Monday, August 22, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -55 கே சோமு

                              பரதனாக சிவாஜியோடு சோமுவும், ஏபிஎன்னும்


1917ல் பழனியில் பிறந்தவர் கே சோமு

1935 முதல் 40 வரை நாடகங்களில் நடித்தும், இயக்கியும் வந்தார்.

1948 முதல் 53 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு உதவி இயக்குநராய் பணிபுரிந்தார்.23க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றினார்

1954லில் இருந்து 67 வரை 15 படங்களை இயக்கினார்.

1954ல்  ஏ.பி நாகராஜன், நடிக்க மாங்கல்யம் படத்தை இயக்கினார்.

                ஏபிஎன் கதைஎழுத பெண்ணரசி படத்தை 1955ல் இயக்கினார்.மற்றும் அ தே ஆண்டு டவுன் பஸ் படமும் வந்தது.

பின் 1956ல் சிவாஜி, ஜி.வரலட்சுமி நடிக்க நான் பெற்ற செல்வம் இவர் இயக்கம்.

சிவாஜி, பானுமதி நடிக்க ஏபிஎன் கதை மக்களைப் பெற்ற மகராசி இவர் இயக்கத்தில் 1957ல் வெளிவந்தது.இன்றளவும் மறக்கமுடியா படம்.முத்தான பாடல்கள்

1958ல் நீலாவுக்கு நெறஞ்ச மனசு, நல்ல இடத்து சம்பந்தம் (எம் ஆர் ராதா, சௌகார் ஜானகி) படங்கள் வந்தன

இதே ஆண்டு ஏபிஎன் கதை, வசனத்தில் என் டி ராமாராவ் ராமனாக நடிக்க சிவாஜி பரதனாக நடிக்க 'சம்பூர்ண ராமாயணம்" இவர் இயக்கத்தில் வந்த  வெற்றிப் படம்.சினிமாவே பார்க்காத ராஜாஜி இப்படத்தைப் பார்த்து சிவாஜி பரதனாகவே மாறிவிட்டதாய் பாராட்டியது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று

1959ல் அல்லி பெற்ற பிள்ளை,பெண் குலத்துப் பொன் விளக்கு படங்கள் வந்தன

சிவாஜி நடிக்க அகிலன் கல்கியில் எழுதிய பாவை விளக்கு நாவல்   படமானது இவர் இயக்கத்தில் 1960ல்

ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும், டி.எம்.சௌந்தரராஜன் நடிக்க பட்டினத்தார் படமும் 1962ல் வெளிவந்தன

சிவாஜி நடிக்க நான் வணங்கும் தெய்வம் 1963ல் வந்தது

1967ல் டிஎம் சௌந்தரராஜன் நடித்த சுந்தரமூர்த்தி நாயனார் வந்தது

இவற்றைத் தவிர்த்து இவர் இயக்கத்தில் 20க்கும் மேறபட்ட சரித்திர, புராணப் படங்கள் எடுக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் கைவிடப்பட்டன.

1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல்நாள் ஆடிக்கிருத்திகை அன்று வடபழனி முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வந்தவர்..அன்று இரவே உறக்கத்தில் அமரர் ஆனார்.

No comments:

Post a Comment