Wednesday, August 10, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 29 சி.வி.ஸ்ரீதர்


                           


மதுராந்தகத்தில் 1933ல் பிறந்த ஒரு சிறுவன் தனது 18ஆவது வயதில் தான் எழுதிய ஒரு நாடகத்தை எடுத்த் கொண்டு ஏ வி எம் ஸ்டூடியோ சென்று அங்கு இருந்த இயக்குநர் ப.நீலகண்டனிடம் கொடுத்தான்.நிராகரிக்கப்பட்டான்.

தன் முயற்சியில் மனம் தளராத அச்சிறுவன், டி.கே ஷண்முகத்தைப் பார்த்து அந்த ஸ்கிரிப்டைக் கொடுத்தான்.அதைப் படித்துப் பார்த்து பாராட்டிய டிகேஎஸ் "ரத்தபாசம்" என்ற அந்த நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.பி அக்கதை திரைப்படம் ஆன போது அச்சிறுவனே திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்றும் சொன்னார்.

அச் சிறுவன் தான் பின்னாளில் கல்லூரி மாணவிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்த இயக்குநர் சி.வி.ஸ்ரீதர்.ஒரு இயக்குநருக்கு இந்த அளவு புகழ் கிடைக்குமா என்றால்....அவனுக்குக் கிடைத்ததே.

அதற்குப் பின்னரே தமிழ்ப் படங்களின் இயக்குநர் கூர்ந்து கவனிக்கப் பட்டார்கள்.இந்த நடிகர் படம்..அந்த நடிகர் படம் என பேசும் காலம் மறைந்து..இது அந்த இயக்குநர் படம்..இந்த இயக்குநர் படம் என பேசப்பட்டது.

ரத்தபாசத்திற்குப் பின்னர் ஸ்ரீதரின் கலை வாழ்வு தொடங்க ஆரம்பித்தது
எதிர்பாராதது,மாமன் மகள்,மஹேஸ்வரி,அமர தீபம், மாதர் குல மாணிக்கம்,எங்க வீட்டு மகாலட்சுமி,யார் பையன்,மஞ்சள் மகிமை,உத்தம புத்திரன்,புனர் ஜெனமம், ஆகிய படங்களுக்கு கதை வசனம்.

ஸ்ரீதரின்          ஏறத்தொடங்கியது..

1956ல் தன் நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி,கோவிந்த ராஜன், சுந்தரராஜன் ஆகியோருடன் இணைந்து வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உருவானது.அமர தீபம்,உத்தமபுத்திரன் இவர்கள் தயாரிப்பே.பின், கல்யாண பரிசு இவரை அயக்குநராக அறிமுகப்படுத்தியது.

1961ல் சித்ராலயா என்ற த்யாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.உடன் இருந்தனர் கோபு,வின்சென்ட் மற்றும் சுந்தரம்.தேன் நிலவு உருவானது.முதன் முதலாக காஷ்மீரில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே ஆகும்.முத்து முத்தாய் பாடல்கள்.ஜெமினி..வைஜெயந்தி...இன்றும் இளைஞர்களை கவரும் படம்.

தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம்,காதலிக்க நேரமில்லை.

காதலிக்க நேரமில்லை போல ஒரு பொழுது போக்கு நகைச்சுவைப் படம் இதுவரை வேறு உருவாகவில்லை என நிச்சயமாகக் கூறலாம்

டயலாக்கில் கதைகளை சொல்லி கொண்டிருந்த காலத்தில் காமிரா மூலம் கதை சொன்னவர்.பக்கபலம் வின்சென்ட்.லோ ஆங்கிள் ஸ்பெஷலிஸ்ட் என்பார்கள்.பாடல் காட்சிகளில் ஒரு நளினத்தை கொண்டு வந்தவர்.

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த சில படங்கள்-

கல்யாண பரிசு,மீண்ட சொர்கம்,விடிவெள்ளி,தேன் நிலவு,சுமைதாங்கி,போலீஸ்காரன் மகள்,நெஞ்சில் ஓர் ஆலயம்,கலைக்கோயில்,,காதலிக்க நேரமில்லை,வெண்ணிற ஆடை (தமிழில் ஜெயலலிதா அறிமுகம்), கொடி மலர்,நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, அவளுக்கென்று ஒரு மனம்,அலைகள்,உரிமைக் குரல்,வைர நெஞ்சம்,மீனவ நண்பன்,இளமை ஊஞ்சலாடுகிறது,அழகே உன்னை ஆராதிக்கிறேன்,நினைவெல்லாம் நித்யா , துடிக்கு கரங்கள்...

ஹிந்தி,தமிழ்,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்தார்.

பின் 1997ல் நோய்வாய்ப்பட்ட ஸ்ரீதர் 2008ல் அமரர் ஆனார்.

 ஒரு கல்லூரி மாணவி sridhar படம் என்றால் உயிர். முதல் நாளே கல்லூரிக்கு கட் அடித்து விட்டு தோழிகளோடு போய்விடுவார். ஒரு நாள் அவர் படம் பார்க்க தயாராக வீட்டில் இருப்பவர்கள் விடவில்லை. ஏன் என்று தெரியாமல் தவிப்போடு இருந்த போது ஒருவர் தன் பெற்றோருடன் அந்தப் பெண் வீட்டிற்கு வந்தார். அவரை பெண் பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள். அந்தப் பெண் படத்திற்கு போக விடாமல் தடுத்தாரே என்ற எரிச்சல். வேண்டா வெறுப்பாக காபி கொடுக்க நான் பொண்ணோட பேசணும் என கேட்க அவர்கள் தனிமையில் விடப்பட்டார்கள். ஏதாவது பேசும்மா என வந்தவர் கேட்க உங்களுக்கு srithar படம் பிடிக்குமா என கேட்டார் தொடர்ந்து அவர் படங்கள் ஏதாவது பார்த்திருக்கீங்களா என கேட்டுவிட்டு அவர் படத்தின் ப்ளஸ் மைனஸை பேசினாள் அந்தப்பெண். சிகரெட்டை பிடித்துக் கொண்டே அதைக் கேட்ட அந்த நபர் நான்தான் srithar உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லி விட்டுப் போக அந்தப் பெண் மயங்காத குறை. அடுத்த நாள் தோழிகளிடத்தில் சொல்ல நல்ல கற்பனை என அவர்கள்.சிரிக்க கல்யாணம் ஆன பின்தான் அவர்கள் நம்பினார்கள். அந்தப் பெண் திருமதி தேவசேனா. படுக்கையில் விழுந்த கணவனை சுமார் 11 ஆண்டுகள் சேயாய் பார்த்துக் கொண்ட தெய்வீகப் பெண்மணி.

1959 தமிழில் தகுதிச் சான்றிதழ் - கல்யாண பரிசு
1962ல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான குடியரசுத் தலைவர் வெள்ளிப்பதக்கம் நெஞ்சில் ஓர் ஆலயம்

இந்த மாபெரும் கலைஞனை திரையுலகினரும் சரி, அரசும் சரி சரியாக கௌரவிக்கவில்லை என்ற ஆதங்கம் என்னைப் போன்றோருக்கு உண்டு.

No comments:

Post a Comment