Sunday, August 14, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 40 சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ்

                   


1941ல் பிறந்த சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ், ஒரு தயாரிப்பாளர்,திரைக்கதை வசனகர்த்தா,பாடல் ஆசிரியர், நடிகர், இயக்குநர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

8வது இன்டெர்னேஷனல் திரைப்பட விழாவில் 2010ல் தலைவராக செயல்பட்டார்.ஃபிலிம் ஃபெடெரேஷன் 2011ல் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.

2003ல்  son of Alladdin   என்ற அனிமேஷன்படம் 125 பாத்திரங்களுடன் 1100 ஷாட்ஸில் எடுத்தார்.2003 உலக குழ்ந்தைகள் திரைப்ப்ட விழாவில் பராட்டப் பட்டது.உலகத் திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது.

2008ல் கடோத்கஜன் என்ற இவரது அனிமேஷன் படம் கேன்ன்ஸ் ஃபிலிம் விழாவில் திரையிடப்பட்டது.குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

1974ல் ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி படம் மூலம் தமிழில் இயக்குநர் ஆனார்.இப்படம் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

1988ல் கமல் ஹாசன் நடிக்க புஷ்பீக விமானம் (பேசும் படம்) என்ற மௌனப்படம் எடுத்தார்.இப்படம் தேசிய விருது பெற்றதுடன், கேன்னஸ் விழாவிலும் திரையிடப்பட்டது/

1984ல் சுதா சந்திரன் நடிக்க மயூரி என்ற படத்தை இயக்கினார்

பல சாதனைகளுக்கு அதிபதியான இவர் இயக்கிய தமிழ்ப் படங்கள்--

திக்கற்ற பார்வதி, ராஜ பார்வை,அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதன காமராஜன்,,மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா,லிட்டில் ஜான்,மும்பை எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்

தெலுங்கில் 30க்கும் மேற்பட்ட படங்கள்,13 கன்னடம்,4 ஹிந்திபடங்களை இவர் இயக்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் சன் ஆஃப் அல்லாதீன் எடுக்கப்பட்டது

No comments:

Post a Comment