Sunday, August 14, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 38 ஆர்.சி.சக்தி

                     

பரமக்குடிக்கு அருகே புழுதிக்குளம் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர் ஆர்.சி.சக்தி

அவர் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகத்திடம் உதவியாளராகச் சேர்ந்தார்.அப்போது ஆறுமுகம் என்.எஸ்.கே., நாடகக் குழுவில் இருந்தார்.அச்சமயம், "பொற்சிலை" என்ற படத்தில் உதவி இயக்குநராகும் வாய்ப்பு சக்திக்குக் கிடைத்தது.அங்கு டான்ஸ் மாஸ்டர் த்ங்கப்பன் நட்பு கிடைத்தது.அவர் அன்னை வேளாங்கன்னி என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்,அப்படத்தின் உதவி இயக்குநராகப் பணி புறிந்தார்.அப்போது, தங்கப்பனுடன் இருந்த கமலின் நட்பும் சக்திக்குக் கிடைத்தது.

1973ல் கமலை வைத்து உணர்ச்சிகள் படத்தி த்யாரித்து, இயக்கினார்.ஆனால்..படம் 4 ஆண்டுகள் கழித்து 1976ல் வெளிவந்தது.

பின் 1978ல் மனிதரில் இத்தனை நிறங்களா, 1979ல் ரஜினி நடித்த தர்மயுத்தம்,பின் மாம்பழத்து வண்டு, 1981ல் ராஜாங்கம்,83ல் உண்மைகள்,84ல் சிறை, த்ங்கக் கோப்பை,85ல் நாம்,சந்தோசக் கனவுகள், தவம், 86ல் விஜய்காந்த் நடித்த மனக்கணக்கு,பின், கூட்டுப் புழுக்கள்,தாலி தானம்,89ல் வரம்,90ல் அம்மாபிள்ளை,1993ல் பத்தினிப் பெண் ஆகியவை வெளியாயின.

சில வேளைகளில் திறமையுள்ள ஒருவர் தன் திறமைகளை சரிவர மக்களிடம் கொண்டுசெல்லாத படி அ மைந்துவிடும்.அதற்கு உதாரணமாக சக்தியைக் கூறலாம்
2015ல் அமரர் ஆனார்.

No comments:

Post a Comment