Thursday, August 4, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 19 ஆர்.நடராஜ முதலியார்

                       

தென்னிந்தியாவின் முதல் சலனப் படத்தைத் தயாரித்த தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் எனலாம்

இந்தியாவின் முழுநீளக்கதைப் படமாக புண்டாலிக் 1912ஆம் ஆண்டு ஆர்.ஜி.டோர்னி என்ற ஐரோப்பியரால் எடுக்கப்பட்டது.இதைத் தயாரித்தவர் வெளினாட்டவர் என்பதால் இந்தியாவின் முதல் திரைப்படம் என்ற தகுதியை இது பெறவில்லை

இந்தியாவின் முதல் சலனப்படம் ஹரிச்சந்திரா.1913ஆம் ஆண்டு துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் தயாரிக்கப் பட்டது.

இதனால் தாதா சாகிப் பால்கே  இந்தியத் திரைப்படத் தந்தை என போற்றி புகழப்படுகிறார்.இப்படம் சென்னை கெயிட்டித் தியேட்டரில் திரையிடப்பட்டது.

இதை கார் வியாபாரம் செய்து வந்த நடராஜ முதலியார் பார்த்தார்.அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டது.
e
ஸ்மித் என்ற ஆங்கிலேயர் அவருக்கு தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார்.

நடராஜ முதலியார், தன் புதிய படபிடிப்பு நிலையத்தைக் கீழ்பாக்கத்தில் டவர் ஹவுஸ் என்ற பங்களா ஒன்றில் துவக்கினார்.இந்தியா ஃபிலிம் கம்பெனி என தன் ஸ்டூடியோவிற்கு பெயரிட்டார்

1916ல் சலனப்படம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு கீசகவதம் என்ற படத்தை எடுத்தார்.

தமிழர் ஒருவரால் தயாரிக்கப் பட்ட முதல் சலனப் படம் இதுவே.35 நாட்கள் படபிடிப்பு.6000அடி படம்.35000 ரூபாய் செலவு

அடுத்தடுத்து 6 படங்களை இவர் தயாரித்தார்

1917ல் திரௌபதி வஸ்திராபரணம் என்ற படத்தில் மரினிஹில் என்ற ஆங்கிலோ இந்திய பெண்ணை லியோச்சனா என்ற பெயரிட்டு கதாநாயகியாய் நடிக்க வைத்தார்

இவர் எடுத்த 6 படங்கள்..

திரௌபதி வஸ்திராபரணம்
கீசக வதம்
லவகுசா
ருக்மணீ சத்யபாமா
மார்க்கண்டேயா
காளிங்கமர்தனம்

அவர் ஒரு பேட்டியில்..

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மக்களின் பண்புள்ள எதிர்கால வாழ்க்கைக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடிய சாதனமாக திரைத்துறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுள்ளார்

1885ஆம் ஆண்டு பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு மறைந்தார். 

No comments:

Post a Comment