Monday, August 15, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 42 வேதாந்தம் ராகவையா



1919ல் பிறந்தவர் வேதாந்தம் ராகவையா

நடிகர்,ஒளீப்பதிவாளர்,தயாரிப்பாளர், இயக்குநர்

பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவர் இயக்குனர் ஆனது 1953ல்..

படம்..இவரை உச்சாணிக்குக் கொண்டு சென்று விட்டது.

பக்கிங்காம் சட்டர்ஜியின் வங்காள நாவலான தேவதாஸ் தான் அது.அவரை மட்டுமல்ல ஏ.நாகேஷ்வர ராவையும் முன்னணிக்கு கொண்டு வந்தது எனலாம்.

பெரும்பாலும் இப்படத்திற்கான ஷூட்டிங்கை இரவு நேரத்திலேயே நடத்தினாராம் இயக்குநர்.அப்போதுதான் குடிகாரன் பாத்திரம் எடுபடும் என்று.....இதைச் சொன்னவர் நாகேஷ்வர ராவ் தான்.

இவரது மனைவி சூர்ய பிரபா.இவரும் ஒரு நடிகை.இவரது சகொதரியும் ஒரு நடிகை.அவரே புஷ்பவல்லி.பின்னளில் ஜெமினியை மணந்தவர்.நடிகை ரேகாவின் தாய் ஆவார்.

பல தெலுங்கு படத்தின் ஒலீப்பதிவாளராய் இருந்த ராவ்..1953ல் தேவதாஸ் படம் மூலம் இயக்குநர் ஆனதும்..பல தெலுங்கு படங்களை இயக்கினார்.அவற்றில் பலே ராமுடு, பால நாகம்மா ஆகியவை மாபெரும் வெற்றி படங்கள் ஆகும்.

தமிழில் இவர் இயக்கியப் படங்கள்--

பிரேம பாசம்,இரு சகோதரிகள்,அடுத்த வீட்டுப் பெண்,மணாளனே மங்கையின் பாக்கியம்,மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்,உலகம் இவ்வளவுதான் ஆகியவை

1971ல் அமரர் ஆனார்

No comments:

Post a Comment