Sunday, August 7, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 24 எஸ் எம் ஸ்ரீராமுலு நாயுடு




1945ல்     கோவையில் ஸ்ரீராமுலு நாயுடுவால் துக்கப்பட்டது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்.1910ல் பிறந்தார் இவர்

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் 1944ல் சிறை சென்ற இவர்...1945ல் குற்றம் சரிவர நிரூபிக்கப் படாததால் விடுதலையடைந்தார்


பக்ஷிராஜா ஸ்டுடியோவில்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி,  ,கன்னடம்,மலையாளம்,சிங்களம் என பல மொழிகளில்  படங்கள் தயாராயின

1941ல்  பி.யூ சின்னப்பா நடிக்க ஆர்யமாலா இவர் இயக்கினார்.

எஸ் எம் எஸ்.,  கன்னிகா என்ற படத்தை 1947ல் இயக்கினார்.பின்னர் 1949ல் டி.ஆர்.ராஜகுமாரி, மகாலிங்கம், என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர் நடிக்க பவளக்கொடி படத்தை இயக்கினார்.

1954ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் மலைக்கள்ளன் கதையை எம்.ஜி.ஆர்., பானுமதி நடிக்க இயக்கினார்.படம் மாபெரும் வெற்றி.சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம் குடியரசுத் தலைவரால் வழங்கப் பட்டது.

பி.யூ.சின்னப்பா நடித்த ஜகதலபிரதாபன் இவர் இயக்கியது

1959ல் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற நாவலைத் தழுவி, சிவாஜி, எஸ்.பாலசந்தர் நடிக்க முரசொலி மாறன் வசனத்தில் மரகதம் என்ற படத்தை இயக்கினார்.

பின் 1963ல் சிவாஜி நடிக்க கல்யாணியின் கணவன் படத்தை இயக்கினார்.விந்தன் கதை.

1961ல் சபரிமலை ஐய்யப்பன் மலையாளம் படத்திற்கு 3 வது சிறந்த படம் என குடியரசுத் தலைவர் சான்றிதழ் வழங்கப்பட்ட்து.

இருபது படங்களுக்கு மேல் தயாரிக்கப்பட்டது இவர் ஸ்டுடியோவில்

திலீப்குமார், மீனாகுமாரி நடித்த ஆசாத் ,ஹிந்தி படம் இவர் இயக்கிய மாபெரும் வெற்றி படமாகும்.

1976ல் எஸ் எம் எஸ் அமரர் ஆனார்

No comments:

Post a Comment