Friday, August 5, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 20 ஏ.பீம்சிங்

                             

இவரைப் பற்றி எழுத ஆரம்பித்ததுமே மனம் ஆனந்தத்தில் துள்ளுகிறது.என்ன மாதிரியான படங்களைக் கொடுத்துள்ளார்! வெற்றிகரமான இயக்குநர்.இவர் அளவு வெற்றிக்கனியை சுவைத்தவர்கள் வெறு சிலரே...ஏன்...யாருமே  இருக்கமாட்டார்கள் என்று கூட சொல்லலாம்.34 தமிழ்ப்படங்கள், 18 ஹிந்திப் படங்கள் 8 தெலுங்குப் படங்கள் 5 மலையாளம் ஒரு கன்னடம் என 66 படங்களை இயக்கியுள்ளார்.

1924ல் பிறந்த இவர், இயக்குநர்,தயாரிப்பாளர்,எடிட்டர்,கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.1940களின் இறுதியில் பிரபல இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் உதவி எடிட்டராகச் சேர்ந்தார்.

1949ல் கிருஷ்ணனின் சகோதரியை மணந்தார்.இவரது மகங்களில் ஒருவர்தான் லெனின்.இவரும் இன்று பிரபல எடிட்டராய் திகழ்பவர்.பின், 1959ல் நடிகை சுகுமாரியையும் மணந்தார்.

1954ல் அம்மையப்பன் படம் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.இவரது பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாய் அமைந்ததால், அனைத்து தமிழ்ப்படங்களையும் சொல்லிவிட எண்ணுகிறேன்.

இவர் இயக்கத்தில் வந்த படங்கள்

அம்மையப்பன்,ராஜா ராணி,நானே ராஜா,திருமணம்,பதி பக்தி,பாகப் பிரிவினை,சகோதரி,பிரசிடென்ட் பஞ்சாட்சரம்,பொன்னு விளையும் பூமி,பெற்ற மனம்,படிக்காத மேதை,களத்தூர் கண்ணம்மா,பாச மலர்,பாலும் பழமும், பாவ மன்னிப்பு,பந்த பாசம்,செந்தாமரை,  பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா?,பார் மகளே பார்,பச்சை விளக்கு,பழனி,சாந்தி,சாது மிரண்டால்,பாலாடை,பாதுகாப்பு,பாத பூஜை,சில நேரங்களில் சில மனிதர்கள்,கணவன் மனைவி,நீ வாழ வேண்டும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,கை பிடித்தவள்,இறைவன் கொடுத்த வரம்,கருணையுள்ளம்.

பா..வரிசை இயக்குநர் இவர்...

இவரும், நடிகர் திலகமும் சேர்ந்து :ப: வரிசை படங்கள் 14 கொடுத்திருக்கிறார்கள்.

திரையுல பிரபலங்களாகத் திகழ்ந்த சிவாஜியும், ஜெமினியும் இணைந்து இவரின் பெரும்பாலான படங்களில் நடித்துள்லது சிறப்பு.

இன்றும் திருமண இல்லங்களில் தவறாமல் இடம் பெறும் "வாராயென் தோழி" பாடல் இவரது பாசமலரில் இடம் பெற்ற ஒன்று என குறிப்பிட வேண்டிய ஒன்று,


1978ல் அமரரான இவர் தன் குறுகிய கால வாழ்நாளில் அரும் பெரும் சாதனைகள் புரிந்த இயக்குநர்

தேசிய விருதுகள்
1959ல் குடியரசுத் தலைவர் வெள்ளிப்பதக்கம் சிறந்தத் தமிழ்ப் படம் - பாகப்பிரிவினை
1961 மெரிட் சான்றிதழ் களத்தூர் கண்ணம்மா
1961 மெரிட் சான்றிதழ் பாவமன்னிப்பு
1961 சிறந்த படம் சான்றிதழ் பாசமலர்

1964 சான்றிதழ் - பழனி

No comments:

Post a Comment