ஆவார்.

இவரிடம் பயிற்சி பெற்று பின் இயக்குநர் ஆனவர்கள்..ஆர்.பிரகாஷ்,ஜித்தன் பாலாஜி,புல்லையா ஆகியோர் ஆவர்

20 மௌனப்படங்கள் எடுத்த இவர்..இயக்கிய மௌனப்படங்கள்

தர்மபத்தினி,ஞானசௌந்தரி,கோவலன்,கருடகர்வபங்கம்  ஆகியவை ஆகும்

சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும்படத்தைத் தயாரித்த பெருமைக்குரியவர் ஏ,நாராயணன்.

1939 ஆம் ஆண்டு இளம் வயதிலேயே மறைந்தார்.

இவர் தயாரித்த மௌனப்படங்களில், லங்காதகனம்,கஜேந்திர மோட்சம்,காந்தாரிவதம்,ராஜஸ்தான் ரோஜ,நரநாராயணர்,பவழராணி
லைலா ஆகியவற்றை இயக்கினார்.

ஜிதன்பானர்ஜி என்பவர்  விசுவாமித்ரா, மாயாமதந்தன் ஆகியவற்றை இயக்கினார்

ஒய்.வி.ராவ், பாண்டவ நிர்வாகன்,சாரங்கதாரா,போஜராஜன்,பாண்டவ அஞ்ஞானவாசம் ஆகியவற்றை இயக்கினார்

No comments:

Post a Comment