Monday, August 29, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 67 ஏ.ஜகன்னாதன்

                                 
   

1935ல் திருப்பூரில் பிற்ந்தவர் ஜகன்னாதன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியவர்

டி.பிரகாஷ் ராவ்,பி.நீலகண்டன் ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணியாற்றியவர் இவர்.

ப.நீலகண்டன் இயக்கிய காவ்ல்காரன்,கண்ணன் என் காதலன்,மாட்டுக்கார வேலன்,ராமன் தேடிய சீதை,என் அண்ணன், சங்கே முழங்கு: என அனைத்துப் படத்திலும் பணியாற்றினார்.

டி.பிரகாஷ் ராவ் இயக்கிய படகோட்டியில் இணை இயக்குநர் இவரே


 ஆர்.எம்.வீரப்ப ன் தயாரிப்பில் 1973ல் மணிப்பயல் படம் மூலம் இயக்குநர் ஆனார்.

பின்னாட்களில் எம்.ஜி.ஆர்.,நடித்த இதயக்கனி, சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா, ரஜினி நடித்த மூன்று முகம், தங்க மகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த மற்ற சில படங்கள்-

1974ல் இதயம் பார்க்கிறது
76ல் கோமல் சுவாமினாதனின் "குமார விஜயம்"
77ல் நந்தா என் நிலா
1984ல் கொம்பேரி மூக்கன்
84ல் ஓ மானே மானே
85ல் கற்பூர தீபம்
85ல் மீண்டும் பராசக்தி
87ல் காதல் பரிசு (கமல்)

1994ல் சிவகுமார் நடித்த வாட்ச் மேன் வடிவேலு இவரது கடைசி படமாகும்

இவரது அதிர்ஷ்டம் அழைக்கிறது படத்திற்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாரதிராஜா. டைட்டிலில் அவரது ஒரிஜினல் பெயரான :சின்னச்சாமி:" எனக்காட்டப் படும்

2012ல் அமரர் ஆனார்

No comments:

Post a Comment