Wednesday, August 24, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 60 பாலுமகேந்திரா

                     

1939ல் ஸ்ரீலங்காவில் பிறந்தவர் பாலு மகேந்திரா.லண்டன் யூனிவெர்சிடியில் பட்டதாரி ஆனார்.1970ன் காலகட்டத்தில் ஒளிப்பதிவாளராக திரயுலக பிரவேசம் செய்தார்.

1977ல் கோகிலா என்ற கன்னடப்படம் மூலம் இயக்குநர் ஆனார்.

இவரது படைப்புகளுக்கு ஆறு தேசிய விருதுகளும், பல்வேறு மாநில விருதுகளும் கிடைத்துள்ளன.

ராமுகாரியத் இயக்கிய நெல்லு என்ற மலையாளப்பட ஒளிப்பதிவாளர் இவரே

மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்கத்திலும் உதவி புரிந்துள்ளார்

23 படங்களை இயக்கியுள்ளார் இவர்.இவர் இயக்கியுள்ள தமுழ்ப் படங்கள் விவரம் வருமாறு...

1979  - அழியாதகோலங்கள்
1980- மூடுபனி
1982- மூன்றாம் பிறை
84- நீங்கள் கேட்டவை
85- உன் கண்ணில் நீர் வழிந்தால்
87-ரெட்டைவால் குருவி
88- வீடு
89- சந்தியாராகம்
92-வண்ன வண்ண பூக்கள்
93-மறுபடியும்
95- சதி லீலாவதி
97- ராமன் அப்துல்லா
2001- என் இனிய பொன் நிலவே
2003- ஜுலி கணபதி
2005- அது ஒரு கனாக்காலம்
2013- தலைமுறைகள்

தவிர்த்து 30க்கு மேற்பட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் இவர்.



கமல், ஸ்ரீதேவி நடித்த சத்மா (மூன்றாம் பிறை ஹிந்தி) பட இயக்குநர் இவரே

பின்னாளில் சாலிகிராமில் நடிப்பு, இயக்கம்,ஒளிப்பதிவுக்கான ஃபிலிம் ஸ்கூல் ஆரம்பித்தார்

தேசிய விருதுகள்-

கோகிலா படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் தேசிய விருது
மூன்றாம் பிறை சிறந்த ஒளிப்பதிவாளர் தேசிய விருது
வீடு படத்திற்கு தமிழில் சிறந்த பட விருது
89ல் சிறந்த குடும்ப நலத்திற்கான சிறந்த பட விருது சந்தியாராகத்திற்கு
வண்ண வண்ண பூக்கள் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது
2013 தேசிய ஒற்றுமைக்கான சிறந்த படம் என தலைமுறைகள் விருது

சென்னை தொலைக்காட்சிக்காக் கதைநேரம் என்ற நிகழ்ச்சியில் பல சிறுகதைகளை படமாக்கினார்

2014ல் அமரர் ஆனார்


(தயவு செய்து ஷோபா,மௌனிகா பற்றிய கமெண்டுகள் வேண்டாமே) 

No comments:

Post a Comment