Sunday, August 21, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 51 மகேந்திரன்


                           



அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன் 1939ல் பிறந்தார்.ஆழமான கதை, மென்மையான உணர்வுகள்,அழகியக் காட்சிகள்  இவையெல்லாம் இணைந்தது மகேந்திரனின் படங்கள் எனலாம்

 மகேந்திரனின்   இயக்குநர் சாதனைகளுக்கு முன் வேறு சாதனைகள்..

இன முழக்கம், துக்ளக் பத்திரிகைகளில் பணி புரிந்தவர்.
சினிமாவும் நானும் என்ற  நூலை எழுதியுள்ளார்
நடிகர் செந்தாமரைக்காக 'இரண்டில் ஒன்று" என்ற நாடகத்தை எழுதினார்.பின், சிவாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவரும் சம்மதிக்க, அதே நாடகம் ' சிவாஜிக்காக; தங்கப்பதக்கமாக மேடையேறியது

தங்கப்பதக்கம், நிறைகுடம்,ஆடு புலி ஆட்டம்.காளி, ரிஷிமூலம்,  போன்று    26 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆர்., கேட்டுக் கொண்டதற்கிணங்க கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு" கதை வசனம் எழுத அது ஏனோ எடுக்க முடியாதுப் போனது

இனி இவர் இயக்கியப் படங்கள்

1978ல் உமாசந்திரன் எழுதிய "முள்ளும் மலரும்" நாவலை ரஜினி, சரத் பாபு. ஷோபா, ஃபடா ஃபட் ஜெயலட்சுமி நடிக்க அதே பெயரில் படமாக்கினார்.ரஜினி படங்களுக்கு முன்னோடியான பஞ்ச் இப்படத்தில் ஆரம்பம் எனலாம் "இந்த காளி ரொம்ப பொல்லாதவன்".இப்படம் அந்த நாளிலேயே 'மணிரத்னம்" படமாக அமைந்தது எனலாம்.ஆம்...இப்படத்தில்  வசனங்கள் குறைவு.அதனாலேயே..இப்படத்தயாரிப்பாளர்கள், 'செந்தாழம் பூவில் என்ற பாடலை படமெடுக்க பணம் கொடுக்க மறுத்த்னராம்.கடைசியில் கமல் ஹாசன் தன் பணத்தைக் கொடுக்க அப்பாடல் படமாக்கப்பட்டது.இப்படல், பட வெற்றிக்கும் ஓர் துணையாய் அமைந்தது எனலாம்.

1979ல், பிரபல எழுத்தாளர் எழுதிய 'சிற்றன்னை:" என்னும் கதையை அடிப்படையாக வைத்து "உதிரிப்பூக்களை'த் தொடுத்து இயக்கினார்.இன்றும் அப்படம் பேசப்படும் படமாக இருப்பது சிறப்பு

1980ல் பூட்டாத பூட்டுகள்
1981 நண்டு ( சிவசங்கரியின்,நாவல்)
1982ல் மெட்டி
1982ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே (சுகாசினி அறிமுகம்)
1982ல் அழகிய கண்ணே..
1984ல் கை கொடுக்கும் கை
1986ல் கண்ணுக்கு மை எழுது
1992ல் ஊர் பஞ்சாயத்து
2006ல் அரவிந்தசாமி நடிக்க "சாசனம்"

தவிர்த்து சென்னைத் தொலைக்காட்சிக்காக அர்த்தம், காட்டுப் பூக்கள் என்று இரு நாடகங்கள்

இவ்வளவு திறமைகளை வெளிக் காட்டியவர், ஒரு திறமையை ஒளித்து வைத்திருந்தார்..

அது நடிப்புத் திறமை

அதையும் விஜய் நடித்த தெறி படத்தில் (வில்லனாக) நடித்து வெளிப்படுத்தினார்.
,

No comments:

Post a Comment