Saturday, August 13, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 36 'பசி" துரை

                   


தான் இயக்கிய ஒரு படத்தின் அடை மொழியுடன் அழைக்கப்படும் ஒரே இயக்குநர் இவராகத்தான் இருக்கும்

1940ல் பிறந்தவர் துரை.இவரது அனைத்துப் படங்களும் தனித்தன்மை வாய்ந்தவை.சமூக அவலங்களை சுட்டிக் காட்டுபவன.45க்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் இவர்.சுமித்ரா, பூர்ணிமா, சத்யா, நாராயணன், செந்தில் என் பலர் இவர் அறிமுகம்..தமிழ், தெலுங்கு, ஹிந்தி.மலயாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

டி.யோகானந்த் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்த இவர் ஜி.வி.அய்யரிடம் உதவியாளராய் இருந்தார்.

தமிழ்த் திரையுலகில் இவரது முதல் படைப்பு அவளும் பெண்தானே.இது மாபெரும் வெற்றி படமானது.

தொடர்ந்து 1979ல் இவரது "பசி" திரைப்படம் இவருக்கு பல விருதுகளைப் பெற்றுத் த்ந்தது.

இப்படத்தில் நடித்த ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

தமிழில் சிறந்த படத்திற்கான   தேசிய    விருது கிடைத்தது.

சிறந்த இயக்குநருக்கான  தேசிய விருது கிடைத்தது.

இதுவரை பல மொழிகளில் 47 படங்கள் இயக்கியுள்ள இவர் இயக்கத்தில் வந்த சில தமிழ்ப் படங்கள்..

ரகுபதி ராகவ ராஜாராம், ஆசை 60 நாள்,பாவத்தின் சம்பளம்,நீயா,ஆயிரம் ஜென்மங்கள்,கிளிஞ்சல்கள்,சதுரங்கம்,அவள் தந்த உறவு,ஒரு வீடு ஒரு உலகம்,பெண்ணுக்கு யார் காவல்,பொற்காலம்,புதிய அத்தியாயம்,அவள் ஒரு காவியம்.

தாஷ்கன்ட் திரைப்பட விழாவில் பசி திரையிடப்பட்டது.

இந்திய சினிமா பற்றி மேற்கு ஜெர்மனியில் நடந்த கூட்டத்திர்கு இந்திய அரசு துரையை அனுப்பி வைத்தது

58வது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் 2011ல் துரை உறுப்பினர்

1987ல் இந்திய சினிமா பனோரமாவில் உறுப்பினர்

தமிழ்நாடு டி.வி.,ஃபில்ம் இன்ஸ்டிடியூட், தேசிய அளவில், உலகளவில் சினிமா தேர்ந்தெடுக்கும் கமிட்டி அங்கத்தினர்

தேசிய சினிமா தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் தொடர்ந்து 2004லிருந்து 2006 வரை உறுப்பினர்

1996-99 நாலு வருஷங்கள் , தமிழக அரசு சிறந்த படங்கள் தேர்வுக் குழு  உறுப்பினர்.

சதுரங்கம் (1977)அவள் ஒரு காவியம், ஒரு வீடு ஒரு உலகம்(1978),எங்க வாத்தியார், பசி (1979) தமிழக அரசு விருதுகள் கிடைத்த்ன.

No comments:

Post a Comment